பட்டுக்கோட்டை, கரிக்காட்டிலிருக்கும் குட்டைக்குளம். குளத்திலிருந்து 5 நிமிட நடை வீடு, 8 வயது வரை அங்கே தான் வசித்தது. வீட்டின் பின்னாலிருந்து எட்டிப்பார்த்தால் சுடுகாடு தெரியும், அவ்வப்போது பிணம் எரியும்போதெல்லாம் வரிசையாகயிருக்கிற காலணியில் எல்லா வீட்டிலும் பயந்துக்கொண்டு பின்கதவை 6 மணிக்கு மேல் திறக்கமாட்டார்கள்.
பிணம் எரித்துவிட்டு வருகிற எல்லோரும் குட்டைக்குளத்தில் குளிப்பார்கள். காலை, மாலை கை,கால் அலம்புவார்கள். சிறார்கள் எப்போதும் தண்ணீரில் நீந்திக்கிடப்பார்கள். எருமைகள் உள்ளேயே ஊறிக்கிடக்கும். அருகில் சிறிய கல்லணைக்கால்வாயின் கடைமடை கிளையொன்று போகும்... அது எப்போதவது மழை நீரிலோ அல்லது ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு கன்னடகாரர்கள் கொடுத்த கொஞ்சம் தண்ணீரை கொண்டு புதுமணப்பெண்ணை போல் குதுகலிக்கும்.
ஆண்டுகள் ஓடிப்போயின... வீடு வேரிடத்திற்க்கு மாறியாகிவிட்டது. ஆனால் குட்டைக்குளத்துடனான பந்தம் மாறதது. அதற்க்கு எதிரில் தான் நியாயவிலை கடையிருக்கும். சர்க்கரையோ, கோதுமையோ, மண்ணெண்ணையோ வாங்க மாதத்திற்க்கு இரண்டு முறையேனும் போக வேண்டும்.
கல்லணைக்கால்வாயின் கிளை காணாமல் போயிவிட்டது. குட்டைக்குளத்தில் நகர சாக்கடை நீரை இணைத்திருந்தார்கள். இது நடந்தது 90களில்... ஏன்? கேள்வி எப்போதும் நெஞ்சைக்குடையும்.... நகர விரிவாக்கம்... மக்கள் நெருக்கடி கழிவு நீரை வெளியேற்ற வேறு வழியில்லை என்று சொன்னார்கள். கொஞ்ச நாளில் இதுவும் போதாமல் நாடியம்மன் கோயில் குளத்திலும் கழிவு நீர் இணைக்கப்பட்டது. அதிலே குளித்து, அதையே வாழ்க்கையாக கொண்ட அண்ணாநகர் மக்களுக்கு கழிவு நீர் இணைந்ததைக்கூட பொருட்ப்படுத்தாமல் குளிப்பார்கள், துணி துவைப்பார்கள்.
திருவிழாவிற்க்கு சிலநாட்க்களுக்கு மட்டும் கழிவு நீர் மடை மாற்றுவார்கள். 80களில் இந்த குளத்து நீர் தீர்த்தமென்று மாவிளக்கு பிசைந்தவர்கள். இப்போது கால் நனைப்பதற்க்கு கோயிலில் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இந்த நீர் மாசுப்படுத்தலை கண்டு வெம்பிய மனமே என்னை கணினி உலகிற்க்கு நகர்த்தியது. கழிவு நீரை மறுசுழற்சி செய்யலாம் என்று படித்தேன். அதற்க்கு நீரை பகுப்பாய்வுச்செய்ய வேண்டும். அப்போது படித்துக்கொண்டிருந்த +1 ல் வேதியியல் ஆய்வுசாலையில் எங்களையெல்லாம் சோதனைக்குழாய் துடைக்க, கழுவ மட்டுமே விடுவார்கள். +2 ல் பொதுத்தேர்வு என்பதால் அதற்க்கான செய்முறை தேர்வுகளுக்கு தயாராகணும். நண்பன் சலீம் மிகுதியாக ஆங்கில புத்தகங்கள் படிப்பவன். அவுங்க அப்பா ஆங்கில பேராசிரியர். அவனுடன் உரையாடுவது. விநோதமாக பார்ப்பான்.. ஆனாலும் எதாவது குறிப்புகள் எடுத்துக்கொடுப்பான்.
ஆய்வுச்சாலையில் மட்டுமே மறுசுழற்ச்சியை பற்றிய ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று சொன்னான். வெடிக்கும் குழாய்கள், எரியும் அமிலங்கள் பார்த்தாலே குலை நடுக்கம்.
இயல்பாக கேள்வியெழுந்தது பெரும்பான்னை அணுக்களின் பண்புகளை அட்டவணைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வெப்பநிலையில், இந்த அழுத்ததில் இந்த வினை இப்படித்தான் நிகழும் என்பது ஏற்கனவே தெரிந்தது தான், பிறகு ஏன் திரும்ப, திரும்ப சோதிக்கிறார்கள்?
அப்பொழுது தான் சொன்னார்கள் இதெல்லாம் கணினி இருந்தால் மிகவும் எளிது. அதில் எல்லாமுமே செய்யலாம் என்றார்கள். கட்டிங் அண்டு டெய்லரிங் படி வீட்டில் வறுமை வாட்டியெடுக்கிறது... ஏதாவது தொழில் செய்தாவது பிழைக்கலாம் என்று கூறிய அறிவுரையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு ஐ.டி.ஐ கணினி போய் படித்தேன்.
படிக்க ஆரம்பித்த பிறகு தெரிந்த விசயங்கள் இரண்டு... கணினி எதுவும் செய்யாது. இன்னொன்று நம் மக்களுக்கென்று ஏதேனும் ஆய்வுகள் நடக்கிறதா என்கிற ஏக்கம்? ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், ரஷ்யாவும், ஜப்பானும் சாப்பிட்டு விட்டு மிச்சம் வைக்கிற எலும்புத்துண்டுகளையே நாம் பொறுக்கி எடுத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தேன்.
வாழ்க்கையில் வீசிய பொருளாதார புயலில் சிக்கி சின்னாபின்னமாகி... எங்கோ நிற்கிறேன்... அடையாளம் தெரியாமல்...
இன்றைக்கும் கூவமோ அல்லது வேறெந்த கழிவு நீர் கால்வாயை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிற எண்ணம் என்றைக்காவது ஒரு நாள் இது மறுசுழற்ச்சி செய்யப்படும். ஒன்று சாலையோர பூங்காவுக்கு பயன்படுத்தி நிலத்தடி நீராக மாறணும். மற்றொன்று மக்களுக்கு பயன்படுகிற நீராக மாறணும். குளமோ, ஏரியோ, கடலோ மாசுப்படக்கூடாது என்ற ஏக்கம் இருக்கு....
நமக்கான ஆய்வுகள் வர வேண்டும். நம்முடைய தேவைகளை நிறைவுச்செய்கிற திட்டங்கள் வேண்டும். அதற்க்கான சிந்தனையெழுச்சி வேண்டும். அப்படி தேவையெனில் தாய்மொழி சார்ந்த திட்டங்களால் தான் 6 கோடி மக்களை சென்றடைய முடியும். அதுவரை ஆங்கிலத்தில் படித்த அடிமைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி காசுப்பார்ப்போம்...
திங்கள், 14 ஜனவரி, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 comments:
முண்டம் சொறி.அரசு,
இந்த மாதிரி இரட்டை வேஷம் போட்டு மலேஷியா வந்து காசு சேர்ப்பதற்கு பதிலா,தி மு க,தி க,பெ தி க போன்ற சாக்கடையில் இறங்கி,நாட்டையே அசுத்தப்படுத்தும் அழுக்குகளை அகற்றலாமே?அதை விட்டு விட்டு இப்படி புலம்புவதால் என்ன லாபம்?இன்னொரு சின்ன வேண்டுகோள்.உங்க வலைப்பூவின் பேரை சிந்தனைப் புழுக்கள் னு மாற்றுங்க.உங்க சிந்தனையிலிருந்து அவை தான் வரும்.பூக்கள் வராது.சிந்தனையாம், பூவாம் மூஞ்சியைப் பாரு;கரப்பான் மேயும் கருவாடு மாறி.
பாலா
திருவிழாவிற்க்கு சிலநாட்க்களுக்கு மட்டும் கழிவு நீர் மடை மாற்றுவார்கள். 80களில் இந்த குளத்து நீர் தீர்த்தமென்று மாவிளக்கு பிசைந்தவர்கள்.
இதைத்தான் எதிர் பார்த்தேன். :-(
திட்டம் மட்டும் போதுமா? போட்ட திட்டம் எல்லாம் சரியான பலன்களை கொடுத்துள்ளதா?குறை எங்கோ கண்ணுக்கு தெரியாமல் உள்ளது.
எனது ஊா குளங்கள் கட்டைகள் பற்றிய நினைவுக்க கொள்று சென்ற பதிவு. எங்கள் ஊர் கிராமம் என்பதால் கழிவு இன்னும் கலக்கவில்லை.
உங்களது சமூக பொறுப்புணர்வுக்கு பாராட்டுக்கள்.
முத்தாய்ப்பான வரிகள்.
//நமக்கான ஆய்வுகள் வர வேண்டும். நம்முடைய தேவைகளை நிறைவுச்செய்கிற திட்டங்கள் வேண்டும். அதற்க்கான சிந்தனையெழுச்சி வேண்டும். அப்படி தேவையெனில் தாய்மொழி சார்ந்த திட்டங்களால் தான் 6 கோடி மக்களை சென்றடைய முடியும். அதுவரை ஆங்கிலத்தில் படித்த அடிமைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி காசுப்பார்ப்போம்...//
உண்மை என்றுதான் உறைக்கமோ?
கருத்துரையிடுக