வியாழன், 8 மே, 2008

பயனாளர் கையேடும், தமிழும்....!

குறிப்பு : கொஞ்சம் பழைய பதிவு, மீள்பதிவு செய்யப்படுகிறது! இதன் தேவை இன்னுமிருப்பதால்!

ஆசை, ஆசையாய் நாம் நம் வீட்டுக்கோ, உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு மி்ன்னணுவியல் கருவி (electronics equipment) வாங்கி கொடுக்கிறோம். இப்பொழுது வருகிற நவீன கருவிகள் ஏகப்பட்ட பயன்பாடுகளுடன் வருகிறது ஆனால் அவற்றுக்கான பயனாளர் கையேடுகள் (user manual) பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.

நாம் வாங்கி தருகிற பொருட்களை நம் பெற்றோரோ அல்லது உறவினரோ பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கலை தீர்க்க முடியாமல் அருகில் இருக்கும் யாரவது ஒருவரை உதவிக்கு அழைக்கும் போது அவர்கள் தங்களுடைய அறிவு திறமைகளையெல்லாம் அதில் காண்பித்து கடைசியில் பேரீச்சை பழத்திற்க்கு விற்க்கும் நிலைக்கு பொருள் வந்துவிடுகிறது.

எளிய தமிழிலில் பயனாளர் கையேடு மிக அவசியமாகிறது.

அதற்க்காக நாம் என்ன செய்யலாம்? சீனா மாதிரி நமக்கு ஒரு நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ இருந்தால் நாம் கட்டாயம் சந்தைக்கு வருகிற பொருட்களின் நிறுவனங்களை மறைமுகமாக நம்முடைய தமிழ் மொழியில் கையேடு வேண்டுமென்பதை அறிவுறுத்தலாம்.

நதிநீர் வேண்டுமென்று கேட்டாலே நாய்களை விட கேவலமாக அடித்துக்கொல்லபடும் அளவுக்கு அரசியல் அனாதைகளாக இருக்கிற நிலையில்...

தமிழிலில் கையேடா!
முடியும்! இதற்க்காக நீங்கள் வீதியில் கொடிபிடிக்க வேண்டாம்! போராட்டங்கள்! தீக்குளிப்புகள் தேவையில்லை!

ஒரு எளிய வழி இருக்கிறது!

இன்றைய நிலையில் மின்னணு கருவிகள் பயனாளர் சந்தையில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நுகர்வோர் எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

ஓவ்வொரு மின்னணு கருவி நீங்கள் வாங்கும்போதும், உங்களுக்கு அப்பொருளின் உத்திரவாதத்தை பதிவு (warranty card) செய்ய ஒரு விண்ணப்பமும், ஒரு கருத்து கணிப்பு படிவம் (feed back form) -ம் தரப்படுகிறது.

நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு ஒரு கேள்வியாக மேலதிக சேவையாக அந்நிறுவனத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள், அப்பொழுது நீங்கள் தவறாமல் எங்களுக்கு தமிழிலில் பயனாளர் கையேடு இருந்தால் நலம் என்றும், அப்படி இல்லாததால் அவர்களின் கருவிகளை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது எனவும், விரைவில் தமிழிலில் பயனாளர் கையேடு தருகிற நிறுவனப்பொருட்களையே வாங்க விருப்பபடுவதாக குறிப்பிடுங்கள்.

கருத்து கணிப்பு படிவம் இல்லாத நிலையில் நீங்கள் அந்நிறுவனத்திற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்து உங்களுடைய பதிவு எண்ணை குறிப்பிட்டு நீங்கள் விரும்புகிற மேலதிக சேவைகளை குறிப்பிடலாம்.

என்னுடைய நண்பர் 'சாம்சங்' நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் இருக்கிறார், அவருடைய கூற்றுப்படி இவ்வாறு வருகிற பயனாளர் கோரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் உடனடியாக அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கும் என்கிறார்.மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் மிக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார்.

இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்?

1. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2. நமக்கு எளிய தமிழிலில் பயனாளர் கையேடுகள் கிடைக்கும்.

2 comments:

பெயரில்லா சொன்னது…

நீங்கள் கூறியிருப்பது மிகவும் பயனுள்ள செய்தி.

தவிர தமிழ்மணத்தில் அடிக்கடி தொடர்விளையாட்டுகள் வருகின்றன. நீங்கள் பயன்படுத்தும் ஒரு கருவியின் பயனேட்டை தமிழாக்கம் செய்து அடுத்தவரை அழைத்து அவரொரு கருவியின் பயனேட்டை தமிழாக்கம் செய்ய விழையலாம். இந்த தொடர் விளையாட்டின் மூலம் கிடைக்கும் பயனேடுகளை தமிழ்மணம் குறியீடு வழியே தொகுத்தால் நாளை எழுதப்பட்டுள்ள கருவிகளை வாங்குவோர்/பரிசளிப்போர் அதன் அச்சௌப்பிரதியை அவர்களுக்குக் கொடுக்கலாம்.

தமிழ்மணம் பரிச்சயமானவர்களுக்குத்தான் இது உதவும் என்றாலும் ஒரு தரவுகோப்பு உருவானால்,காப்பீட்டு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அச்சுப் பதிப்பாகவும் கொண்டுவரலாம்.

TBCD சொன்னது…

பாரி,

நல்ல ஆலோசனை.

அனானி கருத்துக் கூட நமக்கு நாமே திட்டம் என்றாலும், நல்ல யோசனையே.

உடன் செயல்படுத்துகிறேன்.

நன்றி.

Related Posts with Thumbnails