திங்கள், 17 நவம்பர், 2014

பா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1



20 ஆண்டுகள் வலுவான அரசியல் பேரம் பேசும் சக்தியாக வடமாநிலங்களில் இருந்த பா.., 30 ஆண்டுகள் (ஒரு தலைமுறை) பின்னோக்கி வன்னிய சாதி அரசியலை கையில் எடுத்திருக்கிறது.

வன்னிய சாதி சங்கத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்து... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக... மீண்டும் வன்னிய சாதி சங்கமாக சிறுத்து போனதன் பின்னணி பேச விழைவோம்... அதிலிருந்து தான் இன்றைய திராவிட சாதி கூச்சல்களின் பின்னால் இருக்கும் அரசியல் சதி வலையை விளங்கி கொள்ள முடியும்.

கூட்டணி அரசியலுக்கு எப்போதாவது பச்சோந்தி தனம் தேவைப்படும் என்பார்கள், ஆனால் பச்சோந்தி தனமே! அரசியல் என்று ஆன மருத்துவர் இராமதாஸ் அதனுடைய விளைவுகளை சந்திக்க ஆரம்பித்த ஆண்டு 2009.

ஜனவரி'2009 கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின் ஒரு அதிகாலையில் தி. தலைவர் வீரமணியுடன் இணைந்து இராமதாஸ் அன்றை முதல்வர் மு.கருணாநிதியை சந்திக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் அரசியல் அரங்கத்தின் காட்சிகள் மாறுகின்றன வி.சி. திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரம் அறிவிக்கிறார். இவற்றின் பின்னணி பற்றி விளக்கி கொண்டிருக்க போவதில்லை.

இந்த உண்ணாவிரத போராட்டம் காங்கிரஸ், அதிமுக தவிர்த்து அனைத்து சமூக, அரசியல் இயக்கங்களை ஒன்று திரள வைக்கிறது.

மத்திய அரசு நெருக்கடிக்குள்ளாகிறது… சிலநாட்களில் திருமாவளவன் உண்ணாவிரத்தை இராமதாஸ் முடித்து வைக்கிறார். இந்த சிக்கலான சூழலில் நடந்த ஈழத்தை பற்றிய விவரங்களை தவிர்த்து விடுகிறேன்.

இந்த உண்ணாவிரத்தில் தான் பா.ம.க மற்றும் திமுக இடையான உறவு சிக்கலுக்கு உள்ளாகிறது.  போராட்டம் தீவிரமாகி காங்கிரஸ் ஆதரவை விலக்கி கொள்ளும் பட்சத்தில் திமுக ஆட்சி இழந்திருக்கும்.  அப்படியான சூழலில் பாமக திரைமறைவில் காங்கிரஸ், அதிமுக உடன் இணைந்து அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாக ஊகச்செய்திகள் வரத்தொடங்கின.

இப்படியான சூழலில் 2009 நாடாளுமன்ற தேர்தலில்  பாமக அதிமுக கூட்டணிக்கு தாவுகிறது. திமுக முதுகில் குத்த சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த...  பாமக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 அமைச்சர்களை நியமித்து தேர்தலில் பாமக தோல்வியை உறுதி செய்கிறது. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியடைகிறது. 


பாமக – வின் அரசியல் வீழ்ச்சி தொடங்கியது….
Related Posts with Thumbnails