வெப்பம் வெளிப்படுகிற எல்லா வழிவகைகளையும் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள்... மனிதர்கள் உணவு உட்க்கொள்வதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றங்களால் மனித உடல் வெப்பத்தை வெளியேற்றுவதை கண்டறிந்துள்ளனர்.
இதனால் இந்தியா, சீனா மாதிரியான அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் உலகம் சூடாவதை தடுக்க எல்லோரும் ஒரு நாள் பட்டினி இருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்!
இதன் தொடர்பில் இந்தியாவில் உள்ள NGO - கள் ஒன்றிணைந்து வருகிற மாதம் முதல் தேதி பட்டினி கிடப்பது பற்றிய பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்...
மேலதிக தகவல்கள் விரைவில்....
வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
11 comments:
நான் வரலை இந்த விளையாட்டுக்கு....
:)))))
Excellent.....
கூர்மையான விமர்சனம், நையாண்டி
அது மட்டுமல்ல..உலகில் இந்த நாட்டு மக்கள் நல்ல தரமான உணவு மட்டுமே சாப்பிடவேண்டுமென்று அடம்பிடிப்பதால் தான் உலகில் உணவுப் பற்றாக்குறை வந்திருப்பதால்..இனிமேல் இவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும்..
ஏன் இந்த பட்டினி வெறி !
அமெரிக்க ஏகாதி 'பத்தியத்துக்கு' எதிராகவா ?
:))))
நான் நினைத்ததை எழுதி இருக்கிறீர்கள். எனக்கு ஒரு மேட்டர் பஞ்சம். :(
:))))
நான் நினைத்ததை எழுதி இருக்கிறீர்கள். எனக்கு ஒரு மேட்டர் பஞ்சம். :(
நாம் சிங்கை சிங்கங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் பட்டினி இருப்பமோ.?
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்..?
ஏங்க, ஏங்க இப்படி பட்டினி எல்லாம் கிடந்து சாகனும்?
பேசாம உலகம் முழுக்க ஏர்கான் போட்டுட்டா உலகமே குளிர்ந்துடும்ல.
நானும் எல்லார்கிட்டயும் சொல்றேன், எல்லா இடத்துலயும் குளிர்சாதன வசதி செய்யுங்கன்னு, யாரும் கேட்க்க மாட்டேங்குறாங்க பாரி.
நம்ம ஊரு வோல்டாஸ், கேரியர் கம்பெனி காரங்க எல்லாம் நல்லா சம்பாரிப்பாங்கள்ல. உங்களோட அடுத்த பதிவுல இத வலியுறுத்துங்க பாரி.
ஒரு நாள் வேலை செய்யாமல் இருப்போம். வேலை செய்தால் உடல்
சூடேறி வெப்பம் வெளியேறுவது நமக்குத் தெரிந்ததே. என்னக் கேட்டா
பல நாள் வேலை செய்யாமலிருக்கத் தயார்.
ஆ! பாரி என்ன இது? முன்னுரையிலேயே முற்றும் போடும் கலை. அட்டகாசம்.
ஆனா, பதிவை விட ஜேக்கோட பின்னூட்டந்தான் பிடிச்சிருக்கு.
ஜெகதீசன், தோழர் அசுரன், டிபிசிடி, கோவி, டொன் லீ, ஜோசப், ரங்கூடு, முகவை மைந்தன்...
அனைவருக்கும் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!
கருத்துரையிடுக