கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...!
கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளையும், அதிகாரத்தையும் எழுதத்தொடங்கி... இணைய உரையாடலில்...
(அழுவது - எதிர்மறை(துன்பம்) என்றும்... புன்னகைப்பது - நேர்மறை(இன்பம்) என்றும்... கற்பிக்கப்பட்டவையே) - பற்றி
விரிந்தவை...
n - எண்ணிக்கையை குறிக்கும் குறியீடு.
ஒரு இயக்கம் அல்லது மோதல் அல்லது தாக்கம் ஆனது ஒன்று அல்லது n-புள்ளிகளில் நிகழும் பொழுது... ஒன்று அல்லது n-காரணிகளை சார்ந்திருக்கும் என்கிறது இயக்கவியல்.
உடல், உயிர், உள்இயங்கியல்(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) ஏற்படும் தாக்கங்களே உணர்ச்சிகளின் ஊற்றுகண்.
இந்த தாக்கங்களையும், இயக்கவியலையும்... தொடர்புபடுத்தி பார்க்கிறேன்... ஒன்று (அ) n-வகையான (அ) n-எண்ணிகையிலான தாக்கங்களை ஏற்படுத்தும்... ஒன்று (அ) n-காரணிகளை சார்ந்த இயக்கமானது உணர்ச்சியின் உருவாக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது.
பொதுவாக கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகள் கானல்(virtual)-ஆக இருப்பதால்... தாக்கங்களை நேர்மறை, எதிர்மறை, எதுவுமற்ற புள்ளிகளில் வைத்து உரையாடுவது மிகவும் சிக்கலானதாகவும்...குழப்பமானதாகவும் இருக்ககூடும்.
உயிரியல் உணர்ச்சியாக உணரப்படும் வலி என்பதை எடுத்துக்கொண்டு... நேர்மறை, எதிர்மறை, எதுமற்ற புள்ளிகளில் எப்படி மையம்கொள்கிறது என்பதை பேசுவோம்...
வலி என்பதில் n-தாக்கங்களை விலக்கி தசைநார்களில் ஏற்படுகிற தாக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதேபோல் n-காரணிகளை விலக்கி சராசரியான உடல் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
வலி என்கிற சொல்லை கேட்டவுடனே... வலிக்கிறது... எப்பொழுதும் உடலின் மீதான எதிர்மறை தாக்கத்தை கொண்டதாக உணரப்பட்டுள்ளது.
இதே வலி என்பது சில இடங்களில் நேர்மறை தாக்கமாக உணரப்படுகிறது.
எ.கா: கலவியில் ஈடுபடுகின்ற உடலானது... தசைநார்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்... அந்த கணத்தில் நேர்மறையாக உணரப்படுகிறது.
இதே வலி என்பது எதுவுமற்ற உணர்வாக... உணரப்படும்.
எ.கா: பளு தூக்கம் பயிற்சியில் ஈடுப்படுகின்ற ஒருவர்... தொடர்ந்த பயிற்சியில் தசைநார்களில் ஏற்படுகின்ற தாக்கத்தை வலியாக உணர்வதை நீக்கம் செய்கிறார்.
குறிப்பு : வெறும் பார்வைகளை முன் வைத்து எழுதப்படும் இந்த தொடரை... மேற்கோளாக எடுத்தாளுமை செய்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.
தொடரும்...
11 comments:
இந்தப் பதிவில் எனக்கு ஒன்று தான் புரிந்தது... :))
எனக்கு புரிந்தவரைக்கும் அருமையாக எழுதப்பட்டிருக்கின்றன அரசு. :)
ஆனால் "கற்பிக்கப்பட்ட உணர்ச்சி" என்று எதைக்குறிப்பாக சொல்கிறீர்கள்?
இது புரிந்தால் இன்னும் ஊன்றி கருத்துக்களை புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றுகிறது
எனது ஆழம்குறைவான வாசிப்பனுவத்திற்காக மன்னிக்கவும் :)
அருமையாக எழுதப்பட்டிருக்கின்றன அரசு....
எனக்கு எல்லாமே புரிந்தது.. ஆனால் என்ன புரிந்ததென்று தான் புரியவில்லை... எனக்கு என்ன புரிந்தது என்பதை விளக்கிச் சொல்லமுடியுமா? இது புரிந்தால் இன்னும் ஊன்றி கருத்துக்களை புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றுகிறது..
எனது ஆழம்அதிகமான வாசிப்பனுபவத்திற்காக மன்னிக்கவும்... :)
//வெறும் பார்வைகளை முன் வைத்து எழுதப்படும் இந்த தொடரை... மேற்கோளாக எடுத்தாளுமை செய்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.//
வேணாம்..!
@ஜேக்,
கழுத்தளவுக்கு மேல போக வேணாம். முங்கிருவீங்க!
எனக்கு நான் கல்லூரியில் படித்த இளங்கலை இயற்பியல் பாடம் நினைவுக்கு வருது அரசு.
கவிதை மிக நன்று !
//
@ஜேக்,
கழுத்தளவுக்கு மேல போக வேணாம். முங்கிருவீங்க!
//
:)))
தலைக்கு மேலயே போயாச்சு... :P
ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் "கற்பித்துக்கொள்ள" முடியுமே தவிர "கற்பிக்கப்பட்ட" என்று பொதுப்படையாக சொல்ல முடியுமா?
அல்லது நீங்கள் சொல்வது பொதுவாக சமூகத்தின் பார்வையில் என்றா?
தாக்கம் பௌதிகமாக இருந்தாலும் அதை நாம் எப்படி எடுத்துகொள்கிறோம் என்பதை பொறுத்தே அது வலியா? அல்லது இன்பமா ? என்று அமைகிறது. நமக்குல் இருக்கும் கற்பிதங்களை பொறுத்தே அது அமைகிறது. கற்பிதங்கள் நமது கடந்த கல அனுபவங்கள், கலாச்சாரம், பாரம்பரியத்தோடு தொடர்பு உடையது. ஒருசில கற்பிதங்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தில் பொதுமையாக வலி அல்லது இன்பமாக உணரப்படும். ஒரு சிலது தனிப்பட்ட மனிதரின் பார்வை , விருப்பு வெறுப்போடு சம்பந்தப்பட்டது.
நான் அப்பமே பந்தையம் கட்டுனேன். இரண்டாவதுக்கு அப்புறம் மேக்கொண்டு வராதுன்னு. கிகிகி..கிகி!
3 வது பகுதி வருமா, வராதா? இல்லை வருருருரும்... ஆனா வராராராராதா?
கருத்துரையிடுக