உலகத்தின் தட்பவெப்பநிலை வேகமாக உயருகிறது. சமீபகாலமாக சுற்றுசூழல் ஆர்வலர்களால் மிக அதிகமாக அலசப்படுகிற விவகாரம். நம்ம வலைப்பதிவில் கண்மணியக்கா எழுதியிருந்தாங்க அப்புறம் சர்வேஷன் 30 வருடம்தானே என்று வருத்தப்பட்டார்.
எனக்கு தட்பவெப்பநிலை என்பதன் அடிப்படையிலேயே பிரச்சினை. அதுவும் ஒரு முறை ஊட்டி போனேன் அதிலிருந்து ஒரு கேள்வி மண்டைய குடைந்துக்கொண்டேயிருக்கு. நமக்கு தெரிந்த, அறிந்த மக்களிடம் எல்லாம் கேட்டாச்சு சரியான விடை கிடைக்கவில்லை...
ஆகையால் எனக்கு அடிப்படையில் இருக்கிற சந்தேகத்தை இங்கே வலைப்பதிவு அறிஞர் பெருமக்களுக்கு கேள்வியாக வைக்கிறேன். யாரேனும் எனக்கு விளங்கும்படி சொன்னால் கொஞ்சம் என்னோட அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
பொதுவாக வெப்பத்தை உருவாக்கும் ஒர் இடத்தை வெப்ப மூலம் (Heat Source) என்பார்கள். வெப்பத்தை உணரும் பொருளை (Heat Observer) நாம் இங்கே பொருள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்ப மேலே உள்ள படத்தில் பார்த்தீர்களானால் Object B ஆனது அதிக வெப்பத்தை பெறும் ஏனென்றால் அது Object A ஐ விட வெப்ப மூலத்திற்கு அருகில். (distance y is less than x)
பொதுவான விதி வெப்ப மூலத்திலிருந்து தூரம் குறைய, குறைய பொருளானது அதிக வெப்பத்தை பெறும்.
இப்போ நம்மோட கேள்விக்கு வருவோம். நீங்கள் இப்போது கடல் மட்டத்தில் இருக்கிறீர்கள் அப்போது சூரியனிடமிருந்து 'q' தொலைவிலிருந்தால் நீங்கள் உணரும் வெப்பநிலை. மலைகள் மேலே செல்லும் போது சூரியனிடமிருந்து 'r' தொலைவிலிருந்தால் நீங்கள் உணரும் வெப்பம்நிலை குறைவதேன்.
உண்மையில் 'r' ஆனது 'q' ஐ விட சூரியனிடமிருந்து தொலைவு குறைவு. பொது விதிப்படி வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும் ஆனால் குறைகிறது.
(r is less than q)
ஏற்கனவே நண்பர்களால் அறிந்த காரணங்கள் என்னால் ஏற்றக்கொள்ள முடியாதவை
1. கடல் மட்டத்திலிருந்து உயரம் செல்ல செல்ல வெப்பம் குறையும்
என்னுடைய மறுப்பு : அப்படியானால் திருச்சி மலைக்கோட்டை கடல் மட்டத்திலிருந்து உயரம் தான் ஆனால் வெப்பநிலை குறைவாக இல்லை. இது போல உலகத்தில் பல உயரமான இடங்கள் அதிக வெப்பநிலையோடு இருக்கின்றன.
2. பூமியின் சாய்வு கோணம்
என்னுடைய மறுப்பு : இது துருவங்களுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம் மற்றபடி ஒரே அட்சரேகையில் (Latitude) இருக்கும் இடத்துக்கு பொருந்தாது
3. வளிமண்டல அழுத்தம்
என்னுடைய மறுப்பு : வளிமண்டல அழுத்தம் தட்பவெப்பநிலை பாதிக்கும் ஒரு பக்க காரணி அதுவே மூல காரணி அல்ல.
சரி! இதற்குமேல் நீங்கள் ஆட்டத்தில் பங்கெடுத்து உங்கள் விடைகளை பகிர்ந்துக்கொள்ளவும்.
ஆட்டத்திற்க்கான அழைப்பிதழ்
தேசியவாத இந்தியர்களே
தேசியவாதமல்லாத இந்தியர்களே
திராவிடர்களே
ஆரியர்களே
தமிழர்களே
திராவிடத்தமிழர்களே
உள்நாடு,வெளிநாடு வாழ் தமிழர்களே
தோழர்களே
தோழருக்கு தோழர்களே
சங்கத்து சிங்கங்களே (ஆண்பால்)
சங்கத்து சிங்கிகளே (பெண்பால்)
கும்மியடிப்போரே
கும்மியை குத்தவைத்து வேடிக்கைப்பார்ப்போரே
வலைப்பதிவோரே
வலைப்பதியாதோரே
இருங்க! இருங்க!! அங்கன வாசல்ல யாரோ மாதிரி தெரியுது. அட நம்ம உறவுகாரவுகதான். அவுங்களும் தமிழர்கள்தான் ஆன எப்போதும் கொஞ்சம் மாப்பிள்ளை முறுக்கோடதான் இருப்பாக...
இசுலாமிய தமிழர்களே
ஈழத்தமிழர்களே
மற்றும் அழைப்பில் விடுபட்டோரே
அனைவரும் பங்கெடுத்து ஆட்டத்தை சிறப்பாக கொண்டுச்செல்ல வேண்டுகிறேன்!
ஞாயிறு, 8 ஜூலை, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 comments:
பாரி,
இது போன்ற எளிமையான கேள்விகளுக்கு எல்லாம் பதிவு போட்டு தான் கேட்க வேண்டுமா , அந்த நேரத்தில் , கூகில் அல்லது ,ஆன்ஸெர்.காம் போன்ற வலைதலங்களில் போய் தெரிந்து கொண்டு இருக்கலாமே!
சரி வந்தததுக்கு எனக்கு தெரிந்த பதிலை சொல்கிறேன்,
உயரம் கூட வெப்பம் குறைய காரணம் , வளிமண்டல காற்றழுத்தம் குறைவதே ஆகும். பாயில் விதி நினைவு படுத்திக்கொள்க.அழுத்தம் நேர் விகிதத்தில் இருக்கும் வெப்பத்திற்கு.
முதல் 1000 அடி உயரம் கூடும் போது 1- 2 செல்சியஸ் அளவு வெப்பம் குறையும் , அதுவே மேலும் உயரம் கூட கூட அதிக அளவில் வெப்பம் குறையும். காரணம் டியுவ் பாயிண்ட் எனப்படும் உறைனிலைகான வெப்பம் குறைவதே.
மலை போன்று அல்லாமல் ஆனால் ஒரு பெரிய பரப்பே கடல் மட்டத்திலிருந்து உயரமாக இருந்தால் அப்படி வெப்பம் குறையாது ,ஏனெனில் அப்போது காற்றழுத்ததில் பெரிய மாற்றம் ஏற்படாது.உதாரணம் மெக்சிகோ.
இதை சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன், யார் அந்த அறிவாளி கொழுந்து என்று தலைப்பிட்டு விட்டு கேள்வி வேறு கேட்டுள்ளதிலிருந்தே ,உங்கள் நோக்கம் தெரிந்து கொள்வது அல்ல என்பது , ஆனால் உங்களை போன்ற அறிவாளிக்கொழுந்துகளுக்கு எல்லம் தெரிந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே , பொறக்கும் போதெ கொஞ்சுண்டு எக்ஸ்ட்ரா மூளையோட பொறந்த மூளைக்காரர் ஆச்சே நீங்க!(இதற்கு பின்னுட்டம் போடுவதால் எனது விசைப்பலகைக்கு ஒன்றும் பெரிதாக தேய்மானம் வந்து விடாது)
வாருங்கள் வவ்வால்!
நான் ஏற்கனவே விளக்கிய மற்றும் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணங்களை மீண்டும் சொல்லியிருக்கிறீர்கள்
நன்றி
தவறான புரிதலுக்கு மன்னிக்கவும் வவ்வால்! தலைப்பு வாசிப்பாளர்களை உள்ளிக்கதானே தவிர தலைக்கனத்தால் வைக்கப்பட்டதல்ல!
//என்னுடைய மறுப்பு : வளிமண்டல அழுத்தம் தட்பவெப்பநிலை பாதிக்கும் ஒரு பக்க காரணி அதுவே மூல காரணி அல்ல.//
நீங்க தான் அறிவாளி கொழுந்து ஆச்சே பாயில் விதியை ஆஃப் பாயில் விதினு நினைச்சுபிங்க.
விளக்கமாக சொல்ல முடியும் ஆனால் உங்களுக்கு இதுவே போதும், தேவை ஆனால் கூகிள் ஆண்டவரைப்போய் பார்க்கவும்.
வவ்வால்!
அதாவது வளிமண்டல அழுத்தமும், தட்பவெப்பநிலையும் நேர்விகித தொடர்பு கொண்டவை.
சரியா?
என்னுடைய கேள்வி மலை வாசஸ்தலங்களை பற்றியது.
உதாரணமாக ஊட்டி 2240 மீட்டர் உயரம் அங்கே இருக்கிற மிகக்குறைவான தட்பவெப்பநிலை.
நீங்கள் அதே உயரத்தில் ஒரு ஹெலிக்காப்படரில் பறந்தால் தட்பவெப்பம் குறைவாக இருக்காது.
இரண்டுமே ஒரே உயரம், ஒரே வளிமண்டல அழுத்தம் ஆனால் தட்பவெப்பநிலை வேறுபாடு ஏன்?
நீங்கள் விமானத்தில் பறந்தது உண்டா? விமானம் உயரே செல்ல செல்ல அதன் வெளிவெப்பம் குறையும். விமான உள் அறிவிப்பில் இதை பார்த்ததுண்டு. விதண்டாவாதம் செய்யாமல் அறிவியல் சார்ந்த தளங்களை தேடிப் படிக்கவும்.
வாங்க அனானி,
நமக்கு தெரிந்ததை, படித்து தெரிந்து கொண்டதை பதிவில் தெளிவாக விளக்கி இருக்கிறேன்.
தெரியாததை நீங்க ஏதோ சொல்கிறீர்களே அறிவியல் தளம் அதிலிருந்து படித்து விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஐயா, உஙக கேள்வி பொல எனக்கும் ஒரு கேள்வி இருக்கு!
அதாவது தண்ணீர் 100 டிகிரிலதான் ஆவி ஆகும்(நீராவி). உங்க கைல ஒரு சொட்டு தண்ணீய எடுத்து வையுங்க தண்ணீர் ஆவியா பொகுமா இல்ல காணாமப்பொகுமா?
இதுக்கு பதில் சொல்லிறூங்க......
நன்றி.
உங்கல பொல பதில் தேடுபவன்.
உன் அலும்புக்கு ஒரு அளவே இல்லையா!
கருத்துரையிடுக