வியாழன், 17 ஜனவரி, 2008

ஏமாளிகளும்... ஏமாற்று வித்தைகாரர்களும்...!

தகவல் தொழில்நுட்ப துறையில் நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறிக்கொண்டிருக்கிற நிலையில்... உழைக்காமல் இந்தியாவில் உண்டுக்கொழுத்த கூட்டம் இப்போது உலகளவில் ஏமாற்றுவது என்று கிளம்பியிருக்கிறது.

1. உழைப்பை சுரண்டவது ...

2. வேலைவாய்ப்பை ஏற்ப்படுத்தி தருவதாக செல்லி பணம்பறிப்பது.

GrapeVyne Technologies - வெங்கி சார் இவனிடம் ஏமாந்த எத்தனையோ இளைஞர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.
ஆதம்பாக்கம் புவனேஸ்வரி
அப்புறம் சிங்கையில் ஒரு கன்சல்டன்ட் மிகப்பெரிய அளவில் ஏமாற்றி விட்டு கிட்டதட்ட 600 தகவல்தொழில்நுட்ப ஊழியர்களின் 6 மாத ஊதியத்தை சுருட்டிக்கொண்டு ஓடினான்.


இதெல்லாம் கடந்த காலம் என்றால் 3 மாதத்துக்கு முன்பு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக ஆந்திராவை சேர்ந்த 40 இளைஞர்களிடம் ஆளுக்கு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சம் வரை வசூலித்திருக்கிறான் கேரளாவை சேர்ந்த கேடி மாத்யூ.

சிங்கையை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து... இந்த பொறியியல் இளைஞர்களுக்கு 3 மாதம் microcontroller programming அதன் பின் மலேசியா அல்லது சிங்கப்பூரில் வேலை என்று சொல்லி பணம் வசூலித்திருக்கிறான்.

சிங்கை அரசாங்கம் இந்த நிறுவனத்திற்க்கு அனுமதி தராமல் ப்ளாக் லிஸ்ட் -ல் ஏற்றி விட்டது.

கேடி மலேசியாவில் இந்த மாணவர்களுக்கு பயிற்சி தருவதாக வர சொல்லி அவர்களின் வாழ்க்கையில் இனிமேல் மலேசியாவிற்க்கே வர இயலாத நிலைக்கு அவர்களுடைய கடவுச்சீட்டில் ஒரு தில்லுமுல்லையை செய்திருக்கிறான்.

மலேசியாவில் 1 மாத காலமே தங்க இயலும் என்கிற நிலையில்... அந்த மாணவர்களை 45 நாட்கள் தங்க வைப்பதற்க்காக லஞ்சம் கொடுத்து... மலேசியாவின் விசா வை போலியாக அவர்களுடைய பாஸ்போர்ட் ல் அச்சடித்திருக்கிறான்.

மாணவர்களுக்கு உண்மை தெரிந்து மலேசிய ஊடகங்களை வரவழைத்து பிரச்சினையை பெரிதாக்கும் போது... அவர்களை மிரட்டி, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விமானம் ஏற்றி அனுப்பி விட்டான்.

மாணவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியேவும் சொல்லவும் முடியாமல் தங்களுடைய கடவுச்சீட்டு இனி பயன்படுத்த பட முடியாத படி சட்டசிக்கல் ஆனதை கண்டு கொதித்து போயியுள்ளனர்.

இவன் தற்போது தமிழகத்தை சேர்ந்த கருத்து கந்தசாமி உடன் கூட்டணி அமைத்து அடுத்த கட்டமாக தமிழகத்திலும், பெங்களுரிலும் இளைஞர்களுக்கு வலை விரித்திருக்கிறான்...

1 comments:

ஜமாலன் சொன்னது…

//தற்போது தமிழகத்தை சேர்ந்த கருத்து கந்தசாமி உடன் கூட்டணி அமைத்து அடுத்த கட்டமாக தமிழகத்திலும், பெங்களுரிலும் இளைஞர்களுக்கு வலை விரித்திருக்கிறான்..//

புரியல தயவுசெய்து விளக்கவும் (காப்பிரைட். நன்றி டிபிசிடி)

நல்ல பதிவு. பொறுப்புள்ள பதிவும்கூட. பாராட்டுக்கள்.

Related Posts with Thumbnails