திங்கள், 9 ஜூலை, 2007

மீனா! பைத்தியகாரியா.....!

ஏதோ! நகர வாழ்க்கையில் இயங்கிக்கொண்டிருந்தாலும், எனக்கு எப்போதும் கிராமத்துக்கு போறது நிரம்ப பிடித்தமான நிகழ்வு. அப்படி ஒரு நண்பரின் கிராமத்துக்கு சென்றேன். நண்பரும் என்னை பேருந்து நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் அவருடன் அழைத்து சென்றார். வழி நெடுக வயல்கள், தென்னெஞ்சோலைகள் மனத்திற்க்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

ஊருக்குள் நுழைந்து விட்டோம்... ஒரு பார்க்க அழகான பதினைந்து அல்லது ஒரிரு வயது கூட குறைய இருக்கலாம் அப்படியான அழுக்கான உடை அணிந்த பெண்;வீதியில் போகிற, வருகிற எல்லா ஆண்களையும் தன்னோட படுக்க வரும்படி அழைத்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அப்பெண் என் நண்பரின் வண்டியை கண்டதும் விலகி விட்டாள்.

சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒரு பெண் (அவளுடைய தாய் என்று பின்னர் அறிந்து கொண்டேன்) வந்து அடித்து இழுத்து சென்றுக்கொண்டிருந்தார். மனதை ஏதோ உறுத்த நண்பரிடம் யார் அந்த பெண்? என்று வினாவினேன். அவர் விடு பிறகு பேசலாம் என்றார். நான் விடாபிடியாக இருந்ததால் அவர் சொல்ல ஆரம்பித்தார்...

"மீனா! கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த ஒரு பருவப்பெண், பார்ப்போரை மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் வசீகரம் உடல் வனப்பில், ஆனால் பாவம் ஒரு தோப்புக்குடியின் மகளாக பிறந்திருந்தாள்".
(தோப்புக்குடி- பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னந்தோப்புகளில் வேலைகாரர் குடும்பத்துடன் குடில் அமைத்து அந்த தோப்பின் முதலாளிக்கு எல்லா வேலையும் குடும்பமே செய்யும்)

அவள்! அந்தகிராமத்தின் அதிகார வர்க்கங்களை நன்றாக அறிந்திருந்தாள், அதனாலயே மிகவும் எச்சரிக்கையாகவே நடந்துக்கொள்வாள். ஆனால் வாலிப கழுகுகள் வட்டமிடுவதை நிறுத்தவில்லை.

பத்தாம்வகுப்பு தேர்வு விடுமுறை அவளுக்கு மிகப்பெரிய ஆபத்தை வரவழைத்தது. அவ்வூர் பூசாரி மகனின் காதல் வலையில் வீழ்த்தப்பட்டாள். காதல் வேளாங்கன்னி விடுதி வரை சென்றது.

அங்கேதான் அந்தபாதகனின் சதி ஆரம்பமாகியது தான் மட்டும் காதலன் என்றால் ஊரர் மிரட்டி தனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்றெண்ணி, தனக்கு பழக்கமான ஆதிக்க சாதியின் ஒரு நபருக்கு போட்டுக்கொடுக்கிறான். அந்த நபர் அவளை மிரட்டி அனுபவித்திருக்கிறார்.

இப்படி ஆரம்பித்து, ஒவ்வொருத்தராக அப்பெண்ணை மிரட்டி அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

நண்பருடைய கூற்றுப்படி ஒருக்காலகட்டத்தில் 15லிருந்து 50 வயது இருக்கும் அந்த கிராமத்து ஆண்களில் முக்கால்வாசி பேர் அவளை 3 மாதங்களில் சிதைத்திருக்கின்றனர்.

வலி, வேதனை, அவமானம் அத்தனையும் அப்பெண்ணை பைத்தியமாக்கியதா! அல்லது இக்கழுகுகளின் கைகளிலிருந்து விடுபட பைத்தியமாக நடிக்கிறாளா!
இதில் கொடுமை அப்பெண் மனநிலை சரியில்லை என்கிற நிலையிலும் சிலபேர் சோப் வாங்கிக்கொடுத்து குளிக்க வைத்து அனுபவிக்கின்றனர் என்கிற உண்மை.

மீண்டும் ஒருமுறை அந்த நண்பரை சந்தித்தபோது அறிந்துக்கொண்டது அக்குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துக்கொண்ட செய்தி.

வறுமையும், ஏழ்மையும் எங்களோட இருந்தாலும்...
கால் வயிற்று கஞ்சிக்கு... கடின உழைப்பை தந்து தானய்யா வாழுறோம்!
எங்கள மானத்தோட வாழக்கூட விடலைன்னா! எங்கய்யா போவோம்!
அந்த தாயும், தந்தையும் கடைசியாக இப்படி நினைத்திருப்பார்களோ!


கிராமங்களில் ஆரம்பித்து, காவல் நிலையத்திலிருந்து, இராணுவம் வரை காம வெறி பிடித்த மிருங்கள் வாழும் நாடாக!

ஓ! இவர்கள் இப்படி இருப்பதால் தான் யாரை அம்மா! என்று அழைப்பது என்றுக்கூட அறியாமல் போனார்களோ!

14 comments:

Unknown சொன்னது…

:-(((

பெயரில்லா சொன்னது…

//ஓ! இவர்கள் இப்படி இருப்பதால் தான் யாரை அம்மா! என்று அழைப்பது என்றுக்கூட அறியாமல் போனார்களோ!//

தமிழ்நாடே 'அம்மா' பேரக்கேட்டா 'சும்மா அதிருதில்ல'

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கல்வெட்டு!
அதென்ன ஸ்மைலி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் சுதாகரன்!

மலேசியா பயணம் எப்படி இருக்கிறது!

Thekkikattan|தெகா சொன்னது…

வேதனை, வெட்கம் - சாபக்கேடு :-(

பெயரில்லா சொன்னது…

These kind of things frequently happen in our places and we all claim that we have the best culture in the world....

மங்கை சொன்னது…

என்ன சொல்றதுன்னேதெரியலை.. மனசு பிஞ்சு பிஞ்சு போச்சுங்க..ச்சே..

பெயரில்லா சொன்னது…

அந்த ஊர் இளைஞர்கள் அந்தக் கிராம அரக்கர்களை தேடி அழிக்க வேண்டும். காவல்துறை தூங்கினால் ஊர்மக்கள் விழிப்பதில் தவறில்லை.

ஒரு ஈழத் தமிழன்

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் தெகா!
//வேதனை, வெட்கம் - சாபக்கேடு :-(//

கிராமங்களின் கடைநிலை உழைப்பாளிகளின் மனித உரிமைகள் எவ்வளவு மேசமாக இருக்கிறது என்பதற்க்கான ஒரு உண்மை சம்பவம் இது.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் மங்கை!
//என்ன சொல்றதுன்னேதெரியலை.. மனசு பிஞ்சு பிஞ்சு போச்சுங்க..ச்சே..//

நேரில் அப்பெண்ணை பார்த்தபோது... என் நிலை மிகவும் மோசம்.

வருகைக்கு நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அனானி!
///அந்த ஊர் இளைஞர்கள் அந்தக் கிராம அரக்கர்களை தேடி அழிக்க வேண்டும். காவல்துறை தூங்கினால் ஊர்மக்கள் விழிப்பதில் தவறில்லை.

ஒரு ஈழத் தமிழன்///

'பறை" என்றொரு குறும்படம் இருக்கிறது பாருங்கள். ஒரு கிராமமே தலித் மக்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அனானி!
///These kind of things frequently happen in our places and we all claim that we have the best culture in the world....///

கலாச்சாரமா அப்படின்ன என்னங்கோ?

பெயரில்லா சொன்னது…

பதிவைப் படித்து முடித்ததும் மனசு வருத்தமாக இருந்தது. இரண்டு விஷயங்களில்.

1) பதிவு ஏற்படுத்திய தாக்கம்

2)//ஓ! இவர்கள் இப்படி இருப்பதால் தான் யாரை அம்மா! என்று அழைப்பது என்றுக்கூட அறியாமல் போனார்களோ!//

என்ன சொல்ல வருகிறீர்கள்?. பதிவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?. பதிவின் நோக்கமும் தாக்கமும் திசைமாறாதா?




மனதில் தோன்றியதை சொன்னேன். என்னவோ போங்க. அவலை(ளை) நினைச்சு ஒரல இடிச்ச கதையா இருக்கு.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அனானி,
//
என்ன சொல்ல வருகிறீர்கள்?. பதிவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?. பதிவின் நோக்கமும் தாக்கமும் திசைமாறாதா?
//

தனி மனித ஓழுக்கம் அற்ற மனிதர்கள், தனி மனித ஓழுக்கமற்ற தலைமையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே கருத்து...

நான் எழுதி இங்கன தாக்கம் வரபோகுதாக்கும்...

Related Posts with Thumbnails