செவ்வாய், 30 மார்ச், 2010

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

முந்தைய இரண்டு இடுகைகளுக்கு பிறகான வலை உரையாடியில் தொடர்புக்கொண்ட பதிவுலக நண்பர்கள் மற்றும் நண்பர் குழலி ஆகியோர்...

கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களின் (வலைப்பூக்களின்) பன்மை தன்மை சிதையும் (அ) அழியும் என்பதை மேலும் விளக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குவது என்பதை விட படிமமாக விளக்க முயற்சிக்கிறேன்.

கட்டற்ற வெளி (இணையம்) -(கட்டற்றதாக பெரு நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளமையால், வெளியின் மீதான பெரு நிறுவனங்களின் தாக்கங்களை நீக்கி வைத்துக்கொள்வோம்)

கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள்(objects) - வலைப்பதிவர்கள்.

பொதுவான இயங்கியல்...
கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள் தனக்கென்ற தனித்த ஒழுங்கமைவும், இயங்கு தளமும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு பொருளும் மற்றொன்றுடன் ஒத்திசைதல் அல்லது தொடர்பாடல் வழியாக தமக்குள்ளாக ஒரு ஒழுங்கமைவையும், இயங்கு தளத்தையும் கொண்டிருக்கும்.

கட்டற்ற வெளிக்கான பொதுவான ஒழுங்கமைவு என்ற ஒன்று இருக்காது. அவ்வாறு பொதுவான ஒழுங்கமைவு உருவானால்... பொருளின்(object) தனித்த அடையாளம் சிதையும் அல்லது பொதுவான ஒழுங்கமைவோடு முரண்பட்டு அழிந்து போகும்.

எ.கா :

X, Y, Z என்று மூன்று பொருட்களை எடுத்துக்கொள்வோம்.

x,y,z ஆனது தனக்கென தனித்த ஒழுங்கமைவையும், இயங்குதளத்தையும் கொண்டவை.

x ஆனது y யுடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும்... x ஆனது z உடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும் வெவ்வேறானவை.

அவ்வறாக ஒவ்வொரு பொருளும் இருக்கும்...

x,y,z... ஆக எண்ணிலடங்கா பொருட்கள் இயங்கும் கட்டற்ற வெளியில் ஒரு பொதுவான ஒழுங்கமைவும், இயங்குதளமும் இருக்க இயலாது.

அவ்வாறான பொதுவான (global) ஒன்று உருவாகும் பொழுது... பொருட்களின் ஒழுங்கமைவு முரணால் பல பொருட்கள் சிதையும் அல்லது அழியும்.


இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

ஒரு கணினி நிரலாளன் பார்வையிலும்...
பொருட்களுக்கு (objects) இடையிலான dependency மிக, மிக குறைக்கப்பட வேண்டும். சாத்தியமெனில் zero வாக வைக்கப்பட வேண்டும்.

பொருட்கள்(objects) எப்பொழுதும் தனக்குரிய பண்புகளையும், இயக்கத்தையும் தன்னகத்தே கொண்ட தனித்தியங்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் பொழுது மட்டுமே நீடித்த நிலைத்தன்மையும், நீட்சியடைதல் (அ) வளர்தல் சாத்தியம்.

இன்னும் பல்வேறு கோணங்களில் தனிமனித உரிமை மற்றும் விடுதலை(சுதந்திரம்) என்று விரித்து விளக்கிக்கொண்டே போக முடியும்.

அடுத்த பதிவுகளில் சங்கம் அல்லது அமைப்பு வேண்டும் என்று கருதுகிற நண்பர் பைத்தியகாரன் மற்றும் தோழர் மாதவராஜ் ஆகியோருக்கு வினாக்களுடன் வருகிறேன்...

நன்றி
அரசு

9 comments:

ஜெகதீசன் சொன்னது…

இது சரி....
இரண்டாவது பதிவைத் தவிர்த்திருக்கலாம்...

குழலி / Kuzhali சொன்னது…

ஜார்கன்ஸ் போடாமல் இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்லியிருக்கலாம், சங்கம் என்பது எப்படியான சங்கமாக இருக்க போகிறது என்பதிலேயே அது கட்டற்ற சுதந்திரத்தை பாதிக்குமா இல்லையா என்பது, இணைய வெளி என்பது ஒரு சங்கத்தினால் கட்டுப்ப்டுத்த இயலாது, ஏனெனில் இங்கே ஒருவரே பல அவதாரம் எடுக்கலாம், சங்கம் கட்சியை போலவோ மதம் போலவே tightly coupled ஆக செயல்பட்டால் சங்கம் தாங்காது புட்டுக்கொள்ளும், அதே சமயம் சங்கம் loosely coupled ஆக செயல்பட்டால் நிச்சயம் சில விசயங்களை செய்ய இயலும்...

TBCD சொன்னது…

அடுத்த இடுகையயை முந்தைய இடுகைகள் போல் புரியும் வண்ணம் எழுதுங்க.

//ஜெகதீசன் கூறியது...

இது சரி....
இரண்டாவது பதிவைத் தவிர்த்திருக்கலாம்...//

அப்படி ஒரு கோணம் இருக்கின்றது என்பதை ஏன் மறுக்குறீங்க.

"டா" - வுக்கு கொடுக்கும் மதிப்பை உள்ளடக்கத்திற்கும் கொஞ்சம் கொடுக்கலாம் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//X, Y, Z என்று மூன்று பொருட்களை எடுத்துக்கொள்வோம்.//

கணக்கு பாடம் அருமை !

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சங்கம் அல்லது அமைப்பு வேண்டும் என்று கருதுகிற நண்பர் பைத்தியகாரன்//

ஓ அப்படியா! புதிய செய்தி!

சிவபாலன் சொன்னது…

// "டா" - வுக்கு கொடுக்கும் மதிப்பை உள்ளடக்கத்திற்கும் கொஞ்சம் கொடுக்கலாம் :-) //

Repeatu..

பாரி.அரசு சொன்னது…

குழலி,
//
அதே சமயம் சங்கம் loosely coupled ஆக செயல்பட்டால் நிச்சயம் சில விசயங்களை செய்ய இயலும்...
//
ஓராண்டுக்கு முன்பு நீங்கள் எனக்கு விளக்கியது... "திராவிட இயக்கம், பாமக போன்று பல்வேறு அமைப்புகள் எவ்வாறு அதன் அடித்தள தொண்டர்களை நசுக்கியும், கொள்கையாளர்களை வெளியேற்றியும் தனிநபர் சொத்தாக/நிறுவனமாக மாற்றப்பட்டது என்பதை விளக்கினீர்கள்"

மிக சிறிய அளவில் நன்மைகள் சங்கத்தால் கிடைக்குமென்றாலும்... இழப்பு மிகப்பெரியதாக "வலைப்பூக்களின் பன்மை தன்மை சிதைவு"

நன்றி

பாரி.அரசு சொன்னது…

நன்றி ஜெகதீசன், டிபிசிடி, பாரதி, சிவபாலன்

கிருஷ்குமார் சொன்னது…

"Panami thamai sithaivu,Iyangiyal.." yena
purunthugolla Romabave kadinamaana vaarthai upayogangal.. Innum konjam yelimai paduthalame..

Related Posts with Thumbnails