வியாழன், 24 ஏப்ரல், 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

பார்வை ஒன்று!

நான் கலாச்சாரக் காவலனா .....? :புதசெவிபதிவில் கலாச்சாரத்தை பற்றிய கேள்வியெழுப்பியிருக்கிறார்... கலாச்சார கண்றாவியை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். பதிவின் பின்னூட்டத்தில் கல்வெட்டு ஒரு அற்புதமான விவாதத்தை கட்டமைத்து சென்றிருக்கிறார்.

உடையை தீர்மானிக்கும் காரணிகளாக எவை,எவையிருக்கின்றன இன்றைக்கு என்பது முக்கியமான விவாதப்பொருளாக இருக்கிறது.

நிர்வாணமாக அலைந்த மனிதன் உடையை தேர்ந்தெடுக்கும் காரணிகளாக பாலுணர்வும், இயற்கையும் (சூழலும்) இருந்திருக்கலாம்!

மனித இன வளர்ச்சியில் உடையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இயற்கை(சூழல்) இருந்திருக்கிறது... எ.கா (சவுதி அரேபியாவின் வெள்ளையுடை தேர்வு, ராஜஸ்தான் தான் போன்ற பகுதிகளில் தலைபாகை, துருவப்பகுதிகளின் தோலாடை தேர்வு... போன்றவை...)

மனிதனின் உடையை தீர்மானிக்கும் காரணிகளாக சமூக, அரசியல் இருந்திருக்கலாம் எ.கா( குறிப்பிட்ட இனக்குழு ஒரே மாதிரியான உடையணியும் பழக்க, வழக்கத்தை பின்பற்றி இருக்கிறார்கள் ரோமானியர்களின் உடையமைப்பு, கிரேக்கர்களின் உடையமைப்பிலிருந்து வேறுப்பட்டிருந்தது.)

மனிதனின் உடையை தீர்மானிக்கும் காரணியாக மதங்கள் ஆளுமை செலுத்துக்கின்றன... எ.கா (இசுலாமியர்கள் உடை, பெளத்தர்களின் உடை...)

இவையெல்லாம் கடந்த காலங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன... சூழல், சமூக, அரசியல், மத காரணிகள் உடை தேர்வை பாதிக்கும் என்பது மேற்கத்திய நாடுகளில் 16ம் நூற்றாண்டு பிறகும், இரண்டாம் நிலை நாடுகளில் 19ம் நூற்றாண்டு பிறகும் மாறிக்கொண்டிருக்கின்றன.

உடை தேர்வை தற்பொழுது நுகர்வு கலாச்சாரம் தீர்மானிக்கிறது.

இங்கே உற்பத்தி - நுகர்வு பற்றிய ஒரு புதிய பார்வை தேவைப்படுகிறது (இதன் தொடர்பில் நண்பர் ஜமாலன் உடன் மேற்க்கொண்ட உரையாடலில்... ஒரு நீண்ட பட்டியல் நூற்களை கொடுத்து வாசிக்க சொல்லியிருக்கிறார்! அந்த கச்சேரியை இன்னொரு நாள் பார்க்கலாம்!)

விளைப்பொருட்கள் உற்பத்தியும், அதன் நுகர்வும் பண்டமாற்று முறையில் தொடங்கி வணிக முறையில் தொடர்கின்றன...
அதே மாதிரி பயன்பாட்டு பொருள் உற்பத்தியும், அதன் நுகர்வும் வணிக முறையில் தொடர்கின்றன...
ஆனால் பொழுதுபோக்கு (Entertainment) மற்றும் கலை (arts) என்பது வணிக முறையில் வருகின்ற போது... படைப்பாளி உற்பத்தியாளனாகவும், அதில் கிடைக்கும் பொருள் (money) உற்பத்தியாகவும் ஆகி... பார்வையாளனுக்கு (பயனாளி) அதில் கிடைக்கும் மகிழ்வு நுகர்வாகவும் மாறி நிற்கிறது...

16 ம் நூற்றாண்டு பிறகு மேற்கத்திய நாடுகளிலும் , 19 நூற்றாண்டுக்கு பிறகு இரண்டாம் நிலை நாடுகளிலும் கலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என்பது மூன்றாம்நிலை என்கிற நிலையிலிருந்து முதல்நிலை உற்பத்தி-நுகர்வுக்கு வந்திருக்கிறது.

இன்றைக்கு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் பொருளீட்டும் முதல்நிலை உற்பத்தியாளர்களாக மாறியிருக்கிறார்கள். அதன் நுகர்வாளர்கள் பொருள் செலவழித்து நுகர தொடங்கி விட்டார்கள்.

இதில் எங்கிருந்து உடை கலாச்சாரம் வந்தது என்கிறீர்களா? முதல் நிலை உணவுப்பொருட்கள் (விளைப்பொருட்கள்) உற்பத்தியும், நுகர்வும் பயனாளர்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கிறது. இரண்டாம் நிலை பயன்பாட்டுப்பொருட்களின் உற்பத்தியும், நுகர்வும் பயனாளர்களுக்கு தேவையினடிப்படையில் அமைகிறது. ஆனால் மூன்றாம் நிலையில் இருக்கிற கலை, விளையாட்டு, பொழுதுபோக்கு உற்பத்தி, நுகர்வு என்பது மிக குறைந்த அளவில் இருக்கிறது.

இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உற்பத்தி-நுகர்வு என்பதை முதல்நிலைக்கு நகர்த்த அல்லது அதிகப்படுத்த சந்தைபடுத்துதல் தேவைப்படுகிறது. இந்த புதிய நுகர்வு கலாச்சாரம் பாலுணர்வை தூண்டுவதன் மூலம் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கிறது.

ஒரு yamaha வண்டியோட்டுகிற ஆணுடன் பெண் வந்து ஒட்டிக்கொள்வது போல் விளம்பரங்கள் அமைக்கப்படுகிறது. பால்இனக்கவர்ச்சியை முக்கியப்படுத்தி சந்தைபடுத்துதல் என்பது தற்போதைய நிலை...

இப்படிப்பட்ட பால்இனக்கவர்ச்சியை தூண்டுகிற சந்தைப்படுத்துதல் இசைநிகழ்ச்சிகளில் அதிகளவு மேற்கத்திய நாடுகளில் கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக உண்டு.

விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி உற்பத்தி-நுகர்வு என்கிற வணிக நிலைக்கு மாறியதால் பால்இனக்கவர்ச்சியை தூண்டுகிற சந்தைப்படுத்துதல் தேவைப்படுகிறது. அதனாலயே சியர்லீடர்ஸ் நடனக்குழுவின் இறக்குமதி!

இந்த விளம்பர சந்தைப்படுத்துதல் என்பது பருப்பு வகையறாக்களை கூட ராதிகா வந்து நடனமாடி விற்பனை செய்ய வேண்டிய சூழலுக்கு நகர்ந்திருக்கிறோம்.

இந்த புதிய நுகர்வு கலாச்சாரம் என்பது உடை தெரிவை தீர்மானிக்கும் காரணிகளாக மாறியிருக்கிறது. sexy dresses என்பது இன்றைக்கு சந்தையில் அதிகளவு விற்பனையாகும் உடைகள். பாலுணர்வை மறைக்க உடைகள் என்கிற நிலை மாறி... பாலுணர்வை வெளிப்படுத்த உடைகள் என்கிற புதிய நுகர்வுக்கலாச்சாரம் நம்மிடையே வந்திருக்கிறது.

இது நூற்றாண்டுகால மாற்றம்... இதை தீர்மானிக்கும் காரணிகளாக வணிக உலகமேயிருக்கிறது! உடையை தீர்மானிக்கும் சூழல், சமூக, அரசியல். மதக்காரணிகள் உடைப்பட்டு நிற்கின்றன!

பார்வை இரண்டு!
பெண்ணியத்தின் அடிப்படையில் இந்த பார்வை வைக்கப்பட வேண்டியதிருக்கிறது! தொடர்வேன் என்கிற நம்பிக்கையில்...

6 comments:

சிறில் அலெக்ஸ் சொன்னது…

தொடரவும்

Thekkikattan|தெகா சொன்னது…

நல்ல அலசல், பாரி!

Unknown சொன்னது…

நண்பரெ பாரி!

அம்மணமா நின்னா shame shamenu (shame shamekku என்ன அர்த்தம்?)அம்மா சின்ன வயசுல சொன்னாங்க!

பித்தனொட வாறேன்!

நன்றி.

TBCD சொன்னது…

பாரி,

பின்னனி முன்னனியெல்லாம் அநியாயத்திற்கு பிந வாடை.

படிச்சு அர்த்தம் தெரிந்துக்கொள்வதற்குள் டங்குவார் அந்துப் போச்சு..

தொடருங்க..

ஜமாலன் சொன்னது…

காத்திரமான பதிவு தொடருங்கள்...

உடை என்பது நுகர்வின் அடிப்படையாக மாற்றப்பட்டிருப்பதை நுட்பமாக விளக்கியுள்ளீர்கள். உடை குறித்து கட்டமைக்கப்பட்டிருக்கும் பார்வைகளும் முக்கியமானவை.

//நிர்வாணமாக அலைந்த மனிதன் உடையை தேர்ந்தெடுக்கும் காரணிகளாக பாலுணர்வும், இயற்கையும் (சூழலும்) இருந்திருக்கலாம்!//

இயற்கைதான முதற்காரணி. உடை என்பதை பாலுணர்வடிப்படையில் தேர்நத்தெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஏனெ்னறால் இன்று நாம் பெசும் பாலுணர்வு என்பது உடை தோன்றிய காலங்களில் இருக்க வாய்ப்பில்லை. மதநூல்கள்கூட உடைகளில் உங்களது வெட்கத் தலங்களை மறையுங்கள் என்கிறது. இதன்பொருள் இதை மறைப்பது பற்றிய அறிதலோ உணர்வோ அடிப்படையில் இல்லை என்பதுதான்.

உடைவளர்ச்சியின் பல்வேற காரணிகளை விளக்கியுள்ளீர்கள். அருமை.

ஜமாலன் சொன்னது…

விவாதம் இங்கு தொடர்கிறது.

http://tamilbodypolitics.blogspot.com/2008/04/blog-post.html#links

நன்றி.

Related Posts with Thumbnails