வியாழன், 24 ஜனவரி, 2008

தமிழ் புத்தாண்டு - கேள்வி கேட்பதன் நோக்கமென்ன...?

தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்திற்க்கான செயல்திட்டங்கள் என்றால் நம்ம அதிமேதாவிகளுக்கு எட்டிக்காயை கடித்தது போல துள்ளிக்குதிக்கிறார்கள். தங்களுடைய வழக்கமான குள்ளநரி தனத்தால் கேள்விகள் கேட்பது போல எல்லோரையும் திசைமாற்றுகிறார்கள்.

திருவள்ளுவருக்கு சிலை!

இத்தன கோடி செலவு பண்ணி வள்ளுவருக்கு சிலை வைப்பதற்க்கு பதிலா மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டலாமே! என்று கேள்வி கேட்டார்கள். ஏன்டா வெங்காயங்களா விவேகானந்தருக்கு மண்டபமும், சிலையும் வைத்தப்போது அதைக்கேட்க வேண்டியது தானே! சரி! விட்டு தள்ளு கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி விவேகானந்தர் பாறையை பாராமரித்தலை நிறுத்த சொல்லுவியா! ஆண்டு தோறும் கோயில் திருப்பணி என்று செலவிடப்படும் மக்கள் பணத்தில், வேறு ஏதாவது செய்யலாமே! மணியாட்டுற ஐயருக்கு கொடுக்கிற மாத சம்பளத்தை நிறுத்தி விட்டு வேறு உழைப்பாளிகளுக்கு ஊதியம் வழங்கலாமே!

இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள்! ஏனென்றால் இ(ஐ)ந்து என்கிற அடையாளத்தை கட்டிக்காப்பதனுமே! ஆனால் தமிழன் தன் அடையாளத்தை காப்பாற்ற எதையாவது செய்தால் அதற்க்கு நொட்டை சொல்வீர்கள்!

தமிழ் செம்மொழி என்கிற அறிவிப்பு!

இதை செய்து என்னத்த கிழிக்க போகிறார்கள். இதனால் என்ன பயன் என்று பட்டியல் போட்டார்கள். அட! ஒன்னுமே இல்லையே! அப்புறம் எதுக்கு அவசர, அவசரமா சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவித்தீர்கள்? ஏன்னா அது உங்க மொழி ஆனா தமிழ் தீண்டதகாதவர்களின் மொழி அப்படிதானே!

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அறிவிப்பு!

கிட்டதட்ட 86 ஆண்டுகள் கழித்து தமிழறிஞர்களின் கோரிக்கையான தமிழ் புத்தாண்டு என்பது நிறைவேற்றப்பட்டால்... அது இந்து நம்பிக்கைக்கெதிரானது என்று திசை மாற்றுகிற கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இதன் நோக்கத்தை பற்றிய விளக்கமெல்லாம் தேவைப்படுவதில்லை...

புதன், 23 ஜனவரி, 2008

உங்களுடைய ஒவ்வொரு டாலரும் உங்களுக்கெதிரான ஆயுதமாக...!

எங்கே போனாலும் இந்த சாமியை கட்டிக்கொண்டு அழுகிற தமிழர்களால்... அவர்களுடைய உழைப்பே, அவர்களின் இனத்திற்க்கெதிரான நடவடிக்கைகளுக்கு துணை போவதை உணராமல் இருக்கிறார்கள்.

புலம் பெயர் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்கிற இந்த புல்லுருவிகளால்... இன்றைக்கு மிகப்பெரிய ஆபத்து தமிழனத்திறக்கெதிராய் கட்டமைக்கப்படுகிறது.

கோயில்கள், இசைப்பள்ளிகள், கலை மற்றும் விழாக்கள் வழியாக பார்ப்பானீயத்தின் ஊடுருவல் மெல்ல, மெல்ல புலத்தில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதே நேரம் தமிழகத்தில் இவர்களின் ஆதிக்கத்திற்க்கெதிரான போராட்டத்திற்க்கும் மிகப்பெரிய சவாலை உருவாக்குகிறது.

இங்கிலாந்தில் இருக்கிற புலம் பெயர் தமிழர்களுக்கு குங்குமம், திருநீறு போன்றவற்றை ஏற்றுமதி செய்தே, சென்னை கே.கே.நகரில் ஓருவர் கோடிகளுக்கு சொந்தகாரராக ஆகியுள்ளார்.

மிக எளிமையாக கேள்வி கேட்கலாம் இது தொழில் தானே என்று... நீங்கள் யாருடன் தொழில் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்களுடைய இனத்திற்க்கெதிரான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் நபர்களுடன் நீங்கள் தொழில் செய்கிறீர்கள். அதற்க்கான பொருளாதார வளத்தை நீங்களே தருகிறீர்கள்.

தினமலர், விகடன் குழுமம் போன்றவற்றிக்கு இணையத்தில் சந்ததாரர்களாக புலம் பெயர் தமிழர்கள் ஆகியிருப்பதன் மூலம், உங்களுக்கெதிரான அரசியல் ஊடகத்திற்க்கு நீங்களே நீர் விட்டு வளர்க்கிறீர்கள்!

ஒரு இனத்திற்க்கான அரசியல் என்பது ஊடகம், தொழில் துறை, சமயம், கலை, பண்பாடு இப்படி எல்லா நிலைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்!

வலைப்பதிவுகள் எப்படி இருக்கணும்...!

நீங்கள் நல்லபதிவராக சில கூறுகள்... நல்லா எழுதுறீங்க என்கிற பாராட்டு வேண்டுமா...

எத்தியோபியாவிலும், சோமலியாவிலும் பசி, பட்டினி என்று படம் காட்ட வேண்டும், தவறி உள்ளூர் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை என்றெல்லாம் எழுதி விடாதீர்கள்!.

வெள்ளை,கருப்பின மோதல்களை பற்றி வரலாறு எழுதலாம்... மறந்தும் திராவிட இனத்தின் மீதான ஆரிய அயோக்கிய தனங்களை எழுதி விடாதீர்கள்!.

அங்கே பார்... அவனவன் நடப்பதை எழுதுகிறான்... நீங்களெல்லாம் பார்ப்பான்,பறையன்,பள்ளன் என்று எழுதுகிறீர்கள்... ஆமாங்க! உங்க ஊர் சேரி பற்றியோ, அக்ரகாரத்தின் அதிகாரத்தை பற்றியோ எழுதுவதை மறந்து விடுங்கள்!

வளமாக எழுதுங்கள், இதுவல்லோ எழுத்து என்று புல்லரிக்க எழுதுங்கள் ஆனால் மறந்து மக்களின் வாழ்க்கையை எழுதி விடாதீர்கள்!

போரும், அமைதியும் படியுங்கள், நான் படித்த புத்தகங்கள் என்று பட்டியல் எழுதுங்கள்... உங்கள் மேன்மையை நிலைநாட்டுங்கள்... மறந்தும் உயிருக்கு போராடும் ஈழத்தமிழனை பற்றி எழுதி விடாதீர்கள்!

ஒரே நேர்க்கோடு நிகழ்வை, உண்மையை எழுதாதீர்கள்! கற்பனையை, அதிகார முதுகு சொறிதலை செய்யுங்கள்!

வலைப்பதிவுகள் எப்படி இருக்கணும், எப்படி எழுதணும்... என்று அப்பப்ப புல்லரிக்கிற சொறிதல்கள் வந்துக்கொண்டேயிருக்கும். அது உண்மையை மறைத்து கற்பனையில் உங்களை ஆழ்த்தி அவர்களின் சுயநலனை முன்னிறுத்தும்... அப்படி இருப்பதில் தான் ஆதிக்கம், அதிகாரம் எல்லாம் தக்க வைக்கப்படுகிறது.

பதிவுகள் பற்றியும், பதிவர்களின் நடத்தை பற்றியும் அப்பப்ப குறைப்பட்டுக்கொள்கிறவர்கள், இதெல்லாம் ரொம்ப நாள் தாங்காது என்று ஆருடம் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த நல்ல பதிவு, நல்ல பதிவர் பட்டம் கொடுப்பதில் முனைப்புடன் இருக்கிறார்கள்...

மகிழ்ச்சியாகவே இருக்கிறது! ஊடக அதிகாரத்தை வைத்து மக்களை, அவர்களுடைய பிரச்சினைகளை பற்றிய கதையாடல்களை,உரையாடல்களை, சொல்லாடல்களை வகையாய் தவிர்த்து விட்டு... தங்களுக்கு (அதிகாரத்திற்க்கு) சாதகமான கதையாடல்களை,உரையாடல்களை, சொல்லாடல்களை கட்டமைத்தவர்கள்... இன்றைக்கு வலைப்பதிவுகள் முரண்களை, மக்களின் அன்றாட உண்மை நிலை பேசுகிற போது... அஞ்சுகிறார்கள், பிதற்றுகிறார்கள்... இதெல்லாம் எழுத்தா! என்று.

பொங்கி பெருகும் காட்டாற்று வெள்ளத்திற்க்கு; காட்டாமணக்குகள் தடை சொல்ல முடியுமா!

தொடுப்புக்கு...

//கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிகையில் வளர்ச்சிகண்டிருக்கின்றன. ஆனால் உள்ளடகத்தின் கனத்தில் சரிவு கண்டிருக்கின்றன.திரட்டிகள் கவனம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைத் தருவதால், கவனம் பெறுகிறோம்என்ற மிதப்பே பாவனைகளை மேற்கொள்ளப் பதிவர்களை உந்துகிறது என்பதனால்பாவனைகளே பதிவாகிப் போகின்றன. கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துமகிழும் மனிதர்களைப் போல, பஸ்ஸில் பெண்களின் கவனத்தை ஈர்க்க முற்படும்மீசை அரும்பாத ஆண்களைப் போல, திருவிழாவில் ஆண்களின் கவனத்தை ஈர்க்கமுற்படும் வளர் இளம் பருவத்துச் சிறுமிகளின் செய்கைகளைப் போல பல பதிவுகள்இருந்து வருகின்றன. இவற்றோடு திரட்டிகள் குழு மனப்பான்மைக்குஉரமளிக்கவும் செய்வதால், கருத்துக்கள் மீதான விவாதங்களை நொடிப்பொழுதில்தனிமனிதர்கள் மீதான அவதூறுகளாகவும், துச்சமான எள்ளல்களாகவும்ஆக்கிவிடவும் செய்கின்றன. ஓர் ஆரோக்கியமான கருத்துலகு உருவாக இந்தப்பண்புகள் உதவாது. ....// - மாலன்
http://groups.google.com/group/tamil-blogs-open-opml/browse_thread/thread/bbe2a9c4ee241d0d#63eb5b8fcc834316


//.....தமிழ் தட்டச்சு தெரிந்து விட்ட மகிழ்ச்சியில், கிடைக்கும் பின்னுட்டபோதையில் நினைத்ததை எழுதி தள்ளுவது. இது அதிக நாட்கள் தாங்காது. பரபரப்பான தலைப்புகள், பின்னுட்டம் அதிகரிக்க செய்யப்படும் முயற்சிகள், மத, சாதீய, அரசியல் காழ்புணர்ச்சி பதிவுகள் வாசகர்களால் ஓரம் கட்டப்படும். எழுத சரக்கு இல்லை என்றால் இந்த பதிவாளர்களும் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.....//ராமசந்திர உஷா
http://nunippul.blogspot.com/2008/01/2.html

வியாழன், 17 ஜனவரி, 2008

ஏமாளிகளும்... ஏமாற்று வித்தைகாரர்களும்...!

தகவல் தொழில்நுட்ப துறையில் நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறிக்கொண்டிருக்கிற நிலையில்... உழைக்காமல் இந்தியாவில் உண்டுக்கொழுத்த கூட்டம் இப்போது உலகளவில் ஏமாற்றுவது என்று கிளம்பியிருக்கிறது.

1. உழைப்பை சுரண்டவது ...

2. வேலைவாய்ப்பை ஏற்ப்படுத்தி தருவதாக செல்லி பணம்பறிப்பது.

GrapeVyne Technologies - வெங்கி சார் இவனிடம் ஏமாந்த எத்தனையோ இளைஞர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.
ஆதம்பாக்கம் புவனேஸ்வரி
அப்புறம் சிங்கையில் ஒரு கன்சல்டன்ட் மிகப்பெரிய அளவில் ஏமாற்றி விட்டு கிட்டதட்ட 600 தகவல்தொழில்நுட்ப ஊழியர்களின் 6 மாத ஊதியத்தை சுருட்டிக்கொண்டு ஓடினான்.


இதெல்லாம் கடந்த காலம் என்றால் 3 மாதத்துக்கு முன்பு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக ஆந்திராவை சேர்ந்த 40 இளைஞர்களிடம் ஆளுக்கு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சம் வரை வசூலித்திருக்கிறான் கேரளாவை சேர்ந்த கேடி மாத்யூ.

சிங்கையை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து... இந்த பொறியியல் இளைஞர்களுக்கு 3 மாதம் microcontroller programming அதன் பின் மலேசியா அல்லது சிங்கப்பூரில் வேலை என்று சொல்லி பணம் வசூலித்திருக்கிறான்.

சிங்கை அரசாங்கம் இந்த நிறுவனத்திற்க்கு அனுமதி தராமல் ப்ளாக் லிஸ்ட் -ல் ஏற்றி விட்டது.

கேடி மலேசியாவில் இந்த மாணவர்களுக்கு பயிற்சி தருவதாக வர சொல்லி அவர்களின் வாழ்க்கையில் இனிமேல் மலேசியாவிற்க்கே வர இயலாத நிலைக்கு அவர்களுடைய கடவுச்சீட்டில் ஒரு தில்லுமுல்லையை செய்திருக்கிறான்.

மலேசியாவில் 1 மாத காலமே தங்க இயலும் என்கிற நிலையில்... அந்த மாணவர்களை 45 நாட்கள் தங்க வைப்பதற்க்காக லஞ்சம் கொடுத்து... மலேசியாவின் விசா வை போலியாக அவர்களுடைய பாஸ்போர்ட் ல் அச்சடித்திருக்கிறான்.

மாணவர்களுக்கு உண்மை தெரிந்து மலேசிய ஊடகங்களை வரவழைத்து பிரச்சினையை பெரிதாக்கும் போது... அவர்களை மிரட்டி, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விமானம் ஏற்றி அனுப்பி விட்டான்.

மாணவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியேவும் சொல்லவும் முடியாமல் தங்களுடைய கடவுச்சீட்டு இனி பயன்படுத்த பட முடியாத படி சட்டசிக்கல் ஆனதை கண்டு கொதித்து போயியுள்ளனர்.

இவன் தற்போது தமிழகத்தை சேர்ந்த கருத்து கந்தசாமி உடன் கூட்டணி அமைத்து அடுத்த கட்டமாக தமிழகத்திலும், பெங்களுரிலும் இளைஞர்களுக்கு வலை விரித்திருக்கிறான்...

புதன், 16 ஜனவரி, 2008

ஒன்னுமே புரியல... உலகத்திலே...!

எனக்கு இரண்டு வாரமா ஒரே மண்டைக்குடைச்சல்... நானும் புள்ளிவிவரங்களை தேடி, தேடி களைத்துப்போயிட்டேன்... சரி பதிவுலக மக்களிடம் சொல்லிட்டா... அவுங்க பாத்துக்க மாட்டாங்களா என்ன:(

இந்த இலவச வேட்டி, சேலை அப்படின்னு ஒரு அறிவிப்பை பார்த்ததும் தாங்க... நமக்கு இந்த மண்டைக்குடைச்சலே வந்தது... சரி! உள்ளற போறதுக்கு முன்னால கொஞ்சம் தகவல்களை இந்த தளத்திலிருந்து எடுத்து பார்த்துக்கலாம்...

http://www.census.tn.nic.in

மொத்த மக்கள் தொகை (2001) - 6,24,05,679
0 வயதிலிருந்து -4வயது வரை - 5098462
5 வயது -9வயது வரை 5600086
10வயது -14வயது வரை 6012326
மொத்தம் 1,67,10,874

2005 - பொங்கல் - 175 கோடி -1 கோடியே 11 லட்சம் வேட்டிகள்,1 கோடியே 1 லட்சம் சேலைகள்
மொத்தம் 2 கோடியே 22 லட்சம் .

2006 - பொங்கல் - 256 கோடி -1 கோடியே 64 லட்சம் வேட்டிகள்,1 கோடியே 64 லட்சம் சேலைகள்
மொத்தம் 3 கோடியே 28 லட்சம் .

2007 - புள்ளி விவரம் கிடைக்கவில்லை...

2008- கிட்டதட்ட மொத்தம் 250 கோடி செலவில் 3 கோடி மேல் மக்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாக சொன்னார்கள்...

அட ஒரு தோராயமாக வைத்துக்கொண்டாலே 6.5 கோடி தமிழ்நாட்டு மக்கள், ஒரு குடும்பத்துக்கு 3 பேர் என்றால் 2.17 கோடி குடும்பம் தான் இருக்கும். ஒரு வீட்டுக்கு ஒரு வேட்டி, ஒரு சேலை தானே...

சரி அதை விடுங்க... தமிழ் நாட்டில் 1.67 கோடிக்கு மேல் வேட்டி, சேலை கட்டாத வயதுக்கு கீழே உள்ளவர்கள்...

அப்புறம் நடுத்தர, மத்திய தர, பணக்கார, ராயல் வர்க்கங்கள் நியாயவிலை கடைக்கு போய் வேட்டி, சேலை வாங்க போவதில்லை...

சரி! அப்படியெல்லாம் வேண்டாம் தோராயமாக 2 கோடி குடும்பத்தில் 1.5 கோடி குடும்பத்துக்கு வேட்டி, சேலை வழங்க வேண்டிய நிலைமைக்கு இருக்கு என்றால்... தமிழ்நாட்டுல 50 லட்சம் குடும்பம் தான் வேட்டி, சேலை வாங்கி கட்டுற நிலைமையில் இருக்கா ?

என்னய்யா... நடக்குது நாட்டுல...

குறிப்பு : குறுக்கால, நெடுக்கால எப்படி கணக்கு போட்டாலும் டேலி ஆகமாட்டேங்குது... ஒன்னு வேட்டி, சேலை கொடுத்தாங்களா? இல்லை நமக்கு எல்லாம் வேட்டி போர்த்திட்டாய்களா ன்னு விவரமா சொல்லுங்க மக்கா!

திங்கள், 14 ஜனவரி, 2008

நினைவுகளிலிருந்து...1

பட்டுக்கோட்டை, கரிக்காட்டிலிருக்கும் குட்டைக்குளம். குளத்திலிருந்து 5 நிமிட நடை வீடு, 8 வயது வரை அங்கே தான் வசித்தது. வீட்டின் பின்னாலிருந்து எட்டிப்பார்த்தால் சுடுகாடு தெரியும், அவ்வப்போது பிணம் எரியும்போதெல்லாம் வரிசையாகயிருக்கிற காலணியில் எல்லா வீட்டிலும் பயந்துக்கொண்டு பின்கதவை 6 மணிக்கு மேல் திறக்கமாட்டார்கள்.

பிணம் எரித்துவிட்டு வருகிற எல்லோரும் குட்டைக்குளத்தில் குளிப்பார்கள். காலை, மாலை கை,கால் அலம்புவார்கள். சிறார்கள் எப்போதும் தண்ணீரில் நீந்திக்கிடப்பார்கள். எருமைகள் உள்ளேயே ஊறிக்கிடக்கும். அருகில் சிறிய கல்லணைக்கால்வாயின் கடைமடை கிளையொன்று போகும்... அது எப்போதவது மழை நீரிலோ அல்லது ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு கன்னடகாரர்கள் கொடுத்த கொஞ்சம் தண்ணீரை கொண்டு புதுமணப்பெண்ணை போல் குதுகலிக்கும்.

ஆண்டுகள் ஓடிப்போயின... வீடு வேரிடத்திற்க்கு மாறியாகிவிட்டது. ஆனால் குட்டைக்குளத்துடனான பந்தம் மாறதது. அதற்க்கு எதிரில் தான் நியாயவிலை கடையிருக்கும். சர்க்கரையோ, கோதுமையோ, மண்ணெண்ணையோ வாங்க மாதத்திற்க்கு இரண்டு முறையேனும் போக வேண்டும்.

கல்லணைக்கால்வாயின் கிளை காணாமல் போயிவிட்டது. குட்டைக்குளத்தில் நகர சாக்கடை நீரை இணைத்திருந்தார்கள். இது நடந்தது 90களில்... ஏன்? கேள்வி எப்போதும் நெஞ்சைக்குடையும்.... நகர விரிவாக்கம்... மக்கள் நெருக்கடி கழிவு நீரை வெளியேற்ற வேறு வழியில்லை என்று சொன்னார்கள். கொஞ்ச நாளில் இதுவும் போதாமல் நாடியம்மன் கோயில் குளத்திலும் கழிவு நீர் இணைக்கப்பட்டது. அதிலே குளித்து, அதையே வாழ்க்கையாக கொண்ட அண்ணாநகர் மக்களுக்கு கழிவு நீர் இணைந்ததைக்கூட பொருட்ப்படுத்தாமல் குளிப்பார்கள், துணி துவைப்பார்கள்.

திருவிழாவிற்க்கு சிலநாட்க்களுக்கு மட்டும் கழிவு நீர் மடை மாற்றுவார்கள். 80களில் இந்த குளத்து நீர் தீர்த்தமென்று மாவிளக்கு பிசைந்தவர்கள். இப்போது கால் நனைப்பதற்க்கு கோயிலில் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இந்த நீர் மாசுப்படுத்தலை கண்டு வெம்பிய மனமே என்னை கணினி உலகிற்க்கு நகர்த்தியது. கழிவு நீரை மறுசுழற்சி செய்யலாம் என்று படித்தேன். அதற்க்கு நீரை பகுப்பாய்வுச்செய்ய வேண்டும். அப்போது படித்துக்கொண்டிருந்த +1 ல் வேதியியல் ஆய்வுசாலையில் எங்களையெல்லாம் சோதனைக்குழாய் துடைக்க, கழுவ மட்டுமே விடுவார்கள். +2 ல் பொதுத்தேர்வு என்பதால் அதற்க்கான செய்முறை தேர்வுகளுக்கு தயாராகணும். நண்பன் சலீம் மிகுதியாக ஆங்கில புத்தகங்கள் படிப்பவன். அவுங்க அப்பா ஆங்கில பேராசிரியர். அவனுடன் உரையாடுவது. விநோதமாக பார்ப்பான்.. ஆனாலும் எதாவது குறிப்புகள் எடுத்துக்கொடுப்பான்.

ஆய்வுச்சாலையில் மட்டுமே மறுசுழற்ச்சியை பற்றிய ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று சொன்னான். வெடிக்கும் குழாய்கள், எரியும் அமிலங்கள் பார்த்தாலே குலை நடுக்கம்.

இயல்பாக கேள்வியெழுந்தது பெரும்பான்னை அணுக்களின் பண்புகளை அட்டவணைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வெப்பநிலையில், இந்த அழுத்ததில் இந்த வினை இப்படித்தான் நிகழும் என்பது ஏற்கனவே தெரிந்தது தான், பிறகு ஏன் திரும்ப, திரும்ப சோதிக்கிறார்கள்?

அப்பொழுது தான் சொன்னார்கள் இதெல்லாம் கணினி இருந்தால் மிகவும் எளிது. அதில் எல்லாமுமே செய்யலாம் என்றார்கள். கட்டிங் அண்டு டெய்லரிங் படி வீட்டில் வறுமை வாட்டியெடுக்கிறது... ஏதாவது தொழில் செய்தாவது பிழைக்கலாம் என்று கூறிய அறிவுரையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு ஐ.டி.ஐ கணினி போய் படித்தேன்.

படிக்க ஆரம்பித்த பிறகு தெரிந்த விசயங்கள் இரண்டு... கணினி எதுவும் செய்யாது. இன்னொன்று நம் மக்களுக்கென்று ஏதேனும் ஆய்வுகள் நடக்கிறதா என்கிற ஏக்கம்? ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், ரஷ்யாவும், ஜப்பானும் சாப்பிட்டு விட்டு மிச்சம் வைக்கிற எலும்புத்துண்டுகளையே நாம் பொறுக்கி எடுத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தேன்.

வாழ்க்கையில் வீசிய பொருளாதார புயலில் சிக்கி சின்னாபின்னமாகி... எங்கோ நிற்கிறேன்... அடையாளம் தெரியாமல்...

இன்றைக்கும் கூவமோ அல்லது வேறெந்த கழிவு நீர் கால்வாயை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிற எண்ணம் என்றைக்காவது ஒரு நாள் இது மறுசுழற்ச்சி செய்யப்படும். ஒன்று சாலையோர பூங்காவுக்கு பயன்படுத்தி நிலத்தடி நீராக மாறணும். மற்றொன்று மக்களுக்கு பயன்படுகிற நீராக மாறணும். குளமோ, ஏரியோ, கடலோ மாசுப்படக்கூடாது என்ற ஏக்கம் இருக்கு....

நமக்கான ஆய்வுகள் வர வேண்டும். நம்முடைய தேவைகளை நிறைவுச்செய்கிற திட்டங்கள் வேண்டும். அதற்க்கான சிந்தனையெழுச்சி வேண்டும். அப்படி தேவையெனில் தாய்மொழி சார்ந்த திட்டங்களால் தான் 6 கோடி மக்களை சென்றடைய முடியும். அதுவரை ஆங்கிலத்தில் படித்த அடிமைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி காசுப்பார்ப்போம்...

திங்கள், 7 ஜனவரி, 2008

சங்கரின் கதைக்களத்திற்க்கான பின்னணி...

நண்பர் ஜமாலனின் மீண்டும் வரும் அந்நியன் பதிவை வாசித்தவுடன் சங்கரின் சினிமா - வில் பார்ப்பானீய நுண்ணரசியல் என்பதை பேசும்போது, சங்கருடைய பெரும்பான்மை படங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்களை கொலைச்செய்யகிற கதாநாயகர்களை உலாவ விட்டிருக்கிறார்கள். அதன் பின்னணியை பேசவே இந்த பதிவு.

இந்தியாவில் மத்திய,மாநில அரசுகளின் பதவிகளில் அமர்ந்துக்கொண்டு அரசு பணத்தைக்கொள்ளையடிப்பது, ஊழல், நிர்வாகச்சீர்க்கேடு அனைத்திற்க்கும் அடித்தளமே இந்த பார்ப்பானீய,பனியாக்களே.

அண்ணா வின் ஆட்சி வரைக்கும் தமிழக அரசு ஊழியர்களில் பெரும்பான்மையானோர் பார்ப்பனர்களாகவே இருந்தனர், ஆனால் இந்த நிலையை மாற்றுவதற்க்கு கலைஞர் முதன் முதலாக தமிழ்நாடு அரசு ஊழியர்களை இடஓதுக்கீடு முறையில் 23,000 பார்ப்பனரல்லாதோருக்கு வேலைவாய்ப்பை வழங்கினார் (இந்த நிகழ்ச்சியின் ஆண்டு நினைவில் இல்லை). இதை எதிர்த்து பார்ப்பனர்கள் பலர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்குகள் தொடுத்தனர். அத்தனையும் கலைஞர் தன்னுடைய முயற்சியால் உடைத்தெறிந்து... இந்த வேலைவாய்ப்பை வழங்கினார்.

அன்றிலிருந்து தான் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் மீதான வெறுப்பை பார்ப்பனர்கள் விதைக்க தொடங்கினார்கள்.

இந்திய அளவில் மத்திய அரசிலும், மற்ற மாநிலங்களிலும் பெரும்பான்மை அரசு பதவிகளில் பார்ப்பனர்கள் அமர்ந்திருக்க, தமிழகத்தில் அவர்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கினார் கலைஞர்!

பின்னாளில் தாழ்த்தப்பட்டோர் ஓதுக்கீட்டில் மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் வந்தாலும். தமிழகத்தை பொறுத்தவரை அரச சுகம் என்பது பார்ப்பனர்களுக்கு சாவு மணி அடித்தது கலைஞர்!.

சங்கர் மட்டுமல்ல அத்தனை பார்ப்பனர்களும் கலைஞர் மீதான கடுமையான கோபத்திற்க்கு காரணமே இந்த அடிப்படை நிகழ்வு தான்.

இது எந்தளவுக்கு வக்கிரமாக வெளிப்பட்டது என்பதற்க்கு எடுத்துக்காட்டு ஜெயலலிதாவிற்க்கு அதிகாரம் கைக்கு வந்தவுடன், தமிழ்நாடு அரசு ஊழியர்களை பழி வாங்கிய நிகழ்வாக அமைந்தது.

சரி! இதை ஏன் இங்கே விவரிக்கிறேன் என்றால்... இந்த பின்னணி அரசியல் தெரியாமல் சங்கரின் கொலைக்கார கதாநாயகர்களுக்கு நாம் கைத்தட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை விவரிக்கவே...!

சங்கரின் கதையாடல்களின் அடிப்படையில் நேர்மையற்ற, ஊழல் புரிகிற, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற அதிகாரிகளை கொலைச்செய்ய வேண்டுமானால்... இந்தியாவின் முக்கிய துறைகளில் உயரதிகாரிகளாக இருக்கிற அத்தனை பார்ப்பனர்களை கொலைச்செய்ய வேண்டியதிருக்கும்...

உதாரணத்திற்க்கு... இந்தியாவின் இராணுவ பட்ஜெட் -ல் ஓதுக்கப்படும் நிதியில் நடக்கிற ஊழலுக்கு யார் காரணம்?

இந்தியாவில் வருமான வரித்துறை சரியாக செயல்படாததால் கறுப்பு பணம் கோடிக்கணக்கில் தேங்கிக்கிடக்கிறது. 80சதவிகித வருமான வரித்துறை உயரதிகாரிகள் பார்ப்பனர்கள்.

இந்தியாவின் முக்கிய வருவாய் பிரிவான சுங்க வருவாய் உயரதிகாரிகளில் 60 சதவிகிதம் பேர் பார்ப்பனர்கள்.

சுங்க வருவாய் பிரிவில் தான் ஓவ்வொரு அதிகாரிக்கும் மாதமானால் கேட்காமலேயே வீட்டுக்கு லஞ்சம் வருகிறது.

கறுப்பு பணத்தை பற்றி படமெடுத்த சங்கரும், அதில் நடித்த ரஜினியும், தயாரிப்பாளரும் எவ்வளவு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரியுமா? கொலைச்செய்வது என்றால் முதலில் இவர்களையல்லவா கொலைச்செய்ய வேண்டும்!
Related Posts with Thumbnails