ஞாயிறு, 30 டிசம்பர், 2007

எல்லோரும் இன்புற்றிருக்க...! (புத்தாண்டு வாழ்த்துக்கள்)

என் காதலியே!

இது மகிழ்ச்சி, இது இன்பம் என்று கற்பிதம் செய்யப்பட்டவைகளுடனான சங்கமத்தில் சஞ்சரித்துக்கிடக்கிறது உலகம்!
ஆல்கஹால் திரவம் நிரம்பிய குவளைகளில் மிதக்கும் நீர்கட்டிகளை பார்த்து நீந்தி மகிழ்கிறது!
இரவு விடுதிகளின் மின்னும் விளக்கொளியில் மங்கையின் இடையில் கைக்கோர்த்து களைக்க நடனமாடி மகிழ்கிறது!
ஆண்டு இறுதியின் ஊக்கத்தொகையில் காதலனுக்கோ/காதலிக்கோ அன்பளிப்புடன் களிக்கிறது!
வானில் வெடித்து சிதறும் கந்தக தூள்களை கண்டு கண்கொள்ளாக்காட்சியென களிக்கிறது மக்கள் கூட்டம்!
விந்துக்கள் கழிக்கப்பட்டு, யோனிகள் நிரம்பி வழிகிறது விடுதிகளில்!
சிற்றின்பமோ! பேரின்பமோ! எங்கும் மகிழ்ச்சி என்று கற்பிதம் செய்யப்படுகிறது!

மத்தாப்புகள் வெடித்து சிதறுவதைக்கண்டு புன்னகைக்கும் மழலைகளை கண்டு மகிழ்வதா!
தாயின் காய்ந்த முலைகளை சூப்பி, சூப்பி கருகி போன மொட்டுகளை கண்டு கண்ணீர் வடிப்பதா!
கொழு,கொழு வென்று வளர வேண்டும் என்று ஊட்டி வளர்க்கப்படும் மழலைகளுக்கு மத்தியில்!
உண்ண உணவின்றி ஆண்டுக்கு 1.1 கோடி என்று மடிந்துப்போகும் மழலைகளை எண்ணி வேதனைப்படுவதா!

புத்தாண்டு விடுமுறை இனிப்புகளை வழங்கி மகிழ்ந்துக்கிடக்கிறோமே!
காய்ச்சிய இரும்பை சம்மட்டிக்கொண்டடிக்கும் என் சகோதரனுக்கு விடுமுறையில்லையே!
இடுப்பில் தூளியில் குழந்தை தூங்க தலையில் செங்கலை சுமக்கும் என் சகோதரிக்கு வீட்டில் உலை கொதிக்க வேண்டுமே!

எந்த நொடியில் உனக்கு வாழ்த்துச்சொல்ல வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டயோ!
அந்த நொடியில் மனிதன் போட்ட நாடு என்ற எல்லைக்கோட்டில் தூப்பாக்கிகளும்,பீரங்கிகளும் பேசலாம்!
சிலர் மரணித்தும் போகலாம்!

புலியின் வேட்டையில் மானுக்கு மகிழ்ச்சி இருக்க வாய்ப்பேயில்லை!
புலியின் வேட்டையில் புலியே இறந்ததாக செய்தியில்லை!
மனிதனின் பொருள் வேட்கையில் மனிதனே வேட்டையாடப்படுவதே வேதனை!

எனக்குள் பரிணாமித்தவை உனக்கு வாழ்த்தாகயிருக்க வேண்டிய தேவையில்லை!
எல்லோரும் இன்புற்றிருக்கிறார்கள் என்று கற்பிதம் செய்துக்கொள்ள இயலவில்லை!

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
அன்புடன்,
அரசு.

7 comments:

TBCD சொன்னது…

புரியல்ல.தயவு செய்து விளக்க வேண்டாம்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிரச்சனைகள் இல்லாது போகும் நாளுக்காக கையிலிருக்கும் கோப்பையயை கீழே போடாதே..

பிரச்சனைகளை எதிர்க்கவும் நீ இருக்க வேண்டும்...வாழு..வாழ வை...

ஜெகதீசன் சொன்னது…

//
புரியல்ல.தயவு செய்து விளக்க வேண்டாம்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிரச்சனைகள் இல்லாது போகும் நாளுக்காக கையிலிருக்கும் கோப்பையயை கீழே போடாதே..

பிரச்சனைகளை எதிர்க்கவும் நீ இருக்க வேண்டும்...வாழு..வாழ வை...
//
ரிப்பீட்டேய்ய்ய்...
வாழ்த்துக்கள்!!

கோவி.கண்ணன் சொன்னது…

புதிய ஆண்டில் உங்களுக்கு நடக்கவேண்டியது நடக்கட்டம்.

வாழ்த்துக்கள் !!!
:)

பாரி.அரசு சொன்னது…

வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி டிபிசிடி!

பாரி.அரசு சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெகதீசன்!

பாரி.அரசு சொன்னது…

//புதிய ஆண்டில் உங்களுக்கு நடக்கவேண்டியது நடக்கட்டம்.
//

என்ன நடக்கணும்? புரியல்ல... தயவு செய்து விளக்கவும்!

///வாழ்த்துக்கள் !!!
:)///

நன்றி!

குசும்பன் சொன்னது…

//புத்தாண்டு விடுமுறை இனிப்புகளை வழங்கி மகிழ்ந்துக்கிடக்கிறோமே!
காய்ச்சிய இரும்பை சம்மட்டிக்கொண்டடிக்கும் என் சகோதரனுக்கு விடுமுறையில்லையே!///

அப்படி பார்த்தால் எந்த நிகழ்வையும் கொண்டாட முடியாதே!!!:)

Related Posts with Thumbnails