வியாழன், 22 ஏப்ரல், 2010

பார்வதி அம்மையார் - உள்ளே வருவதில் நிகழ்ந்ததென்ன?

உயர்திரு பார்வதி அம்மையாரை விமானத்தை விட்டு இறங்க கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பிய மனித தன்மையற்ற காட்டுமிராண்டி தனமும், பாசிச வன்மமும் நிறைந்த நடவடிக்கையை கண்டு மனம் மிகவும் வேதனையடைகிறது.

80 வயதான அம்மையார் கிட்டதட்ட 4 மணிநேரம் விமான பயணம் செய்து வந்தவரை... உடல்நிலை சரியில்லாமல் இருந்த வயதான பெண்மணி கனிவோடு வரவேற்க வேண்டிய அதிகாரிகள்... இறங்காதே திரும்பி போ! என்கிற வன்மத்துடன் நடந்துக்கொண்டதை நினைத்து, நினைத்து வேதனையும், வெறுப்பும் எழுகிறது.

இந்த நிகழ்வையொட்டி யாரிடம் நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும்... யார் மீது நம்முடைய கோபம் எழ வேண்டும் என்று புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் நடந்த நிகழ்வை ழுமுமையாக அறிந்துக்கொள்வதின் வாயிலாக முடியும்.

பொருளற்ற சுயநல அரசியல் கூச்சல்களை ஓரம்கட்டி விட்டு... நடந்த நிகழ்வை புரிந்துக்கொள்ள முயற்சிப்போம்.

நான்கு நாட்கள் சில சென்னையில் ஊடகங்களில் வேலை பார்க்கும் நண்பர்கள் வாயிலாக சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நிகழ்வை எழுதுகிறேன். (நம்பக தன்மை என்பது வாசிப்பவரின் மனநிலையையும், பார்வையும் ஒட்டியது. என்னிடம் வந்து ஆதாரத்திற்கு தொங்க கூடாது)

1. உயர்திரு. வேலுபிள்ளை அய்யா அவர்கள் மரணத்திற்கு பிறகு இலங்கை அரசாங்கம் உயர்திரு பார்வதி அம்மையார் அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதியளித்தது.

2. உயர்திரு பார்வதி அம்மையார் அவர்கள் தமிழகம் வருவதற்காக கொழுப்பில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அங்கே அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

3. அதன்பிறகு உயர்திரு பார்வதி அம்மையார் மலேசியா சென்று அங்கிருந்து கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்ல விசா விண்ணப்பித்துள்ளார்.

4. மலேசியாவில் சுற்றுலா விசாவில் வருபவார்கள் 30 நாட்கள் மட்டுமே தங்க இயலுமென்பதால்... மறுபடி மலேசியாவிலிருந்து தமிழகம் வருவதற்கு விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.

இந்த இடத்தில் சிலவற்றை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்...

2007க்கு பிறகு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரங்கள் இந்தியாவுக்கான விசா விண்ணப்பங்களை நேரிடையாக வாங்குவதில்லை. மூன்றாம் தரப்பு ஏஜெண்டுகள் வழியாகவே விண்ணப்பங்கள் வாங்கப்படும்.இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? என்பதை சோதிக்கும் கருவி மட்டுமே வைத்திருப்பர். அவர்களிடம் யார், யார் எந்த, எந்த நாட்டில் உள் நுழைய தடை என்பதை பற்றிய பட்டியல் இருக்காது!.

இந்த ஏஜென்சிகள் அளிக்கும் விண்ணப்பத்தை வாங்கி 24 நான்கு மணி நேரத்துக்குள் விசா வழங்க வேண்டிய நிலையில் தூதரங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், அதோடு மற்ற சான்றிதழ்கள் வழங்கும் பணி, வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.

இவ்வாறு கொழுப்பில் நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பம், மலேசியாவில் விசா வழங்கப்பட்டுள்ளது.

திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் மிக நன்றாக தெரியும்... ஈழத்தமிழர்கள் பலர் மீது இந்தியாவில் உள் நுழைய தடை இருப்பது. அதில் குறிப்பாக புலிகளின் அமைப்பினர் சிலர் மீதும், பிரபாகரனின் பெற்றோர் மீதும் 2003ல் உள் நுழைய தடை வாங்கப்பட்டதை அறிவர். (திரு. நெடுமாறன் பழைய அறிக்கையென்றில் இதை எழுதியிருந்தார்... )

எப்பொழுதும் இந்திய மற்றும் இலங்கை உளவு துறையினர் கண்காணிப்பில் இருக்கிற உயர்திரு. பார்வதி அம்மையார். மலேசியாவில் விமானம் ஏறும்பொழுது தான் உளவு துறையினர் டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சு மற்றும் குடி நுழைவு (Immigration) அதிகாரிகள்... LTTE related person... don't deport, send back என்கிற உத்திரவை சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

யார் வருகிறார்கள்? என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே... சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் துறைக்கு தெரிவிக்க... சென்னை புறநகர் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடிநுழைவு அதிகாரிகள் தங்களுக்கு வந்த ஆணையை நிறைவேற்ற... வழக்கம்போல உணர்ச்சியும், சுயநலமும் மட்டுமே எஞ்சியுள்ள திரு.வைகோ தனியாக கதறிவிட்டு வந்திருக்கிறார்.

ஈழ ஆதரவாளர்களுக்கு தகவலை பரப்பியிருந்தால்... குறைந்தபட்சம் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்தி... அம்மையாரை உள் நுழைய அனுமதி வாங்கியிருக்க முடியும்.

தான் மற்றும் தான் மட்டுமே செய்தாக பேர் வாங்க வேண்டும் என்கிற வைகோவின் சுயநலம்.. ஆதரவாளர்கள் அற்ற தனியாளாக நின்றிருக்கிறார்.

இப்பொழுது...

தங்களுடைய வேலையை மட்டுமே பார்த்த உளவு துறையினர் தொடங்கி... குடி நுழைவு அதிகாரிகள் வரை... வயதான, உடல்நலம் குன்றிய அம்மையாரை பற்றிய எந்தவிதமான கருணையும் காட்டவில்லை என்பதற்காக நோவதா?

உள் நுழைய தடையிருக்கிறது என்பது தெரிந்தும்... அதை நீக்க முயற்சியெடுக்காமல்... ரகசியமான மற்றும் தவறான முறையில் திருமதி பார்வதி அம்மையாரை அனுப்ப முயற்சித்த (அ) அலைகழித்த அவருடைய பயணத்தை ஏற்பாடு செய்தவர்களின் மீது எரிச்சலடைவதா?

முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண்ட திரு.நெடுமாறன், திரு.வைகோ போன்றவர்கள் மீது பாய்வதா?

சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... ஒரு முதல்வர் மீது பாய்வதா?

மனித நேயமற்ற நடவடிக்கை என்பதை கண்டு... தமிழ்நாட்டில் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிய வேண்டிய தருணத்தில்... இதை வைத்தும் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?

நன்றி
அரசு

27 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//மனித நேயமற்ற நடவடிக்கை என்பதை கண்டு... தமிழ்நாட்டில் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிய வேண்டிய தருணத்தில்... இதை வைத்தும் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?//

மறுநாள் தினகரனைப் பார்த்து தகவல் தெரிந்து கொண்டதாகச் சொன்ன கருணாநிதியைப் பற்றி மூச்சு விடவில்லையே. திராவிடம் என்றால் கருணாநிதி என்கிற நம்பிக்கையோ ..... அதனால் மூச்சுவிட மாட்டீர்கள், பிறகு ஏன் இதற்கெல்லாம் அக்கரை எடுத்து ஒரு பதிவு.

மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டும் கருணாநிதி ஈழ விசயத்தில் எது நடந்தாலும் கண்டுக் கொள்ளப் போவதில்லை. கருணாநிதியின் ஆதரவாளரான நீங்கள் கூப்பாடு போடுவதால் மட்டும் ஏதேனும் ஆகிவிடப் போகிறதா ?

பதிவில் இருந்தால் ஏதாவது செய்வார்கள் என்பதற்காக ஆதரிக்கிறோம்.....என்கிற வழக்கமான புரிதலோ.....என்னவோ போங்க.

வலைப்பதிவு திருமா போல் இந்த பதிவை எழுதி இருக்கிங்க.

ஹூம்

கோவி.கண்ணன் சொன்னது…

பதிவில் என்பதை பதவியில் என்று படிக்கவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.//

இதெல்லாம் சுத்த பேத்தல் மற்றும் கற்பனை மட்டுமே.

இலங்கை பாஸ்போர்ட் என்றாலே இந்திய தூதரகம் எல்லாவற்றையும் ஆராய்ந்தே விசா வழங்கும். விசா கொடுத்து வரவழைத்து திருப்பி அனுப்பினால் தான் ஈழ ஆதரவு தமிழக தலைவர்களின் மீதும், ஆதரவாளர்கள் மீதும் கரியை பூச முடியும் என்கிற காங்கிரசு அரசின் நரித்தனம் என்றே நினைக்கிறேன். அதுக்கு உங்களைப் போன்றவர்கள் கட்டும் சப்பைக் கட்டுகள் சகிக்க முடியவில்லை.

ஜெகதீசன் சொன்னது…

@கோவி...

//
சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... ஒரு முதல்வர் மீது பாய்வதா?
//
இது என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... //

அது என்ன டெல்லி மத்திய அமைச்சர் பதவியா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் கூறியது...

@கோவி...

//
சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... ஒரு முதல்வர் மீது பாய்வதா?
//
இது என்ன?//

ரொம்ப தெளிவாத்தான் இருக்கியள், நெடுமாறன், வைகோ வை சுயநலவாதிகள் என்று குறிப்பிடும் திரு அரசு அவர்கள்.....கருணாநிதியை முதல்வர் என்று பதவி மரியாதையுடன் குறிப்பிடுவதுடன் விட்டு இருக்கிறார்

ஜெகதீசன் சொன்னது…

முதல்வரை முதல்வர் என்று கூப்பிடாமல் வேறு எப்படிக் கூப்பிட?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

2007க்கு பிறகு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரங்கள் இந்தியாவுக்கான விசா விண்ணப்பங்களை நேரிடையாக வாங்குவதில்லை. மூன்றாம் தரப்பு ஏஜெண்டுகள் வழியாகவே விண்ணப்பங்கள் வாங்கப்படும்.
//

இந்திய நாடே மூன்றாம் தரப்பு இத்தாலிய ஏஜெண்டிடம் தானே இருக்கிறது. விசா வழங்குவதை நான்காம் ஐந்தாம் தரப்பு ஏஜென்டிடம் கொடுக்கலாமே?

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் கூறியது...

முதல்வரை முதல்வர் என்று கூப்பிடாமல் வேறு எப்படிக் கூப்பிட?//

அப்படி என்றால் ஜெ வைக்கூட முன்னாள் முதல்வர் என்று தான் குறிப்பிடனும்...பாரி அரசு அது போல் இதுவரை எழுதியதாகத் தெரியவில்லை

குழலி / Kuzhali சொன்னது…

செந்தழல் ரவி பஸ்ஸில் எழுதியிருந்ததற்க்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியது இங்கேயும் பொறுந்தும் என்பதால்

Ravi I Strongly object the comment about Vaiko and Nedumaran, actually they behave very well in this... they kept it secret, if really they want to make a politics with this, they do not need to keep it secret and they could make it as a Public stunt... they did not do..

I feel that they consider her health and kept the whole episode as secret... but this secrecy is used by Indian Arasangam and Karunanithi arasangam, they sent back her... if they really make this as public stunt, they would have called thousands of cadres and people would have come to the Airport and challenge the Goverment...

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்திய நாடே மூன்றாம் தரப்பு இத்தாலிய ஏஜெண்டிடம் தானே இருக்கிறது. விசா வழங்குவதை நான்காம் ஐந்தாம் தரப்பு ஏஜென்டிடம் கொடுக்கலாமே?

22 ஏப்., 2010 9:02:00 pm//

இத்தாலி ஏஜெண்டுகளிடமும் அவர்களது கைக்கூலி கட்சித்தலைவர்களிடமும் என்று இருக்க வேண்டும்

குழலி / Kuzhali சொன்னது…

ஒரு கமெண்ட் சென்சார் ஆயிருச்சே :-((((((

பாரி.அரசு சொன்னது…

குழலி,
நீங்க போட்ட ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கிறேன்... வேறெதுவும் வரவில்லை... :(

கோவி.கண்ணன் சொன்னது…

/திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் மிக நன்றாக தெரியும்... ஈழத்தமிழர்கள் பலர் மீது இந்தியாவில் உள் நுழைய தடை இருப்பது. அதில் குறிப்பாக புலிகளின் அமைப்பினர் சிலர் மீதும், பிரபாகரனின் பெற்றோர் மீதும் 2003ல் உள் நுழைய தடை வாங்கப்பட்டதை அறிவர். (திரு. நெடுமாறன் பழைய அறிக்கையென்றில் இதை எழுதியிருந்தார்... )

எப்பொழுதும் இந்திய மற்றும் இலங்கை உளவு துறையினர் கண்காணிப்பில் இருக்கிற உயர்திரு. பார்வதி அம்மையார். மலேசியாவில் விமானம் ஏறும்பொழுது தான் உளவு துறையினர் டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.//

நல்ல யோசனை அப்படியே தாவூத் இப்ராஹிமுக்கும் பின்லேடனுக்கு மலேசியா வழியாக விசா கொடுத்து புடிச்சு போடச் சொல்லுங்க

குழலி / Kuzhali சொன்னது…

//வலைப்பதிவு திருமா
//
ரசித்தேன்...

இதை தான் போட்டிருந்தேன்... தவறிவிட்டது போல

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? என்பதை சோதிக்கும் கருவி மட்டுமே வைத்திருப்பர். அவர்களிடம் யார், யார் எந்த, எந்த நாட்டில் உள் நுழைய தடை என்பதை பற்றிய பட்டியல் இருக்காது!.

இந்த ஏஜென்சிகள் அளிக்கும் விண்ணப்பத்தை வாங்கி 24 நான்கு மணி நேரத்துக்குள் விசா வழங்க வேண்டிய நிலையில் தூதரங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், அதோடு மற்ற சான்றிதழ்கள் வழங்கும் பணி, வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.
//

ஓஓ இதுவும் சரிதான், இந்தியப் பிரதமரும் ரேண்டம் செக்கிங் முறையில தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மைதான். குலுக்கல் முறையாகக் கூட இருக்கலாம்.

வேடிக்கை.

அப்ப விசா என்பது கந்துடைப்பா? சாஸ்திரப்பா? விளக்க முடியுமா?

பாரி.அரசு சொன்னது…

ஜோதிபாரதி,
விசாவில் தெளிவாக எழுதியிருக்கும்.

விசா என்பது உள் நுழைய அனுமதியல்ல.

அனுமதியை முடிவு செய்வது குடிநுழைவு அதிகாரி.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண்ட திரு.நெடுமாறன், திரு.வைகோ போன்றவர்கள் மீது பாய்வதா?//

கலைஞர் தன்னிடம் நிறைந்து இருக்கும் சுய நலத்தில் கொஞ்சத்தை தன் முன்னாலய சகாவான வை.கோபால்சாமியிடம் கொடுத்துவிட்டார் போலும்.

பழ. நெடுமாறன் ஐயாவுக்கு என்ன சுய நலம் இருக்கக் கூடும்.

வீரமணிக்குத்தான் தொழில், சொத்து பாதுகாப்புக்காக கலைஞருக்கு பரஸ்பர அங்கீகாரம் என்கிற புரிந்துணர்வி்ல் இருக்கிறார்.

திருமா என்பவர் வெறுமா என்று தெரிந்துவிட்டது.

பின்னர் ஏன் வைகோவையும், பழ. நெடுமாறனையும் விமர்சிக்க வேண்டும்?

பாரி.அரசு சொன்னது…

ஜோதி,
வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான முகம்... புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு மெல்ல, மெல்ல வெளி வரத்தொடங்கியிருக்கு...

டாலரும், யூரோவும் தன்னுடைய வேலையை செய்ய தொடங்கியிருக்கின்றன.

வைகோ, நெடுமாறன், திருமா, இராமதாஸ் அப்புறம் திடீரென்று திரையில் காட்சி காட்டும் சில புதிய புலிகள் எல்லோரும் சொல்வது
"நான் தான் ஒரிஜினல் ஆதரவாளன், அவன் போலி ஆதரவாளன்"

குழலி / Kuzhali சொன்னது…

//வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான முகம்... புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு மெல்ல, மெல்ல வெளி வரத்தொடங்கியிருக்கு...

டாலரும், யூரோவும் தன்னுடைய வேலையை செய்ய தொடங்கியிருக்கின்றன.
//
கொஞ்சம் என்னென்ன என்று விளக்கி சொல்லலாமே... நாங்களும் தெரிஞ்சிக்கறோம்... இவங்களையெல்லாம் விட கருணாநிதி இந்த விசயத்தில் பெட்டராக இருக்கிறாரே அது எப்படி என்று நாங்களும் புரிந்துகொள்வோமே உங்களைப் போன்றவர்கள் புரிந்துகொண்டதை போல

குழலி / Kuzhali சொன்னது…

//விசா என்பது உள் நுழைய அனுமதியல்ல.

அனுமதியை முடிவு செய்வது குடிநுழைவு அதிகாரி.
//
உண்மைதான், பேசாமல் பார்வதி அம்மாவுக்கு சென்னை பிடிக்கலை திரும்பபோயிட்டாங்கன்னு எழுதிட்டா ரொம்ப வசதியா இருக்கும்.... நீங்க சுத்தி வளைச்சி சட்டமெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிங்க

பாரி.அரசு சொன்னது…

குழலி,
கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின்பு சிங்கை பதிவர்களுடன் மின்னஞ்சல் உரையாடலில்...

கருணாநிதி ஈழப்போரில் அரசியல் செய்கிறார்... என்பதை மிக துல்லியமாக ஜோவுடன் பேசியிருக்கிறேன். நேரமிருந்தால் பழைய அஞ்சல்களை புரட்டி பாருங்கள்.

கருணாநிதி அரசியல் செய்யும் பொழுது அதை எழுதிய நான்தான்...
இப்பொழுது...
உயர்திரு பார்வதி அம்மையாரின் திரும்ப அனுப்பப்பட்ட நிகழ்வு கருணாநிதியின் அரசியல்ல! என்று சொல்கிறேன்.

இதை வைத்து மற்றவர்கள் தான் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

குழலி / Kuzhali சொன்னது…

//உயர்திரு பார்வதி அம்மையாரின் திரும்ப அனுப்பப்பட்ட நிகழ்வு கருணாநிதியின் அரசியல்ல!
//
கனிமொழி மாநாடு மன்னிக்கவும் செம்மொழி மாநாடு நடக்கும்போது பார்வதி அம்மாள் இங்கிருப்பது தொந்தரவு என்றும் அனுமதிக்க வேண்டாம் என்றும் நோட் போட்டு அனுப்பியது தமிழக அரசு தான் என்ற பத்திரிக்கை குற்றச்சாட்டுக்கு வழக்கம் போல பூணுல் பத்திரிக்கை என்று சொல்லிவிடலாம் தானே

பாரி.அரசு சொன்னது…

குழலி,
அது இப்படி, இது அப்படி என்று
குற்றசாட்டு தானே யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

இன்றைக்கு வைகோ உளறிக்கொட்டியிருக்கிறார்...
ஐ.ஜி, டி.ஐ.ஜி, போலீஸ் படை எல்லாம் வந்திருந்தார்கள் என்று.

புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஜாங்கிட், இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வந்திருப்பது... வீடியோவை முழுமையாக பார்க்கும்பொழுது தெரிகிறது.

குழலி / Kuzhali சொன்னது…

//அது இப்படி, இது அப்படி என்று
குற்றசாட்டு தானே யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
//
அதானே நாமெல்லாம் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது அப்படியே அனைத்து ஆதாரங்களோடும் வீடியோ டேப்புகளோடும் தானே புட்டு புட்டு வைக்கிறோம்... விடுங்க பாஸீ

//புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஜாங்கிட், இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வந்திருப்பது... வீடியோவை முழுமையாக பார்க்கும்பொழுது தெரிகிறது.
//
பாரி.அரசு நீங்கள் ஒரு முடிவோடு இருக்கின்றீர்கள்... வாழ்க திராவிடம்

குழலி / Kuzhali சொன்னது…

எத்தனை சுட்டிகளும் கருத்துகளும் இங்கே பேசுவது எவ்வளவு தூரம் உங்களை தொடும் என்று எனக்கு தெரியும்.. உங்களுக்காக இல்லையென்றாலும் இங்கே படிப்பவர்களுக்காக இந்த சுட்டியை பகிர்கிறேன்...

வயசானவன்னுகூட பார்க்காம........ என்ற வசனத்தை தனக்கு மட்டுமே எழுதிக்கொள்ளக்கூடாது கலைஞர் அவர்களே!

அதிலும் குறிப்பாக எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் 2002ல் ஜெயலலிதா எழுதிய குறிப்புதான் காரணம் என்று வெக்கமில்லாமல் சொல்கிறார்.

அந்த குறிப்பு என்ன, நாம் கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் எழுதிய ஓலைக்குறிப்பா, அதை கண்ணில் ஒற்றி நிறைவேற்றுவதற்கு !

அரசு ஊழியர்களுக்கு எதிரான அவரது அரசு உத்தரவை உம்மால் எப்படி மாற்ற முடிந்தது?

சன் டீவியை பாதிக்கும் அரசு கேபிள் டீவி உத்தரவை உம்மால் எப்படி நிறுத்திவைக்க முடிந்தது?

அஞ்சா நெஞ்சனின் தினகரன் வழக்கு, தா.கிருஷ்னன் கொலை வழக்கு மேம்பால ஊழல் வழக்குகளை எப்படி அய்யா உம் இஷ்டம் போல வளைக்க முடிந்தது.

பிறகு ஏனய்யா இந்த குறிப்பை மட்டும் உம்மால் மாற்ற இயலவில்லை !

பாரி.அரசு சொன்னது…

குழலி,
அடிப்படை நிர்வாக அறிவை கூட தெரிந்துக்கொள்ள முயற்சி செய்யாத ஒரு நபர் எழுதிய பதிவை இங்கே குறிப்பிடுகிறீர்கள்.... வேடிக்கை!

அந்த பதிவில் உள்ளது...
//ஆனல் இவரோ தனக்கு நடந்தது ஒன்றுமே தெரியாது என்று கூறுகிறார்.

ஆனால் இவரின் அதிகாரத்தின் கீழ் பணியாற்றும் காவல் துறையோ, அன்றைய தினம் விமான நிலையதையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது, நல்ல முரண்பாடு.//

விமான நிலையத்தை பாதுகாப்பது மத்திய பாதுகாப்பு படை.

மாநில காவல் துறையினர் வாசல் வரைக்கும் தான் போக முடியும்.

நிகழ்வு நடந்து பத்து நிமிடத்தில் வீடியோ வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆணையர்களும் சில காவலர்களும் தான் காவல் படையா?

பாட்டாலியன் என்றால் எத்தனை காவலர் இருப்பர் என்கிற எண்ணிக்கை தெரியுமா?
அவர்களின் சீருடை எப்படி இருக்கும் என்பதாவது தெரியுமா?

காவல் படை வந்திருந்தது என்று சொல்பவர்கள்... அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
சும்மா போகிறபோக்கில் வைகோ மாதிரி உளறக்கூடாது.

Related Posts with Thumbnails