இப்போ திடீரென்று எல்லோரும் சட்டத்தால் தண்டிக்கபட்டால் அல்லது நிரூபிக்கபட்டால் மட்டுமே ஓருவர் குற்றவாளி என்று ஜல்லியடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
அப்போ ஓரினச்சேர்க்கையில் மாணவர்களை ஈடுபட துன்புறுத்திய, கடவுள் சக்தியால் செயின் வருகிறது என்று ஏமாற்றிய சாயிபாபா சட்டத்தால் தண்டிக்கபடவில்லை அதனால் அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்.
கொலை மற்றும் பல வழக்குகளில் தண்டிக்கபடாத ஜெயேந்திரர் என்கிற காலிபயல் மிகவும் நல்லவர்.
டான்சி வழக்கில் இது தப்புதான் பரவாயில்லை நீங்கள் மனச்சாட்சிபடி நடந்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கபட்ட ஜெயலலிதா தப்பே பண்ணாத உத்தமி!
(இப்படி ஓரு தீர்வு எப்படிதான் கொடுத்தார்களோ தெரியவில்லை, வேண்டுமானால் உலக வரலாற்றிலேயே முதல்முறையாக மொக்கையான ஒரு தீர்ப்பு என்று வைத்துக்கொள்ளலாம்)
நான் சென்னையில் இருக்கும்போது ஒரு நண்பர் இப்படிதான் சோனியாகாந்தி, ராஜீவ்காந்தியின் மனைவி அப்படியின்னு சொன்னா! உடனே எந்த புத்தகத்தில் போட்டிருக்கு என்பார். இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் அச்சடித்த காகிதத்தில் ஆதாரம் வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் குற்றவாளிகளை தண்டித்ததை விட மிக அதிக அளவில் பார்பானீயத்தை எதிர்த்த சமூக போராளிகளை தண்டித்ததே அதிகம்.
ரமேஷ் தண்டிக்கபடுவாரா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம் ஏனென்றால் எல்லா இடங்களில் பார்பானீயத்தை ஆதரிக்கிற அதிகார வர்க்கங்கள் இருக்கும்போது, எப்படி சட்ட ரீதியாக தண்டனை கிடைக்கும் என்பது தெரியவில்லை!.
புதன், 18 ஜூலை, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
கேள்விகளாய் கேட்பது எளிது. ஒரு தீர்வு சொல்லுங்களேன்.
ஏதோ ஒரு வழக்கில் உங்களை சந்தேகத்தின் பேரில் விசாரிக்க அழைத்து செல்கின்றனர். (போலீசுக்கு ஆள் கிடைக்கவில்லையென்றால் சம்பந்தமே இல்லாமல் இருந்தாலும், எண்ணிக்கை கா/கூட்டுவதற்காக யார் வேண்டுமானாலும் கொண்டு போகப் படுவர்.) அதை மீடியாக்கள் படமெடுத்து குற்றவாளியைப் போல் உங்களை சித்தரித்தால் நீங்களும் உங்களைச் சார்நதவர்களும் அதை ஏற்றுக் கொள்வீர்களா?
(நடக்காதென்று நினைக்கதீர்கள். ரோட்டில் சும்மா போய்க் கொண்டிருந்த சிறுவர் முதல் கிழங்கள் வரை பிடிக்கப்பட்டுள்ளனர். இங்கு எது வேண்டுமானாலும் நிகழலாம்.)
எத்தனை குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாதென்பது நியாயமாகத்தான் தெரிகிறது.
வாருங்கள் சுல்தான்!
வருகைக்கு நன்றி!
//எத்தனை குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாதென்பது நியாயமாகத்தான் தெரிகிறது.//
உண்மையான, நியாயமான கருத்து, ஆனால் சட்டத்தில் தப்பிவிட்டதால் சமூகத்தில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது மிக மிக தவறு.
உதாரணமாக அஸ்தினாபுரம் ரூசோ கொலை வழக்கு எல்லோருக்கும் தெரியும், குற்றவாளிகள் தண்டிக்கபடவேயில்லை அதற்க்காக சமூகத்தில் அவர்கள் நல்லவர்கள் என்று ஏற்றுக்கொள்ள இயலாது.
நன்றி!
கருத்துரையிடுக