//
பாரி,
சுஜாதா புனித பிம்பம் என்றெல்லாம் சொல்லவரவில்லை, ஆனாலும் சக மனிதன், எழுத்தாளர் (சித்தாந்தம் பிடிக்கலைனாலும்) இறந்த அன்றே அவர் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, பின்னர் கூட விமர்சனத்தை வைக்கலாம், எப்படி இருப்பினும் அவர் படிக்கப்போவதில்லை, பின்னர் ஏன் இப்படி?
//
இந்த பதிலை அங்கயே எழுதியிருக்கலாம்..., ஆனால் நிறையபேர் வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தனி இடுகையாக எழுதுகிறேன். சுஜாதாவின் மீதான விமர்சனத்தை பல்வேறு இடங்களில் எழுதியிருக்கிறேன்.
நேற்று அவர் மரணத்தின் மூலம் நடந்த அரசியல் என்பது முக்கியமானது. பார்ப்பானீயத்தின் மீது பிடிப்புள்ளவர்கள் (அது பூணூல் போட்டவர்கள், போடாதவர்கள் யாராக இருந்தாலும் சரி!) அவருக்கு இரங்கல் எழுதியது என்பது முக்கியமல்ல... இந்த நிகழ்வை பயன்படுத்தி அவருக்கு அரியணையும், புனிதப்பட்டமும் தர தயாரானவர்களுக்காகவே, விமர்சனம் எழுத வேண்டியதானது.
கடந்த காலக்கட்டங்களில் நாம் தவறிழைத்த புள்ளியும் இதுவே, மரணித்தால் பண்பாடு காக்கிறோம் என்று, நாம் அடக்கி வாசிக்க அந்த சந்தில் புகுந்து மேடைப்போட்டு புனிதப்பட்டம் கட்டி விடுகிறார்கள்.
இரண்டாவது இப்ப நடுநிலை வேடம் போடுகிறவர்களை பற்றியது... அப்பா! ஆசாமிகளே! சில மாதங்களுக்கு முன்பு சுப.தமிழ்செல்வன் அவர்கள் குண்டுவீச்சில் மரணமடைந்த பொழுது, ஆசிப் பதிவிலும், ரங்கன் பதிவிலும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்... அப்போ இவர்கள் ஏன்? நாகரிகமற்ற செயல் என்று குரல் கொடுக்கவில்லை?
பார்ப்பானீய அரசியல் என்பது வளர்வதற்க்காக காட்டி(கூட்டி) கொடுப்பது, வளர்ந்த பிறகு பார்ப்பானீயத்தை தாங்கி பிடிப்பது, செத்த பிறகு மேடைப்போட்டு புனிதப்பட்டம் அளிப்பது. அதை அந்தந்த கணத்திலேயே எதிர்ப்பதை தவிர... நாகரிகம், பண்பாடு என்று பம்ம முடியாது!
வலிந்து பீடமேற்றல் நடக்கிற வேளையில், உறங்கிக்கொண்டிருக்க இயலாது நண்பரே!
நன்றி!
வியாழன், 28 பிப்ரவரி, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 comments:
பட்டாசு..பட்டாசு...
******
டோண்டு பதிவில் உங்களுக்கும் பின்னுட்டம் தயார் ஆகிக்கிட்டு இருக்கும்..இந்நேரம்.. :)
//
கடந்த காலக்கட்டங்களில் நாம் தவறிழைத்த புள்ளியும் இதுவே, மரணித்தால் பண்பாடு காக்கிறோம் என்று, நாம் அடக்கி வாசிக்க அந்த சந்தில் புகுந்து மேடைப்போட்டு புனிதப்பட்டம் கட்டி விடுகிறார்கள்.//
சூழலுக்கு பொருத்தமான முக்கியமான கருத்து.அச்சு ஊடகங்களில் இனி ஒருமாத காலத்திற்கு புனித பாமாலைதான்.சகிக்க முடியாது.
Great!!!!!!!
welldone bravo!!!
கருத்துரையிடுக