புதன், 5 செப்டம்பர், 2007

விவாதம் - என்ன செய்வீர்கள்.... ?

பேசுவதும்,விவாதிப்பதும் என்னோடு உடன் இருப்பவை. நான் இருக்கிற இடத்தில் எப்போதும் இரைச்சலாகவே இருக்கிறது. முடிவில்லாமல் நீளூகிற விவாதங்கள் அயர்ச்சியை தருவதாக அங்கலாய்க்கும் நண்பர்கள் அடுத்த நாள் நான் வரவில்லை என்றால், மூன்றாம் நாள் ஏன் வரவில்லை? என்றே வினா எழுப்புகிறார்கள். விவாதங்கள் நாம் கடந்த வந்த அனுபவமாக அல்லது நாம் கற்றவையின் நீட்சியாக கொட்டித் தீர்க்கப்பட்டு முடிவில் இன்னும் கொஞ்சம் புதிய சிந்தனைகளோடு புறப்படுகிறேன் இன்னும் விவாதிக்க வேண்டுமென்கிற ஆவலோடு...

இப்படியாக ஓரு மதிய உணவு இடைவேளையில் எழுந்த கேள்வி இன்னும் நீண்டுக்கொண்டேயிருக்கிறது விவாதமாய்....

ஓர் மனிதஉயிரைக்காப்பாற்ற முடியாது, மரணம் முடிவு என்று சொல்லிவிட்டார்கள். ( அது புற்றுநோயோ அல்லது எய்ட்ஸ் ஆகவோ அல்லது வேறெதாகவோ இருக்கட்டும்)

அவ்வாறு முடிவுச்செய்யப்பட்ட மனிதஉயிர் உங்கள் உறவாகவோ (அ) நண்பராகவோ இருக்கும்பட்சத்தில்....

நீங்கள் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்தவரை போராடுவீர்களா? (அ) அவ்வளவுதான் என்று விட்டுவிடுவீர்களா?

3 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்தவரை போராடுவீர்களா? (அ) அவ்வளவுதான் என்று விட்டுவிடுவீர்களா?
posted by பாரி.அரசு at 1:39 AM on Sep 5, 2007
//

பாரி,
கவிதைக்கு இந்த கடைசி வரி சரியாக பொருந்த வில்லை.

TBCD சொன்னது…

தமிழ் மணம் விவாதத்தில் போடலாமே....?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

"கோவி.கண்ணன்"
to me

show details
4:56 pm (3 hours ago)

விவாதம் - என்ன செய்வீர்கள்.... ?
பேசுவதும்,விவாதிப்பதும்
என்னோடு உடன் இருப்பவை.
நான் இருக்கிற இடத்தில்
எப்போதும் இரைச்சலாகவே இருக்கிறது.
முடிவில்லாமல் நீளூகிற
விவாதங்கள் அயர்ச்சியை தருவதாக
அங்கலாய்க்கும் நண்பர்கள்
அடுத்த நாள் நான் வரவில்லை என்றால்,
மூன்றாம் நாள் ஏன் வரவில்லை?
என்றே வினா எழுப்புகிறார்கள்.

விவாதங்கள் நாம் கடந்த வந்த அனுபவமாக அல்லது
நாம் கற்றவையின் நீட்சியாக
கொட்டித் தீர்க்கப்பட்டு முடிவில்
இன்னும் கொஞ்சம் புதிய சிந்தனைகளோடு
புறப்படுகிறேன் இன்னும்
விவாதிக்க வேண்டுமென்கிற ஆவலோடு...
இப்படியாக ஓரு மதிய உணவு இடைவேளையில்
எழுந்த கேள்வி இன்னும் நீண்டுக்கொண்டேயிருக்கிறது விவாதமாய்....

ஓர் மனிதஉயிரைக்காப்பாற்ற முடியாது,
மரணம் முடிவு என்று சொல்லிவிட்டார்கள்.
அது புற்றுநோயோ அல்லது எய்ட்ஸ்
ஆகவோ அல்லது வேறெதாகவோ இருக்கட்டும்
அவ்வாறு முடிவுச்செய்யப்பட்ட
மனிதஉயிர் உங்கள்
உறவாகவோ (அ)
நண்பராகவோ இருக்கம்பட்சத்தில்....

-- பாரி அரசு
நன்றி : கோவி

Related Posts with Thumbnails