புதன், 25 ஜூன், 2008

பார்ப்பானியம் என்றால் என்ன?

உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!

எ.கா:

1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது.

2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல்.

3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல்.

(நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?)

குறிப்பு :
இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!

10 comments:

பெயரில்லா சொன்னது…

You 100 % correct. Very nice/apt definition I have ever seen ....

பெயரில்லா சொன்னது…

Very nice/apt defnition I have ever read for that. Keep it up...

ஜமாலன் சொன்னது…

//பார்ப்பனியம் என்பது ”சமத்தவமின்மை சாதிப்பார்ப்பது தீண்டாமையை பின்பற்றும் தூய்மைவாதம் தனது தனித்தன்மைகளை காப்பாற்றிக்கொள்வதில் கண்மூடித்தனமான தீவிரம்” - என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். இந்த மனோநிலையும் இதனை பின்பற்றும் உடல்நிலையும் அடிப்படையில் பார்ப்னீய உடல்தான். அது எந்த சாதி எந்த மதம் என்பது முக்கியமல்ல. ஒரவன் முஸ்லிமாக இருந்து கொண்டு தீண்டாமை பாராட்டினால் அவனது உடலும் பார்ப்பனிய உடலே.//

எனது பதிவு ஒன்றிற்கு பெரியார் விமர்சகருக்கு எழுதிய பதில் இது. உங்கள் வாதம் இதை ஒட்டி இருக்கிறது. பாராட்டுக்கள். மேலும் இந்த விவாதம் படிக்க...
http://jamalantamil.blogspot.com/2008/06/blog-post_12.html

அம்பேத்கர்கூட சொல்லியுள்ளார் பார்ப்பனியம் என்பது அடிப்படையில் சமத்துவமின்மை என்பதுதான் என்று.

SANGKUMUHAM சொன்னது…

But, Mr Paari, there is slight confusion that your defintion is leading to.

The list of qualities that characterise the so-called Paarppaneeyam, may be found, in many cases, strongly and passionately, among non-brahmins, except dalits of Tamilnaadu.

The Sivapillais are a community which became notorious for following the aforesaid characterists to its last letter.

Please read the book, 'Jaasthi sachcharavukaLs' by Maraimalai adigal, himself a Saiva Pillai. The book is in Tamil; but he wrote the introudction in English. The book is a resounding castigation of Saiva Pillais of Tirnelveli districts.

All communites, as I said except the dalits, more or less, follow the paarppanaeeyam. All of them have accepted the vedic relgiion; and naturally, the superiority of Sanskirt in Hindu worship, the vedic rituals etc. Except in village temples, there too, only slightly, the vedic rituals have been accepted and given overriding prioriority over the Tamil rituals.

By no stretch of imagination can we leave the non-brahmin Tamils scott free. I have heard it even said that the brahmins are ready to relax, but not non-brahmins.

The impact of periyaars or dravidian movement, is minimal in temple worship. It is hawked only by persons like you. Overall, the Tamilians have accepted the list as true and worthy of adherence.

In the above light, it is a gross misonomer to give the label as paarppaneeyam to a group of act of all Tamilains. Paarppaneeyam does imply that the act is done by only paarppanars or Tamil brahmins. Such implication is a travestry of today reality.

I can answer point by point to your list to prove my above thesis. But, for lack of space, I touch only the first.

The non-brahmins themselves accept that vegetarianism is the code that should be followed in Hindu worship. They therefore take only veg. food when they go to temple; when they do some pujas at home; on certain days a week; or on certain auspicious days. They use the word: kavichchai. They eat nv food, anytime except the time conencted with god.

It is just an example to show the NB tamils are as guilty as Bramins if dietary habit can be taken to define 'good' or 'bad', or 'high' or 'low;, or 'virtuous' or 'vicious'.

All that you can say, in defence, may be that the Brahmins have indoctrinated the NBs. But that is very obsolete point of defence. The defence treats the NB Tamils as people without their minds of their own!

You may, if possible, prefer a more approprate word, for those people who follow the vices listed by you, in their lives to the inappropriate word, paarppaneeyam.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் சங்குமுகம்!

பின்பு எழுத நினைத்துள்ள இரண்டு கருத்துகள்...

பார்ப்பானியத்தின் பரவல்?

பார்ப்பானியம் பார்ப்பனர் என்கிற சாதியுடன் இணைத்து நோக்கபடுவதன் பின்னணி!

நாளை பார்ப்பானியத்தின் விளைவுகளில் உங்களுடைய சில கருத்துகளுக்கு விளக்கம் தருகிறேன்.

நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பின்னூட்டகயமை!

Thamizhan சொன்னது…

பெண்ணடிமை-அம்மாவையே வாடி போடி என்பது.
உழைப்பின்மை-அடுத்தவர் உழைப்பிலே வாழ்வது.உழைப்பைக் கொச்சைப் படுத்துவது.
ஏமாற்று-இல்லாததை வைத்து இருப்போரை ஏமாற்று(கடவுள்-மந்திரம்).
திருட்டு- மற்றவர்களிடமிருக்கும் நல்லதை எடுத்துக் கொண்டு அது என்னுடையது என்பது,(இறைச்சி ,மது,மொழித் திருட்டு)

பார்ப்பனவர்களைவிட பார்ப்பனீயம் உள்ளத்தில் உள்ள் அனைவரும் தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது!

முகவை மைந்தன் சொன்னது…

//அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!//

அந்த உயர்வு தாழ்வை தலைமுறைக்கும் கற்பித்து தன்னுடைய உயர்வை, தான் கற்பித்த வழியினின்று பின்னர் விலகினாலும் தக்க வைத்துக் கொள்ளும் ஒழுங்கீனமே பார்ப்பனீயம்னு இருந்தா இன்னும் சரியா பொருந்தும்.

வால்பையன் சொன்னது…

மிக அருமையான கட்டுரை

பகிர்விற்கு நன்றி!

Chittoor Murugesan சொன்னது…

//சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள்//
தலைவா அப்பாவியா இருக்கிங்க. இவிக திங்காத பிராணியே கிடையாது.புத்தர் வந்த பிறகு எங்கே கம்பெனி திவாலாயிருமோனு மாறிவந்தானுக..

Related Posts with Thumbnails