நமது சமூகத்தையும், வலைப்பதிவுலக சமூகத்தையும் பொருத்திப்பார்க்கும் எனது முயற்சி... இதில் அவரவர் பாத்திரங்களை அவரவர் கற்பனைக்கே விட்டுச்செல்கிறேன்!
முச்சந்தியில் அடித்த 50மிலி சாராயத்தின் போதையில் எவனவன் குடும்பத்தை சந்திக்கிழுக்க முடியும் என வாய்நிறைய வசவு வார்த்தைகளாக சவுண்ட் விடும்... ஏதோவொரு போதை தலைக்கேறிய முச்சந்தி முனியப்பன்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
ஆட்டைகடிச்சி, மாட்டைகடிச்சி கடைசியில் என் குடும்பத்தையே பேசுறான்டா என தடியெடுத்து தொடை தட்டி முனியப்பன்களை மென்னி முறிக்க புறப்படும் கிராமத்து சண்டியர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
அதிகாரத்துக்கும், ஆண்டைகளுக்கும் வாழ்த்து பா பாடுவது, கொல்லைப்புற கதவு திறப்பது என மாமா வேலைப்பார்க்கும் அதே கிராமத்து சகுனி மாமாக்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
எல்லாம் அவன் செயல், விதி என்றெல்லாம் பிதற்றி தான், தனது காரியங்கள் என கண்ணாய் வாழும் முருகனடிமைகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாய் அவ்வப்போது கூடி சமூகத்தை புரட்டிப்போட புறப்படும் சமூக புரட்சியாளர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
முட்டாள்கள், தேடலற்றவர்கள் என சமூகத்தை காறி உமிழ்ந்து உலக தத்துவங்களை கரைத்துக்குடித்து வாழ்வின் தத்துவங்களை தேடிக்கொண்டிருக்கும் தத்துவ பித்தர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
தனது அறிவின் வீச்சின் புலம்பல்களை சாராயக்கடையில் ஆரம்பித்து... சந்து மூலையில் உருண்டுக்கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!
சிற்றின்பமோ, பேரின்பமோ காமமத்தை கொண்டாடுவோம் என கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!
எதையாவது செய்ய வேண்டும் என சிறு, சிறு கலகங்கள் செய்யவோர் அங்கேயும், இங்கேயும் உண்டு!
தனது வாழ்வு பாதுகாப்பாக இருக்கிறது என திருப்தியுற்றால் ஊருக்கு கருத்து சொல்லும் கந்தசாமிகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன... இவனிடம் அதிகாரமிருந்தால் எனக்கு பயன்.... என சிலருக்கு அதிகார பீடமேற்ற நினைக்கும் சுயநல நாய்பிழைப்புகாரர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!
குஜராத்தில் இசுலாமியரின் குடிசைகளும், குடும்பங்களும் எரிக்கப்பட்டும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப்போது கூட மோடிக்கு வாழ்த்துபா பாடுகிற மனித மிருங்கள்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் சிறு ஊறு எனும்பொழுது அலறிதுடிக்கும் அவலம் அங்கேயும், இங்கேயும் உண்டு!
ஈழத்து உறவுகளின் குடும்பங்களை கொலைச்செய்யப்பட்டப்பொழுதும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டப்பொழுதும் விருது வாங்க நாயாய் அலையும் இழிபிறவிகள்... அதிகாரங்களுக்கு கொல்லைபுற கதவு திறந்து மாமா வேலைப்பார்ப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!
இன்னும் சொல்லாமல் விடுப்பட்ட பல... அங்கேயும், இங்கேயும் உண்டு!
சமூகமும், வலைப்பதிவும் ஒன்று மற்றொன்றின் பிம்பம்!
புதன், 30 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
20 comments:
:)
அன்புடன்
சிங்கை நாதன்
:-))))
வாருங்கள் சிங்கைநாதன்,லக்கிலுக், ஜெகதீசன்!
:(
நன்றி!
என்ன ஆச்சு..??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
பாரி.அரசு
வாருங்கள் சிங்கைநாதன்,லக்கிலுக், ஜெகதீசன்!
:(
நன்றி!
//
என்ன ஆச்சு??
:((
//ஈழத்து உறவுகளின் குடும்பங்களை கொலை(ச்)செய்யப்பட்டப்பொழுதும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டப்பொழுதும் விருது வாங்க நாயாய் அலையும் இழிபிறவிகள்... //
அவைகள் இன்னும் உலா வந்துகொண்டிருப்பது, நமக்கெல்லாம் வேதனை தரும் விடயம்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
வாருங்கள் டிபிசிடி!
ஃஃஃஃ
என்ன ஆச்சு..??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஃஃ
எதுவும் ஆகால! :)
அருமையானப் பதிவு :):):)
வாருங்கள் ஜோதிபாரதி!
//
//ஈழத்து உறவுகளின் குடும்பங்களை கொலை(ச்)செய்யப்பட்டப்பொழுதும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டப்பொழுதும் விருது வாங்க நாயாய் அலையும் இழிபிறவிகள்... //
அவைகள் இன்னும் உலா வந்துகொண்டிருப்பது, நமக்கெல்லாம் வேதனை தரும் விடயம்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
செருப்பால் அடித்தால் கூட பல்லிளிக்கும் பச்சோந்திகள்!
நன்றி rapp!
//நமது சமூகத்தையும், வலைப்பதிவுலக சமூகத்தையும் பொருத்திப்பார்க்கும் எனது முயற்சி//
நல்ல முயற்சி!!!..
இளா பதிவுல உங்களுக்கு பதில் சொல்லியிருக்கேன்.
ரொம்ப நேரம் டைப் பண்ணியிருக்கேன்..பதிவு ரேஞ்சுக்கு பெரிசா...
முடியல..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
நேரம் கிடைச்சா படிச்சுட்டு பதில் சொல்லுங்க ப்ளீஸ்..
பாரி, உங்களை ஒருமுறை பார்த்த போதே ஏதோ ஒரு பொறி உங்களுள் இருப்பதை கண்டேண். நீங்கள் மிக குறைவாக எழுதுகின்றீர்கள். தயவு செய்து நிறைய எழுதுங்கள்.
உலகமே அழிந்தாலும் தங்களுக்கு கவலையில்லை என்போர், தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்போர் தங்களை எறும்பு கடித்தாலும் உலகம் அழியப்போவதன் அறிகுறிதான் இது என்பார்கள். சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.
என்னதான் நடந்திருந்தாலும், ஈழத்தில் நடப்பதை நியாயப்படுத்துபவன் மனிதப்பிறவியே அல்ல.
;-)
வருகையைப் பதிவு பண்ணிக்கிறேன்.
அருமை அருமை மிக அருமை பாரி.
நல்ல சிந்தனை.
வாழ்த்துக்கள்.
அடடா ... எவ்வளவு தத்துவங்க ...
நீங்க தமிழ் நாட்டிலயோ ... இல்ல இப்ப இருக்க ஊர்லயோ என்னங்க செஞ்சிருக்கீங்க ...
எத்தன வருசம் அப்படீங்கரது முக்கியமில்ல ... சமூக மாற்றத்துக்காக என்ன செஞ்சிருக்கீங்க ... உங்க அளவில ... தத்துவம் ... நடைமுறை ... அரசியல் ... பார்ப்பனீயம் ... நவ - பார்ப்பனீயம் ... மற்ற உங்கள் நடவடிக்கைகள் ... நடவடிக்கை என்பதன் உங்கள் புரிதல் ... அதன் அடிப்படையிலான உங்கள் செயல்பாடுகள் ... உங்களோடு கருத்தளவில் உடன்படுகிறவர்களின் செயல்பாடுகளை நீங்கள் எந்த அளவிற்கு அறிந்திருக்கிறீர்கள் ...
உங்கள் செயல்பாடுகள்தாம் என்ன ...
யோசியுங்கள் அன்பரே ...
அடுத்தவரின் வாழ்வுப் பணி என்ன என்பதறியாது சும்மா வானில் கணையெறிவதென்பது மிக மிக சுலமபானது ...
கருத்தளவில் நாம் மிகவும் நெருக்கமானவர்கள் என்ற நம்பிக்கையிலும் ...
‘நான்' துருத்திக் கொள்ளாது ... பார்ப்பனியம் குறித்த மரபான விளக்கங்களோடு சுருங்கிவிட மனதையும் அறிதலுக்கான வேட்கையையும் நிறுத்திக் கொள்ளாத நபர்களுள் ஒருவர் என்பதாகக் கருதுவதால் ....
இதற்குமுன் இல்லாத
இந்த நீண்ட பகிர்வு ...
மிக்க அன்புடன்
வளர் ...
சமுதாய பிம்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
மாயாவியாம் எம்மை விட்டு விட்டீர்கள்.
வருகைக்கும்... பகிர்விற்கும் நன்றி வளர்!
கருத்துரையிடுக