புதன், 19 செப்டம்பர், 2007

பெண்களும், சமூக மற்றும் அரசியல் அறிவும்...!

நண்பர்களிடம் அல்லது சமூக, அரசியல் பேசுகிறவர்களிடம் நான் பேச்சின் ஊடாக கேள்வியாக வைக்கிற அல்லது கவனிக்கிற கருத்து அவர்களின் வாழ்க்கைதுணை மற்றும் குடும்பத்தாருடன் தங்களின் சமூக, அரசியல் நிலைப்பாடுகளை பற்றி உரையாடுகிறார்களா? என்பது.

இதுவரை நான் அறிந்தவற்றை பெரும்பிரிவாக...
1. சமூக, அரசியல் பற்றி அறிவு அவர்களுக்கு தேவையற்றது. குடும்பம், உறவு என்று இருப்பதுதான் தனக்கு பிடிக்கும்.

2. அவர்களாக தெரிந்துக்கொள்வதை (அ) அவர்களுடைய நிலைப்பாடு பற்றி எனக்கு தேவையற்றது. நான் எனக்கு தெரிந்ததை செய்கிறேன் அவர்களை நான் இதில் கலந்துக்கொள்வதில்லை.

3. எப்போதாவது பேசுவதுண்டு ஆனால் பெரும்பாலும் நண்பர்களிடம் பேசுவதுபோல ஈடுபாடு வருவதில்லை.

4. நான் ஆர்வமாக பேசினால் கேட்க யாரும் தயராகயில்லை.

இப்படி பல்வேறு காரணங்கள்... எல்லாவற்றிலும் பெண்கள் சமூக,அரசியல் அறிவு பெறுவது மறுக்கப்படுகிறது (அ) தவிர்க்கப்படுகிறது (அ) ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

இப்போ உனக்கு என்ன வேணும்? என்று நீங்கள் குரல் கொடுப்பது எனக்கு கேட்கிறது.

இப்படி குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைதுணையோ, சகோதரியோ, மகளோ சமூக, அரசியல் அறிவு பெறாவிட்டால் என்ன நடந்தது, நடக்கிறது என்பதை பார்த்தால்...

நான் சிறுவனாக இருந்தபொழுது என் தந்தையின் திராவிடர்கழக, தி.மு.க, பொதுவுடைமைவாதி நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போயிருக்கிறேன்.

அவர்களில் பெரும்பாலானோர் மிக தீவிரமாக பொதுவாழ்க்கையில் ஈடுபடுவார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் அவர்களுடைய சமூக, அரசியல் நிலைப்பாடுகள் புரியாத காரணத்தால் கடுமையான எதிர்ப்புகள் நிலவும். அவர்களின் குடும்பத்தார் அவர்களை தேறாதவர்கள், பூட்டக்கேசு, கோயில்மாடு, இன்னும் பல வசைமொழிகளை சொல்வார்கள்.

இரண்டாவது இவர்கள் குடும்பத்தாரை ஓட்டுபோடும்போது "உதயசூரியன்" (அ) "கதிர்அரிவாள்" சின்னத்தில வாக்களிக்க சொன்னால்... மிக கருமமே கண்ணாக " இரட்டைஇலைக்கு வாக்களித்துவிட்டு, இவன்தான் வறட்டு,வறட்டுன்னு பேசி வீணா போனதில்லாம... நாட்டையும் கெடுக்கிறான் என்று வைவார்கள்.
அவர்களின் அரசியல் அறிவு சினிமாவில் பார்த்த எம்.ஜி.ஆர் நல்லவர் என்பது.

இப்படியிருக்கிற குடும்ப பெண்கள் அப்படியே நீங்கள் சமூகத்தையும்,அரசியலும் பேசாததால் முட்டாள்களாக இருப்பதில்லை...

அவர்களுக்கு பக்கத்து வீட்டிலோ (அ) பால் அங்காடியிலோ பார்ப்பானீய அரசியலை போதிக்க ஓரு பாப்பாத்தியிருப்பாள்...

சேது சமுத்திர திட்டத்தை பற்றிய செய்தி எப்படி அவர்களுக்கு போய் சேரும் பாருங்கள்...

"சீனி அம்மா! இங்கபாருங்க , இந்த வழுக்கைமண்டை யிருக்கில்லையா!"
"யாருங்க"
"அதாங்க இந்த கருணாநிதி"
"அவரா, என்னாச்சு?"
"என்னத்த சொல்லுறது எல்லாம் கலிகாலம் இராம பிரானும், ஆஞ்சநேயரும் கட்டிய பாலத்த இடிக்க சொல்லுறானாம்"
" இவனெல்லாம் நல்லகதியில போவானா?"

என்று பார்பானீய அரசியல் அறிவு அங்கே போதிக்கபடும்.

அடுத்ததாக பெண்கள் கோயிலுக்கோ (அ) பொது இடத்திலோ இருக்குமிடத்தில் அங்கே பூணூல் போட்ட பார்ப்பான் ஓருவன் நிச்சயமாய் இப்படி சொல்லுவான்...

" இவா எல்லாம் லோகத்தில் நன்னாயிருப்பாளா"
"சாட்சாத் அந்த ஆண்டவன் அமைத்த பாலமோ இல்லையோ! இடிக்கலாமா !?"

இப்படி நம்ம குடும்ப பெண்கள் சமூக,அரசியல் அறிவு பெற்றிருப்பார்கள்.

நாமெல்லாம் எழுதியும், பேசியும், களமிறங்கி போராடிக்கொண்டிருப்போம் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி.

ஆனால் நம்முடைய குடும்பத்தாரையே நமக்கு எதிராக திருப்புகிற நுண்ணரசியலை மிக தெளிவாக செய்திருப்பார்கள்.அடுத்து தீண்டாமையும் பெண்களின் சமூக,அரசியல் அறிவும்...

(குறிப்பு: எழுத மிகவும் போரடிப்பதால் அடுத்த பாகத்தில் விரிவாக...)

9 comments:

நந்தா சொன்னது…

உண்மையான விஷயம். பொது வாழ்க்கையில் இறங்கிப் போராடும் பலரது வீட்டுப் பெண்களிற்கு மேலோட்ட அரசியல், ச்மூக அறிவு கூட பெற்றிருக்க வில்லை என்பதை நானே பல முறைப் பார்த்திருக்கிறேன்.

அப்படிப் பட்ட பெண்கள் நுண்ணரசியலால் எப்படிப்பட்ட அறிவைப் பெறுகிறார்கள் என்பதையும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

உண்மையில் அப்படி இறங்கிப் போராடும் பல ஆண்களும் கூட "இவளுக்கு எதுக்கு இது எல்லாம்" என்ற மனப்பான்மையில் நடந்துக் கொள்வதன் விளைவுதான் இது.

ஜெகதீசன் சொன்னது…

அரசு,
நல்ல இடுகை.
நாம் சந்தித்த போதும் இதைப் பற்றி சிறிது விவாதித்தோம்.

TBCD சொன்னது…

ஆணத்திக்க வெளிபாடாகவே இதை பார்க்கிறேன்...

இதுக்கும் ஒயிட் மேன்ஸ் பர்டன் என்று சொன்னதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை...

கருத்தை முன் வைத்தால் பிரித்தறியாத வாத்துக்கள் என்று கூறுகிறீர்களா...

எல்லாருக்கும்..பொதுவா சொல்லுங்க...பொது மக்களுக்கு போய் சேருவதில்லை என்று சொன்னால்..அது சரி...பெண்கள் என்று தனிமைப்படுத்தி சொல்லி ஏன் சொல்ல வேண்டும்..

எத்தனை வீட்டில், பெற்றோர்கள் இருவரும்..பக்திமான்களாகவும், பிள்ளை பகுத்தறிவு பாதையில் பயனிப்பவனாகவும் இருக்கின்றார்கள்..

பெண்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை நிறுத்துவோம்...அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதியுங்கள்....

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் நந்தா,
கருத்துக்களுக்கு நன்றி
//
உண்மையில் அப்படி இறங்கிப் போராடும் பல ஆண்களும் கூட "இவளுக்கு எதுக்கு இது எல்லாம்" என்ற மனப்பான்மையில் நடந்துக் கொள்வதன் விளைவுதான் இது
//

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஜெகதீசன்,

//
நாம் சந்தித்த போதும் இதைப் பற்றி சிறிது விவாதித்தோம்.
//
ஆமாம் அதன் நீ்ட்சியாக கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் TBCD,
//
ஆணத்திக்க வெளிபாடாகவே இதை பார்க்கிறேன்...
//
பதிவ நல்லா படித்துப்பார்த்தீர்களா?

//
கருத்தை முன் வைத்தால் பிரித்தறியாத வாத்துக்கள் என்று கூறுகிறீர்களா...
//
ஏன்ய்யா இல்லாததையெல்லாம் சொல்லி வம்பு வளர்க்கிறீர்கள்...:)))

//
எல்லாருக்கும்..பொதுவா சொல்லுங்க...பொது மக்களுக்கு போய் சேருவதில்லை என்று சொன்னால்..அது சரி...பெண்கள் என்று தனிமைப்படுத்தி சொல்லி ஏன் சொல்ல வேண்டும்..
//

பதிவே சமூக, அரசியல் பேசுகிற ஆண்கள் தங்களுடைய குடும்பத்து பெண்களுக்கும் அந்த அறிவை வளர்க்க வேண்டுமென்பதே... புரிகிறதா :(

//
எத்தனை வீட்டில், பெற்றோர்கள் இருவரும்..பக்திமான்களாகவும், பிள்ளை பகுத்தறிவு பாதையில் பயனிப்பவனாகவும் இருக்கின்றார்கள்..
//
இதெல்லாம் இங்கன பேசவேயில்லையே, நீஙக ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் !

//
பெண்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை நிறுத்துவோம்...அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதியுங்கள்....
//

இங்கே பெண்கள் எப்படியிருக்க வேண்டுமென்பதல்ல... பெண்கள் சமூக, அரசியல் அறிவு பெற வேண்டுமென்பதே.

உங்களின் கருத்துப்படி அவர்கள் முட்டாள்களாகவேயிருப்பது நல்லது என்று வருகிறது :(((

TBCD சொன்னது…

//*வாருங்கள் TBCD,*//
சரி வரேன்..
//*//
ஆணத்திக்க வெளிபாடாகவே இதை பார்க்கிறேன்...
//
பதிவ நல்லா படித்துப்பார்த்தீர்களா?*//
நல்லா படிக்கிறதுன்னா..எப்படி என்னா..விவரம் சொன்னா அப்படியே படிக்கிறேன்..இப்போதைக்கு வாசித்தேன்...

//*//
கருத்தை முன் வைத்தால் பிரித்தறியாத வாத்துக்கள் என்று கூறுகிறீர்களா...
//
ஏன்ய்யா இல்லாததையெல்லாம் சொல்லி வம்பு வளர்க்கிறீர்கள்...:)))*//
பெண்களுக்கு சமுக அறிவை ஊட்ட வேண்டும் என்றால் இயல்பாக அவர்களுக்கு அது இல்லை..ஆண்களுக்கு இருக்கிறது....அதனால், பெண்களுக்கு ஆண் சொல்லித் தரவேண்டும் என்று நீங்க சொன்னதை தானே சொன்னேன்..

//*//
எல்லாருக்கும்..பொதுவா சொல்லுங்க...பொது மக்களுக்கு போய் சேருவதில்லை என்று சொன்னால்..அது சரி...பெண்கள் என்று தனிமைப்படுத்தி சொல்லி ஏன் சொல்ல வேண்டும்..
//

பதிவே சமூக, அரசியல் பேசுகிற ஆண்கள் தங்களுடைய குடும்பத்து பெண்களுக்கும் அந்த அறிவை வளர்க்க வேண்டுமென்பதே... புரிகிறதா :(*//

பதிவு பெண்களை மட்டும் ஏன் தனிமைப்படுத்துகிறது...உதாரணத்திற்கு தான் பகுத்தறிவு பேசுபவன் குடும்பத்தில மற்றைய அனைவருமே அதன் கருத்தில் ஈடுபாடு இல்லாமல் போகலாம் என்று தான் சொன்னேன்..

//*இங்கே பெண்கள் எப்படியிருக்க வேண்டுமென்பதல்ல... பெண்கள் சமூக, அரசியல் அறிவு பெற வேண்டுமென்பதே.

உங்களின் கருத்துப்படி அவர்கள் முட்டாள்களாகவேயிருப்பது நல்லது என்று வருகிறது :(((*//
கருத்துக்களின்ன் ஊடே நீங்க இதை மட்டும் விளங்கிக் கொள்வீர்களே...எதையும் யாரும் யாருக்காவும் சொல்லத் தேவையில்லை...அவர்களுக்கு இயல்பாகவே வேண்டியதை தேடிச்செல்லும் துணிவை ஊட்டி வளர்ப்போம் அது பெண் என்றாலும் , ஆண் என்றாலும்...

நான் சொன்னது நீங்கள் மறந்தது...வெயிட் மேஸ் பார்டன்...வெள்ளையர்கள், கறுப்பின மக்களை மேம்படுத்துவதாகவும், அது அவர்களின் கடமையாகி போனதாகவும் நீலிக்கண்ணீர் வடித்தனர், அதற்கு ஒப்பானது உங்கள் ஒப்பாரி...

உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு நீங்கள் பிராச்சாரம் செய்யலாம், திணிக்கக்கூடாது...குடும்பத்தினரே ஆயினும் அவர்களும் விருப்பு வெறுப்பு உள்ள மனிதர்களே..ஆதால் என் கருத்தை என் குடும்பமும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று எண்ணுவது மூடத்தனம்.

பாரி.அரசு சொன்னது…

//
பதிவு பெண்களை மட்டும் ஏன் தனிமைப்படுத்துகிறது...உதாரணத்திற்கு தான் பகுத்தறிவு பேசுபவன் குடும்பத்தில மற்றைய அனைவருமே அதன் கருத்தில் ஈடுபாடு இல்லாமல் போகலாம் என்று தான் சொன்னேன்..
//

நான் எந்தவொரு குறிப்பிட்ட அமைப்பு (அ) கருத்தியல் சார்ந்த சமூக, அரசியல் அறிவை பெற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
பொதுவில் எழுதுகிற, பேசுகிற, போராடுகிறவர்கள் குறைந்தபட்சம் குடும்பத்தாருக்கும் அதை விளக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு ஏன் என்பதற்க்கு தீவிர சமூக, அரசியல் ஈடுபடுகிறவர்களுக்கு தான் புரியும் அதன் பாதிப்புகள்.

//
நான் சொன்னது நீங்கள் மறந்தது...வெயிட் மேஸ் பார்டன்...வெள்ளையர்கள், கறுப்பின மக்களை மேம்படுத்துவதாகவும், அது அவர்களின் கடமையாகி போனதாகவும் நீலிக்கண்ணீர் வடித்தனர், அதற்கு ஒப்பானது உங்கள் ஒப்பாரி...

உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு நீங்கள் பிராச்சாரம் செய்யலாம், திணிக்கக்கூடாது...குடும்பத்தினரே ஆயினும் அவர்களும் விருப்பு வெறுப்பு உள்ள மனிதர்களே..ஆதால் என் கருத்தை என் குடும்பமும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று எண்ணுவது மூடத்தனம்.
//

மேலே சொன்னதுடன் நான் நீலிக்கண்ணீர் அல்ல வேதனையுடன் வடிக்கிற உப்புநீர் தான் எனது கண்ணீர்.

பெண்கள் சமூக, அரசியல் அறிவு பெறாதவரை சினிமா கவர்ச்சி அரசியலை ஓழிக முடியாது.

சமூகமும், அரசியலும் வாழ்வியலின் அங்கங்கள்... அதில் குறைந்தபட்ச அறிவை பெறக்கூட உங்கள் குடும்பத்தாரை ஊக்கபடுத்துவதில் என்ன திணிப்பு என்று கருதுகிறீர்கள்.
(மீண்டும் சொல்கிறேன் ஓரு குறிப்பிட்ட அமைப்பு (அ) கருத்தியலை சார்ந்து பெண்கள் அறிவு பெற வேண்டுமென்பதல்ல)

ஓரு சிறிய கேள்வி வலைப்பதிவில் தமிழ்மணத்தில் 60க்கு மேற்ப்பட்ட பெண் பதிவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் எத்தனை பெண்கள் சமூக, அரசியலை எழுதுகிறார்கள் (அ) குறைந்தபட்சம் கருத்தாவது வைக்கிறார்கள்.

சமூகத்தில் சரி பங்கு வகிக்கிற பெண்கள் பங்கு பெறாது சமூக, அரசியல் மாற்றங்கள் நிலைக்காது.

இங்கே திணிப்புமில்லை ஓரு மண்ணாங்கட்டியுமில்லை. இது அவசியம், இது வாழ்க்கையின் ஓரு அங்கம்.

TBCD சொன்னது…

அவர்கள் என்ன எழுத வேண்டும் என்று நீங்கள் ஏன் தீர்மாணிக்கிறீர்கள்..எழுதும் சூழலை உருவாக்குங்கள்...கருத்துக்களை வெளிப்படுத்தும் வழமையயை வீட்டில் ஏற்படுத்துங்கள்.அவர்கள் சொல்லாமல் போவதால் அவர்கள் அதைப் பற்றி அறியாதவர்கள் என்று நீங்கள் சொல்லாலாமா...
சும்மா இந்த சாத்தான வேதம் ஓதுற வேலை வேண்டாம்..

//*ஓரு சிறிய கேள்வி வலைப்பதிவில் தமிழ்மணத்தில் 60க்கு மேற்ப்பட்ட பெண் பதிவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் எத்தனை பெண்கள் சமூக, அரசியலை எழுதுகிறார்கள் (அ) குறைந்தபட்சம் கருத்தாவது வைக்கிறார்கள்*//

Related Posts with Thumbnails