எதற்காக கூடினாய்...!?
யாருக்காக கூடினாய்...!?
எதைநோக்கி கூடினாய்...!?
கூட்டத்தில் கூடுதலாகி...
சுரண்டல் கூட்டத்தின்...
சுரண்டலுக்கு கூடுதலாகி...!
சுயமிழந்தாய்...!
கூடியவரின் அடையாள(ஆதிக்க) அரசியலை
அலச மறந்தாய்...!
நீ... விழிக்காததால்...
உன்னை கூடுதலாய் மட்டுமே வைத்திருக்கிறார்கள்..!
11 comments:
எனக்கு ஏதோ புரியுது... ஆனால் என்ன புரியுதுன்னு தான் புரியலை...
;)
இடுகை போட்டாரு, ஐயா. எல்லாம் நல்லா கை தட்டுங்க!
நம்பிக்கையால் கூடினேன்; நலம் வரும் என்றிருந்தேன்;
நம்தலைவர் இவரென்று இறுமாப்பு கொண்டிருந்தேன்;
திண்ணியராய் உடன்செல்ல விழைந்து நின்றேன்;
எண்ணிய பொருள் எய்துவார் என்றிருந்தேன்;
பொருளெண்ணும் போக்கால் மனம் நொந்து நின்றேன்;
பொறுக்காத கேள்விகளால் சற்றே கூசியும் நின்றேன்.
ஓ! நீங்க சொல்ல வர்றது அப்பன்டிக்ஸ்(குடல் வால்) போன்ற சமாச்சாரமாக(பொருள்) இருக்கும் என்று நினைக்கிறேன்.
:-)))
இது 106 ஆவது பதிவு, 100 ஆவது பதிவுக்கு எந்த வெளம்பரமும் கொடுக்கலையே ஏன் ?
வன்மையாக கண்டிக்கிறேன்.
(பதிவில் யாரைக் குறித்து இருக்கிறோர்களோ அவர்களை)
இதே கருத்து தான் என்னுடையதும்.
நம்மைப் போல பலரும் இதேக் கருத்தை தான் கொண்டுள்ளார்கள்.
//இதே கருத்து தான் என்னுடையதும்.
நம்மைப் போல பலரும் இதேக் கருத்தை தான் கொண்டுள்ளார்கள்.//
ஆமா..ஆனா என்ன கருத்துண்ணு கொஞ்சம் சொல்லிட்டீங்கண்ணா சரியா இருக்கும் :)
//ஜோ / Joe கூறியது...
//இதே கருத்து தான் என்னுடையதும்.
நம்மைப் போல பலரும் இதேக் கருத்தை தான் கொண்டுள்ளார்கள்.//
ஆமா..ஆனா என்ன கருத்துண்ணு கொஞ்சம் சொல்லிட்டீங்கண்ணா சரியா இருக்கும் :)//
:):):)
தண்ணீர் குடிக்கும் போது இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டேன்.
பொறை ஏறி விட்டது.
பாரதிதாசன் கவிதைகள் போல் இருக்கிறது......ஒரே புரட்சித் தீ
படிச்சதும் கண்ணைச் சுடுது :)))))
சிந்திப்பவர்கள் செயல்படுவதில்லை; செயல்படுபவர்கள் சிந்திப்பதே இல்லை!
சொல்லிப்பாத்தா நல்லா இருக்குல்ல! கருத்தை கவ்விக் கொள்ளுங்கள்.
புதசெவி
கருத்துரையிடுக