திங்கள், 22 ஜூன், 2009

கவிஞர் தாமரை...அறச்சீற்றம், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நிகழ்வு...

அதிகாரங்கள் ஆர்ப்பரிக்கின்ற பொழுதுகளில்... ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வளையை கடித்துக்குதற வெறிப்பிடித்தலைகின்றன... அல்லக்கைகள்.

என்னுடைய சிறுவயதில் நான் கண்ட காட்சி அப்படியே என் கண்ணில் நிழலாடுகிறது...
கிராமத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞனை மரத்தில் கட்டிவைத்து ஆல விழுதுகளாலும், சைக்கிள் டியூப்களாலும் அடித்து துவைத்துக்கொண்டிருந்தனர்... "அவன் திருடி விட்டான் என்கிற பொய்யான குற்றசாட்டை வைத்து!"

அதன் பின்னணி ஒன்றுமேயில்லை... ஆண்டைகளை எதிர்த்து விட்டான் அவ்வளவுதான்!

குற்றுயிராய் கிடந்த இளைஞனின் தாய் கதறியபடி கிடந்தாள்... துடித்தாள்... கால்களில் விழுந்து அரற்றினாள் தன் மகனை விட்டு விடும்படி... அவளோடு அவர்களின் உறவு பெண் ஒருவளும் கெஞ்சிக்கொண்டிருந்தாள்... மன்றாடினார்கள்... அழுதார்கள்... புலம்பினார்கள்... தலைவிரிக்கோலமாய்... துடித்தார்கள்... துவண்டார்கள்...

ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலமாய்... குமறியப்படி சபித்தாள் அந்த தாய்... "இந்த ஊரும், உங்க குடும்பமும் நாசமாய் போக!"

ஆதிக்க வெறியர்கள் இளைஞனின் உடலில் தங்கள் பலத்தை காண்பித்திருக்க... கைத்தடிகள்... கிளர்ந்தார்கள்...

"ஏய்! கிளவி என்ன சத்தம் போடுற!"
"யாரடி பேசுற!"
என்று எட்டி மதித்து இடுப்பெலும்பு உடைத்தார்கள்.


அப்படியே... இன்றைக்கு கவிஞர் தாமரைக்கு நிகழ்வதை ஒப்பிடுகிறேன்...

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரங்கள் எம் உறவுகளை வன்னி மண்ணில் கொன்றழித்த பொழுதுகளில்...

பாஸ்பரஸ் கொத்து குண்டுகளாலும், பேரழிவு ஆயுதங்களாலும் எம் உறவுகள் சிதைக்கப்பட்ட பொழுதுகளில்...

3 லட்சம் மக்களை முட்கம்பி வேலிக்குள் முடக்கி வைத்து... எக்காளமிடும் பார்ப்பன, பனியா அதிகாரத்தின் முன்பு அழுது, புலம்பி, அரற்றி, கதறி, துடித்து, வீதியில் இறங்கி கத்தி கதறி, எம் சகோதரர்கள் தம்மையே தீயிட்டு எரித்துக்கொண்டும்... எல்லாம் பயனற்று போன பொழுதுகளில்....

ஒடுக்கப்பட்டவர்களின் இயலாமை ஓலமாய்... கவிஞர் தாமரை அவர்களில் "கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்" என்கிற கவிதை வந்திருக்கிறது.

பார்ப்பன, பனியா தேசத்தின் அல்லகைகளும், கைத்தடிகளும்... கொக்கரிகின்றன, இப்படி எப்படி கவிதை எழுதலாம் என்று!?

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரத்தால் துயரமடைந்த மக்களுக்கு ஓலமிடக்கூட உரிமையில்லையா?

பார்ப்பன, பனியா தேசத்தை சபித்ததால் பொங்கி எழுகின்ற இந்திய பொறையாண்மை அடிவருடிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்கிவிட துடிக்கின்றன.

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஈனக்குரலாய் அசாமிலும், நாகலாந்திலும், பஞ்சாபிலும், காஷ்மீரிலும், பீகாரிலும், மகாராஷ்டிராவிலும், தமிழ்நாட்டிலும்... எல்லா ஊர்களிலும், எல்லா மாநிலத்திலும் ஒலித்து/சபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த குரல் கவிஞர் தாமரை போன்றவர்களால் உரத்து ஒலிக்கும்பொழுது அதிகாரங்களும், அல்லகைகளும் கிலி பிடித்து ஆடுகின்றன.

அந்த குரலை உடனே நசுக்கி விட வேண்டுமென்று துடிக்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்... அந்த ஒலியின் அதிர்வில் அதிகாரங்களின் கோட்டைகள் தூள்தூளாக வெடித்து சிதற வேண்டும்!

6 comments:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உன்னையே நீ நேசிக்காமல் உன் அயலானை நேசிக்க இயலாது.
உன்னையே நீ புரிந்து கொள்ளாமல் அடுத்தவனை புரிந்துகொள்ள இயலாது.
உன் குடும்பத்தையே நீ நேசிக்காமல், அடுத்தவனுக்காக பரிந்து பேசினால் அது உண்மையானதாகவும் இருக்காது. நடிப்பாகத் தான் இருக்கும்.

உன் இனத்தையும்,அது அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருந்துவிட்டு தேசியம் பேசுவது கேணத்தனமாத்தான் இருக்கு.

காவிரி காணாமல் போனதை
முல்லைப் பெரியாறில் மூழ்கியதை
ஒகேனக்கலில் உடைக்கப்பட்டதை
பாலாறில் பாழாக்கப்பட்டதை
தமிழக மீனவர்களோடு சேர்த்து சுடப்பட்டதை தானே நீங்கள் தேசியம் என்கிறீர்கள்?

அப்போது எங்கே சென்றீர்கள் நீங்கள் எல்லாரும்?
பல்வேறு இன்னல்களின் போதும் இறைஞ்ச மட்டுமே திறந்த வாய்கள், நடந்த அநீதிகள் கண்டு பொங்கியெழுந்து, தன்னால் ஒன்றும் செய்ய இயலாமல் போனதால் சாபம் இட்ட போது வெகுண்டெழும் போலி தேசியவாதிகளே, சாபம் உங்கள் குடும்பத்துக்கும் சேர்த்து என்பதால் தானே இந்த கொதிப்பு?

இத்தனை நாள் உதைபட்டதும், உரிமை மறுக்கப்படதும் உங்கள் குடும்பத்துக்கு அல்ல என்பதால் தானே தூங்கிக் கொண்டிருந்தீர்கள்?

இப்போது சாபம் உங்கள் வீட்டு பெண்கள் வரை வந்ததும் துள்ளி எழுகின்றீர்கள், அதற்கு தேசியம் என்ற ஈரவெங்காயத்தை எடுத்து கொண்டு குதிக்கின்றீர்கள்.

இந்திய துடுப்பாட்ட அணி மேற்கிந்திய தீவுகளுக்கு கிளம்பி விட்டது, சானியா மிர்சா விம்பிள்டன் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டார்.
போங்கள் உங்களுக்கு தொலைக்காட்சியில் பார்க்க ஆயிரம் நிகழ்சிகள் இருக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் தேவையில்லாத கூச்சல்?

ஜோ/Joe சொன்னது…

வழிமொழிகிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

வழிமொழிகிறேன்.

TBCD சொன்னது…

ஆமோதிக்கிறேன் ! வழிமொழிகிறேன் !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சீமான் நாக்கை புடுகுற மாதிரி கேட்டான்
அப்போது வாய் மூடி இருந்த சமூகம்
தாமரையைத் தூற்ற முயன்றிருக்கிறது
இது சரியான ஆணாதிக்க சமூகத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டு!
இதைப் போல் தான் குட்டி ரேவதியை குதற முற்பட்டது நம் சமூகம்!

மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்!
ஈழ மக்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தான் அந்த வன்னித் தாய் வசைமாறிப் பொழிகிறாள். அந்த வன்னித்தாயின் குரல் யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஊடகத்தானும் அங்கில்லை, எந்த மனித ஆர்வலனும் அங்கில்லை. அதைத் தான் இன்று தாமரை பிரதிபலித்திருக்கிறார். சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நாமக்கல் சிபி சொன்னது…

இதற்கு எழுத நினைத்த பின்னூட்டத்தினை இங்கே தனிப்பதிவாய் இட்டுள்ளேன்!

Related Posts with Thumbnails