வியாழன், 12 ஜூலை, 2007

கனவும், நிகழ்வும்...

கண்ணாடி துகள்களின் மீது காலில் காயமில்லா கனவு பயணம்...
நிகழ்வுகளால் நிர்மூலமாக்கபடும் நிமிடங்களில் நரம்புகள் அறுந்து விட துடிக்கிறது!
கண்களில் கண்ணீர்துளி எட்டிபார்க்கிறது வந்து விழட்டுமா என்று!
சிந்தனையின் வீச்சில் எழும் வெப்பத்தால் மண்டை ஓடு கொதிக்கிறது!
எல்லா கனவுகளின் பயணமும் இப்படிதான் இருக்கிறது...

*********************************************

என் நினைவுகளில் பொதிந்தவை எல்லாம் நிகழ்வுகள்...
நிகழ்வுகளில் கற்பதையே கடமையாக கொண்டேன்...
காலவெளியில் கடந்து செல்ல கற்கிறேன்...
இது இறந்தபின்பும் இருக்கும் போராட்டம்...
இங்கே இருப்பு என்பது நிகழ்வில் வாழ்வது!
வாழ்வதோ காலவெளியில் கடந்து பயணிப்பது!

1 comments:

பெயரில்லா சொன்னது…

test

Related Posts with Thumbnails