செவ்வாய், 29 ஏப்ரல், 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2

குறிப்பு : கலாச்சாரம் (பண்பாடு) என்பதைப்பற்றிய விளக்கம் கொடுப்பதோ! பெண்ணியத்திற்கு போராடுவதாக ஜல்லியடிப்பதோ இப்பதிவின் நோக்கமல்ல! எனக்குள் எழுந்த, எழுகிற முரண்களின் குழப்பங்கள் மட்டுமே... இனி!


கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.

அப்படியாக நம்முடைய கலாச்சாரம் என்று கட்டியழுகிற எல்லாவற்றையும் வளர்ச்சியின் போக்கில் விட்டுவிட்டு நாம் மாறிக்கொண்டேதான்யிருக்கிறோம். இந்த மாற்றங்களின் காரணிகளாக (சூழல், அரசியல் அதிகாரங்கள், தேவைகள், இன்ன பிற) இருக்கின்றன!

ஆனால் இன்றைக்கு கலாச்சாரம் என்று கத்திதீட்டப்படுகின்ற நிகழ்வு ஒன்றேயொன்றாக தான் இருக்கிறது!. அது பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு.

கையால் சாப்பிடுவது கரண்டியால், குச்சியால் சாப்பிடுவதாக மாறினால் ஏற்றுக்கொள்கிறோம். தைக்காத ஆடைகள், தைத்த ஆடைகளாக (அரைக்கால், முழுக்கால் உடை) மாறுவதையோ, கைலியாக மாறுவதையோ மறுக்கவில்லை. தென்னைவோலை!, பனவோலை குடிசைகள் நவீன கன்கிரீட் கட்டிடங்களாக மாறுவதை மறுக்கவில்லை!

ஆக வாழ்வியலின் எந்ததெந்த கூறுகள் மாறினாலும் நாம் கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடவில்லை!

நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்... அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் :(

இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது. உடையின் தெரிவுகளை பற்றிய உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) பதிவை வாசிக்கவும்.

டிபிசிடி-ன் பதிவில் கல்வெட்டு சொன்னது "
1.ஆடை எப்படி உடுத்த வேண்டும் என்பது தனி ஒருவரின் உரிமை.

2. உடுத்தப்பட்ட ஆடை மறைக்காத பாகங்களை அவர்களே விரும்பி பார்வைக்கு வைக்கிறார்கள் என்பதுதான் எனது புரிதல். உதாரணம். ஜாக்கெட்டின் முது பாகம்/ஜன்னல் மினி ஸ்கர்ட் காட்டும் கால், தாவணி மறைக்காத இடுப்பு.... etc.. .

3.ஆடைகளால் மறைக்கப்பட்ட பாகங்களை ஆடையை விலக்கி பார்க்க முனைவதும், நேர் பார்வையில் படாத பாகங்களை கோணல் பார்வையில் பார்க்க முற்படுவதும் கேவலம் என்பதறிக.

"

உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.

தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்யும்போது மேலாடை அணிவதில்லை! அதே சமயம் வீட்டிற்கு வெளியாட்கள் வருகின்ற போது குறைந்தபட்சம் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொள்கிறோம்! நமது சொந்தங்களுடன் வீட்டிற்குள் இருக்கும் போது உடைகள் எப்படியிருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை!

இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்... பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்... ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!


ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.

இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.

பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?

எ.காட்டிற்கு: இடுப்பில் இருந்து எத்தனை அடி உடை பாலுணர்வை தூண்டும் (தூண்டாது) :(

இதில் இன்னொரு இடியாப்ப சிக்கல் இருக்கிறது பாலுணர்வின் இருக்கூறுகளாக இருக்கின்றன... அழகுணர்ச்சியும், ஆபாசமும்....

எதை அழகுணர்ச்சி என்பது? எதை ஆபாசம் என்பது?

பி.கு: நீங்க ஜனரஞ்சகமாக எழுத(குழப்ப)மாட்டீர்கள் என்று சொன்ன டிபிசிடிக்கு இப்பதிவு அர்ப்பணிப்பு!

9 comments:

TBCD சொன்னது…

மேலேயா, கீழேயா என்றும் சேர்த்திருக்கலாமா..

அப்படி சொன்னா ஆபாசம் ஆகுமா..

///இடுப்பில் இருந்து எத்தனை அடி உடை பாலுணர்வை தூண்டும் (தூண்டாது) :(///

கோவி.கண்ணன் சொன்னது…

ஏன் இந்த சகோதர யுத்தம். எனது தம்பி டிபிசிடையை வைத்து ஆடுவதை கண்டிக்கிறேன்.
:)

அரசு,
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், அது தெரிந்தால் உங்கள் கேள்விகளுக்கு விடை சொல்லிவிடலாம்.

கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

நமீதா, ஷிரேயாவிடம் கேட்டுச் சொல்லுங்க.

கல்வெட்டு சொன்னது…

பாரி அரசு,

//இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.
//


கலாச்சாரம் (Cultue) என்பது குறித்து நான் ஆராய்ந்த வரை எனது முடிவு. ஒற்றை வரியில் சொல்வதானால்

"Culture is a history" என்பதுதான்.

Culture பற்றிப் பேசலாம், விவாதம் செய்யாலாம், அதை வைத்து விளையாடலாம். ஆனால் கடந்த கால வாழ்க்கை முறையை இப்போது பின் பற்ற முடியாது என்பதே உண்மை.

இந்தியாவில் , கல்ச்சர்ன்னா என்னடா வெண்ணை என்று சில கொம்பன்களைக் கேட்டால் சேலை கட்டுவது, முத்தம் கொடுக்காதது,சாமி கும்பிடுவது என்று மொன்னைத்தனமாகத்தான் பதில் வரும்.


இன்றைய கலாச்சாரம் என்ற ஒன்று இன்று இபோது நம்மிடம் இல்லை.

சூழ்நிலை இன்றைய நாளைத் தீர்மானிக்கிறது.

இன்றைய நிகழ்வுகள் நாளைய பொழுதில் முந்தைய கலாச்சாரமாக அறியப்படும் அவ்வளவே.

கலாச்சாரம் புனிதம் அல்ல.

கலாச்சாரம் என்ற மாயை பெரும்பாலும் மதங்கள்/கடவுள்கள் வழியாக பெண்கள்மீது ஏற்றிவைக்கப்படுகிறது. ஏன் என்றால் அதிக சத்வீத ஆண்களுக்கு அதிகபட்ச நுகர்வுப் பொருள் பெண்ணே. அதானால் அவன் அவளை எதைக் கொண்டாவது கட்டுப்படுத்த முயல்கிறான்.மதம்/கடவுள்/கலாச்சாரம் அதற்கு எளிய வழி.

***

ஒரு சமூகத்தைப்பர்றிய கலாச்சாரம் என்ற குறியீடு பெரும்பாலும் Stereotypeத் தனமானது, மேலும் அது
Simplification
Exaggeration or distortion
Generalization -ஐ உள்ளடக்கியது.

விரிவாக எழுதுகிறேன் பின்னொரு நாளில்.

ஆனால் நான் சொல்ல வருவதன் கரு உங்கள் பதிவிலேயே உள்ளது.

***

கவர்ச்சி, ஆபாசம் போன்றவைக்கான அளவுகோல் நிரந்தரமானது இல்லை. எனவே கவர்ச்சி, ஆபாசத்தை வரையறுக்கவே முடியாது. அது ஒரு டைனமிக் சமாச்சாரம்.

ஆனால் எது கவர்ச்சி எது ஆபாசம் என்று செயல் நடக்கும் இடத்தை வைத்து சொல்லமுடியும்.

எதையும் பொதுப்படுத்த முடியாது.

ஏதேனும் ஒரு நிகழ்வைச் சொல்லி, அது நடந்த சூழ்நிலையில், சமூக அரசியலில் அது கவர்ச்சியா? ஆபாசமா என்று மட்டுமே சொல்ல முடியும்.

**

ஸ்டார் ஓட்டலில் நீச்சல் உடையில் ( 2 பீஸ்/ 1 பீஸ்) நீச்சல் குளத்தில் இருப்பது இயல்பு. ஆனால் அதே இன்னும் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது கிராமத்தானுக்கு. ஏன் என்றால் அவனுக்கு பெண்கள் மார்போடு கட்டிய பாவடை மட்டுமே அவன் கண்ட நீச்சல் உடை.

இதே கவர்ச்சி மற்ற ஒரு சூழலில் நகரவாசிக்கே ஆபாசமாக இருக்கும்.
(உதாரணம்: ஆபீஸ்)

நந்தா சொன்னது…

பாரி உங்களது சந்தைப்படுத்துதலின் பின்னுள்ள பாலுணர்வு தூண்டுதலை ஏற்றுக் கொள்கிறேன்...

ஆண்கள் உபயோகிக்கும் பொருளை சந்தைப்படுத்த, இந்தப் பொருளை உபயோகப்படுத்தினால் எளிதில் பெண் மயங்கி விடுவாள் எனும் நோக்கை நுகர்வோர்களின் மனதில் ஏற்படுத்தும் வண்ணம் விளம்பரப்படுத்துகிறது. அது ஃப்ரென்ச்சி ஜட்டி விளம்பரமானாலும் சரி, ஆக்ஸ் பர்ஃப்யூமாய் இருந்தாலும் சரி...

டேட்டிங், லிவிங் டு கெதர் போன்றவை கலாச்சார சீர்கேடு என்று கற்பிக்கப் பட்ட, பெண்ணின் அருகாமையை ஒரு ஆணுக்கு கல்யாணத்திற்கு அப்புறம் மட்டுமே உணர முடியும் என்ற சூழலை ஏற்படுத்தி இருக்கும் இந்த சமூகக் கட்டமைப்பில், ஒரு ஆணுக்கு பாலுணர்வு எழும்ப ஆரம்பித்த வேளையில் இயல்பாய் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தி இருக்கும் இடைவெளியும், விளமபரங்கள், சினிமாக்கள், மீடியாக்கள் என அனைத்து தரப்பினரும் பெண்களைப் பற்றி ஏற்படுத்தி இருக்கும் கவர்ச்சியும், ஒரு பெரிய மயக்கத்தைத் தந்து விட்டுப் போகின்றது.

ஒரு பெண்ணுக்கு ஆணின் உடல் என்பது சிறு வயது முதலே பழகி விடுகிறது. திறந்த மார்புடனும், முட்டிவரை உயர்த்திக் கட்டிய பல்வேறு ஆண்களை ஒரு பெண் தன் பல்வேறு வயதில் பார்த்துக் கொண்டுதான் வருகிறாள். ஆனால் ஆண்களுக்கு இது அப்படியே சாத்தியமற்றதாய் இருக்கிறது. 14 வயதைத் தாண்டிய ஆண் சிறுவன், தன் குடும்பம் அல்லாத இன்னொரு 14 வயது சிறுமியிடம் பேசுவதைகூட சக வயது மாணவர்கள் இடையே ஏக்கத்தையே கிளப்புகிறது.எனவேதான் பாலியல் வறட்சி அபரிதமாய் இருக்கும் இந்த சமூகத்தில் பெண்களை வைத்து ஆண்களைக் கவருவது என்பது வெகு எளிதில் சாத்தியமாகிறது.

விளம்பரங்கள், சினிமாக்கள் என்ற அளவில் நின்றுக்கொண்டிருந்த இந்த விளம்பர யுத்தி இப்போது விளையாட்டுக்கும் வந்திருக்கிறது.

//பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?//

இயல்பாகவே எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு இருக்கின்ற நிலையில், பாலியல் வறட்சி உள்ள ஒரு சமூகத்தில் இருக்கும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் அவள் அணிந்திருக்கு உடை சேலையோ, சுடிதாரோ நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்துவாள். இதில் கிளர்ச்சி என்ற வார்த்தை ஒரு தட்டையான பிரயோகமே. இதற்கு பல்வேறு அர்த்தங்கள் ஆணைப்பொறுத்தும், இடத்தைப் பொறுத்தும் மாறும். உதாரணத்திற்கு முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே இருந்த தன்னுடைய வகுப்பில் அல்லது குழுவில் புதிதாய் 10 பெண்கள் வருவார்கள் எனும் செய்தியே அந்த ஆணுக்குக் கிளர்ச்சியைத் தரும். இந்த இடத்தில் கிளர்ச்சி என்பது மனதில் ஏற்படுத்தும் சந்தோஷ உணர்வு என்று சொல்லலாம்.

ஆக இத்தகைய சூழலில், இயல்பாய் பெண்ணின் மீதான கவர்ச்சியானது அவள் அணிந்திருக்கும் ஆடை, அவளது அழகியல் சார்ந்த பாவனைகள்,. முதலான மேலதிக காரணிகளுடன் சேரும் போது அவள் மீதான கவர்ச்சி அதிகரிக்கிறது. இங்கு ஆணைப் பொறுத்து, இடத்தைப் பொறுத்து, என்ற வார்த்தை கூறும் அர்த்தங்கள் பலப்பல. கல்வெட்டும் இதையேதான் சொல்லி இருக்கிறார்.

இங்கு நாம் யோசிக்க (அல்லது விவாதிக்க) வேண்டிய இன்னொன்று, முதன் முதலில் தமிழ் சினிமாவில் நாயகனும், நாயகியும் தொட்டுப் பேசி காதல் செய்த போது வரிந்து கட்டி கலாச்சார காவலராய் தமிழ் சமூகம் மாறியதே, அதுவும் இப்போது IPL ன் சீயர் லீடர்ஸ் பற்றிய எதிர்ப்பும் ஒன்றா என்பதே.

ஒரு வேளை இப்போது காம அசைவுகள் உடைய வெகு எளிதில் குடும்பத்துடன் அமர்ந்து சினிமாவில் காண பழக்கப் பட்டு விட்டது போல நாளை விளையாட்டுக்களிலும் காண நாம் பழக்கப் பட்டு விடுவோமோ???

சரி இதில் என்னுடைய நிலை என்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். "மக்களைக் கவர" என்ற சொல்லாடலின் பின்னே ஆரம்பிக்கப் பட்டிருக்கும் இந்த வகை கேளிக்கையானது, என்னைப் பொறுத்த வரை தவறான சந்தைப்படுத்தும் உத்தி என்பதே. அதனாலேயே இதை எதிர்க்க வேண்டி இருக்கிறது.

IPL போட்டிகளின் நடுவே ஒரு Havells ஃபேனுக்கான ஒரு விளம்பரம் போடுவார்கள். ஏறக்குறைய ரெக்கார்டு டான்ஸ் போன்ற ஒன்றை ஒரு பெண் சிறு மேடையின் மீது ஆடிக் கொண்டிருக்க, சுற்றி நின்று ஆண், பெண் கொண்ட கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். திடீரென்று களைப்பினால் அந்தப் பெண் மயங்கி விழ, கூட்டம் அமைதியாகும். அப்போது ஒருவர் Havells ஃபேனைப் போட அப்போது ஏற்படும் குளிர்ச்சியில், அந்தப் பெண் மயக்கத்திலிருந்து எழுந்து மீண்டும் ஆடத் தொடங்குவார். கூட்டம் மீண்டும் ஆர்ப்பரிக்கத் தொடங்கும்.

விளம்பரங்களில் சந்தைப்படுத்துதலை மட்டுமே முன்னிறுத்துவதன் இன்னொரு வடிவமாய்த்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது. இதேபோல விளையாட்டுக்களிலும் சந்தைப்படுத்துதலை மட்டுமே முக்கியமானதாய் நாம் கருத ஆரம்பித்தால், நாளை விளையாட்டை நாம் மறந்து விட வேண்டியதுதான்.br/>
http://blog.nandhaonline.com

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ramesh சொன்னது…

அரசு!

அம்மணமா திறிஞ்ச ஊர்ல!
கோமணம் கட்டுனா அது ஆபாசம்தானே!

இல்லை கலாச்சாரமா?

ஊறு ரெண்டு பட்டாதான்
சந்தைல கூட்டம்கூடும்!

ஒரே சந்தைலதான் கத்தி செய்றவனும் இருக்கான்!
அதுக்கு காப்பு செய்றவனும் இருக்கான்!

எல்லாருக்குமெ எல்லாம் ஆசைதான்!
சூழ்நிலை சந்தர்ப்பம் அமைந்தால்!

எலும்பின் ஆடை தோல்
தோலின் ஆடை ஆசை!

மனம் உண்ணாவிரதம் இருக்கலாம்
உடல் உண்ணாவிரதம் இருக்காது!

புத்தன் ஆண்டு அனுபவித்த பின்தான் ஞானியானான்!

உலகில் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து இருந்தால் இந்த பதிவு வந்து இருக்காது!

நன்றி!
மனிதன்.

ramesh சொன்னது…

பாரி!

கவிக்கோவின் பித்தன் கவிதை தொகுப்புக்கு ஏதெனும் லிங்க் இருக்கா?

நன்றி
மனிதன்!

ஜமாலன் சொன்னது…

விவாதம் இங்கு தொடர்கிறது.

http://tamilbodypolitics.blogspot.com/2008/04/blog-post.html#links

நன்றி.

Related Posts with Thumbnails