திங்கள், 21 ஜூலை, 2008

உறக்கத்தின் கதறல்...!

எப்பொழுதாவது சொல்லலாம் என்று சேகரித்து வைத்த உண்மைகள்! என்னைப்பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் யாரேனும் உண்டா? சுயவிசாரணை எந்தளவுக்கு சாத்தியமானது? நான் நெகிழ்ந்து, தளர்ந்து உணர்வுகளையும்... நினைவுகளிலும், மனத்திலும் சிறைப்பட்டுக்கிடக்கும் உண்மைகளை ஊருக்கு உரைப்பது எப்பொழுது?!

குற்றங்கள், குறைகள் இவை ஏதுமற்ற மனிதனாக அடையாளப்படுத்தப்படுகிற போலி பிம்பங்களை கண்டு எனக்கு எரிச்சலாக இருக்கிறது!

செயலற்ற மனிதன் இருக்க முடியுமா! செயல் என்று ஒன்று இருக்கும்பொழுது குற்றங்களும், குறைகளும் இயல்பல்லவா?!

இப்பொழுதெல்லாம் எதன்மீதும் எனக்கு பிடிப்பு வருவதேயில்லை! ஏனென்றால் பிடிப்பு என்பதே தொடர்ச்சியின் விளைவு! தொடர்ச்சியற்ற சிந்தனையும், செயலும் கொண்டவனுக்கு பிடிப்பு என்பது சாத்தியமற்றது!

எனக்கு மட்டும்தானா! இல்லை!! இல்லை!!! எல்லோருக்கும் இப்படிதான் நிகழ்கிறதா?

ஏதோவொன்று மண்டையோட்டுக்குள் குறு,குறுவென்று ஊர்ந்துக்கொண்டேயிருக்கிறது, எதிலோ தொடங்கி எந்தவிதமான இலக்குமற்ற சிந்தனைவோட்டங்கள்...

ஒவ்வொரு உறக்கத்தின் பொழுதும் நான் அனுபவிக்கிற வலி!

2 comments:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
முகவை மைந்தன் சொன்னது…

சிக்கல் சிந்திக்கிறதுனால தான்னு நினைக்கிறேன். பேசாம திருமணம் பண்ணிக்கோங்க. சிந்திக்கவே முடியாது (அ) சிந்திக்கும் வழி மாறிப் போயிரும் ;-)

Related Posts with Thumbnails