"சுளீர்!"
தண்ணீர் குவளை தெறித்து சிதறியது...
முதுகு தண்டில் வலி, கண்களில் பயம்,மிரட்சி, அழுகை... திரும்பி பார்த்தேன், கையில் பிரம்புடன் தலைமையாசிரியர்.
நான் செய்த குற்றமென்ன?
ஆசிரியரிடம் அனுமதி வாங்கி தண்ணீர் பருக வந்ததா? பருகியதா?
என் உடல் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டு... 16 ஆண்டுகள் கடந்துவிட்டது; ஆனால் எனக்குள் நான் அடைந்த உளவியல் பாதிப்புகளின் தடம் இன்னும் மறையவில்லை.
********************************************************************************************************************************************
திடீரென்று ஒரு குழந்தை அழுகிறது...
அய்! ஏதோ ஒரு குழந்தை அழுகிறது... என்று துணைவி மகிழ்கிறாள்.
புதிதாக ஒரு தமிழ்குடும்பம் 5வது மாடியில் குடி வந்திருக்கிறார்கள்... அதான்! குழந்தை அழுகிறது என்றேன்.
சிங்கை வந்ததிலிருந்து குழந்தையின் அழுகுரலை என் துணைவியார் கேட்கவில்லை... ஏனென்றால் இங்கே யாரும் குழந்தைகளை அடிப்பதில்லை.
என் துணைவி... மீண்டும், மீண்டும் கேட்கிறாள்... இங்கே குழந்தைகள் ஏன் அழுவதில்லை?
நினைவுகளை அசைப்போடுகிறேன்....
"அடியாத மாடு படியாது!"
"அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்த வளர்க்காத முருங்கையும்..."
இந்த உடல் மீது வன்முறையை கட்டவிழ்த்து நடத்துவதற்கு இந்த சமூகம் எத்தனைவிதமான வழக்குமொழிகள்... கைக்கொண்டுள்ளது!
*************************************************************************************************************************************************
வன்முறை உடல் மீது மட்டும் தான் நடத்தப்படுகிறதா?
உயிர் மீது, உள்இயங்கியலின் மீது வன்முறை நடத்தப்படுவதில்லையா?
நம்முடைய நினைவுகள், சிந்தனைகள், செயல்கள், எண்ணங்கள் மீதான வன்முறையை கண்டு இங்கே... குழலி குமறுகிறார்...
சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!
*********************************************************************************************
வீடு, கல்விக்கூடங்கள் தொடங்கி, காவல்கூடங்கள் உள்ளடங்கி உடல் மீது நடத்தப்படும் வன்முறையானது... நம்மை அச்சமூட்டி, அதிகாரத்திற்கு அடிபணிந்து செல்ல கட்டாயப்படுத்துகின்றன!
வருவேன்...
திங்கள், 6 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 comments:
அரையாண்டுத் தேர்வு...
5 மணிக்குத் தேர்வு முடிகிறது.
4:58 க்கு ஆசிரியர் எழுதிமுடித்தவர்களின் விடைத்தாள்களை வாங்கிக்கொண்டு வெளியே அனுப்புகிறார்...
வராந்தாவில் பிரம்புடன் தலைமை ஆசிரியர்....
உங்கள் முதல் பகுதியைப் படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது அடுத்த நாள் தேர்வு எழுதமுடியாத அளவுக்கு கையில் நான் வாங்கிய அடி...
இது போல் யாருக்கும் புரியாத மாதிரியான பதிவுகள் எழுதுவதைத் தவிர்க்கவும்...
அனைவருக்கும் புரியும்படியாக இருந்த சென்ற பதிவு போல,
"கற்பிக்கப்பட்ட உணர்ச்சி" என்பன போன்ற எளிய அனைவருக்கும் புரியும் படியான சொற்களும், n, n-1, n+m என எளிய கணக்கீடுகளும் கொண்ட பதிவுகளாக இடவும்....
:P
//சிங்கை வந்ததிலிருந்து குழந்தையின் அழுகுரலை என் துணைவியார் கேட்கவில்லை... ஏனென்றால் இங்கே யாரும் குழந்தைகளை அடிப்பதில்லை.//
அடித்தால் மட்டும் தான் குழந்தைகள் அழுமா அரசு? எப்படி இப்படி ஒரு தவறான கருத்தை முன்வைக்கின்றீர்கள்?
குழந்தை தன்னால் பேச முடியும் வரை தன் தேவைகள் அனைத்தையும் உணர்த்துவது அழுகையின் மூலம் தானே? ஏதோ இந்தியாவில் மட்டும் தான் குழந்தைகளை அடித்து கொடுமைபடுத்துகின்றார்கள் என்ற கருத்தை திணிப்பது போல் உள்ளது உங்கள் பதிவு.
இங்கும் பிள்ளைகளை அடித்ததற்கு காவல்துறையில் பிள்ளைகளோ அல்லது அப்படி பிள்ளைகளை பெற்றோர் அடிப்பதை பார்க்கும் மற்றவர்களோ புகார் அளிக்கலாம் என்ற விதியினை எடுக்கச் சொல்லிவிட்டு பாருங்கள் எத்தனை குழந்தைகள் அடிவாங்கும் என்று. சட்டம் அப்படி இருக்கிறது அரசு. இந்தியாவில் இதெற்கெல்லாம் சட்டம் இல்லை.
அடிக்காமலே வளர்த்தும் ஏன் இங்கு குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வயோதிகப் பருவத்தில் அவர்களை தனியே விட்டுவிட்டு போய்விடுகின்றார்கள்?
கருத்துரையிடுக