ஆசை, ஆசையாய் நாம் நம் வீட்டுக்கோ, உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு மி்ன்னணுவியல் கருவி (electronics equipment) வாங்கி கொடுக்கிறோம். இப்பொழுது வருகிற நவீன கருவிகள் ஏகப்பட்ட பயன்பாடுகளுடன் வருகிறது ஆனால் அவற்றுக்கான பயனாளர் கையேடுகள் (user manual) பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
நாம் வாங்கி தருகிற பொருட்களை நம் பெற்றோரோ அல்லது உறவினரோ பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கலை தீர்க்க முடியாமல் அருகில் இருக்கும் யாரவது ஒருவரை உதவிக்கு அழைக்கும் போது அவர்கள் தங்களுடைய அறிவு திறமைகளையெல்லாம் அதில் காண்பித்து கடைசியில் பேரீச்சை பழத்திற்க்கு விற்க்கும் நிலைக்கு பொருள் வந்துவிடுகிறது.
எளிய தமிழிலில் பயனாளர் கையேடு மிக அவசியமாகிறது.
அதற்க்காக நாம் என்ன செய்யலாம்? சீனா மாதிரி நமக்கு ஒரு நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ இருந்தால் நாம் கட்டாயம் சந்தைக்கு வருகிற பொருட்களின் நிறுவனங்களை மறைமுகமாக நம்முடைய தமிழ் மொழியில் கையேடு வேண்டுமென்பதை அறிவுறுத்தலாம்.
நதிநீர் வேண்டுமென்று கேட்டாலே நாய்களை விட கேவலமாக அடித்துக்கொல்லபடும் அளவுக்கு அரசியல் அனாதைகளாக இருக்கிற நிலையில்...
தமிழிலில் கையேடா!
முடியும்! இதற்க்காக நீங்கள் வீதியில் கொடிபிடிக்க வேண்டாம்! போராட்டங்கள்! தீக்குளிப்புகள் தேவையில்லை!
ஒரு எளிய வழி இருக்கிறது!
இன்றைய நிலையில் மின்னணு கருவிகள் பயனாளர் சந்தையில் மிகப்பெரிய நுகர்வோர் எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.
ஓவ்வொரு மின்னணு கருவி நீங்கள் வாங்கும்போதும், உங்களுக்கு அப்பொருளின் உத்திரவாதத்தை பதிவு (warranty card) செய்ய ஒரு விண்ணப்பமும், ஒரு கருத்து கணிப்பு படிவம் (feed back form) -ம் தரப்படுகிறது.
நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு ஒரு கேள்வியாக மேலதிக சேவையாக அந்நிறுவனத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள், அப்பொழுது நீங்கள் தவறாமல் எங்களுக்கு தமிழிலில் பயனாளர் கையேடு இருந்தால் நலம் என்றும், அப்படி இல்லாததால் அவர்களின் கருவிகளை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது எனவும், விரைவில் தமிழிலில் பயனாளர் கையேடு தருகிற நிறுவனப்பொருட்களையே வாங்க விருப்பபடுவதாக குறிப்பிடுங்கள்.
கருத்து கணிப்பு படிவம் இல்லாத நிலையில் நீங்கள் அந்நிறுவனத்திற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்து உங்களுடைய பதிவு எண்ணை குறிப்பிட்டு நீங்கள் விரும்புகிற மேலதிக சேவைகளை குறிப்பிடலாம்.
என்னுடைய நண்பர் 'சாம்சங்' நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் இருக்கிறார், அவருடைய கூற்றுப்படி இவ்வாறு வருகிற பயனாளர் கோரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் உடனடியாக அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கும் என்கிறார்.மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் மிக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார்.
இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்?
1. தமிழ் மொழிபெயர்பாளர்கள் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2. நமக்கு எளிய தமிழிலில் பயனாளர் கையேடுகள் கிடைக்கும்.
அன்பின் வலைப்பதிவர்களுக்கு,
தற்பொழுது நிறவனங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனையை இலக்கு வைத்து உற்பத்தியையும் மற்றும் பயனாளர் கருத்துகளையும் விவாதிக்கிற நேரம். நாம் நம்முடைய எதிர்பார்ப்புகளை கருத்து கணிப்பு படிவங்களில் தெரிவிப்பதன் மூலம் அவர்களை நம் பக்கம் திரும்ப செய்யலாம். ஓரே ஒரு நிறுவனம் கையேடு இவ்வாண்டு வெளியிட்டு விட்டால் மற்ற நிறுவனங்கள் வணிக போட்டியால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட ஆரம்பித்துவிடும்.
எங்களது நண்பர் வட்டாரங்களில் மின்னஞ்சல் வழியாக இக்கோரிக்கையை முக்கியபடுத்தி இதுவரை பத்துக்கு மேற்ப்பட்ட படிவங்களை 'சோன', 'சாம்சங்', 'கேனான்' நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டோம்.
நீங்களும் உங்கள் கரங்களை கொடுத்து வலு சேருங்கள்! எளிய தமிழிலில் பயனாளர் கையேடு கிடைக்க வழி செய்வோம்.
நன்றி!
திங்கள், 16 ஜூலை, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 comments:
முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள், அரசு. நிறுவனங்களை தமிழில் கையேட்டைத் தரச்சொல்லி வலியுறுத்த உங்கள் யோசனை நிச்சயம் பலனளிக்கும்.
பாமரரும் பயன்படுத்தும் பிரஷர் குக்கர் போன்ற பொருட்களிலேயே கூட, 'IMPORTANT: READ INSTRUCTIONS BEFORE USE' என்று கொட்டை எழுத்துக்களில் ஆங்கிலத்தில் பொறிக்கப்படுகிறது. அத்தனை முக்கியமானதென்றால் அது போய்ச் சேர்பவர்களுக்குப் போய்ச் சேர வைக்க தமிழில் (உள்ளூர் மொழியில்) சொல்ல வேண்டாமா?
நிறுவனங்கள் மனது வைத்தால் நிச்சயம் முடியும். எங்கள் தயாரிப்பில் இதை செய்திருக்கிறோம். கையேடு மட்டுமல்லாமல், பயனருக்கான செய்முறை விடியோவையும் தமிழில் செய்திருக்கிறோம். சில நாட்களில் இணையத்தளத்தில் காணலாம்.
இப்போது உள்ள தளம் தமிழில் இல்லையே என்று யாராவது சொல்வதற்குள் ஒன்று சொல்லவேண்டும்: முழுமையான தளம் இருமொழிகளில் (பிறகு பல்மொழிகளிலும்) ஆகஸ்ட்டில் வெளியாகும்.
நந்தா said...
இது நாள் வரை இதை நான் யோசித்துக் கூடப்பார்த்ததில்லை. நல்ல யோசனை.
July 15, 2007 10:24 PM
Murugan said...
wow, very interesting... we must do this.
July 16, 2007 2:14 AM
வாருங்கள் நந்தா!
ஒன்றிணைந்து கதவை தட்டினால் எங்காவது ஒரு கதவாவது திறக்குமில்லையா!
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
வாருங்கள் காசி ஆறுமுகம் அய்யா!
முதலில் எனது நன்றிகள்! சிறப்பானதொரு திரட்டியை தமிழ் இணையத்திற்க்கு வழங்கிய உங்களின் உழைப்புக்கு.
கருத்தை உள்வாங்கி அதை சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
மிகவும் அவசியமான, மக்களுக்கு பயனுள்ள கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். தம் மக்களுடைய நலனில் உண்மையான அக்கறை இருக்கும் அரசு எதுவும் மக்களுடைய மொழியில் இது போன்ற அத்தியாவாசியமான விதயங்களைக் கொண்டுவர வலியுறுத்தும். சுய ஆர்வ குழுக்கள், மக்கள் நலன் விரும்புவோர்தான் இதற்கான முனைப்புகளில் ஈடுபடவேண்டி இருக்கிறது.
பதிவுக்கு நன்றி!
வாருங்கள் தங்கமணி,
//மிகவும் அவசியமான, மக்களுக்கு பயனுள்ள கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். தம் மக்களுடைய நலனில் உண்மையான அக்கறை இருக்கும் அரசு எதுவும் மக்களுடைய மொழியில் இது போன்ற அத்தியாவாசியமான விதயங்களைக் கொண்டுவர வலியுறுத்தும். சுய ஆர்வ குழுக்கள், மக்கள் நலன் விரும்புவோர்தான் இதற்கான முனைப்புகளில் ஈடுபடவேண்டி இருக்கிறது.//
தமிழ் மக்களுக்கான சமூக தேவைகளை வலியுறுத்தும் அரசியல் அமைப்பு தமிழகத்தில் இதுவரை அமையவில்லை என்பது தான் உண்மை.
கருத்துரையிடுக