புதன், 25 மார்ச், 2009

மூளை-தகவல்-தரவு

மூளையிருக்கா...!?
அவரையா கேட்டாய்...!?
விரலிடுக்கில் தகவல்களை விசிறியடிப்பாரே...!
ஆகட்டும்... அதனாலென்ன...!?
மூளை பிறழ்ந்து விட்டதா...?
இன்னுமில்லை...!

ஆதாரம் ஏதுமின்றி...
அவதூறாய் உளறுகிறாய்...!
தகவல்... தரவு கொடு...!

அவருக்கு உலக இலக்கியம் தெரியும்...!
ஆகட்டும்... அதனாலென்ன...!?
உள்ளூர் மனிதர்களை பற்றி தெரியுமா...!?

அவர் எவ்வளவு படித்திருக்கிறார்...!
ஆகட்டும்... அதனாலென்ன...!?
கழுதை கூட நிறைய காகிதங்களை தின்கிறது...!

மூளை என்ன...!?
நினைவக பொட்டியா...!?
தகவலும், தரவும் தெரிந்தவனெல்லாம்...!
மூளையோடு இருக்கிறவனா...!?

1 comments:

TBCD சொன்னது…

பள்ளிகளிலும் நினைவுத்திறனை சோதிக்கும் தேர்வுகளே வைக்கிறார்கள்...

அறிவு என்பது தகவல் மட்டுமல்ல என்பதை சப்பென்று அப்ப சொல்லிட்டீங்களே..

Related Posts with Thumbnails