ராமதாஸ் அ.தி.மு.க அணிக்கு தாவினாலும் தாவினார்... இணைய யோக்கியசிகாமணிகள் வரிந்துக்கட்டிக்கொண்டு ஏகவசனத்தில் எழுதி குவித்துவிட்டார்கள்...!
எப்படி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன்/அவள் நலன் சார்ந்த அரசியல் இருக்கிறதோ...! அதேபோல் ராமதாஸ் நிறுவன தலைவராக இருக்கிற பா.ம.க என்கிற கட்சிக்கும் சில அரசியல் நிலைப்பாடுகள் இருக்கின்றன.
1980-களில் வீரியமாக தொடங்கி "வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை!" என்று எழுச்சி பெற்ற அரசியல் கட்சி பா.ம.க
இந்த சொற்றொடரிலேயே இருக்கிறது... பா.ம.க வின் அரசியல் இலக்கு என்பது என்ன!?
ராமதாஸ் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக ஒன்றை சொல்லி வருகிறார்... "வன்னியர்களுக்கு அதிகபடியான அரசியல் அதிகாரத்தை அளிக்கிற எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்போம்".
ஒவ்வொரு தேர்தலின் பொழுதும்... பா.ம.க வின் இலக்கு அதிகபடியான எம்.எல்.ஏ அல்லது எம்.பி என்பதாகவே இருக்கிறது... இதன் மூலம் வன்னியர்களுக்கு அதிகபடியான அரசியல் அதிகாரம்.
ராமதாஸ் நிறுவன தலைவராக இருக்கிற பா.ம.க தனது அரசியல் இலக்கில் -(வன்னியர்களுக்கு அதிகாரம்) தெளிவாக பயணம் செய்கிறது.
அடிப்படையில் இந்த செயற்பாடானது பார்ப்பனர்களிடமிருந்து தான் தொடங்குகிறது...
திருச்சியில் நடந்த பிராமண சங்க மாநாட்டில் பேசியவர் குறிப்பிட்ட ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும் " எந்த கட்சியில் வேண்டுமானாலும் பிராமண இளைஞர்கள் இணைந்துக்கொள்ளுங்கள்... எந்த கொள்ளையுடன் வேண்டுமானாலும் இருங்கள்... ஆனால் பிராமணர்கள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும்!"
எவ்வாறு பார்ப்பனர்கள்... இந்துத்துவ ஆக இருந்தாலும், கம்யூனிசமாக இருந்தாலும், வேறெந்த கட்சியாக இருந்தாலும் அவர்களே தலைவர்களாக அதிகாரத்தை கைபற்றி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களோ...!
அதே அடியையொற்றி இராமதாஸ்... தி.மு.க என்ன!? அ.தி.மு.க!? யாராக இருந்தாலும் எங்களுக்கு வேண்டியது அரசியல் அதிகாரம் என்கிற போக்கை கடைபிடிக்கிறார்!
கடந்த 5 ஆண்களில் காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கிற முடிவுகளில் கையெழுத்திடும் மத்திய அமைச்சரவையில் பா.ம.க வின் அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தார்கள்... அதிலும் குறிப்பாக இராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி முக்கிய அமைச்சராக இருந்தார்.
ஆனால்... இலங்கை அரசுக்கு இந்திய காங்கிரஸ் அரசு இராணுவ உதவிகள் செய்வதற்கான அமைச்சரவை முடிவுகளை பற்றி கண்டும் காணாமலும் இருந்துவிட்டு...
இன்னொருபுறம் ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் இரட்டை வேடத்தை தெளிவாக செய்கிறார்... "பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்!"
இணையத்தில் கலைஞரையும், தி.மு.க வையும் கிழி,கிழியென கிழித்த பல இணைய புரட்சியாளர்கள் வன்னியர்களாக இருப்பதால்... பா.ம.க வின் இரட்டை வேடத்தை மட்டும் கண்டும்காணாமல் இருந்தார்கள். இல்லையென்றால் உப்புக்கு சப்பாணியாக இரண்டு வார்த்தை பா.ம.கவை திட்டினார்கள்.
வன்னியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்...(இந்த ஒடுக்கம் பற்றி விமர்சனம் தனியாக செய்ய வேண்டும்!) அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று போராட ஆரம்பித்த ராமதாஸ் இன்றைக்கு வன்னிய சாதி அரசியல் அதிகாரத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்.
இந்த ஆபத்தான போக்கை கண்டு விழித்துக்கொள்ளா விட்டால்... நாளை பெரும்பான்மை சாதிகள் மட்டுமே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.. மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாக வாழ நேரிடும்...!
ஞாயிறு, 29 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 comments:
முதல் பாதி ஒரு கோணத்துலயும் ,பின் பாதி எதிர் கோணத்துலயும் இருக்கே ..இது தான் பின் நவீனத்துவமா? :))
//ஜோ / Joe கூறியது...
முதல் பாதி ஒரு கோணத்துலயும் ,பின் பாதி எதிர் கோணத்துலயும் இருக்கே ..இது தான் பின் நவீனத்துவமா? :))
//
ரிப்பீட்டேய்...:)
*****
"எதோ அறிவு பூர்வமாக விவாதிப்பீர்கள் என்று நினைத்தேன், சிறுபிள்ளைத்தனமாக 'ரிப்பீட்டேய்' போட்டுவிட்டு...." பாரி.அரசு என்னை உரையாடியில் கடிந்து கொண்டதையெல்லாம் வெளிய சொன்னால் வெட்கக் கேடு :)
என்னுடைய பின்னூட்டம் வெளி இடாததற்கு கடும் கண்டனம் !
என்ன சொல்ல வர்றிங்கன்னு முதல்ல தெளிவாயிடுங்க. அப்புறம் மத்தவங்களத் தெளிவுபடுத்தலாம்.
/பல இணைய புரட்சியாளர்கள் வன்னியர்களாக இருப்பதால்... /
அப்படியா? ஆதாரம்?
சா"தீய" கட்சிகளுக்கு ஆப்படிக்கனும் என்று சொல்லுறீங்க..
அதுவும் சரி தான் !
Ramadoss has so many masks.i.e. Vanniyar,Thamizhar,Tamil ezham Supporter etc...etc.All masks are for his wealth.But we the people are fools.
தாங்கள் அலசியிருக்கும் விடயம் ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும்,
தற்போதைய காலகட்டத்தில் எல்லா அரசியல் கட்சியினரும் மருத்துவர் ஐயா செய்வதைத் தான் செய்கிறார்கள். வன்னியர் சங்கம் போற்ற விடயங்கள் மற்ற சாதியினர்களுக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். மற்றபடி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!
தமிழகக் காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலே இல்லாமல் அதிமுக,பாமக்,காங்கிரசு தமிழக ஆட்சியைக் கவிழ்த்துவிட சூழ்ச்சி செய்ததுதான் மருத்துவரின் அநியாய ஆட்டம்.
அதற்கு சரி சொல்லாததால் சோனியா கலைஞரின் நீங்கா அன்பைப் பெற்றுவிட்டார்.அதில் செத்தது ஈழத் தமிழர்கள்.
காங்கிரசு தோற்றதும் மீண்டும் இந்த நாடகம் முயலப் படும்.
அவனவன் பிழைப்பை அவனவன் நன்றாகக் கவனித்து நம்மையெல்லாம் கொல்லுவதுதான் கொடுமை!
கருத்துரையிடுக