என்று மாறும் இந்த நிலை....!
தஞ்சை மாவட்டமே காவிரி பிரச்சினையால் விவசாயம் நலிந்து ஒவ்வொரு விவசாய குடும்பத்து இளைஞர்களும் கூலி தொழிலாளர்களாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல கிராமங்களில் இளைய வயது ஆண்களே வீடுகளில் இல்லை என்கிற கேவலமான நிலைக்கு, கிராமங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.நிலங்கள் இருப்பவர்கள் அதை அடகு வைத்து ஏஜெண்டக்கு பணம் கட்டி கூலிகளாக ஓடுகின்றனர். இல்லாதவர்கள் over stay என்று ஓடுகின்றனர். இன்னும் வறுமை, சமூக கொடுமைகளால் மிச்சம் இருக்கின்ற கிராம தொழிலாளர்கள் நகரங்களின் வீதிகளில் குடியேறிக்கொண்டிருக்கின்றனர்.
அறுபது ஆண்டுகால இந்திய அரசியல் அமைப்பால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை, இன்னும் எதற்க்கு இந்திய இறையாண்மை என்கிற வேடம்?.
டாலர்களில் சம்பாதித்து குடும்பத்தோடு கொட்டமடிக்கும் புண்ணாக்குகள் இந்திய இறையாண்மை பேசுகிறார்கள்.... ஆனால் எங்களின் வாழ்வியலே தொலைந்து போய்க்கிடக்கிறது... அதற்கு என்ன பதில் சொல்வார்கள்!
இன்னும் வரும்...
4 comments:
அனானி அவர்கள் விட்டுச்சென்ற பின்னூட்டம் தவறுதலாக நீக்கப்பட்டது... இங்கே
Anonymous has left a new comment on your post "இன்னும் எதற்க்கு இந்திய இறையாண்மை என்கிற வேடம்!":
ஆமாஅம், தனி சோழ நாடுன்னு ஒண்ணு இருந்திருந்தா நம்ம பாரி அரசு அதான் ராஜராஜ சோழன் மறு அவதாரம் ப்ராப்ளம் தீர்த்து வச்சுருப்பாரு.உருப்படாத யோசனை.
அய்யா அனானி!
1. ஒரு அரசியல் அமைப்பால் அந்த நாட்டின் லட்சகணக்கான மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்பது இப்போதுள்ள நிலை.
2. இதற்கு தீர்வு என்வென்பது இந்த பிரச்சினையால் பாதிக்கபடும் மக்களின் கருத்திலும், சிந்தனையிலும் இருந்து தான் பெற வேண்டும்.
3. தனிமனிதன் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வை முன் வைப்பது... மீண்டும், மீண்டும் அண்ணன் சொன்னார், தலைவர் சொன்னார் என்கிற போலி அரசியல் நிலைக்குதான் நாம் செல்வோம்.
4.ஒரு அரசியல் அமைப்பால் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாவிட்டால்... அந்த பிரச்சினை மக்களிடம் விளக்குவதும், அரசியல் அமைப்பை விமர்சிப்பதும் அதன் மூலம் மக்களை புதிய பாதைக்கு நகர்த்துவதும் மட்டுமே ஓரு சமூக போராளியின் கடமை.
மக்களை புதிய பாதைக்கு நகர்த்தும் சமூகப்போராளியே, இப்போ தனித்தமிழ் நாடு கொடுத்துட்டா என்ன செய்வீங்க? கர்நாடகத்தின் மீது படையெடுத்துப்போய் கூர்க் மலையவே பேத்துகிட்டு வருவீங்களா? இல்லை தன் கையே தனக்குதவின்னு எதுனா ஊத்து தோண்டி தமிழ்நாட்டுக்குள்ளயே புது நதிய உற்பத்தி பண்ணுவீங்களா? ஐயா, கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசும். சும்மா வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு உளறிட்டு அதுக்கு சமூகப்போராளின்னு உங்களுக்கு நீங்களே பட்டம் வேற கொடுத்துக்குவீங்களா? ஒரே நாட்டுக்குள்ள இருக்கையிலேயே ஆயிரம் பிரச்சனை அவனோட. இதுல பக்கத்து நாடாயிட்டா அவ்ளோதான், எப்போ பாத்தாலும் அடிச்சுகிட்டு சாக வேண்டியதுதான். ஒரு பிரயோசனமும் இருக்காது. பிரச்சனை அரசியலமைப்பிலில்லை, அதை கையில் வைத்துக்கொண்டிருக்கும் சுயநல கும்பலிடமிருக்கிறது. அதை கேள்வி கேட்டு மாற்றப்பாரும். அத்தை விட்டுட்டு காமெடி பண்றீரேய்யா.... அதெப்படி, நீங்க கோமளவிலாசும், சரவணபவனும் முக்குக்கு முக்கு இருக்கற ஒரு 3 மணி நேர பயணத்துல இந்தியாவுக்கு வர முடிகிற சிங்கப்பூர் போய் வாழ்வியலை தொலைச்சுட்டீங்க பனிப்பாலையான அமெரிக்காவுக்கு போனவனெல்லாம் மட்டும் சந்தோஷமாயிருக்கான்... நல்ல கண்டுபிடிப்பு... வீட்டுல Fridgeல் இருந்து ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை எடுத்து மடமடவென குடிக்கவும். வயிற்றெரிச்சல் அடங்கும்.
வாருங்கள் செல்வமுத்துகுமரன்!
வருகைக்கு நன்றி!
உங்கள் தனிமனித நக்கல்களை தவிர்த்து மிச்சம் இருக்கிற ஓரே செய்தியான
//
பிரச்சனை அரசியலமைப்பிலில்லை, அதை கையில் வைத்துக்கொண்டிருக்கும் சுயநல கும்பலிடமிருக்கிறது. அதை கேள்வி கேட்டு மாற்றப்பாரும்.
//
அதெப்படி ஒரு நல்ல அரசியலமைப்பில் சுயநல கும்பல்கள் அதிகாரத்திற்க்கு வரமுடியும். இப்படி நான் உங்களிடம் திரும்பகேட்கலாமில்லையா!
//
அதெப்படி, நீங்க கோமளவிலாசும், சரவணபவனும் முக்குக்கு முக்கு இருக்கற ஒரு 3 மணி நேர பயணத்துல இந்தியாவுக்கு வர முடிகிற சிங்கப்பூர் போய் வாழ்வியலை தொலைச்சுட்டீங்க பனிப்பாலையான அமெரிக்காவுக்கு போனவனெல்லாம் மட்டும் சந்தோஷமாயிருக்கான்... நல்ல கண்டுபிடிப்பு... வீட்டுல Fridgeல் இருந்து ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை எடுத்து மடமடவென குடிக்கவும். வயிற்றெரிச்சல் அடங்கும்.
//
ஓ... நீங்க அமெரிக்க ஆதரவாளரா! நான் பேசுவது எல்லா நாட்டிலும் டாலரில் தேவையான அளவு சம்பாதித்துக்கொண்டு, தங்களுடைய குடும்பம், உறவு எதையும் தொலைக்காமல் நிம்மதியாக இருக்கிற எல்லா புண்ணாக்குகளையும் தான். அதில் சிங்கப்பூர் என்ன? அமெரிக்கா என்ன?
வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாமா! ஏஜெண்ட்க்கு காசுக்கட்டி எப்படியாவது என்னை ஐரோப்பிய நாட்டில் இலங்கை அகதியாக இறக்கி விடுங்கள் என்று கெஞ்சுகிற விவசாய குடும்பத்து இளைஞர்களை பற்றி பேசுவோமா!
நான் எனக்கா பேசவில்லை நண்பரே! 5 லட்சத்திற்ககு மேலாக குடும்பம், உறவு, வாழ்வியலை தொலைத்துவிட்டு உலகம் முழுவதும் கூலியாய் ஓடிக்கொண்டிருக்கும் விவசாய குடும்பத்து இளைஞர்களை எண்ணி வேதனையடைந்து எழுதுவது.
இன்னும் ஒவ்வொரு இளைஞனின் கூலி வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை தொடர்ந்து எழுததான் போகிறேன்...
கருத்துரையிடுக