வியாழன், 8 மே, 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

ஆடை தேர்வுகளை பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும்... சூழலின் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டியதிருக்கிறது. ஜீன்ஸ் என்கிற ஆடையின் கண்டுபிடிப்பு என்பது குளிர் பிரதேசங்களில் தோலாடைக்கு மாற்றாக, தோலாடைகளின் பற்றாக்குறையாலும், தோலாடைகளின் வேறுசில சிக்கல்களாலும் கண்டடைந்த மாற்று தீர்வாக தான் பார்க்க இயலுகிறது.

இந்த ஜீன்ஸ் ஆடையை வெப்பமண்டல நாடுகளிலும் பயன்படுத்துவது என்பது அறியாமை என்று சொல்லிவிடலாம்... ஆனால் எதையும் செய்து பார்க்க துடிக்கிற இளையர்கள் (youths) ஜீன்ஸ் பயன்படுத்துவதில் குறையொன்றும் இல்லை... சிறிது காலத்தில் பருத்தியிலான உடைகளுக்கு மாறிய நிறைய நண்பர்களை பார்க்க முடிகிறது. உள்ளே வெந்து புழுங்கினால் பவுடர் அடித்து மேலே ஜீன்ஸ் மாட்டுகிற கனவான்களை பற்றிய கவலை நமக்கெதற்கு :)

காற்றுக்கு காசு கேட்கும் சென்னையின் அறைகளில் தங்கியிருந்த போது.. உள்ளாடைகளுடன் உறங்கிய இரவுகள்... இன்னும் சில நண்பர்கள் கட்டிய ஈரிழை துண்டு அக்கடா என்று கிடக்க காற்றோட்டமாக உறங்குவார்கள்!

பல நேரங்களில் நண்பர்களின் வாயிலாக அறிந்திருக்கிறேன் விடுதிகளில் நிர்வாணமாக அலைவதை விரும்பியிருக்கிறார்கள் பலர்! (ஆண்கள், பெண்கள் என்கிற பாகுபாடு இதில் இல்லை!)

பல ஐரோப்பிய நாடுகளில் கோடை காலங்களில் டூ பீஸ் அல்லது சிங்கிள் பீஸ் உடைகளுடன் மக்கள் கடற்கரைகளில் கூடுவதை காணலாமே!

ஆடை மட்டுமல்ல பல்வேறு பயன்பாடுகள் சூழலின் அடிப்படையில் தான் அமையும். வறட்டு பண்பாட்டு கூச்சல்களை மக்கள் தானாகவே உடைந்தெரிந்து பயணப்படுவார்கள்!

இங்கே ஒரு குடும்பத்துடன் பகிர்வு அடிப்படையில் தங்கியிருந்த போது அந்த வீட்டிலுள்ள பெண் எப்போதும் காலணி(sleeper) அணிந்து தான் நடமாடுவார்! ஏன் மேற்கத்திய நாடுகளில் வீட்டில் காலணி அணிகிறார்கள் என்பதை பற்றிய புரிதலில்லாமல் இப்படி வாழ்வது மேம்ப்பட்ட வாழ்க்கை என்று நினைத்துக்கொள்வதால் ஏற்ப்படுகிற சிக்கல் இது!

கடுமையான குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் வெற்று காலுடன் வீட்டுக்குள் நடமாட இயலாது. அதனாலயே காலணி தேவைப்படுகிறது. இரண்டாவது பல ஐரோப்பியர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்க்கொண்டு கண்ட இடத்திலும் தங்குவார்கள். அதனால் கால்கள் வழியாக பரவும் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் காலணி பயன்படுத்துகிறார்கள்!

ரஷ்யாவில் குளிர்காலங்களில் கையுறை, காலறை அணிந்து தான் நாள் முழுவதும் வாழ்கிறார்கள். உறைகளை கழற்றினால் குருதி உறைகிற குளிர்!

வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிற நாம் நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டுக்குள் காலணி அணிய வேண்டிய அவசியமென்ன? புரிதலில் ஏற்ப்படுகிற சிக்கல்! அறியாமை! இப்படி வாழ்வதை மேம்ப்பட்ட வாழ்க்கை! தான் உயரத்தில் இருப்பதாக எண்ணவோட்டம் போன்றவையே காரணங்கள்!

3 comments:

TBCD சொன்னது…

அப்படியே, காலில் ஷூ, கழுத்தி டை, முழுக்கைச் சட்டைப் போடுவது என்று நீளுமா...?

கோவி.கண்ணன் சொன்னது…

என் அருமைத் தம்பியை இந்த ஓட்டு ஓட்டப்படாது ?

அவருக்கே XXL சைசே சின்னதாக இருக்காம், அவரு உடையைப் பற்றி கவலைப்படாமல் வேறு யார் படுவாங்க.

அரசு,

ஒழுங்கா பொது மன்னிப்பு கேளுங்க, இல்லாட்டி அம்மோக்கியோவில் போராட்டம் நடத்த வேண்டி இருக்கு, போராட்டத்திற்காக செங்காங்கிலிருந்து லாரியில் ஆட்களை அழைத்துவருதாக சின்னத்தம்பியும் மீசையை முறுக்குகிறார்.

"என்னதான் சீரியஸாக பதிவு போட்டாலும் இவனுங்க காமடி பண்ணிபுடுறானுங்க" - ரொம்ப கடுப்பாக இருக்கா ?
:)

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Related Posts with Thumbnails