செவ்வாய், 11 மார்ச், 2008

மரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...!-2

மரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...!...
மரணத்தின் மூலம் புனிதப்பட்டம் கட்ட நினைக்கும் கோமாளிகளுக்கு...
சிலவற்றை தவிர்த்து விட்டு... செயல்பாடுகளில் நகர்வதையே விரும்பினாலும்... சிலர் விடுவதாக இல்லை... முகமே பார்த்திராத ஒருவரை எதிர்க்கிறோம்... அவருடைய மரணத்தை கொண்டாடுகிறோம் என்றால், அதற்க்கான காரணம் என்ன?

இந்தியா என்ற நாட்டில் 40 கோடி மக்கள் சேரிகளில் தீண்டதகாதவர்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பல இடங்களில் சாலைகளில் நடமாட முடியாது... தோளில் துண்டு போட முடியாது, வேட்டியை இறக்கி கட்ட வேண்டும். உடையிலிருந்து, உணவு, உறைவிடம் அனைத்தும் அளந்து இது தான் உனது வாழ்க்கை என்று கூனி குறுகி நாயினும் இழிந்து வாழ்கிறார்கள், அவர்களுடைய பெண்கள் பால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய குடிசைகள் ஆண்டு முழுவதும் தீக்கிரையாகிறது. அவர்கள் இன்னும் மனிதர்களாக நடத்தப்படவில்லை... இதற்க்கு காரணமென்ன?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்ணாசிரம முறையை இந்த நாட்டில் பிரச்சாரம் செய்த அதிகார வெறி பிடித்த பொறுக்கிகளே காரணம்!

இதில் நேரிடையாக பார்க்கப்போனால் சாதிய ஒடுக்குமுறையை செய்பவர்கள் சாதி எனும் நோய் பீடித்தவர்களாக இருக்கிறார்கள் (நன்றி : ஆதவன் தீட்சண்யா)... இவர்களுக்கு சாதி எனும் நோய் போக்க அறிவு எனும் மருத்துவம் தேவைப்படுகிறது.

ஆனால் பார்ப்பானீயம் (சாதிய ஒடுக்குமுறை) பிரச்சாரம் செய்பவர்கள் இந்த நோயின் மூலமாக (நச்சு கிருமியாக) இருக்கிறார்கள். இவர்களை அழிப்பதை தவிர வேறெந்த வழியும் கிடையாது.

ஒருபுறம் விழிப்புணர்வும் இன்னொரு புறம் எதிர்ப்பும்(அழித்தலும்) என்ற இருமுனை நகர்வாக சாதிய எதிர்ப்பு இருக்கிறது.

சுஜாதா யாரென்றே தெரியாது... அவருடைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன்... அசைப்போட்டேன்... கட்டாயம் எதிர்க்க வேண்டிய ஆள் மட்டுமல்ல... இவர் எழுதினால், பேசினால் பார்ப்பானீயத்தை வலுவாக முன்னிறுத்துகிறார் என்பதை புரிந்துக்கொண்டேன்...

சுஜாதா மட்டுமல்ல பார்ப்பானீயத்தை முன்னிறுத்துகிற(பிரச்சாரம் செய்கிற) அனைத்து நாய்களையும் எதிர்க்க(அழிக்க) வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அப்புறம் நிறைய பேர் மனிதநேயம், நாகரிகம், பண்பாடு பற்றி மின்னஞ்சல் எழுதியிருக்கிறார்கள்... ஊடக வெளிச்சத்தின் பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தி தங்களுடைய மனிதநேயத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டை கட்டிக்காக்கிற கனவான்களே! கோடிக்கணக்கான மக்களை நாலாந்தர மனிதர்களாக நடத்துகிற பார்ப்பானீயத்தை ஆதரித்த சுஜாதாவை முதலில் மனிதனாகவே ஏற்றுக்கொள்ளவில்லை...

முதலில் மனிதநேயம் என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள்! அப்புறம் அடுத்தவனுக்கு இருக்கா என்று அளவெடுக்கலாம்!

அழகாக எழுதினார், கவர்ச்சியா எழுதினார், விறுவிறுப்பாக எழுதினார் சுஜாதா என்று புளாங்கிதமடைகிறவர்களுக்கு... வாசித்தீர்களே! எதை வலியுறுத்துகிறார், எதை பிரச்சாரம் செய்கிறார் என்று யோசிக்க ஏன் மறுக்கிறீர்கள்?

பதிவர் மாயாவுக்கு,

சுஜாதா பார்ப்பனர் என்பதற்க்காக எதிர்க்கவில்லை அய்யா! அவருடைய பார்ப்பானீய பிரச்சாரத்திற்காக எதிர்க்கிறேன். அதனாலேயே அவருடைய மரணத்தை கொண்டாடுகிறேன்.

அவருடைய புத்தகங்கள் வாசித்திருக்கிறீர்களா! அவருடைய பார்ப்பானீய பிரச்சார எழுத்துகளை இங்கே வைத்து விவாதத்திற்க்கு அழைக்கிறேன்! தயாரா?

2 comments:

TBCD சொன்னது…

ஒரு பய வர மாட்டான்..

இது வரைக்கும் குற்றச்சாட்டை ஒருவரும் மறுக்க வில்லை.

பார்ப்பனீயத்தை வளர்ப்பவர்கள் எல்லாம் பார்ப்பனரே..

ஆக, சுஜாதா பார்ப்பனர் தானே..

பெயரில்லா சொன்னது…

//அவருடைய புத்தகங்கள் வாசித்திருக்கிறீர்களா! அவருடைய பார்ப்பானீய பிரச்சார எழுத்துகளை இங்கே வைத்து விவாதத்திற்க்கு அழைக்கிறேன்! தயாரா?//

இதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். போடுங்க ஒரு பதிவு. அப்புறமா விவாதிக்கலாமா இல்லையா பாப்போம்.

Related Posts with Thumbnails