இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

திங்கள், 7 ஜனவரி, 2008

சங்கரின் கதைக்களத்திற்க்கான பின்னணி...

நண்பர் ஜமாலனின் மீண்டும் வரும் அந்நியன் பதிவை வாசித்தவுடன் சங்கரின் சினிமா - வில் பார்ப்பானீய நுண்ணரசியல் என்பதை பேசும்போது, சங்கருடைய பெரும்பான்மை படங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்களை கொலைச்செய்யகிற கதாநாயகர்களை உலாவ விட்டிருக்கிறார்கள். அதன் பின்னணியை பேசவே இந்த பதிவு.

இந்தியாவில் மத்திய,மாநில அரசுகளின் பதவிகளில் அமர்ந்துக்கொண்டு அரசு பணத்தைக்கொள்ளையடிப்பது, ஊழல், நிர்வாகச்சீர்க்கேடு அனைத்திற்க்கும் அடித்தளமே இந்த பார்ப்பானீய,பனியாக்களே.

அண்ணா வின் ஆட்சி வரைக்கும் தமிழக அரசு ஊழியர்களில் பெரும்பான்மையானோர் பார்ப்பனர்களாகவே இருந்தனர், ஆனால் இந்த நிலையை மாற்றுவதற்க்கு கலைஞர் முதன் முதலாக தமிழ்நாடு அரசு ஊழியர்களை இடஓதுக்கீடு முறையில் 23,000 பார்ப்பனரல்லாதோருக்கு வேலைவாய்ப்பை வழங்கினார் (இந்த நிகழ்ச்சியின் ஆண்டு நினைவில் இல்லை). இதை எதிர்த்து பார்ப்பனர்கள் பலர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்குகள் தொடுத்தனர். அத்தனையும் கலைஞர் தன்னுடைய முயற்சியால் உடைத்தெறிந்து... இந்த வேலைவாய்ப்பை வழங்கினார்.

அன்றிலிருந்து தான் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் மீதான வெறுப்பை பார்ப்பனர்கள் விதைக்க தொடங்கினார்கள்.

இந்திய அளவில் மத்திய அரசிலும், மற்ற மாநிலங்களிலும் பெரும்பான்மை அரசு பதவிகளில் பார்ப்பனர்கள் அமர்ந்திருக்க, தமிழகத்தில் அவர்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கினார் கலைஞர்!

பின்னாளில் தாழ்த்தப்பட்டோர் ஓதுக்கீட்டில் மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் வந்தாலும். தமிழகத்தை பொறுத்தவரை அரச சுகம் என்பது பார்ப்பனர்களுக்கு சாவு மணி அடித்தது கலைஞர்!.

சங்கர் மட்டுமல்ல அத்தனை பார்ப்பனர்களும் கலைஞர் மீதான கடுமையான கோபத்திற்க்கு காரணமே இந்த அடிப்படை நிகழ்வு தான்.

இது எந்தளவுக்கு வக்கிரமாக வெளிப்பட்டது என்பதற்க்கு எடுத்துக்காட்டு ஜெயலலிதாவிற்க்கு அதிகாரம் கைக்கு வந்தவுடன், தமிழ்நாடு அரசு ஊழியர்களை பழி வாங்கிய நிகழ்வாக அமைந்தது.

சரி! இதை ஏன் இங்கே விவரிக்கிறேன் என்றால்... இந்த பின்னணி அரசியல் தெரியாமல் சங்கரின் கொலைக்கார கதாநாயகர்களுக்கு நாம் கைத்தட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை விவரிக்கவே...!

சங்கரின் கதையாடல்களின் அடிப்படையில் நேர்மையற்ற, ஊழல் புரிகிற, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற அதிகாரிகளை கொலைச்செய்ய வேண்டுமானால்... இந்தியாவின் முக்கிய துறைகளில் உயரதிகாரிகளாக இருக்கிற அத்தனை பார்ப்பனர்களை கொலைச்செய்ய வேண்டியதிருக்கும்...

உதாரணத்திற்க்கு... இந்தியாவின் இராணுவ பட்ஜெட் -ல் ஓதுக்கப்படும் நிதியில் நடக்கிற ஊழலுக்கு யார் காரணம்?

இந்தியாவில் வருமான வரித்துறை சரியாக செயல்படாததால் கறுப்பு பணம் கோடிக்கணக்கில் தேங்கிக்கிடக்கிறது. 80சதவிகித வருமான வரித்துறை உயரதிகாரிகள் பார்ப்பனர்கள்.

இந்தியாவின் முக்கிய வருவாய் பிரிவான சுங்க வருவாய் உயரதிகாரிகளில் 60 சதவிகிதம் பேர் பார்ப்பனர்கள்.

சுங்க வருவாய் பிரிவில் தான் ஓவ்வொரு அதிகாரிக்கும் மாதமானால் கேட்காமலேயே வீட்டுக்கு லஞ்சம் வருகிறது.

கறுப்பு பணத்தை பற்றி படமெடுத்த சங்கரும், அதில் நடித்த ரஜினியும், தயாரிப்பாளரும் எவ்வளவு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரியுமா? கொலைச்செய்வது என்றால் முதலில் இவர்களையல்லவா கொலைச்செய்ய வேண்டும்!

12 comments:

TBCD சொன்னது…

தலைப்பிலே குற்றம் இருக்கிறது...

ச(ஷ)ங்கர் படத்திலே கதை இருப்பதே இல்லை...

எல்லாமே திரைக்கதை தான்..

ஜமாலன் சொன்னது…

புதிய கோணத்தில் அலசி உள்ளீர்கள். சங்கர் இத்தனைக்கும் பார்ப்னர் அல்ல. அவர் ஒரு பார்ப்பன குடும்பத்துடன் சிறுவயது முதல் பழகியதால் ஏற்பட்ட பற்று என்று எங்கோ படித்த நினைவு.

பெயரில்லா சொன்னது…

Parri.Arasu,

You may be a mean dravidian tamil swine.But that does not entitle you to go about exhibiting this level of caste fanaticism.Even though you are a swine,there is still hope for you,Please think rationally and write.

யாரோ ஒருவன் சொன்னது…

உங்களுடன் தனிபட்ட முறையில் சில நாள் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன்... உங்களிடம் நல்ல ஆற்றல் உள்ளது. நல்ல திறமையானவர் நீங்கள்.இதை போல ஜாதி வெறி பிடித்து தொடர்ச்சியாக உங்களின் எழுத்துகளை படிக்கும் போது நீங்கள் ஒரு மனநல மருத்துவரை சந்தித்து உங்களின் ஆழ்மனகுறைகளை பரிசோதிப்பது நல்லது என தோன்றுகிறது.

இந்த பின்னோட்டதை வெளியிட வேண்டாம்.

பெயரில்லா சொன்னது…

அடா, அடா என்ன ஒரு அறிவுக்களஞ்சியமான பதிவு! அடுத்ததாக "கோக்கோ கோலாவின் பிரவுன் நிறத்திற்கான பின்னணி" பற்றி ஒரு அற்புதமான படைப்பினை எதிர்பார்க்கிறோம்.

ராகவன் ஐயங்கார் சொன்னது…

"முன்னெல்லாம் திராவிடர் - பார்ப்பனர் என்ற பேதம் செழிப்பாக இருந்து வந்தது. பெரியார் மறைவுக்குப் பின்னர் வீரமணியால் அந்த பேதங்களைச் சரியாக வளர்க்க இயலவில்லை.

காரணம், அ.தி.மு.கத் தலைவி செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணிக்கு வீரமணி ஆதரவாளராகிவிட்டார்.

சரி. மற்ற திராவிடத் தலைவர்களாவது பார்ப்பன பேதம் பார்க்கிறார்களா என்றால் அதுவும் நசிந்து வருகிறது.

மரம்வெட்டி ராமதாசு ஜெயலலிதாவுடன் கூட்டு சேருவதற்காக இப்போதிருந்து அடிவருடி வருகிறார்!

இந்தப் பலவீனத்துக்கு திரைப்படத் துறையும், சின்னத் திரை உலகமுமே காரணம்.

சின்னத்திரை நாடகங்களில் பெரும்பாலும் பார்ப்பன மொழியே பேசப்படுகிறது. நடிப்பவர்கள் பார்ப்பனரல்லாதவராயிருந்தாலும் 'நேக்கு' 'நோக்கு' அவா இவா' என்றே வசனமும், பார்ப்பன வீட்டு உடைகளும் பழக்க வழக்கங்களுமே சித்திரிக்கப்படுகின்றன.

சமீபத்தில் 'பம்மல் கே சம்பந்தம்' என்ற திரைப்படம் பற்றி ஒரு செய்தியில் காணப்பட்ட விஷயம் நமது சிந்தனைக்கு உரியது.

கமல், மெளலி, கிரேஸி மோகன் மூவரும் விவாதித்து அந்தப் படத்தை உருவாக்குகிறார்கள்.

மூவருமே பார்ப்பனர்கள்தான். பார்ப்பனீயத்தின் தீவிரக் கொள்கைகள் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்களே.

பிரபல டைரக்டர் சின்னத்திரைச் சக்ரவர்த்தி கே. பாலசந்தரும், பிரபலமான அரட்டை அரங்கத்தை நடத்துகிற விசுவும் சப்த ஸ்வரங்களை சுவையான நடத்தும் ஏ.வி. ரமணனும் பார்ப்பனர்கள்தான்.

ஒரு வகையில் பார்த்தால் சாதி மதத் துவேஷங்கள் இருந்தால்தான் நாட்டுக்கு நல்லதும் கலவரமும் கொலை கொள்ளையும் ஜாதிகளால் ஏற்படக்கூடாதே தவிர, துவேஷம் இருந்தால்தான் கீழ் ஜாதி என்று தள்ளப்பபட்டவர்கள் மேலுக்கு வர இயலும்.

அந்த வகையில் பார்த்தால் தேர்தல் சமயம் ஜாதிக் கட்சிகள் நிறையத் தோன்றியிருப்பதை வரவேற்கலாம் என்றே தோன்றுகிறது. நாடுகள் முன்னேற ஜாதிகள் தேவை.

ராகவன் ஐயங்கார் சொன்னது…

ஷங்கர் பார்ப்பனரா இல்லை என்பதை விட அவர் எப்படி படம் எடுக்கிறார், அவரின் படங்கள் சர்வதேச தரத்துடன் எப்படி வெளியாகின்றன என்று பாருங்கள்.

அவரின் கதைக்கு சுஜாதாவின் வசனங்களும் கிரேசி மோகனின் நகைச்சுவையும் கமலின் நடிப்பும் மேலும் மெருகூட்டும்.

இந்த கூட்டணி தொடர வேண்டும்.

திராவிடன் சொன்னது…

கடந்த இதழ் குமுதத்தில் பாமரனின் 'படித்ததும் கிழித்ததும்' தொடரில் பதிவான இந்த சர்ச்சை பற்றிய கருத்துக்கள் அப்படியே..
-------------------

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்த தவித்தபோது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்.

'அன்று இதே வெண்ணிலவின் போது எங்களைப் போற்றி பாதுகாத்த தந்தையும் இருந்தார். எங்களுக்கான குன்றும் எங்கள் வசம் இருந்தது. இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம். நாட்டையும் இழந்தோமே' என்று அங்கவையும், சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

இவர்கள் தான் இன்றைய தமிழ் சினிமாவின் கேலிப் பொருள்.

இதற்கு தமிழாய்ந்த வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக்கொண்டு 'வாங்க வந்து பழகுங்க' என்று மாமா வேளை பார்க்கும் போது ரத்தம் சூடேறிவிட்டது.

வசனம் : சுஜாதா

நல்லது.

அங்கவை, சங்கவைக்கு பதிலாக பிரியதர்ஷினி தேவதர்ஷினி என்றோ.. அபிதகுஜலாம்பாள், குசல குஜலாம்பாள் என்றோ அல்லது சிவாஜிராவ் கேய்க்வாட்டுக்குப் பிடித்த பர்வதம்மா, பசவம்மா என்றோ போட்டிருக்காலாமே. எது தடுத்தது இவர்கள் அனைவரையும் ?

சண்டைக்கோழியில் 'குட்டிரேவதி' என்ற வந்த வசனத்திற்காக எஸ்.ராமகிருஷ்ணனை ஒரு வழி பன்ணிய இலக்கியவாதிகள் அங்கவை, சங்கவை விஷயத்தில் மட்டும் சகலத்தையும் பொத்திக் கொண்டிருப்பது ஏன்?

படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று பொங்கி எழுந்த தமிழ்ப் பாதுகாப்புப் பேரவையினர் இப்போது தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்களா?

கற்பு விஷயத்தில் குஷ்பூவை விட்டேனா பார் என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் அங்கவை, சங்கவை விஷயத்தின் போது மட்டும் எங்கே போய் தொலைந்தார்கள்?

இப்படி ஏகப்பட்டக் கேள்விகள் என்னுள் மண்டையைக் குடைந்தபடி..

இதில் வக்கிரத்தின் உச்சக்கட்டம் என்னவென்றால் அங்கவை, சங்கவை இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பது.

மூடர்களே .. ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.

கருப்பு என்பது நிறமல்ல. இனம்.

இன்னும் உங்களுக்குப் 'புரியும் மொழியில்' சொல்வதானால்..

பிளாக் இஸ் நாட் எ கலர் டு எரேஸ். இட்ஸ் எ ரேஸ்.

இத்தோடு நிறுத்தங்கள் உங்கள் விபரீத விளையாட்டை..எச்சரிக்கை.

பெயரில்லா சொன்னது…

'மிஸ்டர் பப்ளிக்' 'ஜெண்டில்மேனாக' மாற வேண்டும் என்றால், வர்ணதர்மப்படி முதல் வர்ண பார்ப்பனரைக் காக்க ஆயுதம் ஏந்தி பேராடவேண்டும் என்பதை ராபின்ஹூட் பாணியில் சொன்ன இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஜெண்டில்மேன். ஹிட்லரின் தலைமையிலான அச்சு நாடுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்திய தேசியப் படையில் உறுப்பினராக இருந்த தேசப்பற்றுள்ள பார்ப்பனர், லஞ்சம் கொடுக்கத் தயாராக இல்லாமல் மகளை இழந்ததால் லஞ்சம் வாங்குபவர்களை எல்லாம் கொல்லும் இந்தியன். ஒருநாள் முதல்வராகி தமிழகத்தை பொன்விளையும் பூமியாக மாற்றும் முதல்வன் என்கிற வரிசையில் சங்கர் என்கிற தமிழ் பெயரை 'ஷங்கர்' (ஷ்ஷங்கர் என உச்சரிக்கவும்) என பெருமிதத்துடன் வைத்துக் கொண்டுள்ளவரின் வருணதர்மத்தை காக்க வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும் மற்றொரு படம் அந்நியன்.

வி.பி.சிங் ஆட்சியல் மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கத்திற்குபின் அதற்கு எதிரான ஜெண்டில்மேன் வெளிவருகிறது. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஒரு பார்ப்பன மாணவன் தற்கொலை செய்து கொள்ள வருண தர்மப்படி பிற சாதிக்காரன் அதாவது சத்திரியன் திறமைக்கு முதலிடம் கொடுக்க, கொள்ளை அடித்து ஒரு கல்லூரி கட்டி நவ பார்ப்பனனாக அதாவது ஜெண்டில்மேனாகி விடுகிறான். முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்த கவர்ணர் செண்ணாரெட்டியை நேரடியாக தாக்கி, தமிழகத்தில் ஆட்சியை கலைக்க ஆந்திராவிலிருந்த ஒரு ரவுடியை வரவழைத்து தமிழகத்தில் வெடிகுண்டுகளை வைக்கிறார் ஆந்திரவைச் சேர்ந்த தமிழக கவர்னர் காதலனில். கருணாநிதி முதல்வராக இருந்தபோது 'திறமையுள்ள' 'படித்த' 'நவீன தொழில்நுட்பம்' தெரிந்த மாற்று முதலமைச்சர் தேவை என முதல்வன் படம் எடுக்கப்படுகிறது. பி.ஜே.பி ஜெயலலிதா ஆட்சியில் நேரடி அரசியல் பூச்சுகள் இல்லாத ஜீன்ஸ், பாய்ஸ் (இது துள்ளுவதோ இளமை என்கிற செமி-போர்னோ படத்தின் சிட்டி வெர்சனாக காப்பி அடிக்கப்பட்டது.) போன்ற அரசியல் சார்பற்ற கிளகிளுப்பு படங்கள். இதைவிடவும் தனது அரசியல் சார்பை ஒருவர் பறைசாற்றிக் கொள்ளமுடியாது. சங்கரின் ஆழ்மனது விரும்பும் ஆட்சியும் அதிகார அமைப்பும் எது? என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று பி.ஜே.பி தோல்வியால் கலி முத்திவிட்டது என வருண தர்மத்தை காக்க அந்நியனை இழுத்து வருகிறார். குடுமி வைத்துக்கொண்ட நல்லவனாகவும், அதே குடுமியை அவிழ்த்துவிட்டால் அந்நியனாகவும் அதாவது காட்டானாகவும், அதையே ஒதுக்கி வாரிக்கொண்டுவிட்டால் 'மாடர்ன்' மனிதனாகவும் ஒரு கட்டு மயிரை வைத்துக்கொண்டு முழுத்திரைக்கதையையும் எழுதி முடித்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் வருகை கிராமியம் சார்ந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமாவை மாற்றியது. கதாநாயக மைய சினிமாவை இயக்கநர் மைய சினிமாவாக மாற்றியது. இப்பார்வையின் விளைவாக பாரதி ராஜாவின் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக உருவமைக்கப்பட்டது பாலச்சந்தர் என்கிற பிரதிநிதித்துவம். இதனுள் பார்ப்பனிய மற்றம் பார்ப்பனியமல்லாத பார்வை என்பது இயக்கம் கொள்ளத் துவங்கியது. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் செயல்படும் ஒரு முக்கிய கருத்தாக்கம் 'அந்நியன் வருகை' என்பது. ஒரு இயல்பான கிராம அமைப்பு அந்நியரின் வருகையால் குழப்பமடைவது என்பது அவரது கிராமிய படங்களின் மையமான ஒரு கருத்தாக அமைந்ததை இந்த அரசியல் பின்னனியில் வைத்துதான் நோக்கவேண்டும். பாலச்சந்தர் படங்கள் தனிமனித பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் தருவதும் மனித உறவுகள் குறித்த அக்கறை கொண்ட மத்திய தரவர்க்க நகர்சார் பின்புலங்களைக் கொண்டதுமாக அமைந்ததும் அவர்களது உள்ளார்ந்த அரசியல் நோக்கை உணர்த்துக் கூடியவை. இவ்விரு பார்வைப் பின்புலங்களுக்குள் சங்கர் தன்னை எதில் தகவமைத்துக் கொள்ள முனைகிறார் என்பது வெளிப்படையானது. நகர்சார்ந்த மேட்டிமைப் பார்வை என்பது அவரின் அடிப்படை பார்வையாகும். அதனால்தான் அந்நியன் பட நாயகன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பாமர மக்களாகிய நமக்கு ஒரு பிரச்சiனாயாகவே தெரிவதில்லை. அவன் கொல்லும் நபர்களின் பிண்ணனிகள் எதுவும் சுட்டிக்காட்டப் படுவதில்லை என்பதுடன் கொல்லப்பட்ட நபர்கள் மீது நமது பச்சாதாபம் வெளிப்படுகிறது படத்திற்கு எதிர்விளைவாக. அதிலும் அவனை பாதித்த நபர்களை அவன் கொல்கிறான். இதற்கு ஏன் கருடபுராணம் இத்யாதிகள் எல்லாம். இதில்தான் சனாதனம் என்கிற பார்ப்பன தர்மத்தை ஒழுக்கத்தை பேணுவது என்கிற மதமீட்புவாத அரசியல் வெளிப்படுகிறது.

சங்கரின் படங்கள் தமிழ் சினிமாவின் அனைத்து வியபார சூத்திரங்களையும் பிரமாண்டமங்களின் மூலமும் கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலமும் காட்சிப்படுத்தும் படங்களே தவிர குறைந்தபட்ச யதார்தங்களோ அல்லது சாதரண தர்க்க பொறுத்தமுள்ள காட்சி அமைப்புகளோ கொண்ட படங்கள் அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. நல்ல திரைக்கதை என்பது படத்தில் ஒரு காட்சியைக் கூட அகற்ற முடியாதவகையில் அமைய வேண்டும். அந்நியன் படத்தில் பல காட்சிகளை வெட்டிவிட்டு படத்தின் கதை அமைப்பு கெடாமல் பார்க்க முடியும். படத்தில் எந்த தர்க்கத்திற்கும் உட்படாத மனம்போன போக்கில் மாஜிக்குகளை காட்டுகிறார்கள். ஏதோ சக்திமான் நாடகம் பார்ப்பதுபோல் இருக்கிறது. அவரின் பிரமாண்டங்கள்கூட ஹாலிவுட் ரக காப்பிகள்தான். அந்நியனில் வரும் ஜெட்-லி ரக குங்ஃபூ சண்டை உட்பட.

மற்றப்படங்களுக்கும் இவரின் படங்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இரண்டு. ஒன்று மணிரத்னம் போல இவரும் பான்-இந்தியப்படம் பற்றிய ஒரு தேட்டத்துடன் படம் பண்ணி இந்திய சந்தை முழுவதையும் கையகப்படுத்த முனைவதற்கான முயற்சி. இவர்களது படங்கள் இந்த பான்-இந்தியத் தனத்தால் மண்சார்ந்த தன்மையிலிருந்து விலகி ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட பரப்பில் அமைந்து விடுகின்றன. அல்லது கதைத்தளம் இந்திய மைய அரசியலுடன் உறவு கொண்டதாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அதனால் சமூக பொறுப்புணர்வைவிட சந்தைபற்றிய பொறுப்புணர்வே அதிகமாகிவிடுகிறது. இபபொறுப்புணர்வு அடிப்படை பிரச்சனைகள் பற்றிய பொறுப்பின்மையாகவும் அரசியலில் ஆளும் கருத்தியலை பிரச்சாரம் செய்யும்படி செய்கிறது.

இரண்டு திட்டமிட்டு இவரது கதைத்தளங்கள் பார்ப்பணிய பின்புலத்தில் உருவாக்கப்படுவதுதான். இக்கதையின் உள்தளங்கள் மணுதர்மத்தின் அடிப்படையிலான வருணக் கோட்பாடும் அதன் தத்துவ பின்புலமுமான கீதையின் கர்மக் கோட்பாடும்தான். இதனை சரியாக புரிந்துகொள்ள நால்வருணக்கோட்பாட்டின் வரலாற்று வளர்ச்சியைப் புரிந்து கொள்ளவேண்டும். நால்வருணக்கோட்பாடு என்பது உலகின் பல இனங்களிடமும் வழங்கிவந்த முறையே. அது ஆரிய கண்டுபிடிப்போ அல்லது இற்திய சமூக அமைப்பிற்கான பிரத்யேக முறையோ அல்ல. அதாவது இனக்குழு உற்பத்தி முறையிலிருந்து பண்ணைஅடிமை முறைக்கு ஒரு சமூகம் மாறும்போது தனிச்சொத்து குடும்பம் அரசு ஆகியவற்றின் உருவாக்கமும் அதற்கான வேலைப்பிரிவினைகளும் உருவாகுகிறது. அந்த வேலை அல்லது தொழில் பிரிவனைகளே நால்வருணமுறை. தொழிலை அடிப்படையாக கொண்ட இந்த நால்வருண முறையை பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றியதுதான் பார்ப்பணீயத்தின் வெற்றி என்கிற டாக்டர் அம்பேத்கரின் கருத்து ஆழந்து சிந்திக்கத்தக்கது.

இந்த மாற்றத்தை உப-நிஷத் தத்தவ விசாரங்களினை அடிப்படையாகக் கொண்டு ஒரு கோட்பாடாக மாற்றியது மணுதர்மம். அதற்கான வழிக்காட்டுதல்களை தருவதற்கு கீதையும், நடைமுறை சம்பிரதாயங்களை விளக்க பாரதமும், இராமயணமும் உருவாக்கப்படுகிறது. மணுதர்மம் மூளை உழைப்பை அடிப்படையாகக் கொண்ட புரொகிதம் என்கிற தொழிலிற்கான வேத படிப்பை பிற வருணத்திற்கு மறுப்பதும், பிற வருணங்கள் பார்ப்பண முதல் வருணத்திற்கு தொண்டூழியம் செய்வதை மட்டுமே கடமையாக (கர்மமாக) கொண்டவை என்றும் நால்வருணக் கோட்பாட்டை உருவாக்குகிறது. இந்த வேறுபாடுதான் இக்கோட்பாட்டை இந்தியாவிற்கான அல்லது பார்ப்பணர்களுக்கான பிரத்யேகக் கோட்பாடாக காட்டுகிறது. அதாவது தொழில்அடிப்படையில் ஒருவன் தனது தொழிலை மாற்றிக் கொள்வதன்மூலம் வருணத்தை மாற்றிக் கொள்ள முடியும். ஆணால் பிறப்பு அடிப்படையில் ஒருவன் தனது வருணத்தை மாற்றிக்கொள்ளவே முடியாது. இந்தியாவில் உருவான காலந்தொட்டே இந்த முறை மாறாத ஒன்றாக இறுகிவிட்டது. இந்த மாற்றமின்மை வருணக்கலப்பை உருவாக்குகிறது. இவ்வருணக்கலப்புகளே சாதிகளாக உருவாகுகின்றன. (சுஜாதாவிற்கு போதுபோகாவிட்டால் 4 ஆண்கள் 4 பெண்கள் 8 பேர் 'பெர்மட்டேஷன் காம்பினேஷன்' போட்டு முதலில் எத்தனை சாதித் தோன்ற வாய்ப்பு உள்ளது. அதன் பின் இரண்டாம் வரிசைக்கு அதனை எடுத்துச் சென்றால் அடுத்த கட்ட சாதிகள் எண்ணிக்கையையும் பெறலாம்.)

இந்திய சமூக வளர்ச்சியை தடைப்படுத்திக் கொண்டிருப்பது இந்த சாதி முறைதான். அந்நியன் கூறுவதுபோல சிங்கப்பூரும் மலேசியாவும் ஜப்பானும் வளரக்காரணம் தூய குடிமகன்களைக் கொண்டது அல்ல அங்கு சாதிய முறை இல்லை என்பதுதான். உழைப்பவனை தீண்டத்தகாதவனாக ஒதுக்குவதும் உழைக்காமல் உடகார்ந்து அதிகார சுகத்தை அனுபவிப்பதற்குமான ஒரு வர்க்கம் அதற்கான பழம் பெருமை வாய்ந்த தத்துவம் அல்லது அதனை காக்கும் தெய்வங்கள் இல்லை. சாமானியனை சொர்க்கம் நரகம் அல்லது அந்தகூபம், கபீம்குபாம், கிருமிபோஜனம் ஜிகாம் புகாம் என படவிளக்கங்களுடன் பயமுறுத்தும் கருட புராணம் இல்லை.

படத்தின் மையமாக சொல்லப்படும் 'மல்ட்டிப்புள் பர்சானலிட்டி டிஸ்ஸாடர்' என்கிற 'டச்'-சப்பை கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். இதனை இந்திய உளவியல் அடிப்படையில் விஞ்ஞான பூர்வமாக அனுகும் 'மனிச்சித்திரத்தாழ்' என்கிற மலையாளப் படத்தை ஒரு பேய்ப்படமாக பக்திப் பரவசத்தடன் தமிழில் எடுக்கப்பட்ட 'சந்திரமுகி' தமிழ் இயக்குநர்களின் சினிமா புரிதலையும், சினிமா வியபார உலகும் பணம் பண்ண செய்யும் தகிடுதத்தங்களுக்கும் ஒரு உதாரணம் எனலாம். (ரஜனி காந்தை உருவாக்கியதிலும், அவரை ஆட்சி அதிகாரத்தில் அமரவைப்பதிலும் பார்ப்பனிய பி.ஜே.பி சக்திகள் எடுத்த முயற்சி எல்லோரும் அறிந்ததே.) இதே தகிடுதத்துடன் எடுக்கப்ட்ட அந்நியன் இதனை ஒரு அரசியல் நோக்கில் அனுகுகிறது. மனுதர்மம் தோன்றிய காலத்தில் பார்ப்பனர்களுக்கு புரொகிதம் தவிர பிற தொழிலை மறுப்பதுடன் பார்ப்பனர்களை ஆயதம் ஏந்தி காக்கும் கடமையை சத்தரியர்களுடையது என்கிறது. பௌத்தம் வளர்ந்து ஆட்சி அதிகாரத்தில் ஏறிய பிறகு பார்ப்பன ஆதிக்கம் தகர்க்கப்படுகிறது. அத்தகைய சூழலில் ஒரு வருணப் புரட்சியை உருவாக்க பார்ப்பனர்கள் வேத தர்மங்களை காக்க ஆயதம் ஏந்தி புரட்சி செய்வதற்கான உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் மனுதர்மம் திருத்தப்படுவதாக டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டும் ஒரு கருத்தை கவனத்தில் கொண்டால் இந்த அந்நியனின் அரசியலை புரிந்து கொள்ள முடியும். மத தர்மங்களை காக்க இஸ்லாமிய ஜிகாத்தைப்போல இதுவும் ஒரு எதிர் புரட்சிக்கான கருத்தாக்கமே.

ஒரு பார்பனருக்கு இரண்டு ஆளுமைகளே சாத்தியம் என்கிறது அந்நியன். ஓன்று காட்டானாக மாறுவதன் மூலம் ஆயதம் ஏந்தி அராஜக வழியை தேர்ந்தெடுப்பது. அல்லது நவீன ஐரொப்பியனாக மாறுவது. எனது பார்ப்பன நணபர் ஒருமுறை கூறியதுதான் நினைவிற்கு வருகிறது '3000 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிலிருந்த இந்தியாவிற்கு வந்தோம் இந்தியாவை அனுபவித்து முடித்து விட்டோம் இனி அமேரிக்காவில் செட்டில் ஆகிவிடுவோம். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. இந்தியா இடையில் தங்கிச் சென்ற இடம் அவ்வளவுதான். அன்று அக்னியுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வந்தோம். இன்று ஹை-டெக் தொழில் நுட்பத்தை கையில் எடுத்துக் கொண்டு ஐரோப்பா மற்றும் அமேரிக்காவிற்கு சென்ற கொண்டு இருக்கிறோம்.' அவரது கூற்றை பாமரத்தனமானது என்றோ ஆய்வடிப்படையற்றது என்றோ தள்ளிவிட முடியாது. அந்நியன் முன்வைக்கும் மாற்றும் இதுதான். இன்ற பார்ப்பனர்கள் உயர் தொழில்நுட்பம் வழியாக ஐரோப்பிய நாடுகளின் வலுவடைந்து வருவதுதான் நாளைய வரலாறாகும்.

"ஐ ஹேட் டிஸ்ஸாடர்" என்கிற வசனத்துடன்தான் படம் துவங்குகிறது. இந்த ஒழுங்கற்ற நிலைக்கு காரணம் ஒழுக்கமின்மை. ஒழுக்கமின்மை என்பது கடமை தவறுதல். கடமை தவறுதலுக்கு தண்டனை கருடபுராணம் கூறும் வைதேகி நதிக்கரையில் காத்திருந்து யமனிடம் பெற வேண்டிய அவசியமில்லை. அதனை இங்கேயே தரலாம் என்று அனுமதி வழங்குகிறத கீதை. அநியாயங்கள் அதிகரிக்கும்போது 'நான்' அவதரிப்பேன் என்று. நவீன தொழில் நுட்பம் என்கிற எருமை மாட்டின்மேல் (வெப்சைட்டில்) எறி வருகிறான் இந்த அந்நியன் (இந்த வெப் சைட் ஐடியா போஃர் ஸ்டூண்ட்ஸ் மற்றம் ரமணா படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பது வேறு). அப்படி என்றால், கருட புராணத்தை நம்பாதவன் யார்? கருட புராணம் கூறும் காலகட்டம்வரை ஏன் இந்த இராமணுஜ அய்யங்கார் காத்திருக்க தயாரில்லை? இன்றைய பலனையும் சுகத்தையும் இழந்து கருட புராணம் கூறும் காலகட்டம்வரை காத்திருக்க முடியாது. அதனால், நம்மையும் நமது வருண தர்மத்தையும் காக்க குடுமி வைத்துக் கொண்டு புரொகிதம், புராணம், இசை, வேதம் எனப் பழம் பெருமை பேசிப் பயனில்லை, ஆயுதபாணியாகி தர்மத்தை காக்க வேண்டும். ஒரு புதிய வருணப் புரட்சிக்கான அறைகூவலே இந்த அந்நியன். இதுதான் இன்றைய இந்துத்தவா கோட்பாடு என்பது சொல்லாமலே விளங்கும். அந்நியன் படத்தின் அடிநாதம் இதுதான். இது தன்னை வரலாற்றில் உயர் ஜாதியாக்கிக் கொண்டுவிட்ட ஒர சாரர் பெருகி வரும் தலித் உணர்வுகள், எழுச்சிகளால் தனது அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தில் அதனை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஆசையும் ஏக்கமும் அதற்கான மணோபாவமும் ஒரு கனவுபோல காட்சிப்படுத்தப்பட்ட படமே அந்நியன்.

நன்றி: ஜமாலன்

கோவி.கண்ணன் சொன்னது…

நன்னா அடிச்சு ஆடுறேள்...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

:)

பெயரில்லா சொன்னது…

Panni.Arasu(King among swines),

Ha ha.You are going more and more insane by the minute.At this rate, one fine morning,some one will cut your balls and serve them as break fast for a couple of rabid dogs roaming around the streets of Singapore and Malaysia (G.Kannan and Jagatheesan) who will lap it up.And then the world will get to see a castrated insane dravidian tamil swine;that will indeed be a sight for the sore eyes in Singapore and Malaysia.Great.

விடாதுகருப்பு சொன்னது…

பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தும் ‘பிரம்’மாண்டம்; கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்; நவீன காமிராக்களின் ஒளிப்பதிவு இவைகளோடு சமஸ்கிருதப் பெருமைகள் மற்றும் புராணப் பெருமைகளைக் குழைத்து, பார்ப்பனீயத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் சுஜாதா - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த படம் தான் ‘அந்நியன்’.

சட்டத்தை நூற்றுக்கு நூறு பின்பற்ற வேண்டும் என்பதில் ‘கறாராக’ இருக்கிறார். குடுமி, பூணூல் சகிதமாக வழக்கறிஞர் தொழில் நடத்தி வரும் பாப்பார அய்யங்கார் அம்பி!

உழைக்காமல், சதா குடித்துவிட்டு சோம்பேறியாகத் திரிகிறவர்; விபத்தில் காயமடைந்தவருக்கு கார் கொடுத்து உதவ முன் வராதவர்; ரயில் பயணிகளுக்கு தரமற்ற சாப்பாடு வழங்கும் ஒப்பந்தக்காரர்; இவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடும்போது, ‘கருட புராணத்தில்’ கூறியுள்ளது போல், ‘நரகத்தில்’ எருமை வாகனத்தில் ‘எமன்’ வந்து தரக்கூடிய தண்டனைகளை எல்லாம், அய்யங்கார் ‘அம்பி’யே ‘அந்நியனாக’ உருவெடுத்து தந்து விடுகிறார்!

கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையில் உயிரோடு எரிப்பது; மாடுகளை மிதிக்க வைத்து சாகடிப்பது; ரத்தம் உறிஞ்சும் அட்டைகளை உடல் முழுதும் மேயவிட்டு, ரத்தம் குடிக்கச் செய்து சாகடிப்பது இவை எல்லாம் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளவாறு, நரகத்தில் தரப்படும் தண்டனைகளாம்!

ஷங்கரும்-சுஜாதாவும் சேர்ந்து ரூ.25 கோடி செலவில் (இதில் அய்.டி.பி.அய். வங்கி தந்த கடன் 10 கோடியாம்) தயாரித்து, ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் இப்படி தவறு செய்கிறவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லாம் ‘சூத்திரர்’கள் தான்!

அய்யங்கார் அம்பியும், அவரது “தோப்பனாரும்” நேர்மையின் மறு உருவமாக இருக்கிறார்கள். ‘சாது’வாக சட்டத்துக்கு பயந்தவராக இருக்கும் அம்பி, திடீரென ‘அன்னியராக’, ‘சூப்பர்மேன்’ ஆகி, பழி வாங்குவதும், உடனே, ‘ரொமான்டிக் ஹிரோவாகி’ களியாட்டம் போடுவதுமாக - ஒரே பாத்திரம் - மூன்று வடிவம் எடுக்கிறது. ‘மல்டிபிள் பர்சனால்ட்டி டிசார்டர்’ என்ற மனநோய் பாதிப்பால், இது நிகழுகிறது என்று, காதில் பூ சுற்றுகிறார்கள்.

இப்படி ஒரே மனிதர் மூன்று வெவ்வேறு ஆளுமைகளைக் கொள்ளும்போது, ஒவ்வொரு பாத்திரமும் ஆற்றலுடன் செயல்பட முடியாது என்பதே உண்மை. விரக்திக்கும் மனச்சிதைவுக்கும் உள்ளாகி செயலற்றவர்களாகி விடுவார்கள்.

ஆனால் சுஜாதா உருவாக்கிய ஒரே நபருக்குள், புதைந்துள்ள 3 பாத்திரங்களும், முழு ஆற்றலுடன் செயல்படுவதாகக் காட்டி, மருத்துவ அறிவியலையே கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

நேர்மையோடு செயல்படவே விரும்பும் அம்பி, தனது காதலியின் சபா நிகழ்ச்சிக்காக, ஏன் சிபாரிசுக் கடிதத்தை வாங்கிக் கொண்டு போனார் என்பதுதான் புரியவில்லை. இவர் மட்டும் சிபாரிசுக் கடிதம் வாங்கிப் போவாராம். சபா பொறுப்பாளர் வேறு ஒரு எம்பி சிபாரிசு கடிதத்தை ஏற்றுக் கொண்டால் ‘அந்நியனாக’ வந்து தண்டனை தருவாராம்! என்ன முரண்பாடு?

சிண்டையும், பூணுலையும் நேர்மையின் சின்னமாக முன் வைக்கிறார் பார்ப்பனர் சுஜாதா! சிகிச்சை பெற்ற அம்பி, மனம் திருந்தியவனாகும்போது, சிண்டு போய் ‘கிராப்’ வருகிறது. அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த இந்த ஒரே அடையாளத்தையும் ஒழித்து விட்டீங்களாடா பாவி என்று, மற்றொரு பார்ப்பனராக வரும் விவேக்கை பேச வைத்திருக்கிறார் சுஜாதா. இதுதான் சுஜாதா இந்தப் படத்தில் மய்யமாக இழைபோடவிட்டிருக்கும் செய்தி!

இந்த ‘சிண்டை’யும், ‘பூணூலை’யும் குறியீடுகளாகக் கொண்ட பார்ப்பானிடம் தானே, உழைப்பைக் கேவலப்படுத்தியது, அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழுவதை தர்மமாக்கியது. ‘சூத்திரன்’ படித்தால் சித்திரவதை செய்யச் சொன்னது, மனுசாஸ்திரப்படி “பிராமணர்களுக்கு” எந்தத் தண்டனையும் கிடையாது. இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி - அதை சமுதாய விதிகளாக்கி நடைமுறைப்படத்தியவர்களை எந்த எண்ணெய் சட்டியில் போட்டு எரிப்பது? எங்கே மாடுகளைவிட்டு மிதித்து சாகடிப்பது?

சுஜாதா - ஷங்கர் கம்பெனி பதில் கூறுமா?.

Related Posts with Thumbnails