திங்கள், 27 ஆகஸ்ட், 2007

தல... தல... தட்டுக்கெட்டு போன தமிழர்கள்...!

வலைப்பதிய ஆரம்பித்து... நிறைய நட்புக்கள், தோழமைகள் இணைய உரையாடலில் இணைத்துக்கொண்டு மனதிற்க்கு பிடித்த தாய்மொழியில் உரையாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது...

ஆனால் சில நண்பர்கள் பேச ஆரம்பித்தவுடன் ...

"வணக்கம் தல!"

....
"சொல்லுங்க தல"
....
"அப்புறம் தல"

....

சொல்லுங்க தலைவரே...

இப்படிதான் ஆரம்பிக்கின்றனர், சிலரிடம் ஓருமுறை சுட்டிக்காட்டினால், புரிந்துக்கொண்டு தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் சிலர் விடாப்பிடியாக தொடர்ந்து இதை சொல்லுவதால், இங்கே எழுத வேண்டிய அவசியமாயிற்று....

இந்த உரையாடலை எவ்வாறு நாம் அடிமை மனத்திலிருந்து பெறுகிறோம் என்பதை பாருங்கள்... முன்பு நாம் உயர்சாதியினரிடம், எவ்வாறு உரையாடினோமோ... அதையே இப்போதும் தொடர்கிறோம்....

"சாமி! எப்படியிருக்கீக சாமி"
"ஆமாமஞ் சாமி"
"வணக்கம் சாமி"
"நீங்க சொன்னா சரியாயிருக்கும் சாமி"

இப்படி நாம் உயர்சாதியினரை விளித்து நம்முடைய அடிமை தனத்தை நாமே உறுதிச்செய்துக்கொண்டிருந்தோம்!

ஆர்.எஸ்.எஸ் கூடராங்களில் இந்த அடிமைத்தனத்தை மறைமுகமாக போதிப்பார்கள்...

"வாங்க ஜீ"
"சொல்லுங்க ஜீ"
"எப்படியிருங்கீங்க ஜீ"

"சாமி" போயி "ஜீ" வந்தது.... அதையும் சில மானங்கெட்ட தமிழர்கள், மறக்காமல் எல்லோரையும் "ஜீ" போட்டு அழைத்து தங்களின் அடிமைத்தனத்திற்க்கு தாங்களே வழி அமைத்துக்கொண்டார்கள்...

"தல..." பெரும்பாலும் ஓன்று அடுத்தவரை உயர்த்தவோ அல்லது ஓரு வஞ்சகத்துடனும், எச்சரிக்கையுடனும் அணுகும் போதும் உச்சரிக்கபடுகிறது...

சமூகத்தில் சமதளத்தில் நின்று உரையாடுகிற போது, எப்படி உங்களை நீங்கள் தாழ்த்திக்கொண்டு அடிமைத்தனத்திற்க்கான எண்ணத்துடன் உரையாடுகின்றீர்!

அல்லது

வஞ்சகத்துடன் ஓருவரை அணுகியிருக்கிறீர்கள் என்றால்... எப்படி இந்த வஞ்சகமனப்பான்மை வளர விடுகிறீர்கள்!

தமிழிலில் மரியாதை சொற்கள் ஏராளம்...

"ஐயா","நண்பரே","தோழரே", "சகோதரரே","அப்பா","அம்மா" .... என்று விளிக்க ஏராளமான சொற்க்கள்யிருக்க...

ஏன் அடிமைத்தனத்துடன் "தல..." என்று விளிக்கிறீர்கள்.

"தலைவரே, சொல்லுங்க"
"நீங்க சொன்னா சரி! தலைவரே"

இப்படி கூழைக்கும்பிடு போடுவதை எப்போது தான் நிறுத்தப்போகிறோம்...?

நம்மை அடிமையாக்க நினைப்பவர்கள் எப்போதுமே, இந்த மாதிரியான உரையாடல்களை ஆரம்பித்து வைப்பார்கள்.
(ஓரு வகையில் உளவியலாக உங்களை அடிமை மனப்பான்மைக்கு வளர்த்தெடுத்தல்!)

நாளடைவில்... இதில் நீங்கள் வீழ்ந்து அடிமைப்பட்டு நிற்ப்பீர்கள்...


தமிழனிடம் அடிமைத்தனமும், வஞ்சகமும் தேவையில்லை...
மானமும், அறிவும் உள்ள சமூகத்தில் தலைவன் என்று எவனும் கிடையாது!

குறிப்பு : நான் சுட்டுவது அடிமைத்தனத்தை, வஞ்சகத்தை... நட்புகள் புரிந்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில்

பாரி.அரசு

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2007

கணிணி என்றால் என்ன?

தனியா ஒரு வலைப்பூ ஆரம்பித்து கணிணியை பற்றி எழுதலாம் என்று தொடங்கினேன், அதென்னவோ தமிழ்மணத்தோட இணைக்கையில் வம்புபண்ணிக்கிட்டேயிருக்கு, நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியாகிவிட்டது. அதுவரைக்கும் இங்கிருந்து அதற்க்கு தொடுப்பு கொடுக்கிறேன்.

வருக! வருக!!


கணிணி என்றால் என்ன?

திங்கள், 20 ஆகஸ்ட், 2007

சிங்கையில் மட்டும் எப்படி முடிகிறது, தமிழ்நாட்டில் ஏன் முடியல...?

சிலமாதங்களுக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஓருவர் (அவர் பாடகர், அதோட பாடல் பயிற்சி வகுப்புகள் வேறு போயிட்டிருக்கிறார்) சிலோன் ரோடு விநாயகர் கோயிலில் ஓரு இசை நிகழ்ச்சி இருக்கு போகணும் வருகிறாயா? என்று கேட்டார்.

நான் வரவில்லை என்றேன்

ஏன்? என்று கேட்டார்

இவனுக தமிழ்நாட்டுல இருந்து வந்து புரியாம கர்நாடக சங்கீதம் என்கிற பேரில் எதையாவது பாடுவாய்ங்க நீங்க உட்கார்ந்து தலையாட்டுவீர்கள், நான் அங்கன எதுக்கு என்றேன்.

இல்ல, கட்டாயம் நீ வர வேண்டும் உனக்கு ஓரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார்

ஓரு வழியா கட்டாயபடுத்தி என்னை கூட்டி சென்றார், நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி...

எல்லா நிகழ்வுகளும் முழுக்க, முழுக்க தமிழ் இசை பாடல்கள் பாடப்பட்டது. திருக்குறள்,தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று அசத்தினார்கள்.

மிக முக்கியமான செய்தி யாரெல்லாம் தங்களுக்கு கர்நாடக சங்கீதம் தவிர வேறு எதுவும் பாட வராது என்கிற மாதிரி தமிழகத்தில் மேடை தோறும் கர்நாடக சங்கீதம் பாடுகிற பாடகர்கள்... இங்கே தமிழ் இசை பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். அனைவருமே தமிழகத்திலிருந்து வந்த பாடகர்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் சில விசாரணைகளை மேற்க்கொண்ட போது தான் தெரிந்தது, இந்த கோயிலின் நிர்வாகம் முழுக்க, முழுக்க ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகிறது.

பிறகு அவர்களிடம் உரையாடிய போது, அவர்கள் சொன்ன தகவல்...

நாம் பணம் கொடுக்கிறோம், நமக்கு தேவையானதை அவர்கள் பாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறோம். இங்கே வேறெந்த சிக்கலுமில்லை என்றனர்.

அப்போ தமிழ் நாட்டு தமிழனும் பணம் தானய்யா கொடுக்கிறான், கோயில் திருவிழாவில் இருந்து, கச்சேரி மேடை வரை இவர்கள் பாடுகிற புரியாத பாடல்களுக்கு தலையாட்டிக்கிட்டே திரியுறானுகளே...!

சிங்கையில் டாலருக்கு தமிழில் பாடும் பாடகர்கள், தமிழ்நாட்டில் ரூபாய் நோட்டுக்கு தமிழிலில் பாட மறுப்பதேன்?

இல்லை

தமிழ்நாட்டு தமிழன் மானம் கெட்டு அலைகிறானா?

விரைவில் பாடகர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.

படம் பார்த்து, கதை சொல்லுங்கோ...!


நன்றி : starhub, singapore

வியாழன், 16 ஆகஸ்ட், 2007

காமத்திற்க்கப்பால் விரியும் கற்பனை...!




















கலவியில் களைத்து கிறங்கிய பொழுது...
காதலி கட்டியணைத்து கன்னத்தில் கனியிதழ் பதித்து...
காதருகே " நீங்க ரொம்ப மோசம் !" என்று கனிந்தபொழுது...
வியர்வைத்துளிகளில் வியர்த்து போன காலதுளிகள்...!



பட உதவி நன்றி : TBCD
Related Posts with Thumbnails