Incredible India !
இடுகையை வாசித்தவுடன்... தன்னை சுற்றி நிகழும் நிகழ்வில் நாம் என்ன பாடம் படிக்கிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது! ஆயிரகணக்கான ஆண்டுகளாக பரப்புரை செய்யப்பட்ட பார்ப்பானீய பிதற்றல்களால் நாலஞ்சாதியாய் நலிந்த மக்கள் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் தோட்ட தொழிலாளர்கள் தேவையென்று அழைத்தபோது... சொந்த மண்ணை, உறவுகளை விட்டு,விட்டு... சமூக, பொருளாதார இழிநிலைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள புறப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைய சிங்கப்பூர், மலேசிய தமிழ் மக்களின் ஆணிவேர்.மூன்று தலைமுறைகளாக உழைத்து உருவாக்கிய சமுதாயம் தான் சிங்கப்பூர், மலேசியா தமிழ் மக்கள் சமூகம்.
இவர்களை சொந்த மண்ணிலே வாழவிடாமல் விரட்டிய இந்திய பார்ப்பானீய,பனியா அதிகார மையங்கள். தமிழர்கள் தங்கள் உழைப்பால் உருவாக்கிய சமூகத்தின் ஊடாக தனது அதிகார பரவலாக்கத்தை தொடங்கி இருக்கிறது.
மதம், கலை, கலாச்சாரம் (பண்பாடு) என்கிற போர்வையில் இவர்கள் தமிழர்களின் தோளில் ஏறி நடக்க தொடங்கியிருக்கிறார்கள்.
இந்திய தேசிய அடையாளத்துடன் இருக்கிற மக்களில் 95 சதவிகிதத்திற்க்கு மேலாக தமிழர்கள் வாழ்கிற நாட்டில் இந்திய அரசாங்கம் நடத்துகிற கலை, கலாச்சார விழாக்களில் எல்லா விளம்பரங்களும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வருகிறது. தமிழ் ஒரு அதிகாரபூர்வமான அரசாங்க மொழி இந்தியாவில்! சிங்கப்பூரில் தமிழ் அதிகாரபூர்வமான அரசாங்க மொழி! இங்கேயிருக்கிற மக்களுக்கு தமிழில் விளம்பரங்களும், நிகழ்வுகளும் நடத்துவதில் இந்திய கலை மற்றும் கலாச்சார துறைக்கு என்ன கேடு வந்தது. நடத்தமாட்டார்கள் தமிழன் இளிச்சவாயனாயிற்றே! தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்திய அரசாங்கம் தமிழில் தொடர்புக்கொள்ளாமல் மக்களுக்கு புரியாத இந்தியில் ஏன் தொடர்புக்கொள்கிறது?
இந்திய பார்ப்பானீய, பனியா அரசாங்கம் சிங்கப்பூர், மலேசியா அல்லது எங்காவது பிழைக்க ஓடிய தமிழனை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை... அவனிடமிருந்து ஏதாவது சுரண்ட முடியுமா என்று பார்ப்பதே இலக்காக கொண்டது.
இன்றைக்கு சிலோன் ரோட்டில் இருக்கிற தமிழ் இசைப்பள்ளிக்கு மரியாதை குறைந்து. கிட்டதட்ட 10க்கு மேற்ப்பட்ட கர்நாடக இசைப்பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
காவேரியில் தண்ணீர் இல்லாமல் 2 லட்சம் பேர் விவசாய குடும்பங்களிலிருந்து சிங்கப்பூர், மலேசியா விற்கு கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முறையான விசா ஏதுவுமின்றி ஒளிந்து மறைந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரகணக்கானோர் சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் வாடுகின்றனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 10,000 இளைஞர்கள் தங்களை இலங்கை அகதிகள் என்று அறிவித்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.
இவர்கள் செத்தால் பிணம் கூட அவர்கள் வீட்டுக்கு வராது. தன்னுடைய முகவரியை தொலைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் 3 தலைமுறைக்கு முன்னால் போன பூணூல் போட்டவனின் பேரப்புள்ளைக செய்கிற சாதனைக்கெல்லாம் விழா எடுக்கிற இந்திய பார்ப்பானீய, பனியா அரசாங்கங்கள். மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிற பார்ப்பானீய ஊடகங்கள். எத்தனை சிங்கப்பூர், மலேசிய, தென்னாப்பிரிக்க தமிழர்களின் சாதனைகளை கொண்டாடியது. ஏனென்றால் இவர்கள் குறுக்கே நூல் போடாதவர்கள். எத்தனை பேரை இந்திய அரசாங்கம் கெளரவித்திருக்கிறது.
அட! விமான சேவை என்று ஒன்று இருக்கிறது. மற்ற நாடுகளியெல்லாம் விமான சேவை என்பது சேவை துறை (service industry) அதனால் அதில் பயணம் செய்கிற மக்களின் நலனுக்கு உகந்ததை செய்வார்கள். இந்தியாவில் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் இருக்கிறது 'இந்தியன் ஏர்லைன்ஸ்', 'ஏர் இந்தியா' என்று சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கோ, திருச்சிக்கோ போகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்... அவர்களுக்கு புரியுதோ இல்லையோ ஆங்கிலத்திலும், இந்தியிலும் அறிவிப்புகள் செய்துக்கொண்டிருப்பார்கள். ஏண்டா வெண்ணைகளா! பயணம் செய்கிறவனுக்கு புரியாத மொழியில் எதற்க்கடா அறிவிப்பு? புரியுதோ இல்லையோ! அவ்வளவு கொழுப்பெடுத்த இந்தி திமிர்! மற்ற விமான சேவை நிறுவனங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ், மிகினி லங்கா எல்லோரும் தமிழில் அறிவிப்புகள் கொடுக்கும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் வர மாட்டேங்கிறது. ஏனென்றால் தமிழன் இளிச்சவாயன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் :(
16 comments:
நீங்கள் சொல்வது சரிதான்,
பெரும்பான்மை ஆளுங்களுடன் பழக இந்தி படிங்க என்கிறார்கள், தமிழர் பெரும்பான்மையாக செல்லும் நாடுகளுக்கு இந்தியா தவிர மற்ற நாடுகளில் தமிழில் அறிவுப்பு செய்கிறார்கள்.
அனல் பறக்கிறது...
நாளாக நாளாக தோல் மரத்துப் போயிடுது..
அட்டைகள் ஏறினாலும் நம்மால் உணரப்படுவதில்லை...
அட்டை மேல் நெருப்பு வைச்சாப்ல இந்த பதிவு...சூடு..சூடு....
ம்ம்ம்...:((
//காவேரியில் தண்ணீர் இல்லாமல் 2 லட்சம் பேர் விவசாய குடும்பங்களிலிருந்து சிங்கப்பூர், மலேசியா விற்கு கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முறையான விசா ஏதுவுமின்றி ஒளிந்து மறைந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரகணக்கானோர் சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் வாடுகின்றனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 10,000 இளைஞர்கள் தங்களை இலங்கை அகதிகள் என்று அறிவித்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.
இவர்கள் செத்தால் பிணம் கூட அவர்கள் வீட்டுக்கு வராது. தன்னுடைய முகவரியை தொலைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.//
இந்தப் பிரச்சனையே தனிப்பதிவாக கவனம் குவித்து எழுதப்பட வேண்டிய ஒன்று.
//மூன்று தலைமுறைகளாக உழைத்து உருவாக்கிய சமுதாயம் தான் சிங்கப்பூர், மலேசியா தமிழ் மக்கள் சமூகம்.
இவர்களை சொந்த மண்ணிலே வாழவிடாமல் விரட்டிய இந்திய பார்ப்பானீய,பனியா அதிகார மையங்கள்.//
150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழர்களின் புலப் பெயர்வு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒன்று. அதற்கு இன்றைய அதிகாரவர்க்கத்தை குறைகாணமுடியுமா?
முற்றிலும் உண்மை.
சர்வதேசத்தை விடுங்கள்,
சென்னையில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களிலும், சென்னைக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் அறிவிப்பு, மற்றும் பாதுகாப்பு குறித்து செய்யப்படும் விளக்கங்களும் தமிழில் இருப்பதில்லை. Hindi & English
மட்டுமே.
இதனை பற்றி நானும் ஒரு பதிவு போட வேண்டும் என்று இருந்தேன்.
நன்றி அரசு ஐயா.
பாரி.அரசு,
நியாயமான கேள்விகள். கவனிப்பார் யாரோ?
காவேரிப் பிரச்சினைக்கும் பெறுகிவரும் மலேசியா, சிங்கை மற்றும் அய்ரோப்பாவில் முறையான, முறையற்ற விசாக்கள் இல்லாமல் வேலைக்கு செல்லும் தமிழர்களின் நிலையை மேலேட்டமாக கூறியிருப்பதனை தனிப்பதிவாகவே ஜமாலன் கூறுவது போல போட்டு சற்றே ஆராய்ந்து பார்க்கலாம்.
//150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழர்களின் புலப் பெயர்வு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒன்று. அதற்கு இன்றைய அதிகாரவர்க்கத்தை குறைகாணமுடியுமா?//
ஜமாலன் அப்ப வலுக்கட்டாயமாக அவ்வாறு புலம் பெயர வைத்தார்களா, ஆஃப்ரிகாவில் கறுப்பினத்தவர்களை வலை போட்டு அள்ளி எடுத்துச் சென்றதனைப் போல... அவ்வாறின்றி தானாகவே சென்றார்கள் என்றால் எது அவர்களை அப்படி ஒரு முடிவிற்கு இட்டுச் சென்றது?
கோவி!
இந்திய தேசியம் என்பது வலிந்து திணிக்கப்படுகின்றன ஒன்று... அதை மறுத்து போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்...
இந்திய தேசியம் என்பது பஞ்சாப்காரர்களுக்கோ, காஷ்மீரிகளுக்கோ, அசாமிகளுக்கோ, பீகாரிக்கோ,தமிழர்களுக்கோ, கன்னடர்களுக்கோ.. இன்னும் எந்த இனக்குழுவாக இருந்தாலும்,இல்லை குறைந்தபட்சம் மனிததன்மை உள்ளவர்களுக்கோ எந்த வித நன்மையும செய்ய போவதில்லை...
அது பார்சி, பார்ப்பானீய,பனியா நலனுக்காக உருவாக்கப்பட்டது. அதையே தனது கொள்கையாக கொண்டது.
இந்த பார்ப்பானீய,பனியா பன்றிகளின் நலுனுக்காக இந்தியை தாங்கிபிடிக்கிறது. நாளை ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழியையோ தாங்கி பிடிக்கும். ஏனென்றால் பார்ப்பானீயா, பனியா நலன் என்பது பச்சோந்தி தனமானது, அது எதையும் நிரந்தரமாக கொண்டதல்ல! தனது சுயநலத்திற்க்காக எதையும் மக்கள் மீது திணிக்கும்.
இந்த தேசியம் என்பது சிதைய வேண்டும். சுயநிர்ணயமுள்ள புதிய தேசிய சிந்தனை உருவாக வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தமிழர்களாவது சுயநிர்ணயமுள்ளவர்களாக வாழ போராட வேண்டியதிருக்கிறது...
வாருங்கள் திபிசிடி!
மரத்துப்போவதல்ல! மானமற்று வாழ்வதே கொள்கையாகி போனதோ:( என்று தோன்றுகிறது:(
வாருங்கள் ஜெகதீசன்!
ம்... என்றால்... சொல்லுடா சொல்.. எந்த செவிடன் காதில் ஏறப்போகிறது! என்பது போலுள்ளது!
வாருங்கள் ஜமாலன்!
//
இந்தப் பிரச்சனையே தனிப்பதிவாக கவனம் குவித்து எழுதப்பட வேண்டிய ஒன்று.
//
எழுத வேண்டும்... ஏற்கனவே வாக்கு கொடுத்த சிலவையும் தேங்கி நிற்கிறது...
//
150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழர்களின் புலப் பெயர்வு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒன்று. அதற்கு இன்றைய அதிகாரவர்க்கத்தை குறைகாணமுடியுமா?
//
இது குறித்து தனிபதிவாகவே எழுதி விடுகிறேன்.. பின்னால் தெகா கேட்டிருக்கும் கேள்வியே அதன் அடிநாதம்...
வாருங்கள் நைனா!
ஃஃ
இதனை பற்றி நானும் ஒரு பதிவு போட வேண்டும் என்று இருந்தேன்.
நன்றி அரசு ஐயா.
ஃஃ
கட்டாயம் எழுதுங்கள்!
அப்புறம் சேவை துறை என்பதை பற்றிய அறிவு கிஞ்சித்தும் கிடையாது இந்தியாவில்! விமான சேவை, வங்கி சேவை, காவல்,போக்குவரத்து, மருத்துவம், கல்வி,அரசு நிர்வாகம்... இன்ன பிற சேவை துறைகள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்யவே என்பதை உணர வேண்டும்!
இதெல்லாம் பெரிய புடுங்கிகள் வேலை பார்க்கும் இடம் என்று ஆக்கி வைத்திருக்கிறார்கள் :( இந்த மேட்டிமை குடிகள். நாயே! நீ! மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அது தான் அந்த துறையில் உன்னுடைய பணி! என்று செருப்பால் அடித்து சொல்லாத வரை எவனும் திருந்த போவதில்லை!
தமிழனுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச சூடு சுரணையையாவது இப்பதிவு தட்டி எழுப்பும் என நம்புகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
Aiyaa, mudhalil thamiz naatilaeya thamizan thanadhu saga thamizanai sari vara mathikka katrukkolla vaendum. Appoodhuthaan mathiyan arasu thamizanai mathippaan. Piragu anniya naattu thamizanayum mathikka thodunguvaan. Namakku asthivaaramae sari illaadha poothu matravangalai kutram solli yenna ilaabam?
Manam kalangaadhirgal! Yetharkum anjaatheergal. Seerya pooraatam onRae yendha vetrikkum, atharkku pin varum amaithikkum vazhi.
Nalla vaazhkai vaazhvatharkku niraya vazhigal irukkindrana. Anaithirkkum thunichaldaan vaendum.
I wish you a good war!
No war, no peace!
Nanri.
அரசு,
ஒன்று குறிப்பிட மறந்துவிட்டேன், அந்த சிங்கை நிகழ்ச்சி(யும்) ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தொகுத்து வழங்கினார்கள்.
தன் மதிப்பையும் இன உணர்வையும் தூண்டும் தங்களின் பதிவுக்கு நன்றி.
புலம் பெயர்ந்த இடங்கள் மற்றும் பிழைப்புக்காக போகும் தேசங்களில் கூட தமிழன் தன் மதிப்புடன் வாழக்கூடாது என்ற ‘இ(ஹி)ந்திய' உணர்வுடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை - இன உணர்வுள்ள தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
அல்லது அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தமிழுக்கும் உரிய இடம் கேட்டு உரிமைக்குரல் எழுப்பி நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும்.
//அப்புறம் சேவை துறை என்பதை பற்றிய அறிவு கிஞ்சித்தும் கிடையாது இந்தியாவில்!//.
முண்டம் பன்னி.அரசு,
ஒட்டு மொத்த்தமாக இந்தியாவை குறை சொல்வதற்கு முன்னால்,தமிழக அரசில் கேவலமான முறையில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான திராவிட பொறிக்கி நாய்களை முதலில் திட்டி திருத்தப் பார்.என்னமோ சொல்ல வந்துட்டான் பெரிய யோக்யன் மாதிரி. அல்பம் அல்பம்.
பாலா
கருத்துரையிடுக