இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

புதன், 17 அக்டோபர், 2007

ஏன்?

இந்திய இராணுவத்தில் மிக முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பஞ்சாபிகளும், ரானா என்கிற இனத்தை சேர்ந்தவர்கள் (இவர்களின் சராசரி உயரம் 6.5 அடிக்கு மேல்), ஆனால் நாங்கள் உடல் வலுவற்றவர்கள் அதனால் வயல் வேலை செய்வதில்லை என்று கூறும் பார்ப்பனர்கள் 80% உயர் இராணுவ பதவிகளை வகிப்பது ஏன்? எப்படி?
(தங்களுடைய உரிமைக்காக பஞ்சாபிகள் ஆயுதமேந்தி போராடினார்கள் என்பது வரலாறு, ஆனால் அது ஒடுக்கப்பட்டது)

இந்தியாவின் குடியரசுதலைவர் மாளிகையில் 1000+ பதவிகள்(சமையல்காரர் முதல் குடியரசுதலைவர் வரை), ஆனால் 10 முதல் 20 நபர்களே பார்ப்பனரல்லாதோர்! மற்ற அனைவரும் பார்ப்பனராக இருப்பது ஏன்?

இந்தியாவின் முக்கிய வங்கி சேவையான RBI மற்றும் SBI உயரதிகாரிகள் 90% பார்ப்பனர்களாக இருப்பதேன்?

இந்தியாவின் வெளியுறவுதுறை மற்றும் அனைத்து நாடுகளுக்கான தூதர்கள், மற்றும் அதனைச்சார்ந்த துணைப்பதவிகள் அனைத்திலும் பார்ப்பனர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதின் மர்மமென்ன?

இந்தியாவின் பெரும்பான்மை பிரதமர்கள் பார்ப்பனராக இருந்தது ஏன்?

இந்தியாவின் தேர்தல் ஆணைய தலைவர்கள் தொடர்ந்து பார்ப்பனராக நியமிக்கப்படுதின் மர்மமென்ன?

இந்தியாவின் முக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க) பார்ப்பனர்களாக இருப்பதேன்?

இந்தியாவின் மற்ற நாடுகளுக்கான கலாச்சார, பண்பாடு துறையின் தலைவர்களாக பார்ப்பனர்கள் இருப்பதேன்?
(இப்படி ருஷ்யாவின் கலாச்சார, பண்பாடு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பத்மா சுப்ரமணியத்தின் அப்பா தன் மகளை நாடு, நாடாக அழைத்து சென்று நடனம் ஆட வைத்து புகழும், பணமும் சம்பாதித்தாரல்வா!)

இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் பார்ஸி மற்றும் பார்ப்பனர்களாக இருப்பதேன்?

பா.ஜ.க ஆட்சியின் போது இசுலாமிய சகோதரர்களை கொலை செய்து விட்டு, ஈரான் அதிபரை இந்தியாவிற்க்கு இரு முறை அழைத்த நோக்கமென்ன?
(வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரின் பெர்ஸிய இனவெறி அங்கே முக்கிய காரணமில்லையா!)

கோடிக்கணக்கான சொத்துக்களை டி.என்.சேஷன் மற்றும் ஆர்.வெங்கடராமன் ஆகியோர் காஞ்சி மடத்துக்கு எழுதி வைத்தது ஏன்?
இந்த சொத்துக்கள் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

மக்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லும் பொதுடைமைவாதியான சங்கரய்யா என்கிற பார்ப்பனர், தானும், பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் சென்னை, குரோம்பேட்டை, நியூகாலணியில் மட்டும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியாக வசிக்கிறார், ஆனால் அதற்க்கு அடுத்த தெருவில் கழிவுநீர் கால்வாய் கூட இல்லை என்பது பற்றி கவலை படாதது ஏன்?
(இது 2004ல் உள்ள நிலை)

இந்தியாவின் 2% மட்டுமே இருக்கிற பார்ப்பனர்கள், இப்படி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளிலும், முடிவெடுக்க கூடிய முக்கிய இடங்களிலும் ஆக்கிரமித்துக்கொண்டு இந்த நாட்டை சுரண்டிக்கொழுப்பதை, எப்படி கேள்விக்கேட்காமல் இருக்க முடியும்.

இந்திய அரசியலமைப்பு சட்டவரைவு குழு தலைவராக அம்பேத்கர் இருந்தார், ஆனால் அந்த குழுவின் ஐந்து உறுப்பினர்களும் பார்ப்பனராக இருந்தனர். அவர்கள் எழுதி தருகிற சட்டங்களை வடிவமைக்கும் பொம்மையாகவே அம்பேத்கர் இருந்தரர். அதனாலயே தான் அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் தீயிட்டு கொளுத்தினர்.

தாழ்த்தப்பட்டவர் குடியரசு தலைவராக இருக்கிறார், இசுலாமியர் குடியரசு தலைவர் என்றெல்லாம் கொண்டடியிருக்க முடியாது... இன்னும் அதிகார மையங்கள் 98% மக்களுக்கு போய் சேரவில்லை.

9 comments:

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா :-)))

ஜெகதீசன் சொன்னது…

அம்பி, இந்த மாதிரியெல்லாம் குதர்க்கமா கேக்கப்படாது... அப்பறம் பஹவான் கண்ணைக் குத்திடுவன்...

பெயரில்லா சொன்னது…

You are useful for anything. Fuckers..

அருண்மொழி சொன்னது…

ஏன்னா இப்படி ஒரு பதிவை எழுதறேள்?. நாங்களே எங்களவா கக்கூஸ் கழுவும் வேலைக்கு எல்லாம் வந்துட்டா என்று புலம்பி பதிவு போட்டின்டிருக்கோம். ஷெத்த ஸும்மா இருங்கோ.

நீங்கள் ஷொல்றவா எல்லாம் true brahmins இல்லையாக்கும். சுத்த பிராமனா உஞ்சவிருத்தியா இருக்கனும். 8ஆம் நம்பர் நூல் போட்டவா எல்லாம் பிராமனா ஆகிவிட முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

ஏன் ஏன் ?

இதற்கெல்லாம் ஒரே பதில் 'அவுங்கல்லாம் மற்றவர்களைவிட' புத்திசாலிகளாக இருக்கிறார்களாம். எனக்கு தெரிந்தவர் எனக்கு சொன்னார்.

:)
திறமை உள்ளவர்களெல்லாம் புத்திசாலிகள் அல்ல. புத்திசாலிகள் எல்லாம் திறமையுடையவர் அல்ல.
சிறுத்தை திறமையானது. குள்ள நரி புத்திசாலி

வவ்வால் சொன்னது…

பாரி,
//குரோம்பேட்டை, நியூகாலணியில் மட்டும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியாக வசிக்கிறார், ஆனால் அதற்க்கு அடுத்த தெருவில் கழிவுநீர் கால்வாய் கூட இல்லை என்பது பற்றி கவலை படாதது ஏன்?
(இது 2004ல் உள்ள நிலை)//

இன்று வரைக்கும் குரோம்பேட்டை பகுதிகளில் சரியான சாலைகள் இல்லை, பெரும்பாலான சாலைகள் பாதாலசாக்கடை திட்டத்திற்காக பள்ளம் வெட்டப்பட்டு அப்படியே கிடைக்கிறது. மிச்சம் சொச்சம் சாலைகளும் கந்தர்கோலம் தான்.

சந்தேகம் எனில் குரோம்பேட்டை , ராதா நகர்ப்பகுதிவாசிகள் ,எம்.ஐ.டி, என்று அந்தப்பக்கத்து நபர்கள் யாராவது தெரிந்தால் கேட்டுப்பாருங்கள்!

உங்களின் மற்ற ஏன்களுக்கு எல்லாம் காலம் காலமாக நடந்து வரும் கொடுமை என்பதை தான் சொல்ல வேண்டும்.

பாரி.அரசு சொன்னது…

மன்னிக்கவும் அதியமான்!

தங்களுடைய பின்னூட்டம் நிறுத்தப்பட்டதற்க்கு!

தொடர்ந்து தங்களிடம் நண்பர்கள் சொல்லியும் நீங்கள் தமிழ் வலைபதிவுகளில் ஆங்கிலத்தில் ஏன் பின்னூட்டம் இடுகிறீர்கள்? என்று தெரியவில்லை.

நீங்கள் தமிழில் எழுதினால் மட்டுமே பின்னூட்டம் வெளியிடப்படும்

நன்றி!

ஜெகதீசன் சொன்னது…

//
மன்னிக்கவும் அதியமான்!

தங்களுடைய பின்னூட்டம் நிறுத்தப்பட்டதற்க்கு!

தொடர்ந்து தங்களிடம் நண்பர்கள் சொல்லியும் நீங்கள் தமிழ் வலைபதிவுகளில் ஆங்கிலத்தில் ஏன் பின்னூட்டம் இடுகிறீர்கள்? என்று தெரியவில்லை.

நீங்கள் தமிழில் எழுதினால் மட்டுமே பின்னூட்டம் வெளியிடப்படும்

நன்றி!
//
வாழ்த்துக்கள் பாரி!!!!!
நானும் இதே முடிவை எடுத்துள்ளேன்...

K.R.அதியமான். 13230870032840655763 சொன்னது…

முல்லைக்கு தேர் (இப்ப கேட்டா கார்) தந்த வள்ளல், சக வள்ளல் இடும் ஆங்கில பின்னோட்டத்திற்க்கு கொஞ்சம் இடம் தரலாமே ? :))

///இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் பார்ஸி மற்றும் பார்ப்பனர்களாக இருப்பதேன்?////


இல்லை. இந்திய கம்பேனிகளின் முதலாளிகள் : மார்வாரிகள், சிந்திகள், சர்தார்ஜிகள், செட்டியார்கள் போன்றவர்களே. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அனைத்து ஜாதியிலும் உள்ளனர்.

தமிழக நாடர்களின் அபாராமன முன்றேறத்தை பார்த்து தேவர், வன்னியர் போன்ற இதர பிற்பட்ட வகுப்பினர் கற்க வேண்டும். கல்வி மற்றும் வியாபாரம், தொழில் ஆகியவற்றில் சென்ற அரை நூற்றாண்டுகளாக நல்ல முன்னேற்றம் கண்டு நல்ல நிலைமைக்கும் வந்து, ஜாதி சண்டைகளை மறந்து வாழ முற்படுகின்றனர். விருதுநகர், சிவகாசி ஆகிய பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருக இவர்களே காரணம். கொங்கு நாடுதான் இதைவிட சூப்பர் முன்னேற்றம். கல்வி, பெண்களுக்கு பல் வாய்ப்புகள், விதவை மற்றும் விவாகரத்தான பெண்கள் மறுமணம், தொழில் முன்னேற்றம் ஆகிய பல விஷியங்களில் வழிகாட்டுகிறது.

Related Posts with Thumbnails