வியாழன், 24 ஜனவரி, 2008

தமிழ் புத்தாண்டு - கேள்வி கேட்பதன் நோக்கமென்ன...?

தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்திற்க்கான செயல்திட்டங்கள் என்றால் நம்ம அதிமேதாவிகளுக்கு எட்டிக்காயை கடித்தது போல துள்ளிக்குதிக்கிறார்கள். தங்களுடைய வழக்கமான குள்ளநரி தனத்தால் கேள்விகள் கேட்பது போல எல்லோரையும் திசைமாற்றுகிறார்கள்.

திருவள்ளுவருக்கு சிலை!

இத்தன கோடி செலவு பண்ணி வள்ளுவருக்கு சிலை வைப்பதற்க்கு பதிலா மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டலாமே! என்று கேள்வி கேட்டார்கள். ஏன்டா வெங்காயங்களா விவேகானந்தருக்கு மண்டபமும், சிலையும் வைத்தப்போது அதைக்கேட்க வேண்டியது தானே! சரி! விட்டு தள்ளு கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி விவேகானந்தர் பாறையை பாராமரித்தலை நிறுத்த சொல்லுவியா! ஆண்டு தோறும் கோயில் திருப்பணி என்று செலவிடப்படும் மக்கள் பணத்தில், வேறு ஏதாவது செய்யலாமே! மணியாட்டுற ஐயருக்கு கொடுக்கிற மாத சம்பளத்தை நிறுத்தி விட்டு வேறு உழைப்பாளிகளுக்கு ஊதியம் வழங்கலாமே!

இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள்! ஏனென்றால் இ(ஐ)ந்து என்கிற அடையாளத்தை கட்டிக்காப்பதனுமே! ஆனால் தமிழன் தன் அடையாளத்தை காப்பாற்ற எதையாவது செய்தால் அதற்க்கு நொட்டை சொல்வீர்கள்!

தமிழ் செம்மொழி என்கிற அறிவிப்பு!

இதை செய்து என்னத்த கிழிக்க போகிறார்கள். இதனால் என்ன பயன் என்று பட்டியல் போட்டார்கள். அட! ஒன்னுமே இல்லையே! அப்புறம் எதுக்கு அவசர, அவசரமா சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவித்தீர்கள்? ஏன்னா அது உங்க மொழி ஆனா தமிழ் தீண்டதகாதவர்களின் மொழி அப்படிதானே!

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அறிவிப்பு!

கிட்டதட்ட 86 ஆண்டுகள் கழித்து தமிழறிஞர்களின் கோரிக்கையான தமிழ் புத்தாண்டு என்பது நிறைவேற்றப்பட்டால்... அது இந்து நம்பிக்கைக்கெதிரானது என்று திசை மாற்றுகிற கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இதன் நோக்கத்தை பற்றிய விளக்கமெல்லாம் தேவைப்படுவதில்லை...

5 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

சும்மா நச் ன்னு இருக்கு !

இன்னும் கொஞ்ச நாளில் உங்க பேரைக் கேட்டாலே அதிரும் போல இருக்கே.
:)

பெயரில்லா சொன்னது…

//
ஏன்டா வெங்காயங்களா விவேகானந்தருக்கு மண்டபமும், சிலையும் வைத்தப்போது அதைக்கேட்க வேண்டியது தானே!
//
அதுவும் விவேகானந்தர் மண்டபத்த சும்மாவா கட்டினானுங்க? எவ்வளவோ அன்றாடங்காச்சி மீனவர்கள் மீன் பிடிக்க, வலை உலர்த்த பயன்படுத்தும் இடத்தை அபகரித்து அவர்களை விரட்டி குமரி மாவட்டத்தில் ஒரு மதக் கலவரத்தையே உருவாக்கி அல்லவா கட்டினார்கள். இவனுங்களோட அடையாளத்துக்கு என்ன விலை வேணாலும் மக்கள் கொடுக்கலாம். எல்லாத்தயும் மூடிட்டு இருப்பானுங்க. தமிழனுக்கு உருப்படியா எதாவது செஞ்சா மட்டும் வந்திருவானுங்க... இதுக்கு ரோட்ட போடலாம், சோத்த போடலாம் நு வயித்தெரிச்சலோட சொல்லிக்கிட்டே...

கருப்பன் (A) Sundar சொன்னது…

***********************
ஒரு சிறிய கோரிக்கை தயவு செய்து தங்களது டெம்ப்ளேட்டை மாற்றுங்கள். Firefox உலாவியில் பதிவுகள் சிதைகின்றன.
*********************

பின்னூட்டம் பெரியதாகிவிட்டதால் தனிப்பதிவாகவே போட்டுவிட்டேன்

http://maalaimayakkam.blogspot.com/2008/01/blog-post_24.html

Deekshanya சொன்னது…

நல்ல கேள்விகள். என் மனதிலும் இதுபோல பல கேள்விகள் தோன்றும்..
எ.கா:
1)வருஷம் ஒரு விழா எடுக்கறார்கள் அந்த தலைவருக்கு- எவ்வளவு செலவு? எத்தனை பேரின் நேரம் செலவாகிறது? அதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு வேறு- யார் பதில் சொல்வார்கள். இப்போது எல்லாத்திலும் ஒரு லாபம், ஒரு business இருக்கத்தான் செய்கிறது!

2)இத்தனை தொலைக்காட்சி channelகள் தேவைதானா? அதிலும் அதே நிகழ்ச்சிகள் தான் வெவ்வேறு பெயர்களில். மொத்தமும் waste.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!


2)

பெயரில்லா சொன்னது…

சரியான வினாக்கள்

சரியான ஆப்புக்கள்

நன்றி

Related Posts with Thumbnails