செவ்வாய், 1 ஜூன், 2010

வினவு தோழர்கள்

வினவு தோழர்கள்

ஆணாதிக்க, பார்ப்பானிய, பாலியல் வன்மத்தையும், வக்கிரத்தை கண்டிக்கவும் அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் மறுக்கிறவர்கள் மனித சமூகத்தின் விரோதிகள்.

செந்தழல் ரவியை பற்றி மதிப்பு பன்மடங்கு என்னளவில் உயர்ந்துள்ளது. வணக்கங்கள் ரவி!
பின்னூட்ட உரையாடல்களை வைத்து பார்க்கும்பொழுது நர்சிம்,கார்க்கி இருவரும் மிகவும் தெரிந்தவர்களாகவும், நண்பர்களாகவும் ரவிக்கு உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் வன் கொடுமையை நிகழ்த்தும்பொழுது சப்பைகட்டு கட்டாமல் துணிந்து தவறு என்று உரத்து ஒலித்தற்கு வாழ்த்துகள்.

குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிற கார்க்கியின் தோழர்களும், தோழிகளும் அவருடைய மனநிலையை அறிந்து நடந்துக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.

வினவு தோழர்களை பற்றிய பல்வேறு அவதூறுகளை ஒரு சில பார்ப்பன பாசிஸ்ட்டுகள் பதிவுலகில் பதிவு செய்துக்கொண்டிருப்பதால்...

சில தகவல்கள்...

பார்ப்பானிய பாசிஸ்ட்டுகள், இந்துத்துவ பாசிஸ்ட்டுகள், சமூக விரோதிகள் மட்டுமே மூகமூடி அணிந்துக்கொண்டு பதிவுலகில் மற்றவர்களை மிரட்டிக்கொண்டும், மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வினவு தோழர்கள் எந்த முகமூடியும் அணிந்து பதிவுலகில் உலவ வில்லை.
வினவின் கைபேசி தொடர்பு எண் அவர்களுடைய vinavu.com தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வினவில் எழுதுகிற தனி மனிதர்களை பற்றிய குறிப்பும் அவர்களுடைய இணையத்தில் உள்ளது.

தோழர்களின் அரசியல் நிலைபாட்டில் மாற்றுகருத்து இருப்பவர்கள் கூட... தமிழகத்தை பொறுத்தவரை... மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளில் தோழர்களின் பங்களிப்பை மறுக்க இயலாது. மக்களோடு வாழ்பவர்கள். மக்களின் பிரச்சினைகளில் முன் நிற்பவர்கள்.

தோழர்கள் மிகப்பெரும்பாலோர் அன்றாட உழைப்பாளிகள், ஒரு சிலர் முழு நேர பணியாளர்கள்.

சிந்தனை, செயல், உழைப்பு அனைத்தையும் சமூக மாற்றத்திற்காக அர்ப்பணித்தவர்கள்.

தோழர்கள் உரையாட எளிமையானவர்கள்... அவர்களுடைய அலுவலகங்கள் சென்னையில் தான் இருக்கின்றன.

பதிவு எழுதுகிற பலர்...
பொழுதுபோக்கு
சுய அரிப்பை சொரிந்துக்கொள்ளுதல்
எதிர் பாலினரை ஈர்ப்பதற்காக எழுதுவது
கருத்து கந்தசாமிகளாக இருப்பது
காசு தேறுமா என்று எழுதுவது
சுய விளம்பரத்திற்காக எழுதுவது
பதிவில் எழுதி, வெகு மக்கள் ஊடாகத்திற்கு நகர்வது...

இப்படி பல்வேறு நிலைகளில் இருக்கிறார்கள்... விரல் விட்டு எண்ணக்கூடிய சமூக மாற்றதிற்கான எழுத்துகளில் வினவு குழுவினர் முக்கியமானவர்கள்.

வினவின் பணியினை ஆதரிப்போம்.
பார்ப்பானிய ஆணாதிக்கத்தை எதிர்ப்போம்.

2 comments:

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

உண்மை மக்களுக்காய் வினவு தளம் இயங்குகிறது என்பதே உண்மை

கோவி.கண்ணன் சொன்னது…

இவர் கூட வினவின் பெண்ணிய நிலைப்பாடு பற்றி தான் பாராட்டி எழுதி இருக்கிறார்.

//ஆணாதிக்க, பார்ப்பானிய, பாலியல் வன்மத்தையும், வக்கிரத்தை கண்டிக்கவும் அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் மறுக்கிறவர்கள் மனித சமூகத்தின் விரோதிகள்.//

கைதுக்கவில்லை என்று ரோட்டுல போற வர்றவனையெல்லாம் புடிச்சு முத்திரை குத்திவிடுங்க சார். நாங்களெல்லாம் எல்லாத்துக்கும் கருத்து சொல்வது போல எல்லாவற்றிற்கும் தீர்ப்பு சொல்லும் உரிமை ஒட்டுமொத்தமாக உங்களுக்குத்தான் இருக்கு

Related Posts with Thumbnails