வெள்ளி, 14 செப்டம்பர், 2007

எதை எதிர்ப்பது....?

கடந்த சிலவாரங்களில் தமிழ் வலைப்பதிவுகளில் நடந்த எண்ணற்ற சச்சரவுகளில் எனக்குள் சில கேள்விகளை எழுப்பி விட்டுச்சென்றிருக்கின்றன.

அவற்றுள் மிக முக்கியமான சாதி மறுப்பு மற்றும் அதன் புனித தன்மையை பற்றியது!

முதலில் ஏன் சாதியை மறுக்க வேண்டும்?
சாதியை மறுப்பதால் ஏதேனும் புனித தன்மை கிடைக்கிறதா?
பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் பார்பானீய கட்டமைப்பிற்க்கும் சாதியை மறுப்பதால் தன்னை புனிதன் என்று கட்டமைப்பதற்க்கும் என்ன வேறுபாடு?

இரண்டாவது தோழர் என்ற விளிப்பிற்க்கு எதிரான நிலைபாடுபற்றியது

மார்க்கஸியத்தை அறிந்த புனிதர்கள் தோழர்கள் என்றால் வேதம் படித்த புனிதர்கள் பார்ப்பனர்கள் என்பதற்க்கான வேறுபாடு என்ன?

எந்த நிலையிலும் மனித சமூகத்தின் சமநிலையில் நிற்க மறுக்கிற புனித பிம்பங்களை கட்டமைப்பது என்பது...

மனிதர்களை சமநிலையில் பார்க்க மறுக்கிற பார்ப்பானீய கட்டமைப்பாகதா?

கேள்விகளுடனே...

நன்றி
பாரி.அரசு

4 comments:

தியாகு சொன்னது…

எல்லாமே அய்யர் ஆகனும் எனும் கருத்தமைவின் அடிப்படையில் சிந்திக்கிறீர்கள் சிந்திப்பவன்

புனிதம் என்றால் என்ன ?


எந்த வகையான புனிதத்தை நோக்கி செல்கிறது உங்கள் சிந்தனை என விளக்க வேண்டும் தோழர் ?

வடுவூர் குமார் சொன்னது…

உங்கள் கேள்வி என்னை குழப்பவில்லை.
தெளிவான சிந்தனை.

பாரி.அரசு சொன்னது…

வணக்கம் தோழர் தியாகு,


எனது கேள்விகளை வைத்திருக்கிறேன்...
//
எல்லாமே அய்யர் ஆகனும் எனும் கருத்தமைவின் அடிப்படையில் சிந்திக்கிறீர்கள் சிந்திப்பவன்
//

மிகவும் தவறான புரிதல்...

மாற்றி மாற்றி கேள்வி கேட்டு குழப்புவதில் எனக்கு உடன்பாடில்லை...

என்னுடைய கேள்வி மிக எளிமையானது...

கீழே உள்ளது பாவெல் சுகுணாதிவாகரின் பதிவில் இட்ட பின்னூட்டம்..
//

மார்க்சியத்தை உலககண்ணோட்டமாக
கொண்டவர்கள்,
மக்களுக்காக சொந்த வாழ்வை
இழப்பவர்கள்,
புரட்சியை தவிர வேறு
நோக்கமும்
திட்டமும்
இல்லாதவர்கள்
அவர்கள் தான் தோழர்கள். அவர்களை தான் தோழர்களாக கருத முடியும்.

//
பார்பானீயம் மனிதர்களை கூறு கட்டிக்கொண்டிருக்கிறது... அதை மறுக்கிற (அ) எதிர்க்கிறவர்கள்... சமநிலைக்கு வராமல் வேறு வகையில் தங்களை உயர்ந்தவர்களாக அறிவித்துக்கொள்ளுதல் என்பதையே எனது கேள்வியாக்கி வைத்திருக்கிறேன்...

பாரி.அரசு சொன்னது…

வணக்கம் குமார்,
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!

Related Posts with Thumbnails