இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

மூடநம்பிக்கை எதிராக ஓரு முழக்கம் - வாழ்த்துக்கள் டாக்டர் சார்லஸ்

எப்பொழுதும் ஏதாவது வேலையினூடாக கவனிக்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜய் இன் "நீயா நானா" நிகழ்ச்சியும் ஓன்று... அவ்வாறு கடந்த ஞாயிறு பார்த்துக்கொண்டிருந்தபொழுது, இறுதியாக சில வாரங்களுக்கு முன்பு நடந்த "பில்லி சூனியம்" பற்றிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டாக்டர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என்று இறுதியில் காண்பித்தார்கள்.

பில்லி சூனியம் வைத்தால் ஓரு லட்ச ரூபாய் தருவதாக அந்த நிகழ்வில் சொல்லிருந்தார், 45 நாட்கள் கெடு முடிவடைந்தது... சவால் விட்ட சாமியார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

டாக்டர் சார்லஸ் ஆரோக்கியமாகவே இருக்கிறார்... அதோடு மட்டுமல்லாமல், தனது சவாலை வெளிப்படையாக எந்தவித தேதி, நேர எல்லையில்லாமல் வெளியிட்டிருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அந்த காசோலையை பெறலாம், முடிந்தால் அவருக்கு பில்லி சூனியம் வைத்து.

மூடநம்பிக்கைகளுக்கெதிரான தனது நிலையை மிகுந்த மனதுணிவுடன் வெளிபடுத்தி... அதை ஓரு சவாலாகவும் வைக்கும் டாக்டர் சார்லஸை நாமெல்லாம் வாழ்த்துவோம்.

நன்றி

5 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

கலைஞருக்கும் பலர் பில்லி / சூனியம் வைக்க முயன்றிருக்கிறார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

::)

G.Ragavan சொன்னது…

டாக்டர் சார்லசுக்கு பாராட்டுகள். மூடநம்பிக்கைகள் கண்டிப்பாக ஒழிய வேண்டும்.

ஜெகதீசன் சொன்னது…

டாக்டர் சார்லசுக்கு பாராட்டுகள்.

எஸ்.கே சொன்னது…

அப்படியே "குருடர்கள் பார்க்கிறார்கள்", "முடவர்கள் நடக்கிறார்கள்" போன்றவற்றிற்கும் சேர்த்து ஒரு முழக்கம் இட்டாரானால் நலமாக இருக்கும்.

மூட நம்பிக்கைகள் எந்த்தகைய குழுவினர் கொண்டிருதாலும் "கண்டிப்பாக ஒழிய வேண்டும்" என்னும் கூற்றில் நீங்கள் முழு உடன்பாடுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

எஸ்.கே

G.Ragavan சொன்னது…

// மூட நம்பிக்கைகள் எந்த்தகைய குழுவினர் கொண்டிருதாலும் "கண்டிப்பாக ஒழிய வேண்டும்" என்னும் கூற்றில் நீங்கள் முழு உடன்பாடுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.//

எஸ்.கேயின் கருத்துதான் என்னுடையதும். மூடநம்பிக்கை எங்கிருந்தால் என்ன...ஒழிய வேண்டியதுதான்.

Related Posts with Thumbnails