இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

செவ்வாய், 10 ஜூலை, 2007

நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்...!

1999 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு வேலைத்தேடி வந்திருந்தேன். கணிணி பயிற்றுவிப்பாளர் வேலைக்கு போன இடத்தில் எல்லாம் communication skill சரியில்லை என்று விரட்டியடித்தார்கள். ஆங்கிலத்தில் சரளமாக பேசினால்தான் தொடர்புக்கொள்ள முடியுமா? நான் தமிழிலில் விடாம பேசுவேன் என்று சொல்ல நினைத்தேன்! என்ன பண்றது வேலை வேணுமே! ஒரு வழியா அலைந்து திரிந்து அடையாறுல்ல ஒரு நிறுவனத்தில் நம்ம 'சி' பாயிண்டர் திறமையெல்லாம் விளக்கி வேலையை வாங்கியாச்சு.
தினந்தோறும் 147 பேருந்துதில் தான் முகப்பேர்-லிருந்து அடையாறு போகணும், வரணும் அப்படி போய் வந்துக்கிட்டு இருந்தபோது, ஒருநாள் தி.நகர் பேருந்து நிலையத்துக்கு கொஞ்சம் முன்னாடி அந்த கண்ணம்மாப்பேட்டை சந்து தொடங்கிற இடத்துக்கிட்ட பேருந்தை நிறுத்திட்டாங்க... நானோ ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.

என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்த்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம், ஓரே இரைச்சல், சற்று உற்றுப்பார்த்ததில் அப்பொழுது தான் ஒரு மனிதனை வெட்டியிருக்கிறார்கள. காலில் ஒரு வெட்டு, கழுத்தில் ஒரு வெட்டு நரம்புகள் அறுந்து வெள்ளையாய், இரத்த நாளங்களிலிருந்து பச்சை இரத்தம் வடிந்துக்கொண்டிருக்கிறது.

ஓரு பெண் தன் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அழுது புரண்டுக்கொண்டிருக்கிறாள். அவளை சிலர் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றனர்.
நான் சட்டென அந்த மனிதனின் கண்களை பார்க்கிறேன். யாராவது வந்து தன்னை காப்பாற்ற மாட்டார்களா என்கிற கடைசிநேர கெஞ்சலா! இல்லை முடிந்தது இனி எதுவுமில்லை என்கிற வெறுமையா! இல்லை!இல்லை!! உயிர் போனதால் உறைந்து போயிருக்கிறதா!
சிறிது நேரத்தில் போக்குவரத்து சரியாகி அறைக்கு வந்தாகிவிட்டது. அடுத்தநாள் செய்திதாளில் கண்ணம்மாப்பேட்டையில் கேபிள் ஆப்ரேட்டர் மோகன் வெட்டி படுகொலை என்கிற வழக்கமான சிறிய கட்டத்தில் செய்தியும் வந்து விட்டது.
ஆனால் அந்த கண்கள் என்னுள்ளே எழுப்பிய கேள்வி இங்கே உயிர் வாழ்வதற்க்கே உத்திரவாதமில்லையா!
நான் அடிக்கடி நினைத்துக்கொள்வது...

நம் சட்டங்கள் பேச வேண்டுமானால்
ஷரிகாஷாக்கள் சாக வேண்டும்
அதற்கு ஊடகங்கள் ஊக்க மருந்து கொடுக்க வேண்டும்

சட்டம் செயல்பட வேண்டுமானால்
விலை அதிகம் கொடுக்க வேண்டும்
இல்லையென்றால் ஊமை சாட்சியாய் சட்டங்கள்!

இங்கே நல்ல தலைவன் யாரென்றால்
சில சீக்கிய குழந்தைகளையும், குடும்பங்களையும்
தீயிலிட்டு எரித்திருக்க வேண்டு்ம்
அப்போது தான் பிரதமர் பதவி உடனே கிடைக்கும்!

இங்கே ரத யாத்திரை நடத்தி
ரத்த வெள்ளத்தில் நடந்து வர வேண்டும்
அப்பொழுது தான் மக்கள் உங்களை மலையிட்டு 'ஜி' என்பார்கள்!

கொஞ்சமாவது கொலைகள் செய்தால் தான்
அரியணைகள் கிடைக்கும்!

மக்களே! கொலைக்காரர்களுக்கு அரியணையை கொடுத்து விட்டு
நாளை நாம் கொலை செய்யபடுவோம் என்றே வாழ்கின்றீர்களே!

(குறிப்பு : ஷரிகாஷா இளைஞர் காங்கிரஸாரின் இளமை ஆட்டத்துக்கு பலியான ஓரு மாணவி. இந்தக்கொலைக்கு பிறகு தான் ஈவ்டீசிங் சட்டம் பேச ஆரம்பித்தது.)

14 comments:

குட்டிபிசாசு சொன்னது…

உண்மை நண்பரே!!

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் குட்டிபிசாசு!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

அசுரன் சொன்னது…

உங்க குரல் சமூக பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் விருப்பத்துடன் ஒலிப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்.

அசுரன்

வெங்கட்ராமன் சொன்னது…

Simply Super

நந்தா சொன்னது…

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

என்ன பண்றது பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்ங்கறது சரியாதான் இருக்கு.

இப்போ எல்லாம் பிணம் தின்பதற்காகவே, பேய்களாகப் பார்த்து அரசாள வைக்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

குறைந்த பட்சம், கிட்ட போய் பார்த்து, நம்மால் ஏதும் உதவ முடியுமா என்று கூட பார்க்க அல்லது யோசிக்கத் தோன்றவில்லை...!
தூர இருந்து துப்ப எல்லேராலும் முடியும்.:(

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அசுரன்,
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

ஆழியூரான். சொன்னது…

'நீங்கள் எங்களுடன் இல்லையெனில் எதிரியுடன் இருப்பதாக அர்த்தம்' என்ற சமீபத்திய அருந்ததி ராயின் பேட்டிதான் நினைவுக்கு வருகிறது. அசுரன் சொன்னதுபோல உங்கள் குரல் ஒலிக்கும் திசை அவசியமானதாய் இருக்கிறது.

நந்தா சொன்னது…

//தூர இருந்து துப்ப எல்லேராலும் முடியும்.:(//

அதை அனானியா வந்து நீங்க சொல்றீங்க. கொடுமைடா சமி.

அய்யா அனானி, பாரி.அரசுக்கே நீங்க பயந்து அனானியா வர்றீங்க. ஆளும் அரசுக்கு இவர் பயப்படக்கூடாதா????

உண்மையில் அவர் ஏன் போய்ப்பார்க்க வில்லை. பயமா, வேறு காரணங்களா என்று தெரியவில்லை. அட்லீஸ்ட் நீங்க ஏன் போய் பார்க்க வில்லை என்று நாகரிகமாவாவது கேட்டிருக்கலாம். துப்பறதைப்பத்தியெல்லாம் நீங்க பேசாதீங்க....

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் வெங்கட்ராமன்!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் நந்தா!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

நந்தா!

முகம் காட்டாமல் முக்காடு போட்டுக்கொண்டு ஓலமிடும் அனானிகளுக்கு பதில் தர அவசியம் எனக்கிருப்பதாக தோன்றவில்லை.

உங்களுடைய பதிலுக்கும், அக்கறைக்கும் எனது சிரம் தாழ்நத வணக்கங்கள்.

கிட்டதட்ட எட்டு ஆண்டுகள் கழித்தும் என்னால் மிகச்சரியாக அதிர்வை காட்ட முடிகிறதென்றால் அந்த கொலையும் அதனால் உண்டான அதிர்ச்சியும் என்னை எவ்வாறு பாதிருக்கும் என்பதையும் கொலையின் முன்,பின் நடந்தவற்றையும் நான் விளக்க வேண்டியது பதிவின் நோக்கமல்ல.

பதிவின் நோக்கம் - அதிகாரங்கள் கொலை,கொள்ளை கூட்டத்தில் சேர்வதால் "ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பது கேள்விக்குரியதாய் ஆகி விட்டது" என்பதே!

நன்றி

James சொன்னது…

//(குறிப்பு : ஷரிகாஷா இளைஞர் காங்கிரஸாரின் இளமை ஆட்டத்துக்கு பலியான ஓரு மாணவி. இந்தக்கொலைக்கு பிறகு தான் ஈவ்டீசிங் சட்டம் பேச ஆரம்பித்தது.)//

Sharka Sha is rich marvadi urban beautiful girl. So media focus it. Before that incident so many such incidents happend in TN. but nither meida nor common man intersted those.

So law will awake only for some section of people only.

paavel சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பாரி.அரசு சொன்னது…

தோழர் பாவெல்!
பதிவிற்க்கு சம்பந்தமில்லாத உங்களுடைய பின்னூட்டம் நீக்கப்பட்டது மன்னிக்கவும்! நான் எனது மின்னஞ்சலில் படித்துக்கொள்கிறேன் நன்றி!

Related Posts with Thumbnails