செவ்வாய், 1 ஜூலை, 2008

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! - ஒரு வரலாற்று தவறா?

இந்த விடயம் தொடர்பான வரலாற்று தொடர்ச்சி மற்றும் இதன் பின்னணி பகிர்ந்துக்கொள்ள இயலுமா?

இதன் மூலம் அடைய நினைக்கும் இலக்கு என்ன?

சிந்தனையாளர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் இதை எப்படி நோக்குகிறார்கள்?

இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கு...

உங்களுடைய கருத்துகளை வரவேற்கிறேன்...

15 comments:

TBCD சொன்னது…

நீர் என்ன சொல்ல வருகிறீர்..அதைச் சொல்லுமய்யா...பிறகு எங்கள் கருத்தை வரவேற்கலாம்... :)))))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் டிபிசிடி!

நான் என்னத்த சொல்லுறது... முதலில் இது தொடர்பான முழுமையான புரிதல் வருவதற்காக கேள்விகள் எழுப்பி இருக்கிறேன்...

விவரமானவர்கள் வந்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்!

நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

அரசு,

பார்பனர்களின் உரிமையைப் பரிப்பதாகவே பார்பன தரப்பில் இதுகுறித்து பரவலாகப் பரப்பப்படுகிறது.

தீட்டு, உயர்வு, தாழ்வு எல்லாவற்றிற்கும் கருவரையே உயிர் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்சகராவதற்கு வழிவிடுதல் அவற்றை களைவதற்கு உதவும்.

மாரியம்மன் கோவில்களில் பார்ப்பனரல்லாதா பூசாரிகள் பூசை நடத்துகின்றனர். சாமி எழுந்து ஓடிவிடவில்லை. ஆகமங்கள் எதுவும் தொன்று தொட்டு ஏற்படவில்லை. பார்பனரின் நலனுக்காக அவை ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தான் கருவரையில் நின்று பூசை செய்யவேண்டும் என்றெல்லாம் நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். பலமுருகன் கோவில்களில் பண்டாரங்கள், செட்டியார்கள் பூஜை செய்கிறார்கள். அந்த கோவில்களும் ஆகம விதிகளினால் கட்டப்பட்டவைதான். வலுவான சமூகம் என்றால் அங்கு ஆகமம் செல்லுபடியாகாது, இரண்டாவது அது தனிப்பட்ட சமூகத்தின் சொந்த கோவிலாக இருந்தாலும் ஆகமவிதிகள் செல்லுபடியாகாது.

அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில்களில் மணி அடிக்கவும், தோளில் சாமி தூக்கவும், மேளம் வாசிக்கவும் நுழையும் போது ஏற்படாத தீட்டு அர்சகராகி அவர்கள் கருவறையில் நுழையும் போது மட்டும் தான் ஏற்படுகிறதா ?

முட்டாள்கள் பலர் இந்துமதப் பெருமை பேசும் போது சொல்லுவார்கள்... கடவுள் உருவமெல்லாம் தத்துவமாக அடங்கி இருக்கிறது என்று, அதே முட்டாள்கள் சிலையைத் தொட்டாலே தீட்டு என்று நம்புவதும் சரியான முரண்நகைதானே.

பெயரில்லா சொன்னது…

வரலாற்றுத் தவறா? என்ற கேள்விக்கான காரணம் புலப் படவில்லை. ஆனால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று கூறுபவர்கள் காலங்காலமாக அர்ச்சகர் ஆக இருக்கும் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் தான். இது ஒருவகையில் தங்களுக்கான இட ஒதுக்கீடாக அவர்கள் கருதி இருக்க்க கூடும். மற்றவர்கள் வந்தால் தங்கள் இடம் பறி போய்விடும் என்ற அச்சம் காரணமாகவே பல இட்டுக் கட்டிய கதைகள் மூலமாக மற்றவர்கள் வருவதை தடுத்து வந்திருக்கலாம்.

இன்னொரு புறம் நால்வருணம்,சாதி தீமைகளுக்கு மூலகாரணம் என்ற வகையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற குரல் எழுந்து வந்தது.

அதே சமயம் கிராமப்புறங்களில் பிற இனத்தவர் அர்ச்சகர் ஆக இருக்கும் கோயில்கள் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன. அவர்களை அர்ச்சகர் எனக் குறிப்பிடாமல் பூசாரி என்று குறிப்பிட்டனர்.

இப்போது குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே நிரந்தரமாக அர்ச்சகராக இருக்க கூடாது என்றும் எல்லாக் கோயில்களிலும் அனைவருக்கும் உரிமை வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்துள்ளது. சட்டப்பூர்வமாகவும் சில நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

தீட்டு, தீண்டாமையை கடைப்பிடிப்பவர்களால் அதை ஏற்றுக் கொள்ள இயலாது. அதே சமயம் அந்தச் சமூகத்திலும் இன்றைய இளைய தலைமுறையில் பலர் சமூக மாற்றங்களை ஏற்று, உணர்ந்து தீண்டாமைக்கு அப்பாற்பட்டதாகவும் சிந்திப்பதை உணர முடிகிறது. இந்த மாற்றம் அனைவரிடத்திலும் வரும் போது இவை இயல்பாகி விடும்.

பெயரில்லா சொன்னது…

கோவி. கண்ணா! எதற்கெடுத்தாலும் பிராமணர்கள் மீது பாய்ந்தால் உண்மை மறைந்து போய்விடும் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த வாதம் கீறல் விழுந்த ரெகார்டு மாதிரி தான். சேலம் கந்தம்பட்டி திரளபதி அம்மன் கோவிலில் தலித்துகள் நுழைவதற்கு வன்னியர்கள் ஆட்சேபம் தெரிவித்து பெரிய போராட்டமே நடக்கிறது தெரியுமா? இன்றைய சூழலில் தேவனுக்கும் தலித்துக்கும் மற்றும் வன்னியனுக்கும் தலித்துக்கும் தான் பிரச்சனையே.

சென்ற நூற்றாண்டில் சில பிராமணர்கள் தீண்டாமையை ஆதரித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 2008ம் ஆண்டில் எந்த பிராமணனும் அப்படி செய்யவில்லை.

தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் 2 சதவிகிதத்துக்கும் கீழே உள்ள பிராமணர்களை ஏன் தாக்குகிறீர்கள்? அவர்களால் திரும்பி தாக்க முடியாது என்பதால் தானே! வாழ்க உங்கள் வீரம்!! இருக்கும் 2 சதவிகிதத்தில் 1 சதவிகிதத்தினர் வெளி மாநிலங்களிலும் வெளி நாட்டிலும் வசிக்கின்றனர். மீதம் இருக்கும் 1 சதவிகிதத்தினர் மீது ஏன் உமக்கு காழ்ப்பு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் பிரபு ராஜதுரை!
சட்டரீதியிலான விளக்கங்கள் நன்று! நன்றாக தொகுத்து தந்துள்ளீர்கள்! நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!

தீண்டாமைக்கு எதிராக கருவறை நுழைவு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன...

தீவிரமாக தொடர்ந்து ம.க.இ.க வினர் திருவரங்கத்தில் பல ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்!

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவதால் கோயில்களில் இருக்கிற தீண்டாமை எவ்வாறு களையப்படும் என்று நினைக்கிறீர்கள்?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் சிந்தாநதி!

விளக்கங்களுக்கு நன்றி!

ஜெகதீசன் சொன்னது…

//

தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் 2 சதவிகிதத்துக்கும் கீழே உள்ள பிராமணர்களை ஏன் தாக்குகிறீர்கள்? அவர்களால் திரும்பி தாக்க முடியாது என்பதால் தானே! வாழ்க உங்கள் வீரம்!! இருக்கும் 2 சதவிகிதத்தில் 1 சதவிகிதத்தினர் வெளி மாநிலங்களிலும் வெளி நாட்டிலும் வசிக்கின்றனர். மீதம் இருக்கும் 1 சதவிகிதத்தினர் மீது ஏன் உமக்கு காழ்ப்பு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!
//
ஜனத்தொகையில வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே இருப்பவர்கள் சென்னை IIT யில் 50% க்கும் மேல் இருப்பது ஏன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி. கண்ணா! எதற்கெடுத்தாலும் பிராமணர்கள் மீது பாய்ந்தால் உண்மை மறைந்து போய்விடும் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த வாதம் கீறல் விழுந்த ரெகார்டு மாதிரி தான். சேலம் கந்தம்பட்டி திரளபதி அம்மன் கோவிலில் தலித்துகள் நுழைவதற்கு வன்னியர்கள் ஆட்சேபம் தெரிவித்து பெரிய போராட்டமே நடக்கிறது தெரியுமா? இன்றைய சூழலில் தேவனுக்கும் தலித்துக்கும் மற்றும் வன்னியனுக்கும் தலித்துக்கும் தான் பிரச்சனையே.

சென்ற நூற்றாண்டில் சில பிராமணர்கள் தீண்டாமையை ஆதரித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 2008ம் ஆண்டில் எந்த பிராமணனும் அப்படி செய்யவில்லை.

தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் 2 சதவிகிதத்துக்கும் கீழே உள்ள பிராமணர்களை ஏன் தாக்குகிறீர்கள்? அவர்களால் திரும்பி தாக்க முடியாது என்பதால் தானே! வாழ்க உங்கள் வீரம்!! இருக்கும் 2 சதவிகிதத்தில் 1 சதவிகிதத்தினர் வெளி மாநிலங்களிலும் வெளி நாட்டிலும் வசிக்கின்றனர். மீதம் இருக்கும் 1 சதவிகிதத்தினர் மீது ஏன் உமக்கு காழ்ப்பு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!



//அனானி ஐயா,

சேலம் நிகழ்வைக் கண்டித்தும் எழுதி இருக்கிறேன். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

http://govikannan.blogspot.com/2007/08/blog-post.html



நான் பார்பனர்கள் மீது பாயவில்லை. நான் எதோ இல்லாத ஒன்றை சொல்லிவிட்டதாக தாங்கள் தான் பாய்கிறீர்கள். இன்றைக்கும் பார்பனர்கள் தேவர், வன்னியரெல்லாம் தீண்டாமை பாராட்டவில்லையா ? என்று கேட்டு தங்கள் தரப்பை ஞாயப்படுத்துகிறார்களேயன்றி, எல்லோரும் மனிதர்கள் தான் என்று ஒப்புக் கொண்டு தங்களை பிரித்துக் காட்டிக் கொண்டு இல்லாவிடில் யார் இதுபற்றி பேசப் போகிறார்கள். பார்பனர் என்று எழுதினாலே எழுதாதே பிராமணர் என்று எழுது, பார்பனர், பாப்பான் என்பது இழிவாக இருக்கிறதென்றால்...நால்வருணம் அதில் சூத்திரன் என்ற பிரிவும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்பவனையெல்லாம் என்ன செய்வது ?

தீண்டாமை இந்த நூற்றாண்டில் இல்லையா ? எத்தனை கோவில்களில் இன்றும் தீட்டு கழிக்கும் வைபவம் நடந்துவருகிறது என்பதே தெரியாதா ? நீங்கள் குறிப்பிட்டது போல் 3 விழுக்காடு 97 விழுக்காட்டை பார்த்து நடுங்கும் பயம் தான் தீண்டாமை கடைபிடிக்காமல் போனதற்கான காரணமேயின்றி,
அது பெரும்தன்மையாக வந்தது அல்ல. நந்தனார் சிலைகூட தீண்டத் தகுதியற்றதாகத்தான் தூக்கி போட்டுவிட்டார்களாம், இது சென்ற நூற்றாண்டில் அல்ல.

பார்பனர் பார்பனராகவே இருக்கும் வரை பார்பனர் - பார்பனரல்லோதோர் பிரச்சனை என்றைக்குமே பேசப்படும்...இதுபற்றி கவலைப்பட்டால் மட்டும் போதாது. பிரித்துக் காட்டுவதை நிறுத்துங்கள், பிறகு எல்லாம் சரியாகிவிடும்.

நான் 20 வயதுவரை கோவிலில் இருக்கும் குருக்கள் பாதிரியார்களைப் போலவே பிரம்மச்சாரிகள் தான் நினைத்து அதனால் தான் அங்கே கோவிலில் அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கிறதென்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

பிறகு தான் தெரிந்தது, அவனும் பிறரைப் போல் தான் தினமும் எல்லாவற்றையும் செய்துவிட்டு வந்தே, கோவிலுக்குள் வந்து தன்னை கடவுளுக்கு சமம் என்றும் முகத்தில் இருந்து பிறந்தவன் என்றும் பிதற்றிக் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே. மற்ற மனிதர்களை விட உடலளிவில் நீங்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறீர்கள் ? உங்களுக்கு ஏன் சிறப்பு மரியாதை கொடுக்க வேண்டும். இங்கு பேசுவது அர்சகராக என்ன என்ன தகுதி வேண்டும் என்பது பற்றி.

பார்பனர், பார்பனர் அல்லாதோர் ஏன் எவராக இருந்தாலும் என்ன ? எல்லோருமே உடலுறவின் மூலம் யோனி வழி பிறந்தவர்கள் தானே ?

பெயரில்லா சொன்னது…

//ஜனத்தொகையில வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே இருப்பவர்கள் சென்னை IIT யில் 50% க்கும் மேல் இருப்பது ஏன்?//

எனக்குத் தெரிந்த வரையில் IIT யில் சாதி சான்றிதழ் கேட்பதில்லை. நீங்கள் கூட தாராளமாக நுழைவுத் தேர்வு எழுதி தேறலாமே.

பெயரில்லா சொன்னது…

அரசியல் கூத்தை ஆலயங்களுக்குள்ளும் கண்டு களிக்க ஆவலா உள்ளீர்கள்.

அந்த ஆண்டவனை
எழுந்து வந்து
அனைவரையும்
காக்கும் படி
அன்புடன் வேண்டுகிறேன்.__/\__

முகவை மைந்தன் சொன்னது…

பிச்சைக்காரப் பொழப்புன்னு விரைவில் எல்லோரும் வந்து விடுவார்கள்.

அர்ச்சகராப் போனவன் என்னிக்காவது வாழ்க்கையத் திரும்பிப் பாத்தான்னா அவனோட வரலாற்றுப் பிழையாப் படலாம் ;-)

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

வலைப்பதிவுகளில் அலசி,துவைத்து,
போடப்பட்ட பொருள் இது.
வலைபதிவுகளில் தேடுங்கள்.
நிறைய தகவல்கள் கிடைக்கும்.

Related Posts with Thumbnails