பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?
இடுகையை வாசித்து சில நண்பர்கள் உரையாடியில் வறுத்தெடுத்து விட்டார்கள்... மிக கடுமையாக இருப்பதாக குறை கூறினார்கள்.நிகழ்வுகளின் வழியாக எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன்.
வலைப்பூக்கள் பல்வேறு வகையில் இயங்கி கொண்டிருக்கின்றன.
ஒரு குழுமம்/சங்கம்/அமைப்பு என்று தொடங்கியவுடனே அதற்கு குறைந்தபட்ச அடிப்படை விதிமுறைகள் என்று ஒன்று உருவாக்கப்படும்.
முதலில் யாரெல்லாம் உறுப்பினர் என்பதிலேயே சிக்கல் தொடங்கி விடும்.
பாலியியல் கதை எழுதுகிற வலைப்பதிவருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
காமக்கதைகள் எழுதுகிற ஜ்யோவரம் சுந்தருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
சுகுணா திவாகர் மாதிரி அடிக்கடி கெட்ட வார்த்தை (வார்த்தை எப்படி கெட்டு போகும்?) பயன்படுத்துகிறவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
மத அடிப்படைவாத பதிவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
இப்ப தகுதி அளவெடுப்பது யார்? அவருக்கென்ன தகுதி?
அடுத்து...
குழுமம்/சங்கம்/அமைப்பு விட்டு தனித்தியங்கும் பதிவரை... குழுமம்/சங்கம்/அமைப்பு சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து ஒடுக்குவார்கள்.
குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவர் இந்துத்வ அரசியல் சார்பு உடையவர் என்றால்... அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு (முகவரி, தொலைபேசி எண்) என்ன பாதுகாப்பு?
குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவரின் அரசியல் சார்ப்பும், அந்த அதிகாரத்திற்கு நெருக்கமாக ஒரு கும்பலும் உருவாகி விடும்பொழுது...
இங்கே தான் போன பதிவில் நான் எழுதியது...
இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.
அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.