சில மாதங்களுக்கு முன்பு சிங்கை வலைப்பதிவர்களுடன் மின்னஞ்சல் உரையாடலில் சொன்னது " இந்த போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கபடுவார்கள், பிரபாகரன் மரணமடைந்தாலும்... ஈழத்திற்கான போராட்டம் தொடரும்..."
மிக தெளிவாக போரில் தோல்வி ஏற்படும் என்பதை விடுதலைபுலிகள் உணர்ந்தே இருந்தனர், இருக்கின்றனர்...
இந்த போரானது இலங்கை அரசு மட்டும் நடத்தினால் விடுதலைபுலிகளால் எதிர்க்க முடிந்திருக்கும். இலங்கை அரசுடன் துணையாக மற்ற நாடுகளையும் சேர்த்து விடுதலைபுலிகளால் எதிர்த்து வெற்றி பெற இயலாது.
இலங்கைக்கு உதவி செய்கிற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. ஏன் இந்தியா இணைந்துக்கொண்டது? இன்னொரு சமயத்தில் இந்தியாவும், இப்போது நடைபெறுகிற போரில் பங்களிப்பும் என்பதை விரிவாக பேச வேண்டும்.
இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்கிற இந்திய அரசாக காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இருந்த காரணத்தால்... காங்கிரஸ், பாமக, திமுக கட்சிகள் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதை பதிவும் செய்திருந்தேன் யாருக்கு ஓட்டு போடுவது...?.
ஆனால் உள்மனதில் காங்கிரஸ், பாமக முழுவதுமாக தோல்வியடைய வேண்டும் என்கிற ஆசையிருந்தது. அதே நேரம் திமுக ஒரளவு வெற்றி பெற வேண்டும், அது திமுகவின் தலைமையை தனது நிலையை மறுபரிசீலனை செய்ய உதவும் என்று நினைத்தேன். கலைஞர் மீதான பாசம் என்று எள்ளி நகையாடினாலும் பரவாயில்லை... என்று பல நண்பர்களிடம் திமுக தோற்பது நல்லதல்ல.. என்று விளக்கியிருந்தேன்.
ஈழம், ஈழத்தமிழர் இன்றைக்கு படுகிற துயரங்கள் தமிழக தேர்தலில் எதிரொலிக்கவில்லை ஏன்?
என் தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது மிக எளிமையாக சொன்னார்... ஊர் ஊராக வேலை செய்ய யாரிருக்கா? என்று கேள்வி கேட்டார்.
மிக, மிக முக்கியமான அடிப்படை இதுதான்... தமிழ் மொழி, தமிழினம் ஆகியவற்றின் நலனை முன்னிறுத்தி போராடுகிற தொண்டர்களை உள்ளடங்கிய அமைப்பு இல்லை.
நானே தலைவன், நானே தொண்டன் என்று முழங்கி கொண்டிருக்கும் தலைவர்களே எஞ்சியிருக்கிறார்கள்.
இரண்டாவது... தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மொழி, தமிழினம் சார்ந்து இயங்க கூடிய அமைப்பாக மக்களால் நன்கு அறியப்பட்டவை திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் முன்னேற்ற கழகம் மட்டுமே.
ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான தொண்டர்களை உள்ளடக்கிய அமைப்பாக திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திமுக, மற்றும் புரட்சிகர இடது அமைப்புகள் (பூணூல் மார்கிஸ்ட்டுகள், மாலைநேர முச்சந்தி நடுத்தர மார்க்கிஸ்ட்டுகள் நீங்கலாக).
திக மற்றும் திமுக வில் ஈழப்போராட்டதிற்கு ஆதரவாக இயங்கிய காரணத்தால் தடா, பொடா வில் சிறைக்கு சென்றவர்கள் மிக அதிகம். அதுவும் திக வில் ஒவ்வொரு ஊரிலும் கட்டாயம் ஒரு தடா கைதி இருப்பார். அந்தளவுக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். இதில் ஒரு சிலர் நேரிடையாக ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களும் உண்டு.
இன்றைக்கும் மைசூர் சிறையில் 20க்கும் மேற்பட்டவர்கள் 'பொடா' சட்டத்தில் சிறையில் இருக்கிறார்கள்.
தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை தொண்டர்களுக்கு மிக ஆழமாக ஊட்டி வளர்த்தெடுத்ததில் திக, திமுக வும் மிக முக்கிய பங்களிப்பு இருக்கிறது.
மாற்றாக அதிமுக என்கிற அமைப்பை எடுத்துக்கொண்டால்... தொண்டர் அமைப்பு என்பது பெரும்பாலும் அந்தந்த ஊர் கட்டபஞ்சாயத்து ரவுடிகள், சாராய வியாபாரிகள், பெரிய ஆள் பண்ண நினைக்கிறவர்கள் இப்படிப்பட்ட தொண்டர் அமைப்பை கொண்டது.
பாமகவின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் குண்டாந்தடி வன்னிய சாதி வெறியர்களை கொண்டது.
மதிமுக வின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் எல்லா ஊர்களிலும் திமுகவால் ஏதோ காரணத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களை உள்ளடக்கியது. மதிமுக வை பொறுத்தவரை தஞ்சை மாவட்டத்தில் என்னால் அடித்து சொல்ல முடியும் முழுக்க, முழுக்க கட்டபஞ்சாயத்து ரவுடிகள் தான் தொண்டர்கள்.
1991 -96 மற்றும் 2001-2006 காலக்கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் என்கவுண்டர் என்கிற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய போராளிகளின் எண்ணிக்கை ஈரிலக்கத்தை தாண்டும். இந்த காலகட்டத்தில் தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை ஒடுக்குவதில் மிக தீவிரமாக இயங்கியவர் ஜெயலலிதா...!
அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் தமிழ் மொழி, தமிழினம் அப்படின்னா கிலோ என்ன விலை? என்று கேட்கிற அளவில் தான் இருப்பார்கள்.
அதிமுக. பாமக, மதிமுக போன்ற அதிகார அரசியல் பொறுக்கிகளால் தொண்டர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளத்தை கொண்டு சொல்ல இயலாது. அதற்கான அடிப்படை அங்கேயில்லாததே...காரணம்!.
ஈழப்போராட்டம் தமிழக மக்களிடம் கொண்டுச்செல்ல வேண்டுமானால்... அதை தமிழ் மொழி, தமிழின அடையாயத்தை ஆழமாக தாங்கி பிடிக்கிற தொண்டர் அமைப்பை கொண்ட இயக்கத்தால் மட்டுமே இயலும்.
திக, பெதிக, திமுக அமைப்புகள் மட்டுமே... அத்தகைய தொண்டர்களை உள்ளடக்கி இருக்கிறது.
திமுக வில் அதிகாரத்தில் குண்டர்களும், கட்டபஞ்சாயத்து ரவுடிகளும், பொறுக்கிகளும் இருக்கலாம்... ஆனால் இன்னும் தமிழ், தமிழினம் என்று உயிரைக்கொடுக்கிற தொண்டர்கள் திமுகவில் நிறைந்தேயிருக்கிறார்கள்.
தமிழ், தமிழினம் இவற்றுக்கு எதிரான அமைப்புகள் மக்களிடம் ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தால் இருக்கிற ஆதரவும் காணாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.
நன்றி!
ஞாயிறு, 17 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
18 comments:
//திக, பெதிக, திமுக அமைப்புகள் மட்டுமே... அத்தகைய தொண்டர்களை உள்ளடக்கி இருக்கிறது.
திமுக வில் அதிகாரத்தில் குண்டர்களும், கட்டபஞ்சாயத்து ரவுடிகளும், பொறுக்கிகளும் இருக்கலாம்... ஆனால் இன்னும் தமிழ், தமிழினம் என்று உயிரைக்கொடுக்கிற தொண்டர்கள் திமுகவில் நிறைந்தேயிருக்கிறார்கள்.//
பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா ன்னு சொல்லுவாங்க.
திராவிடக் கட்சிகள் அனைத்துமே இப்ப வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. கட்சிகள் கார்ப்'ரேட்' நிறுவணங்கள் ஆகிவிட்டது. அதிமுகவுடன் திமுகவும் குப்பை என்று சேர்த்து நான் சொல்கிறேன். உங்களால் ஏன் இன்னும் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் என்ன நம்பிக்கை ?
செம்மொழி அந்தெஸ்து வாங்கிக் கொடுத்தாருன்னு சொல்லுவிங்க, அதன் போராட்டம் எத்தனை ஆண்டுகாலமாக நடக்கிறது, இந்த காலகட்டத்தில் கருணாநிதி பலமுறை முதலமைச்சராக இருந்தார். அதைத்தவிர தமிழ் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்த பட்டியல் போடுங்க.
சீர்த்திருத்த தமிழை அறிமுகப்படுத்தியது எம்ஜிஆர், மாநாடு நடத்தியது எம்ஜிஆர். கருணாநிதி ? தன் பேர் வரலாற்றில் நிலைக்கும் படியான கல்வெட்டுகளுடன் கூடிய திருவள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம் அமைத்தார் வேறென்ன ?
இந்த ஆராய்ச்சி எல்லாம் தேர்தலுக்கு முன்னாடி நீங்க ஏன் செய்யலை..??
//தமிழ், தமிழினம் இவற்றுக்கு எதிரான அமைப்புகள் மக்களிடம் ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தால் இருக்கிற ஆதரவும் காணாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.
//
ஈழப்போராட்டத்தை தமிழ், தமிழினம் இவற்றிற்கு தாங்களே அக்மார்க் ஆதரவு என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் எடுக்கலை ? போர் நிறுத்தம் ஏற்பட்டதாக பொய் சொல்லியது ஏன் என்று சொல்லுங்க.
மேல்சாதிக்காரர்களான நாங்கள் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடுவோம், அது எங்கள் உரிமை, பெருந்தன்மை என்று சொல்லும் நகைமுரண் போல் இருக்கு.
//
திராவிடக் கட்சிகள் அனைத்துமே இப்ப வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. கட்சிகள் கார்ப்'ரேட்' நிறுவணங்கள் ஆகிவிட்டது. அதிமுகவுடன் திமுகவும் குப்பை என்று சேர்த்து நான் சொல்கிறேன். உங்களால் ஏன் இன்னும் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் என்ன நம்பிக்கை ?
//
கோவி...
திமுக வின் அதிகார அமைப்புகள் மாறியிருக்கிறது... உணர்வாளர்கள் அதிகாரத்தில் இல்லை என்பது உண்மை. ஆனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கு இருக்கிற மொழியுணர்வு, இனவுணர்வு இன்னும் நீர்த்துப்போய் விடவில்லை...
//ஈழப்போராட்டம் தமிழக மக்களிடம் கொண்டுச்செல்ல வேண்டுமானால்... அதை தமிழ் மொழி, தமிழின அடையாயத்தை ஆழமாக தாங்கி பிடிக்கிற தொண்டர் அமைப்பை கொண்ட இயக்கத்தால் மட்டுமே இயலும்.//
ஆமாம் இப்ப இருக்கும் திராவிட இயக்கங்களிடம் சொல்லி, ஈழத்தமிழர்கள் படுகொலையின் நினைவாக நினைவுத் தூண் அமைக்கச் சொல்லுங்க. அது வரலாற்றில் கலைஞர் எம்ஜிஆருக்கே சமாதி கட்டிய பெருமை போல் காலத்தால் பேசப்படும்
//கோவி...
திமுக வின் அதிகார அமைப்புகள் மாறியிருக்கிறது... உணர்வாளர்கள் அதிகாரத்தில் இல்லை என்பது உண்மை. ஆனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கு இருக்கிற மொழியுணர்வு, இனவுணர்வு இன்னும் நீர்த்துப்போய் விடவில்லை...
May 17, 2009 8:14:00 PM
//
ஆகா, தொண்டன் குண்டன் எல்லாமே எல்லாக் கட்சியிலுமே இருப்பான், அதிமுகவில் இருக்கும் அடிப்படை தொண்டர்கள் கூட எவரும் நீங்கள் சொல்லிய குண்டர் படை கிடையாது, அடிமட்டத்தை விடுங்க, அதைப் பற்றி யாரு கவலைப்படுறாங்க, அது வாக்கு வங்கி என்ற அளவில் தான் கட்சிகளால் பார்க்கப்படும். ஆளுமை உடையவர்களால் ஆட்டிப்படைக்கப்படும் கட்சியில் அடிப்படை தொண்டர்கள் நல்லவர்கள் என்பது தான் கட்சிக்கு பெருமையா ? இதனால் தமிழினத்துக்கு, தமிழர்க்கு என்ன பயன் பெருமை ?
இனி யாரும் வந்து என்ன பிரயோசனம் சொல்லுங்க?
எல்லாம் தான் முடிஞ்சுருச்சே, ஒரு மிகக் கேவலமான இன அழிப்புக்குத் துணை போண பெருமையுடன் மீண்டும் ஆட்சியில் அமருகிறார்கள்.
எத்தனை ஆராய்வுகள் நிகழ்ந்தாலும் இழந்த உயிர்கள் திரும்ப வருமா? இனி ஈழத்தில் தமிழர்கள் நிம்மதியாய் இருப்பார்களா? ஈழத்தமிழர்களை இனி ஈழம் தவிர வேறு எல்லா இடங்களிலும் பார்கலாம். அவர்களும் அதிகபட்சம் 2 தலைமுறைகளுக்கு தமிழர்களாயிருப்பார்கள். பின்பு வாழுமிடத்திற்கு தக்க தங்கள் மொழி, நாகரீகம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு தமிழன் என்ற அடையாளத்தையே இழந்துவிடுவார்கள்.
அப்படி அவர்கள் தங்களது அடையாளங்களை இழப்பதைக் கூட குறையாக சொல்ல இயலாது, சொல்லவும் கூடாது.
இனி தமிழன்னு சொல்லிக்க என்ன பெருமை இருக்கு?
ஒற்றுமையில்லாத இனம், தன் இன அழிவுக்கு தானே வழிவகுத்த இனம் என்று சொல்லிக்கொள்வதைவிட , சாரி ஐ டோன்ட் நோ டமில்னு பெருமையா சொல்லிக்கலாம்.
//தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை தொண்டர்களுக்கு மிக ஆழமாக ஊட்டி வளர்த்தெடுத்ததில் திக, திமுக வும் மிக முக்கிய பங்களிப்பு இருக்கிறது.//
மிக மிகக் கேவலமான சப்பைக் கட்டுகள். ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அது பற்றிய சிறுதகவல்கள் கூட தங்களால் நடத்தப்படும் செய்தி குழுமங்கள், ஊடகங்கள் மூலம் கசியவிடாது, இரும்புத்திரை ஆட்சியை நடத்தியதைக் கண்டும், கேட்டும் உங்களால் எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது ?
மிகப் பெரிய மக்கள் எழுச்சியே நடந்திருக்கும், அவற்றை ஏற்படுத்த முயன்ற தமிழுணர்வாளர்களையெல்லாம் தேர்தல் நெருங்கும் வரை சிறையில் அடைத்து காங்கிரசு வீட்டு காவல் நாய் போல செயல்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதும் அளவுக்கு ஒருவருக்கு திராவிட உணர்வு என்பது இன உணர்வை மரத்துப் போக வைக்கும் என்றால் அது வெறும் போதை, தலைமை, தலைமைத்துவத்தில் விசுவாசம் காட்டும் அடிமைத்தனம்.
நீங்களுமா ? நினைத்துப் பார்க்கமுடியவில்லை.
////கோவி...
திமுக வின் அதிகார அமைப்புகள் மாறியிருக்கிறது... உணர்வாளர்கள் அதிகாரத்தில் இல்லை என்பது உண்மை. ஆனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கு இருக்கிற மொழியுணர்வு, இனவுணர்வு இன்னும் நீர்த்துப்போய் விடவில்லை...
May 17, 2009 8:14:00 PM
//
ஆகா, தொண்டன் குண்டன் எல்லாமே எல்லாக் கட்சியிலுமே இருப்பான், அதிமுகவில் இருக்கும் அடிப்படை தொண்டர்கள் கூட எவரும் நீங்கள் சொல்லிய குண்டர் படை கிடையாது, அடிமட்டத்தை விடுங்க, அதைப் பற்றி யாரு கவலைப்படுறாங்க, அது வாக்கு வங்கி என்ற அளவில் தான் கட்சிகளால் பார்க்கப்படும். ஆளுமை உடையவர்களால் ஆட்டிப்படைக்கப்படும் கட்சியில் அடிப்படை தொண்டர்கள் நல்லவர்கள் என்பது தான் கட்சிக்கு பெருமையா ? இதனால் தமிழினத்துக்கு, தமிழர்க்கு என்ன பயன் பெருமை ?//
சரியான சப்பைக்கட்டு.
இருபக்க தலைமைகளைத் தாண்டி , திமுக ஆதரவாளர்களில் உண்மையான தமிழ் உணர்வுள்ளோரின் சதவீதத்துக்கும் ,அதிமுக ஆதரவாளர்களில் தமிழுணர்வாளர்களின் சதவீதத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
//சரியான சப்பைக்கட்டு.
இருபக்க தலைமைகளைத் தாண்டி , திமுக ஆதரவாளர்களில் உண்மையான தமிழ் உணர்வுள்ளோரின் சதவீதத்துக்கும் ,அதிமுக ஆதரவாளர்களில் தமிழுணர்வாளர்களின் சதவீதத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.//
பெரிய கும்பலே இருக்கட்டும், ஆனால் அந்த எட்டாத ஏணியை வச்சி ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் என்ன எட்டினீர்கள் ?
நான் அதிமுக ஆதரவாளன் கிடையாது. என்னைப் பொருத்த அளவில் தலைமை என்ற அளவில் இரண்டும் ஒன்றே, செயல்பட முடியாமல், மனதில் நல்லண்ணம் கொண்ட தொண்டர்கள் ஒரு கட்சியில் இருப்பதால் அது அக்மார்க் கட்சியா ?
புதசெவி.
//அதிமுக ஆதரவாளர்களில் தமிழுணர்வாளர்களின் சதவீதத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.//
அம்மா புகழ் வக்கில் ஜோதி, இப்ப ஐயா கட்சியில் தான் தீவிரவிசுவாசியாக இருக்கிறார்.
:)
அங்கிட்டு உள்ளவங்க, இங்கிட்டு உள்ளவங்க மாறி மாறித்தானே போறாங்க. ஓகோ தொண்டன் மாறலைன்னு சொல்ல வர்றிங்களா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கோவி,
ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்பது அந்த கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் அல்ல .
நீங்க அதிமுக ஆதரவாளராவே இருந்தாலும் ஒன்றும் தப்பில்லை .
//ஜோ/Joe சொன்னது…
கோவி,
ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்பது அந்த கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் அல்ல .
நீங்க அதிமுக ஆதரவாளராவே இருந்தாலும் ஒன்றும் தப்பில்லை .
//
;)
அந்த ஓட்டல் சாப்பாடு படு கேவலம், ஆனால் ஓட்டல் சர்வர்கள் பதமாக பாத்து பாத்து பரிமாரிவாங்க, ரொம்ப நல்லவங்க, அதனால் நல்ல ஓட்டல் என்று பரிந்துரைப்பது போல் இருந்தது அதான் குறிப்பிட்டேன்
கோவி,
பதிவின் பேசுப்பொருள் தேர்தலில் ஈழம் ஏன் சரியாக மக்களிடம் சென்றடையவில்லை? என்பது தான்...
அதற்கு காரணமாக நான் முன் வைத்தது தமிழ், தமிழின உணர்வுடன் களப்பணி செய்யும் தொண்டர்கள் ஈழ ஆதரவு நிலையெடுத்தவர்களிடம் இல்லை!
அந்த கோட்டில் வேறு விமர்சனங்கள் வைத்தால் நன்று...
திமுக தலைமை பற்றிய விமர்சனங்கள்... அதிகாரங்கள் பற்றிய விமர்சனங்கள்... எனக்கும் இருக்கிறது...!
//திமுக வில் அதிகாரத்தில் குண்டர்களும், கட்டபஞ்சாயத்து ரவுடிகளும், பொறுக்கிகளும் இருக்கலாம்... ஆனால் இன்னும் தமிழ், தமிழினம் என்று உயிரைக்கொடுக்கிற தொண்டர்கள் திமுகவில் நிறைந்தேயிருக்கிறார்கள்//
முதல் பாதி சரி.இரண்டாவது சுத்த பேத்தல்.தி மு க மட்டுமல்ல,எல்லா திராவிட கழகக் கண்மணிகளும் ஓசி பிரியாணி/சாராயத்துக்கு அலைகிற சில்லறை பொறிக்கிப் பசங்க தான். ஒரு வேலையும் இல்லாத, வேலை செய்யத் தெரியாத பொறிக்கி கும்பல்.இந்த தேர்தலும் அதையே நிருபித்திருக்கிறது.
//கோவி,
பதிவின் பேசுப்பொருள் தேர்தலில் ஈழம் ஏன் சரியாக மக்களிடம் சென்றடையவில்லை? என்பது தான்...//
திமுக ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணித்தன, தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டார்கள், அதன் மூலம் மக்கள் முன் பிரச்சனையை கொண்டு செல்லப்படுவது வெற்றிகரமாக தடுக்கப்பட்டது , இதைப் பற்றி அழுத்தமான ஒருவரி கூட உங்கள் பதிவில் இல்லை.
கோவி,
//
திமுக ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணித்தன, தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டார்கள், அதன் மூலம் மக்கள் முன் பிரச்சனையை கொண்டு செல்லப்படுவது வெற்றிகரமாக தடுக்கப்பட்டது , இதைப் பற்றி அழுத்தமான ஒருவரி கூட உங்கள் பதிவில் இல்லை.
//
சுருக்கமாக அடக்குமுறை மூலம் மக்களிடம் ஈழம் பற்றிய விழிப்பு தடுக்கப்பட்டது.
அப்ப அடக்குமுறைக்கு எதிரான களப்பணி ஏன் நடக்கவில்லை...?
இந்த திடீர் தமிழுணர்வாளர்களால் அதை செய்ய இயலாமல் போனதேன்?
1. மீண்டும், மீண்டும் சொல்கிறேன்... இந்த திடீர் தமிழுணர்வாளர்களிடம் தமிழ், தமிழினம் என்கிற உணர்வோ! அதற்கான அடிப்படையோ ! இல்லை...! அதனால் தான் அடக்குமுறைக்கெதிரான கிளர்ச்சி வரவில்லை.
2. தமிழ், தமிழின உணர்வை ஓட்டு வங்கி அளவில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதை தாண்டி போய்விடக்கூடாது, வளரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஜெயலலிதா.
முரசொலி மாறன் எவ்வளவு எதிரியாக இருந்தாலும் அவரது மறைவின் போது, ஜெயலலிதா ஒரு தீர்ப்பில் விடுதலையானார். அப்போது வெடி வெடித்து தங்களுது வக்கிரத்தை காட்டி எப்படி தமிழ் பண்பாட்டை அதிமுக தொண்டர்கள் கேலிக்குறியதாக்கினார்களோ? அதேபோல் கடந்த சனிக்கிழமை திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றபோது, அந்த வெற்றியைக் கொண்டாடிய சிங்களவன் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றுக் குவிப்பதை சிங்கைத் தொலைக்காட்சியில்(சானல் நியூஸ் ஏசியா) எவ்வளவு நேரம் காட்டினார்கள் என்று நான் மட்டும் அல்ல கோவி, இராம் ஆகியோரும் கண்டு விரக்தியடைந்தோம். (எங்கள் வீட்டில் சன் தொலைக் காட்சி இணைப்பு இருக்கிறது. அதில் இன்றுவரை இது போன்ற காட்சிகளை காட்டியதில்லை. ஏன்?) அந்த நேரத்தில் தமிழத்தில் குண்டுக்கு பதில் திமுக தொண்டர்கள் வெடி போட்டுக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் பண்பாட்டு விழுமியங்கள் என்றால் என்ன என்று கேட்கிற நிலையில் தான் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் இதுக்கு அது பரவா இல்லை என்கிற கூற்றே தவறானது.
ஒரு சக மனிதன் உயிருக்குப் போராடும் போது அவனைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சிந்தனையா? அல்லது கலைஞருக்காக, அவரின் வெற்றிக்காக அவனை சாகட்டும் என்று விட்டுவிடுவோமா? என்றால் திமுக தொண்டர்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
இது அதிமுக தொண்டர்களுக்கும் பொருந்தும்.
மற்றபடி மிகப் பெரிய வரலாற்று பிழை செய்து இழுக்கை தேடிக் கொண்டாகிவிட்டது.
தொண்டர்களில் சிலர் அவருக்கு ஓட்டு போட்டிருந்தாலும், சிலரிடம் விரக்தியைக் காண முடிகிறது.
மற்றபடி தமிழகத்தில் போட்டியிட்ட மூன்று பிரதான அணிகளுமே தமிழினத்துக்கு ஒரு வகையில் துரோகம் செய்திருக்கிறது. செய்து கொண்டிருக்கிறது. அது மட்டும் நிதர்சனம். இதை யாரும் மறுக்க முடியாது.
கருத்துரையிடுக