இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

புதன், 31 மார்ச், 2010

பதிவர்கள் குழுமம் - ஏன் சாத்தியமற்றது? என்ன பாதிப்புகளை உருவாக்கும்?

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

இடுகையை வாசித்து சில நண்பர்கள் உரையாடியில் வறுத்தெடுத்து விட்டார்கள்... மிக கடுமையாக இருப்பதாக குறை கூறினார்கள்.

நிகழ்வுகளின் வழியாக எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன்.

வலைப்பூக்கள் பல்வேறு வகையில் இயங்கி கொண்டிருக்கின்றன.

ஒரு குழுமம்/சங்கம்/அமைப்பு என்று தொடங்கியவுடனே அதற்கு குறைந்தபட்ச அடிப்படை விதிமுறைகள் என்று ஒன்று உருவாக்கப்படும்.

முதலில் யாரெல்லாம் உறுப்பினர் என்பதிலேயே சிக்கல் தொடங்கி விடும்.

பாலியியல் கதை எழுதுகிற வலைப்பதிவருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
காமக்கதைகள் எழுதுகிற ஜ்யோவரம் சுந்தருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
சுகுணா திவாகர் மாதிரி அடிக்கடி கெட்ட வார்த்தை (வார்த்தை எப்படி கெட்டு போகும்?) பயன்படுத்துகிறவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
மத அடிப்படைவாத பதிவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?

இப்ப தகுதி அளவெடுப்பது யார்? அவருக்கென்ன தகுதி?

அடுத்து...
குழுமம்/சங்கம்/அமைப்பு விட்டு தனித்தியங்கும் பதிவரை... குழுமம்/சங்கம்/அமைப்பு சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து ஒடுக்குவார்கள்.

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவர் இந்துத்வ அரசியல் சார்பு உடையவர் என்றால்... அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு (முகவரி, தொலைபேசி எண்) என்ன பாதுகாப்பு?

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவரின் அரசியல் சார்ப்பும், அந்த அதிகாரத்திற்கு நெருக்கமாக ஒரு கும்பலும் உருவாகி விடும்பொழுது...

இங்கே தான் போன பதிவில் நான் எழுதியது...

இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

9 comments:

ஜமாலன் சொன்னது…

தேவையிலிருந்தே அமைப்புகள் உருவாகுகிறது. அமைப்புகள் தேவைகளை உருவாக்காது. ஏன் அமைப்பாக வேண்டும்? தேவை என்ன என்பது முக்கியம். மற்றபடி குழமமாக இயங்குவதில் எதிர்படும் சிக்கல் குழமங்களை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிடும். சரியான நோக்குடன், ஆரம்பிக்கப்பட்டால் நலமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.//

இது உங்கள் திணிப்பு.

நக்கீரனும், தினமலரும் ஊடகத் துறையில் இருக்கிறார்கள். இருவரது அரசியலும் வேறு......இருந்தாலும் பத்திரிக்கை அமைப்பு என்கிற தளத்தில் இருவரும் இணைந்தே செயல்படுகின்றனர், இதில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. நக்கீரன் உதை வாங்கினால் தினமலர் குரல் கொடுக்கிறான், தினமலர் வாங்கினால் நக்கீரன் குரல் கொடுக்கிறான்.

அமைப்பு என்று இயங்குபவர்கள் இயங்கட்டுமே, எந்த ஒரு இயக்கமும் கட்டுபாடு இல்லை என்றால் கலைந்து போகும் அதற்கு முன் குரல் எழுப்புவது கூட தேவையற்றதாகத்தான் தெரிகிறது. பதிவர்கள் அனைவரும் 'பச்சை' பிள்ளை என்று நான் கருதுவதில்லை. யாரும் பாண்ட் பேப்பரில் கையெழுத்துப் போட்டு உறுதி மொழி எடுத்துக் கொள்வது போல் தெரியவில்லை.

:)

பாரி.அரசு சொன்னது…

//தேவையிலிருந்தே அமைப்புகள் உருவாகுகிறது. அமைப்புகள் தேவைகளை உருவாக்காது. ஏன் அமைப்பாக வேண்டும்? தேவை என்ன என்பது முக்கியம். மற்றபடி குழமமாக இயங்குவதில் எதிர்படும் சிக்கல் குழமங்களை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிடும். சரியான நோக்குடன், ஆரம்பிக்கப்பட்டால் நலமே.//

சங்கம் வைத்தால் அதை செய்யலாம், இதை செய்யலாம் என்று பம்மாத்து பரப்புரை செய்கிறார்கள்.

எதற்கு அமைப்பு? என்று கேள்வி கேட்ட நண்பர் பைத்தியகாரனை பாசிச வன்மத்துடன் கட்டம் கட்டி எழுதுகிறார்கள்.

:(

பாரி.அரசு சொன்னது…

கோவி,
சில காலங்கள் கழித்து உங்கள் பின்னூட்டத்தை மறுவாசிப்பு செய்துக்கொள்ளுங்கள்.

குசும்பன் சொன்னது…

பாஸ் நான் வாங்கியிருக்கும் 2 லட்சம் விவசாய லோனை சங்கம் அடைக்குமா? கலை நிகழ்ச்சி நடத்தி?:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு கூறியது...
கோவி,
சில காலங்கள் கழித்து உங்கள் பின்னூட்டத்தை மறுவாசிப்பு செய்துக்கொள்ளுங்கள்.
//

நீங்களும் தீர்க்க தரிசி ஆகிட்டிங்களா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ் !

கல்வெட்டு சொன்னது…

// அமைப்பு என்று இயங்குபவர்கள் இயங்கட்டுமே, //

அதானே ? யாரும் தங்களுக்கான அமைப்பை தொடங்கலாம், பதிவு செய்யலாம் இயங்கலாம்.

ஆனால் எதற்கு பொதுவான பெயர்? அவர்களை மட்டும் சுட்டும் வண்ணம் இருக்கலாமே? ஈரோடு வலைப்பதிவர் குழுமம் என்பது போல. (இவர்களின் நோக்கமும் தேவையும் அவர்களின் பதிவில் இல்லை. ஆனால் அது ஈரோட்டுக்காரர்களின் பிரச்சனை)

"உலகத் தமிழ்ப்பதிவர்கள் சங்கம் " என்றால் சரியா இல்லையே கோவி

அகில வொலக டமில் வலைப்பதிவர் சங்கத் தலைவர் பேட்டி - நினைத்தாலே கொலைநடுங்குகிறது
http://kalvetu.blogspot.com/2010/04/blog-post.html

.

என்.ஆர்.சிபி சொன்னது…

//அதானே ? யாரும் தங்களுக்கான அமைப்பை தொடங்கலாம், பதிவு செய்யலாம் இயங்கலாம்.

ஆனால் எதற்கு பொதுவான பெயர்? அவர்களை மட்டும் சுட்டும் வண்ணம் இருக்கலாமே? ஈரோடு வலைப்பதிவர் குழுமம் என்பது போல. (இவர்களின் நோக்கமும் தேவையும் அவர்களின் பதிவில் இல்லை. ஆனால் அது ஈரோட்டுக்காரர்களின் பிரச்சனை)

"உலகத் தமிழ்ப்பதிவர்கள் சங்கம் " என்றால் சரியா இல்லையே கோவி//

இது சரியான கேள்வி!

பாரி.அரசு சொன்னது…

aganazhigai என்கிற ஐடி-யில் வந்து மைனஸ் ஓட்டு குத்திய பெருந்தகைக்கு நன்றி! (பூனைக்குட்டி போட்டா வலையில் தங்காதாம்... ஊரில் சொல்லுவாங்க..)

Related Posts with Thumbnails