வியாழன், 8 மே, 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -4

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

ஆடை அணிவதில் மிகப்பெரிய சிக்கல் எது பண்பாடானது (cultured)? எது நாகரிகமானது(civilized)? என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது?

மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றிய தேடல் உள்ளவனாக இருக்கிறான்... எல்லாவற்றிலும் பரிணாமம் அடைகிறான்... தொடர்ந்து வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்கிறான்.

தைக்காத ஆடைகளை நூற்பாலைகளில் தயாரித்த மனிதன். அவற்றுக்கு வண்ணம் கொடுக்க கற்றுக்கொண்டான். வண்ண,வண்ண ஆடைகள் போதவில்லை... அவற்றை தன் உடலின் அமைப்புக்கு தைத்து அணிவதை கண்டறிந்தான்.

தைக்காத கோவணம் தைத்த பிறகு ஜட்டி. தைக்காத வேட்டி... தைத்த பிறகு அரைக்கால்,முக்கால்,முழுகால் டவுசர்களாக! மேல் துண்டு தானய்யா மேல்சட்டையானது. தைக்காத சேலை... தைத்த பிறகு சுடி, மிடி யாக வருகின்றன.

உலகத்தின் எல்லாப்பாகங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தைக்காத உடையை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு தான் தைத்த உடைகளை பயன்படுத்த ஆரம்பித்திருப்பான்.

விலங்குகளிலிருந்து உரிக்கப்பட்ட தோல்கள் கூட ஆரம்பத்தில் தைக்கப்படாமலேயே தான் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கு தைத்த தோலாடைகள் பயன்படுகின்றன.

இந்த வளர்ச்சியை புரிந்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று எனக்கு விளங்கவேயில்லை?

வேட்டியும், சேலையும் தான் எமது பண்பாட்டு உடைகள் என்றால்... மனிதனின் தேடலில் விளைந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத முட்டாள்தனம் தானே தவிர வேறென்ன சொல்ல முடியும்!

பண்பாட்டு உடைகள் பற்றி பேசுகிற போது எல்லாம் எனக்கு தோன்றுவதெல்லாம் ஒன்றேயொன்று வரலாற்றின் எந்த பக்கத்திலாவது மக்கள் (உழைக்கும்வர்க்கம்) என்ன மாதிரியான உடைகள் உடுத்தியிருந்தார்கள் என்று பேசியிருக்கிறதா? அதிகாரவர்க்த்தின் அடையாளங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது!.

இந்த அதிகாரவர்க்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடை உடுத்தியிருந்தார்களா? பார்ப்பனர்கள் வேட்டி, சேலை கட்டுவது ஒரு மாதிரியும்... செட்டியார்கள் வெறொரு மாதிரியும், முதலியார்கள், நாயக்கர்கள்... இன்னும் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு மாதிரியும் வேட்டி, சேலை கட்டியிருந்தார்கள் இல்லையா?

அதிகாரவர்க்கங்கள் அணிகிற உடையமைப்பே பண்பாடானது அல்லது நாகரிகமானது என்று அடித்தட்டு மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறோம். பெரும்பான்மை மக்கள் என்ன விதமான ஆடை உடுத்தினார்கள் என்று நாம் பண்பாடு பேசுவதில்லை! ஏனென்றால் நாம் பேசுகிற பண்பாடு என்பதே மேட்டுக்குடி தனமானதல்லவா?

ஆடைகளின் தேடலில் மனிதன் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டேயிருக்கிறான்... தைத்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் என்பதாகயிருந்தது... மாறியது காலம் ஆயத்தஆடைகள் (ReadyMades) வந்தன.

பயணம் நிற்கவேயில்லை... தொடர்கிறது ஆடை வடிவமைப்பு என்று புதிய பாதையில் பயணிக்கிறான். தனித்த ஆடைவடிவமைப்பு (unique designed dress) வருகிறது.

நிற்க, இந்த தேடல்கள்... எதனோடும் தொடர்ப்பற்று நிற்கவில்லை... ஒரு காலத்தில் இந்த தேடல்கள் மேட்டிமை தேடல்களாக இருந்திருக்கலாம். இன்றைய தேடல்கள் வணிக தேடல்களாக இருக்கிறது.

வணிக தேடலாக வருகிற போது உற்பத்தி-நுகர்வு என்கிற நிலை வந்து விடுகிறது. உடனே சந்தைப்படுத்துதல் முன்னணியில் வந்து நிற்கிறது. வணிக உலகம் தைத்த ஆடைகளையும், ஆயத்த ஆடைகளையும், வடிவமைக்கப்பட்ட ஆடைகளையும் தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

முதலாளித்துவமும், வணிகமும் கைக்கோர்க்கின்றன... சந்தைப்படுத்துதலில் எளிய வழி பாலுணர்ச்சியை மையப்படுத்தி சந்தைப்படுத்துதல்... பாலின்ப உடைகள் (sexy fit dresses)... வளைய வருகின்றன.

ஆடையை பற்றிய தேடலும், அதனுடைய வளர்ச்சியும் மனிதனை பாதிக்கவில்லை... ஆடைகளில் எந்த சிக்கலுமில்லை.... முதலாளித்துவமும், வணிகமும் தவறான திசைகளில் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன!

6 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்தைப்படுத்துதலில் எளிய வழி பாலுணர்ச்சியை மையப்படுத்தி சந்தைப்படுத்துதல்... //

பாரி.அரசு ஐயர்,

சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், வளர்மதி, பைத்தியக்காரன், அய்யனார் மற்றும் ஜமாலன் ஆகியோருடன் இணைந்ததற்கு வாழ்த்துகள் !
:)

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பின்னூட்ட கயமை!

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
பின்னூட்ட கயமை!
//

நாங்களும் போடுவோம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
பின்னூட்ட கயமை!
//

நாங்களும் போடுவோம் !

ஜமாலன் சொன்னது…

//சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், வளர்மதி, பைத்தியக்காரன், அய்யனார் மற்றும் ஜமாலன் ஆகியோருடன் இணைந்ததற்கு வாழ்த்துகள் !
:) //

கோவி அய்யருக்க ஏன் இந்த கொலைவெறி? :)

அப்புறம் தனியா எதாவது கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா? நம்மை எலலாம் ஒரு கட்சியாக மாற்றுகிறாரே? எதாவது சதியா...??? :)

பாரி.. இதற்கெல்லாம் அஞ்சாதீர்கள். வந்து இறங்கிடுவோம்ல களத்துல... :)

நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்..

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இந்தக் காத்திரமான தொடர் கட்டுரையை (தொடர்ந்து) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர் டிபிசிடி இதற்கு மறுப்பெழுதுவாரா :)

ஜமாலன்,

/அப்புறம் தனியா எதாவது கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா? நம்மை எலலாம் ஒரு கட்சியாக மாற்றுகிறாரே? எதாவது சதியா...??? :)/

அப்படி ஆரம்பிச்சா நீங்க தான் தலைவர் (எனக்குப் பொருளாளர் பதவி போதும்.!). :))

Related Posts with Thumbnails