செவ்வாய், 5 மே, 2009

அரசியல் - கைப்புள்ள...மொக்கசாமி... ஆமாஞ்சாமி...

நம் முன்னே மனித சமூகத்தின் பிரச்சினைகள் விரிந்து... காதடைத்து, கண் மயங்கி, மூச்சடைத்து, புலன்கள் அனைத்தும் ஒடுக்கி நம்மை வீழ்த்த வீரியம் கொண்டெழுகிறது. ஒன்றா, இரண்டா... ஒராயிரமா?! முடிவில்லா எண்ணிக்கையில் வந்துக்கொண்டேயிருக்கிறது.

மனிதன் சமூகமாக வாழ இயலுமா? வாழ்ந்துதான் பார்ப்போம்... என்று
கடந்து போனவனும் போராடினான்... கடந்துக்கொண்டிருப்பவனும் போராடிக்கொண்டிருக்கிறான். வருகிறவனும் போராடுவான்.

தான், தனது என்கிற வட்டத்தில் வாழ்கிற மனிதர்களால் எப்படி மனிதன் சமூகமாக வாழ்வதற்கான சிந்தனையை, செயற்பாடுகளை நோக்கி நகர இயலாதோ! அதே போல மனித சமூகத்தின் சமூக, அரசியல் சிக்கல்களை, பிரச்சினைகளை புரிந்துக்கொள்வதற்கும் சில அடிப்படைகளை பற்றிய அறிதலும், தேடலும் அவசியமானதாக இருக்கிறது.

சரியான புரிதலற்ற, அறியாமையை மண்டிக்கிடக்கிற... சமூகத்தில் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கிற அரசியற்கூத்துகளை நாம் அடையாளம் காணவும், நம் முன்னே அரசியற் மாற்றங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றவைகளை வினா தொடுப்பதன் மூலம் அம்பலப்படுத்தவும்... தொடர்ந்து சமூக, அரசியல் தேடல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஒருவர் என்னிடம் அதிகாரத்தை கொடுத்துப்பாருங்கள் "சேரியை முன்னேற்றி காட்டுகிறேன்!" என்று சொல்கிறார்.

சேரி என்பது என்ன?
சேரி ஏன் தோன்றிது?
சேரியின் வடிவம் எப்படியிருக்கும்?
சேரி எங்கேயெல்லாம் இருக்கும்?

அடிப்படையாக சமூக வாழ்வில் எங்கெல்லாம் உழைப்பு சுரண்டலும், முதலாளித்துவமும் இருக்கிறதோ... அங்கேயெல்லாம் சேரி இருக்கும். அதன் வடிவங்கள் வெவ்வேறாக...!

5-10 ஆண்டுகளில் 200-300 கோடி என்று உழைப்பு சுரண்டல் மூலம் முதலாளி ஆகிற ஒருவரால்...
இன்னும் 10-20 ஆண்டுகளில் 1000-2000 கோடி வருவாய் ஈட்டுவேன் என்று சவால் விடுகிற... முதலாளித்துவ சிந்தனை உள்ள ஒருவரால்...
எப்படி சேரியை முன்னேற்ற முடியும்?. சேரியின் வடிவத்தை மாற்ற போகிறேன் என்று சொல்வார் எனில் அது உண்மையாக இருக்கும்!.

இங்கே சேரியை பற்றிய புரிதலும்... சேரியற்ற சமூகத்தை கட்டமைப்பதற்கான சமூக, அரசியல் அறிவும் நமக்கு அவசியமானதாக இருக்கிறது.

அரசியலில் இவர் நல்லவர், படித்தவர் என்கிற அடையாளங்களுடன் கைப்புள்ளைகள் வளர்க்கப்பட்டு... மொக்கசாமிகளாக நம்முன் வலம் வர வைக்கப்படுகிறார்கள். இவர்கள் "ஆமாஞ்சாமிகளாக" அதிகாரங்களால் பயன்படுத்தபடுகிறார்கள்.

2 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

உங்க பதிவை படிச்சிட்டு டிபிசிடி 'எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்குன்னு' ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருக்கிறாரான்னு தெரியல, தயவு செய்து விளக்கவும் !

TBCD சொன்னது…

கோவியாரே,

உங்கள் தவறான பரப்புரைகளை நிறுத்தவும் :P

ஃஃஃஃஃஃஃஃ

அப்படி போடு...!!

முதலாளித்ததுவ குழுவிலிருந்து யாருமே நம்ம தலையெழுத்தை மாற்றுவதுப் போல வரமாட்டாங்களா...

ஃஃஃஃஃஃஃஃஃ

அரசியல் அதிகாரம் என்பது ஒரு போதை...

இல்லையென்றால், திருமா போன்ற தலைவர்கள் கூட அரசியல் ஓடையில் அடித்து செல்லப்படுவார்களா...??

Related Posts with Thumbnails