திங்கள், 26 மே, 2008

விளையாட்டு விளையாட்டாய் இருக்கிறதா? (நந்தாவுக்கு மட்டுமல்ல...!)

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
///
விளம்பரங்களில் சந்தைப்படுத்துதலை மட்டுமே முன்னிறுத்துவதன் இன்னொரு வடிவமாய்த்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது. இதேபோல விளையாட்டுக்களிலும் சந்தைப்படுத்துதலை மட்டுமே முக்கியமானதாய் நாம் கருத ஆரம்பித்தால், நாளை விளையாட்டை நாம் மறந்து விட வேண்டியதுதான்.
///

ஒரு சிறிய அளவிலான பொருளாதார பார்வை... விளையாட்டுப்போட்டிகள் எவ்வாறு மிகப்பெரிய உற்பத்தி சந்தையாக மாறியிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

பீஜிங் 2008 ஒலிம்பிக் போட்டிகளுக்காக செலவிடப்படுகின்ற தொகை 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள்...

280 billion yuan சீனாவில் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு முதலீடு செய்யப்பட்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

கால்பந்தாட்டங்களை ஒட்டி உலகளவில் நடைப்பெறுகிற சூதாட்டங்கள், அவற்றில் புழங்கிற பண மதிப்பு தலையை சுற்ற வைக்கிறது.

சமீபத்தில் அடுத்த இளையர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சிங்கப்பூருக்கு அனுமதி கிடைத்தது... அதன் தொடர்பில் சிங்கையில் நடைபெற்ற விழா... சிங்கப்பூர் இளையர் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடுகிற செலவினங்கள் இதையெல்லாம் கவனித்து பார்த்தால்... எல்லாம் வணிக மயமாகிவிட்டதை உணரமுடியும்.

எதையும் பொருளாதார முதலீடாக கருதுகிற நாடுகள்... விளையாட்டு போட்டிகளுக்கு செலவிடுகிற தொகையை மீண்டும் வருவாயாக மாற்றுவதற்கு தயாராகி விடுகின்றன.

கால்பந்தாட்ட பிரீமியர் லீக் ஆட்டங்கள், டென்னிஸ், கூடைபந்தாட்டங்கள் போன்றவை குழு முறையில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற ஆரம்பித்தபொழுது, நான் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைந்தேன். காரணம் விளையாட்டுப்பேட்டிகளில் நிரம்பி வழிந்த தேசிய வெறி என்பது மிக மோசமானதாக இருந்தது. விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி தேசிய வெறியின் அடையாளமாக இருந்தது. ரஷ்யா வெல்கிற ஒலிம்பிக் பதக்கங்களை விட அதிகமாக வாங்க வேண்டும் என்று அமெரிக்காவை ஆப்பிரிக்க காடுகளில் வலுவுள்ள மனிதர்களை தேடியலைய வைத்தது!

கிரிகெட் போட்டிகளில் இந்தியாவை வென்றாக வேண்டும் இல்லையென்றால் நாட்டுக்குள் நுழைய முடியாது என்கிற நிலைக்கு பாகிஸ்தான் வீரர்களும்! பாகிஸ்தானை வெல்லாவிட்டால் இந்திய வீரர்களும் மிரட்டப்படுகிற நிலைக்கு விளையாட்டும், தேசிய வெறியும் பின்னிபிணைந்திருக்கின்றன!

குழு ஆட்டங்கள் வந்தபிறகு எந்தநாட்டு விளையாட்டு வீரரும் எங்கே வேண்டுமானாலும் விளையாடினார்கள் அதனால் தேசிய எல்லைகள் உடையும் என்று மகிழ்ந்தேன்! ஆனால் நடந்துக்கொண்டிருப்பதோ மிக மோசமான விளைவுகள்...

இன்றைக்கு விளையாட்டு என்பது உலகளவில் முதலாளிகள் முதலீடு செய்யும் தளமாகி விட்டது. விளையாட்டு வீரர்கள் உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். ரசிகர்கள் நுகர்வாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள்.

வீரர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள், விற்கப்படுகிறார்கள்... அவர்களின் மீது முதலீடு செய்த முதலாளிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள்... அவர்களுக்கு உற்பத்தியான (வருவாயை) ஈட்டுவதற்க்காக எதையும் செய்ய தயராகிவிட்டார்கள்.

முதலாளித்துவம் எப்பொழுதுமே அதனுடைய இலக்காக வருவாயை மட்டுமே கொண்டது! வருவாயை அதிகரிக்க அது என்ன வேண்டுமானாலும் செய்யும்! கால் பந்தாட்ட சூதாட்டங்களும், ஆட்டங்களை ஒட்டி நடக்கிற விபச்சாரம் மற்றும் மது விற்பனை பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிப்படித்துக்கொள்ளுங்கள்!

கிரிக்கெட் பிரீமியர் லீக் ஆட்டங்கள் மட்டுமல்ல! முதலாளித்துவத்தின் இலக்கு வருவாய்! அது தனது லாபம் என்கிற நோக்கில் பயணக்கிற பொழுது குடி, விபச்சாரம், சூதாட்டம் இவற்றை பயன்படுத்த தவறுவதில்லை!

கலாமின் கோமாளி கனவுகள் போல இந்தியா 2020ல் வல்லரசு ஆகிறதோ இல்லையோ! இதே வேகத்தில் முதலாளித்துவம் இந்தியாவில் அதிகரித்தால் இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவில் 6 பெரு நகரங்கள் லாஸ்வேகாஸ் போல சூதாட்ட மற்றும் பாலியல் தொழில் விடுதிகளால் நிரம்பி வழிய போகிறது என்பது மட்டும் உண்மை :(

4 comments:

ஜமாலன் சொன்னது…

முற்றிலும் சமூக நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரை.

//இன்றைக்கு விளையாட்டு என்பது உலகளவில் முதலாளிகள் முதலீடு செய்யும் தளமாகி விட்டது. விளையாட்டு வீரர்கள் உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். ரசிகர்கள் நுகர்வாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள்.//

உண்மையாக என்ன நிகழ்கிறது என்பதை அருமையாகச் சொல்லி உள்ளீர்கள். பாராட்டுக்கள் பாரி...

அன்புடன்
ஜமாலன்.

Me சொன்னது…

//கிரிகெட் போட்டிகளில் இந்தியாவை வென்றாக வேண்டும் இல்லையென்றால் நாட்டுக்குள் நுழைய முடியாது என்கிற நிலைக்கு பாகிஸ்தான் வீரர்களும்! பாகிஸ்தானை வெல்லாவிட்டால் இந்திய வீரர்களும் மிரட்டப்படுகிற நிலைக்கு விளையாட்டும், தேசிய வெறியும் பின்னிபிணைந்திருக்கின்றன!//

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பின்னூட்ட கயமை!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஜமாலன்!

தங்களின் தொடர்ந்த வாசிப்பு மற்றும் ஊக்கமளிப்பிற்கு மிக்க நன்றி!

Related Posts with Thumbnails