இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

புதன், 16 ஜனவரி, 2008

ஒன்னுமே புரியல... உலகத்திலே...!

எனக்கு இரண்டு வாரமா ஒரே மண்டைக்குடைச்சல்... நானும் புள்ளிவிவரங்களை தேடி, தேடி களைத்துப்போயிட்டேன்... சரி பதிவுலக மக்களிடம் சொல்லிட்டா... அவுங்க பாத்துக்க மாட்டாங்களா என்ன:(

இந்த இலவச வேட்டி, சேலை அப்படின்னு ஒரு அறிவிப்பை பார்த்ததும் தாங்க... நமக்கு இந்த மண்டைக்குடைச்சலே வந்தது... சரி! உள்ளற போறதுக்கு முன்னால கொஞ்சம் தகவல்களை இந்த தளத்திலிருந்து எடுத்து பார்த்துக்கலாம்...

http://www.census.tn.nic.in

மொத்த மக்கள் தொகை (2001) - 6,24,05,679
0 வயதிலிருந்து -4வயது வரை - 5098462
5 வயது -9வயது வரை 5600086
10வயது -14வயது வரை 6012326
மொத்தம் 1,67,10,874

2005 - பொங்கல் - 175 கோடி -1 கோடியே 11 லட்சம் வேட்டிகள்,1 கோடியே 1 லட்சம் சேலைகள்
மொத்தம் 2 கோடியே 22 லட்சம் .

2006 - பொங்கல் - 256 கோடி -1 கோடியே 64 லட்சம் வேட்டிகள்,1 கோடியே 64 லட்சம் சேலைகள்
மொத்தம் 3 கோடியே 28 லட்சம் .

2007 - புள்ளி விவரம் கிடைக்கவில்லை...

2008- கிட்டதட்ட மொத்தம் 250 கோடி செலவில் 3 கோடி மேல் மக்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாக சொன்னார்கள்...

அட ஒரு தோராயமாக வைத்துக்கொண்டாலே 6.5 கோடி தமிழ்நாட்டு மக்கள், ஒரு குடும்பத்துக்கு 3 பேர் என்றால் 2.17 கோடி குடும்பம் தான் இருக்கும். ஒரு வீட்டுக்கு ஒரு வேட்டி, ஒரு சேலை தானே...

சரி அதை விடுங்க... தமிழ் நாட்டில் 1.67 கோடிக்கு மேல் வேட்டி, சேலை கட்டாத வயதுக்கு கீழே உள்ளவர்கள்...

அப்புறம் நடுத்தர, மத்திய தர, பணக்கார, ராயல் வர்க்கங்கள் நியாயவிலை கடைக்கு போய் வேட்டி, சேலை வாங்க போவதில்லை...

சரி! அப்படியெல்லாம் வேண்டாம் தோராயமாக 2 கோடி குடும்பத்தில் 1.5 கோடி குடும்பத்துக்கு வேட்டி, சேலை வழங்க வேண்டிய நிலைமைக்கு இருக்கு என்றால்... தமிழ்நாட்டுல 50 லட்சம் குடும்பம் தான் வேட்டி, சேலை வாங்கி கட்டுற நிலைமையில் இருக்கா ?

என்னய்யா... நடக்குது நாட்டுல...

குறிப்பு : குறுக்கால, நெடுக்கால எப்படி கணக்கு போட்டாலும் டேலி ஆகமாட்டேங்குது... ஒன்னு வேட்டி, சேலை கொடுத்தாங்களா? இல்லை நமக்கு எல்லாம் வேட்டி போர்த்திட்டாய்களா ன்னு விவரமா சொல்லுங்க மக்கா!

9 comments:

TBCD சொன்னது…

நல்ல கேள்வி..

அப்படியே, தமிழக அரசு முகவரிக்கு தட்டிப் பாருங்க..

bala சொன்னது…

//அப்படியே, தமிழக அரசு முகவரிக்கு தட்டிப் பாருங்க//

டிபிஸிடி 0,1,2 அய்யாக்களே,
தேவையில்லை;சீக்கிரமே,நம்ம மடிப்பாக்கம் பூத ஏஜென்ட் ஆஜராகி பதில் சொல்லுவார்.பதறாதீங்க.

பாலா

பாச மலர் சொன்னது…

நியாய விலைக் கடையில் வேலை பார்க்கும் நபரின் நண்பர் எனக்குத் தெரிந்தவர். அவர் நண்பர் சொன்னது:

வேட்டிகள் எப்படியாவது வேண்டியவருக்குக் கொடுத்து விடுகிறோம்...வேறு வேட்டிகளை ஒத்து இருப்பதால்..

சேலைகள்தான் தேங்கிப் போய்க் கிடக்கின்றன...கொடுத்த வீடுகளுக்கே மீண்டும் கொடுக்கவும் முடியாது..கணக்கில் வராது..வேறு யாருக்கும் கொடுத்தாலும் அடையாளம் தெரிந்து விடும்...நண்பர்களுக்குத் திரைச்சீலை தலையணை உரை தைத்துக் கொள்ளக் கொடுத்தேன் என்றாராம்.

இது 2007 கதை..இந்த வருடம் எப்ப்டியோ..

ஆடுமாடு சொன்னது…

அட

TBCD சொன்னது…

பாலா,

தங்கத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை...

இப்படி மாற்றிய பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...

ச்சின்னப் பையன் சொன்னது…

அட்றா சக்கை....அட்றா சக்கை...
ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கவும்...
யாராவது பிரசுரிக்கிறார்களா என்று பார்க்கலாம்.

எங்க வீட்டிலேயும் ஜன்னல், கதவுகள் இருக்குது...
திரைச்சீலை வாங்கணும்... அந்த நண்பர் முகவரி கிடைக்குமா...

வவ்வால் சொன்னது…

பார்,

இன்னும் விவரம் புரியாத ஆளா இருக்கிங்களே, வேட்டி, சேலை, இலவச உதவிகள் எல்லாம் மக்கள் தொகை அடிப்படையில் இல்லை எத்தனை ரேஷன் கார்ட் இருக்கு என்ற கணக்கின் அடிப்படையில். குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் அளிப்பது தான் எத்தனை ரேஷன் கார்டு என்ற புள்ளிவிவரம்.

உங்களுக்கு நியாமமா ஒரு சந்தேகம் வரணுமே, குடும்பத்துக்கு ஒரு கார்டுனாலும் எப்படி இத்தனைக்கார்டுனு, அங்கே தான் விளையாடுறாங்க, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 100 ,200 என அக்கடைக்காரரின் திறமைக்கு ஏற்ப போலிக்கார்டுகள் இருக்கும், அது அவரிடமே இருக்கும், அதனைக்கடைக்கார்டு என்பார்கள். அதில் சும்மா எண்ட்ரி மட்டும் போட்டுவிட்டு பொருள்களை கடத்தி விடுவார், இப்படித்தான் ரேஷன் அரிசி கடத்தல் செய்யப்படுவது.

சமீபத்தில் ப.சிதம்பரம் கூட மத்திய அரசின் நிதி இப்படி ரேஷன் கடைகளில் முறைக்கேடாக வேறு யாருக்கோ போவதைக்கண்டித்திருந்தார்.

அவ்வப்போது போலி குடும்ப அட்டைகளை கைப்பற்றினாலும் ஒன்றும் செய்ய முடியாது, வருவாய்த்துறையினரின் உதவியோடு கடைக்காரர்கள் மீண்டும் உருவாக்கிக்கொள்வார்கள். பெரும்பாலும் ரேஷன் கடைக்காரர்கள் கட்சிக்காரராக இருப்பார், கட்சி மாநாடு எனில் பெரியத்தொகை அளிப்பார்,மேலும் அவர் அடிக்கும் கொள்ளையில் அனைவருக்கும் பங்கும் கொடுப்பார் எனவே கண்டும் காணாமலும் போய் விடுவார்கள்.

ஏழைப்பணக்காரன் என வித்தியாசம் இல்லாமல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் வேட்டி சேலை என அரசு நிதி ஒதுக்குகிறது, அதை வாங்காதவர்கள் தான் பலர்.அதை எல்லாம் கள்ளமார்க்கெட்டில் விற்று விடுகிரார்கள். இந்த வேட்டிகள் கேரளாவில் 20 -30 ரூபாய் என பிளாட்பாரங்களில் விற்கபடுவதாக ஜீவியில் ஏற்கனவே செய்திப்போட்டான்.

ஜமாலன் சொன்னது…

அட்றா சக்கை அட்றா சக்கை...

புள்ளியல்துறை என்கிற விளங்காத துறையை பார்க்கும் விவரமான அமைச்சர் சி.ப. (சின்ன பண்ணையார்) வாசன் பதவிக்கு வேட்டு வெச்சிடுவீங்க போலிருக்கே.

கேள்விகள் நியாமானவை. வவ்வாலின் பதிலும் அருமை.

ஆக சிட்டிசன் மாதிரி இல்லாத ஊருக்கு கடலில் அடித்துச் செல்லப்பட்ட கட்டாத பாலம் கட்டிய கதைதான் இது. கணக்கில் வந்தால் காசுதான். காசேதான் கடவுளடா?

பொய்கள் இரண்டுவகை ஒன்று பொய் மற்றொன்று புள்ளிவிவரம் என்பார்கள். இங்கு புள்ளி விவரத்தையே தூக்கி சாப்பிடும் அரசியல் பொய்யாக இருக்கிறது.

ஜமாலன் சொன்னது…

பொய்கள் இரண்டுவகை ஒன்று பொய் மற்றொன்று புள்ளிவிவரம் என்பார்கள். இங்கு புள்ளி விவரத்தையே தூக்கி சாப்பிடும் அரசியல் பொய்யாக இருக்கிறது இந்த வேட்டி சேலை இலவச விவகாரம். குறைந்த பட்சம் சிலருக்காவது சேருகிறதே என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்

Related Posts with Thumbnails