இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

வியாழன், 28 பிப்ரவரி, 2008

இலவசங்களை பற்றிய சில பினாத்தல்கள்...!

சிங்கை ஒரு முதலாளித்துவ நாடு என்பதன் ஊடாக ஏகப்பட்ட விமர்சனங்களை கொண்ட நாடு. ஊடக சுதந்திரம் கிடையாது. உலகளாவிய மனித நேய ஆர்வலர்கள் உள் நுழைய தடை, மிக அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றுகிற நாடு, இன்னும் மனிதனை இயந்திர மயமாக்கி அவனுடைய சுயத்தை இழக்க செய்வதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதையெல்லாம் தாண்டி மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். பயம் அப்படின்னு ஒற்றை சொல்லை பதிலாக பலர் சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளுறைந்து கிடக்கிறது...

அதிலொன்று சமூகத்தில் பாதிக்கப்படுகிறவர்களை கண்டுணர்ந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், உதவிகளையும் வழங்குவது, அதன்மூலம் சமூகத்தின் நிலைதன்மையை கட்டிகாப்பாற்றுவது.

1. நான் சிங்கை வந்த புதிதில் ஒரு குடும்பத்தில் அதன் குடும்பதலைவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பம் அள்ளாடியது... குழந்தைகள் படிக்க முடியாமல் வறுமையில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள். அந்த குடும்பத்தை பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே SINDA என்கிற அமைப்பின் மூலம் அரசு உடனடி கடன், மாற்று ஏற்பாடு, இன்னும் என்ன, என்ன வசதிகள் செய்து தர முடியுமோ அத்தனையும் செய்துக்கொடுத்து அவர்களை மீள் கட்டமைத்தார்கள்.

2. இன்னொரு குடும்பம் வசிக்க வீடு இல்லாமல் MRT நிலைய பாதையில் தஞ்சம் புகுந்தார்கள், உடனடி நடவடிக்கையாக குறைந்த வாடகை வீடு அரசு வழங்கி அவர்களை பாதுகாத்தார்கள்.

3. நிகழ்ந்து முடிந்த சீன புத்தாண்டு நிகழ்ச்சிக்கு குறைந்த வருவாய் உள்ள 3000 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு சிங்கை டாலர் 5000 (ஏறக்குறைய 1,40,000 இந்திய ரூபாய்கள்) மதிப்புள்ள பை ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அமைச்சர் பெருமக்களும், எம்.பி களும் நேரிடையாக ஒவ்வொரு வீடாக சென்று வழங்கினார்கள்.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும். எந்தவொரு பிரிவினருக்கும் எந்த பிரச்சினை என்றாலும் அருகிலுள்ள சமுதாய மையத்தை அணுகினால் குறைந்தபட்ச உதவி கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

அரசு என்பது முதலாளித்துவமாக இருக்கிறதா, பொதுவுடமை அரசாக இருக்கிறதா என்பதை விட அது மக்கள் நலனில் அக்கறையுள்ளதாக இருக்கிறதா என்பதே முக்கியமானதாக இருக்கிறது.

இங்கே இதை குறிப்பிடுவதற்க்கு காரணம், இலவசங்களையும், உதவிகளையும் பற்றிய தவறான கருத்துக்களை பரப்புவதில் காட்டுகிற அக்கறையை, அது சரியான ஆட்களுக்கு போய் சேருவதற்க்கான நடவடிக்கையை நாம் விரிவுப்படுத்த வேண்டும்.

ஒன்னுமே புரியல... உலகத்திலே...!

இந்த இடுகையை நான் எழுதிய நோக்கமே... இதுவே!

எந்தவொரு காலக்கட்டத்திலும் சமூகத்தில் பாதிப்படைந்தவர்கள் இருந்துக்கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவது என்பதும், அவர்களை மறுகட்டமைப்பது என்பதும் மிக முக்கியமானது. அதன் மூலமே மனிதன் சமூகமாக வாழ தலைப்பட்டதன் உண்மையான பலனை அடைய முடியும்.

வலுத்ததே வாழும் என்கிற பிழைப்புவாதத்தை முன்னிறுத்துவது என்பது விலங்கியலுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். மனிதன் சமூகமாக வாழுவதின் பொருளே வலுவிழந்தோரை அரவணைத்து செல்வதில் தான் இருக்கிறது.

5 comments:

வவ்வால் சொன்னது…

//வலுத்ததே வாழும் என்கிற பிழைப்புவாதத்தை என்பதை முன்னிறுத்துவது என்பது விலங்கியலுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். மனிதன் சமூகமாக வாழுவதின் பொருளே வலுவிழந்தோரை அரவணைத்து செல்வதில் தான் இருக்கிறது.//

பாரி,
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள், ஆனாலும் விலங்கின் மிச்சம் நம் மரபில் எச்சமாக இருப்பதால் விலங்கு குணம் அவ்வப்போது தலை தூக்கிக்கொண்டே தான் இருக்கிறது.

மனிதன் வெறும் விலங்கல்ல சமூக விலங்கு!

ஒரு பக்கம் வலுத்தவன் வாழ்வான் என்று சித்தாந்தம் செயல்ப்படும், அடுத்த பக்கம் அனைவருக்கும் அனைத்தும் என்று இளைத்தவனுக்கும் கை தூக்கிக்கொடுக்க முயற்சி நடக்கும்.

TBCD சொன்னது…

விலங்கு..என்று வவ்ஸ் சொல்லுவது தன்னைத் தானோ.. :P

பாரி.அரசு சொன்னது…

நன்றி வவ்வால்!

சுதாகர் சொன்னது…

இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்...

TBCD சொன்னது…

இந்தப் வலைப்பூவின் தொடர்ச்சியயை நானும் எதிர்ப்பார்க்கிறேன்...
:)

Related Posts with Thumbnails