இவர் தான் பெரியார்! என்ற தலைப்பில் பெரியாரை பற்றிய கருத்துகளை விவாதிக்கொண்டிருந்தார்கள்... நீண்ட நாட்களாக யாழ் களத்தை செய்திகளுக்காகவும், விவாதங்களுக்காகவும் படித்து வந்தாலும்... அதில் நான் அனுப்புகிற உறுப்பினர் விண்ணப்பம் மறுக்கப்பட்டு வருகிறதாலும்... இங்கே எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்!
தூயவன், நெடுக்காலபோகிறவன் போன்றவர்கள் அடிக்கிற கூத்திற்க்கு அளவேயில்லாமல் இருக்கிறது!
தூயவன் போகிற போக்கில் தமிழகத்தில் சாதிபிரிவுக்கு காரணம் பெரியார் தான் அப்படின்னு சொல்கிறார்...
லக்கிலுக் பெரியார் போராட ஆரம்பித்த புள்ளியே சாதி மறுப்பு என்பதை சுட்டியவுடன்... பெரியாருக்கு முன்பே தமிழகத்தில் சாதி இருந்ததாக அறிந்தராம்! வேடிக்கையாகயில்லை... பெரியாரை பற்றிய வாசித்து அறிந்துக்கொள்ளுங்கள் என்கிற கோரிக்கைக்கும், நான் ஏன் வாசிக்கணும் என்கிறார்... தெரியாத வரலாற்றை பற்றி தன்போக்கில் இழித்தும்,பழித்தும் எழுதுகிறார்!
அவர் தமிழகம் வந்தபொழுது பள்ளியில் சேர்க்க சாதி என்னவென்று கேட்டார்களாம்... அதற்க்கு முன்பு அவருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாதாம்!
கேக்கிறவன் கேனையனாக இருந்தால்... வாயில் அசிங்கமாக வருகிறது! சாதி தெரியாமல் தான் ஈழத்தமிழர்களின் திருமணத்தளங்கள் அனைத்திலும் ஈழத்தமிழர் என்கிற ஒரே ஒரு அடையாளத்துடன் வருகிறதா? ஜப்னா வெள்ளாளர், ஜப்னா ப்யூர் வெள்ளாளர்... இதெல்லாம் என்ன? சாதி பார்க்காமல் தான் ஈழத்தமிழர் திருமணங்கள் நடைபெறுகிறதா? எங்கே இணையத்தில் வெளியாகியுள்ள ஈழத்தமிழர் திருமண விண்ணப்பங்களில் எத்தனை சாதி இல்லாமல் வந்திருக்கிறது என்று காட்டுங்கள் பார்ப்போம் தூயவன்:(
சிங்கள, தமிழ் இன முரணை ஒழிக்க நாளையிலிருந்து யாரிடமும் நீ என்ன இனம் என்று கேட்காமல் இருந்தால் மட்டும் போதும் :) இன முரண் பிரச்சினை தீர்ந்து விடுமா?
சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் அந்த சாதியை சொல்லாமல் விட்டுவிட்டால் சாதி பிரச்சினை ஒழிந்துவிடுமா? பள்ளிக்கூடத்தில் சாதிக்கேட்டதால் தமிழ்நாட்டில் சாதி இருப்பதாக அறிந்தீர்களா? அய்யகோ!
தமிழ்நாட்டில் வந்து தான் உங்கள் சாதியை நீங்கள் தெரிந்துக்கொண்டீர்களா? யார் காதில் பூ சுற்ற பார்க்கிறீர்கள்? இன முரண் தீவிரமடைவதற்க்கு முன்பு ஈழத்தில் வழிபாடு என்பது தமிழில் இருந்ததா தூயவன்?, நாளை ஈழம் என்கிற நாட்டில் வழிபாடு தமிழில் இருக்குமா? இல்லை சமஸ்கிருததில் இருக்குமா தூயவன்?
அடுத்தாக சாதி பார்ப்பதால் தமிழர் என்கிற ஒற்றுமை குலைந்து போயிவிட்டதாகவும்... எதிர்கால இலக்கற்றதாகவும் இருக்கிறதாகவும் சொல்கிறார்!
சிங்களன் அடிக்க ஆரம்பித்தபொழுது தானே தமிழன், தமிழ் தேசியம் எல்லாம் ஈழத்தில் தோன்றியது! தூப்பாக்கியை தொண்டைக்குழியில் வைத்து தமிழனா என்று கேட்கிற வரைக்கும் தமிழர் என்கிற அடையாளத்தை பற்றிய விழித்தல் எத்தனை பேருக்கு இருந்தது! இல்லை அதற்க்கு முன்பு தமிழர் தேசியம் பேசிய ஈழத்தவர்களை அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம்!
நம்மை அடிக்கிறவன் எந்த அடையாளத்தைக்கொண்டு அடிக்கிறான் என்பது தான் அவனை திருப்பி அடிக்க பயன்படும் ஆயுதமாகவும் இருக்கிறது!
அன்றைய சென்னை மகாணத்தில் முதல் நிலை ஒடுக்கம் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்பதாகவும், இரண்டாம் நிலை ஒடுக்கம் அதிகாரத்திலிருப்போர், இல்லாதோராகவும். மூன்றாம் நிலை ஒடுக்கம் பொருளாதாரமற்றோர் என்பதாகவும் இருந்தது.
ஆக இங்கே பார்ப்பனரல்லாதோர் என்கிற அடையாளம் ஒடுக்கப்பயன்பட்ட ஆயுதம், அதையே கையிலெடுத்தார் பெரியார்!
பாதிக்கப்படுகிறவன் தான் எதனால் பாதிக்கப்படுகிறானோ அதை வைத்து தானே போராட முடியும்!
தமிழர், தமிழர் தேசியம் என்று பம்மாத்து பேசுகிறவர்கள்... மும்பையில் வசிக்கிற தமிழர்களை துன்புறுத்திய, துன்புறுத்துகிற பால்தாக்கரேயின் ஈழப்போராட்ட ஆதரவை ஏன் வரவேற்றனர்?
மும்பையில் இருக்கிற தமிழ் பேசுகிறவர்கள் இவர்களின் தமிழ் தேசியத்தில் அடக்கமாயில்லையா?
உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்களுக்கு வருகிற பிரச்சினைகளையெல்லாம் தட்டையாக தமிழர் என்கிற அடையாளத்துடன் மட்டுமே அணுக முடியுமா?
ஆயிரகணக்கான ஆண்டுகள் நடைப்பெற்ற வர்ணசிரம ஒடுக்குமுறையை எதிர்க்கும் போராட்டத்தை... தட்டையாக இனக்குழு என்கிற அடையாளத்துடன் சிதைத்துவிட முடியுமா?
உலகில் எல்லாயிடங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையெல்லாம் தேசிய இனக்குழு போராட்டமாக பார்க்கிற தட்டையான பார்வை எவ்வளவு மோசமானது?
அன்றைய சென்னை மகாணம் அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்திய இந்தியாவின் நிலைமை என்னவாகயிருந்தது? மக்கள் எதனால் ஒடுக்கப்பட்டார்கள்? அவர்களின் உரிமைகள் எதனால் பறிக்கப்பட்டன? அவர்கள் எதை எதிர்த்து போராட வேண்டியிருந்தது?
வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு பெரியார் என்கிற போராளியின் வாழ்க்கை எப்படி துவங்கியது எதற்க்காக போராடினார் என்பதையாவது புரிந்துக்கொள்ளுங்கள்? இல்லையென்றால் ஈழத்தமிழ் தேசியம் அல்லது சைவ வெள்ளாள தேசியம் இப்படி எதையாவது பேசிக்கொண்டேயிருக்கலாம்...
செவ்வாய், 3 ஜூன், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
14 comments:
இப்படி விவரமா, விவகாரமா பேசுவீங்கன்னுதான் விண்ணப்பம் மறுக்கப்பட்டு வருகிறதோ!!!
கலக்கல்,
ரொம்ப கோவமாக எழுதி இருக்கிங்க.
பெரியாரைப் பற்றி தெரியாதவர்கள் பேசாமல் இருப்பதே நல்லது.
சரியாக சுட்டி இருக்கிங்க !
ஒரு அளவுக்கு மேல் அங்கே போராட முடியவில்லை பாரி :-(
நண்பர் தூயவனும் பெரியார் குறித்த வாதங்கள் வந்தபோது யாழ் களத்தை விட்டு திடீரென விலகிவிட்டார். ஒருவேளை நம்மால் தான் விலகிவிட்டாரோ என்ற குற்ற உணர்ச்சியில் இப்போது அந்த களம் பக்கம் தினமும் போனாலும் பங்கேற்பதில்லை.
இருப்பினும் தந்தை பெரியார் குறித்த புரிதல் நம்மை விட அதிகம் கொண்ட ஈழச்சகோதர்களும் அங்கே உண்டு. நாரதர், சபேசன் போன்றவர்களின் வாதங்களை கண்டு அசந்து நின்றிருக்கிறேன்.
அதற்க்கு முன்பு அவருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாதாம்!//
காமெடி :)
சாதி என்பதை இவர்கள் தனியே அது குறித்து நடக்கும் அடக்குமுறைகள் என்றுதான் அடையாளப் படுத்துகிறார்கள். சாதியின் பெயரால் நடக்கும் அடக்குமுறைகள் ஒப்பீட்டளவில் குறைவு என்றவுடன் ஓகே சாதி இல்லை என்கிறார்கள்.
ஆனால் இன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் பத்திரிகையில் திருமண விளம்பரத்தில் சாதியைக் குறித்துதான் வருகிறது.
இவர்களைப் பொறுத்தவரை - அடக்குமுறைகளில் ஈடுபடாமல் - சாதிய அடையாளத்தை பேணுவது ஒன்றும் பாதகமில்லை என்று நினைக்கிறார்கள் போலும்.
ஆனால் ஈழத்தின் குக்கிராமங்கள் கிராமங்கள் சாதியை காரணம் காட்டிய ஆளுமைகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. இன்னமும் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புக்களில் நுழைவதை கௌரவ குறைச்சலாக கருதும் மனிதர்கள் உள்ளார்கள்.
தூயவனிடம் நானும் நேரடியாக பேசியிருக்கின்றேன். சாதியை அடையாளப் படுத்தி என் மூஞ்சையில் ஒருவன் குத்தினால் - பதிலுக்கு நான் என்ன செய்வது என பல தடவைகள் கேட்டிருக்கிறேன்.
இப்படி பதிலுக்குப் பதில் குத்திக்கொண்டிருந்தால் தமிழினம் பிரியும் என்பதுதான் அவரது விடையாயிருந்தது.
இயல்பாகவே யாழ்ப்பாணம் சைவச் சூழலுக்குட்பட்டது. பார்ப்பணர்கள் என்பது தனியே பிராமணர்கள்தான் (பார்ப்பனியம் என்பதை நான் சகல உயர்சாதி மேலாதிக்கங்களினதும் அடையாளம் என்ற நான் விளங்கி கொண்டிருக்கிறேன் )என உணரும் ஒரு யாழ்ப்பாணத்தவர் - பிராமணியத்துக்கெதிரான கருத்துடன் ஒன்றிப் போக அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஐயர் பாவம் - தானும் தன் பாடுமெண்டு இருக்கிறார் - அவர்களையேன் இப்படி ஏச வேண்டும். என்றுதான் பெரியாரை வாசிக்கும் பலர் நினைக்க கூடும்.
பெரியாரின் கடவுட் கொள்கையை அப்படியே ஈழத்தில் பயன் படுத்தலாம். ஆனால் சாதி தொடர்பான விழிப்புணர்வுக்கு - பிராமண எதிர் நிலை ஈழத்தில் பொருந்தாது என்றே நினைக்கின்றேன். அதற்கு திருத்திய பதிப்பு வேண்டும்.
உதாரணத்திற்கு ஈழத்தில் சாதிய ஆதிக்கங்கங்களால் தாழ்த்தப் பட்டவொருவரிடம் போய்: - பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி என்றால் ---- ஐயோ அவர் பாவம் - அந்தாள் தானும் தன்ரை பூசையும் உண்டென்று இருக்கிறார். அவரையெதுக்கு அடிக்க வேணும் என்றுதான் கேட்பார்.
மற்றும்படி யாழில் வந்து உங்கடை பி பி ஐ கூட்டிக்கொள்ளாதீங்க - தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களது தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்பார்கள். (அந்த தாழ்வு மனப்பான்மையின் சமூக காரணம் என்ன யார் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்) - தாழ்த்தப்பட்டவரை கிணற்றில் நீரள்ள விடுவதில்லையென்றால் - 21 நூற்றாண்டில கிணறு எதற்கு - குழாயில தண்ணீர் எடுங்கோ எனச் சொல்லும் வி------- கூட்டங்களோடு கதைச்சால்..... வேறென்ன வரும் ?
http://blog.sajeek.com/?p=306
ஈழத்தவர்கள் என்று வலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் வெள்ளாளர்களே. சாதி எதிர்ப்பு என்று யாராவது கதைத்தால் அவர்களை தேசிய எதிர்ப்புவாதிகள் என்றும் துரோகி என்றும் எளிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். பார்ப்பனர்கள் எப்படி தமிழ்நாட்டில் விதண்டாவாதம் செய்வார்களோ அதேபோல ஈழத்தில் வெள்ளாளாகள் விதண்டாவாதம் செய்வார்கள். தமிழீழம் கிடைத்தாலும் அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உத்தரவாதம் இல்லை.
பெரியாரை ஈழத்தில் ஒருத்தருக்கும் ஏன் தெரியவில்லை என்று ஒரு ஆய்வு செய்தால் ஈழத்தில் ஊடகங்களை வைத்துள்ள வெள்ளாளர்களின் நுண்ணரசியல் புலப்படும்.
வெள்ளாளர்களை ஈழத்துப்பார்ப்பனர்கள் என்று இலகுபடுத்தலாம். தமிழ்நாட்டில் பிராமணர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டால் எவ்வாறு அடுத்தநிலையில் உள்ள சாதி அவ்விடத்தை நிரப்புமோ அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று எப்படி இலங்கை அரசு சொல்கிறதோ அதேபோல் ஈழத்தில் சாதி இல்லை என்று வெள்ளாளர்கள் சொல்வார்கள். ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு பாதகம் என்பதால் அவர்கள் அப்படித்தான் கூறுவார்கள்
-- உங்களை விட அதிகம் நொந்த ஈழத்தவன்
இது ஒரு வேலை மிணக்கட்ட பதிவு.
சாதி ஒழிக்கப் போகிறோம் என்பவர்கள் பிராமணனனை அடிடா என்பதில் உள்ள சாதியப் பாகுபாட்டை மறந்து நிற்கிறார்கள்.
சிலையைக் கடவுள் என்றாதே என்பவர்கள் சிலையைக் கடவுளாகக் கருதி செருப்பால் அடிக்கிறார்கள்.
மூடநம்பிக்கையை அழிப்போம் என்பவர்கள் பெரியார் எங்கள் தந்தை என்று ஈ வெ ராமசாமி நாயக்கர் என்ற தனிமனிதனை வழிபடுகின்றனர்.
பகுத்தறிவு என்பதை கடவுள் இல்லை எனும் நாத்தியகமாக வரையறுகின்றனர்.
இப்படிப்பட்ட மூடத்தனங்களைத்தான் தூயவனும் நெடுக்காலபோவனும் போட்டு வாங்கித் தள்ளுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் சாதி இருக்கிறது எனவே தமிழகத்திலும் சாதி இருக்கலாம் என்பவர்கள் ஏன் சாதி அழிக்கப் புறப்பட்டார் பெரியார் என்றும் முழக்க முடுகின்றனர்.
சாதி என்பது என்ன? அதைப் பெரியார் என்பவர் எப்படி அழிக்க முற்பட்டார்? இவை பற்றிய எந்த ஆழமான ஆய்வறிதலும் இன்று அரசியல் தேவைகளுக்காக பெரியார் என்பவருன் காட்டுக் கூச்சல்களை கருவியாக்கியதன் விளைவே தமிழகத்தில் சாதிச்சங்க அரசியல் என்று சொல்கின்றனர் தூயவனும் நெடுக்காலபோவனும். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.
யாழ் கள உறவுகள் நெடுக்காலபோவனும் சரி தூயவனும் சரி மனிதத்தை முன்னிலைப்படுத்துங்கள் மனித சமத்துவத்தை முன்னிறுத்துங்கள் சாதி ஒழிப்பு என்று மனிதரிடையே வர்க்க ரீதியான இனங்காட்டலையும் மோதலையும் தூண்டி அரசியல் செய்யாதீர்கள் என்றுதான் குரல் கொடுக்கின்றனர். அவர்கள் ஈழத்தில் பொருளாதார மற்றும் தொழில் சார் வர்க்க பேதம் இருப்பதை ஆதரிக்கவில்லை. அதை அவர்கள் ஈழத்தில் மட்டும் இனங்காணவில்லை. உலகெங்கும் பொருளாதாரம் மற்றும் தொழில் மற்றும் தோலின் நிறம் என்று பல வகையில் மனிதன் வர்க்கமாக்கப்பட்டு பிரிவு காட்டப்பட்டு உயர்ந்தோன் தாழ்ந்தோன் என்று கருதப்படும் அனைத்துக் கருத்தியலையும் அவர்கள் வெறுப்பதை அவர்களின் கருத்தில் காணக் கூடியதாக உள்ளது.
மதம் எனும் போது அவர்கள் உலக மதச் சுதந்திரத்தை மக்கள் அனைவரும் பாகுபாடுன்றி அவர்களின் சுயவிருப்புக்கு அமைய அனுபவிக்கலாம் என்கின்றனர்.
பகுத்தறிவு என்று ஒரு கூட்டம் தம்மை மனிதர்களுள் வேறுபடுத்திக் கொண்டு புதிய வர்க்கப் பிரிவினைக்கு அத்திவாரம் இடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். மாறாக அனைவருக்கும் கல்வி எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை அவர்கள் முன் வைக்கின்றனர்.
மக்களின் பொருளாதார கல்வி சார் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட செய்யப்படும் முயற்சிகளே மக்களிடையே வர்க்கப் பிரிவினைகளை அகற்றும் என்று நம்புகின்றனர். அதுதான் உலக யதார்த்தமும் கூட. முன்னேறிவிட்ட மேற்குலக நாடுகளில் இன்று சாதி இல்லை. காரணம் மக்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகளும் கல்வியும் உள்ளது. ஆனாலும் அங்கும் பொருளாதார பாகுபாடு, தொழில்பாகுபாடு, நிறப்பாகுபாடுகள் உள்ளன. அவற்றை சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் சாதிச் சான்றுகளை அகற்றிவிட்டு எல்லோருக்கும் எல்லாம் அளிக்கும் சமத்துவ சட்டங்களை இயற்றலாமே. சாதி அடிப்படையில் சலுகைகள் அளிப்பது மனித முயற்சிகளுக்கு இடையூறாகாதா, பாகுபாடுகளை வளர்க்காதா என்று வினவுகின்றனர்.
அவர்களின் வினவலில் ஏன் நியாயம் இல்லை என்கிறீர்கள்.
மானுட சமூகவியல் என்பது மனிதனைப் பாகுபடுத்த முற்படாத கொள்கைகளை வகுப்பதாக அமைய வேண்டும்.
காலையில் கள்ளைக் குடிக்காதே என்பதும் மாலையில் கள்ளச் சாராயத்துக்குப் பதிலா கள்ளைக் குடி என்பதும் பேச்சில் மது ஒழிப்பைச் செய்யுமே தவிர குடிப்பழக்கத்தை ஒழிக்காது. இதேதான் பெரியாரின் வாதப்படி சாதி அழிப்பு என்பதிலும் அமைகிறது. பெரியார் உண்மையில் ஒரு சமூக முட்டாள் என்பதை அவரின் பல கருத்துக்களை ஆழ நோக்கின் தெரியும். அதைத்தான் நெடுக்காலபோவனும் தூயவனும் சொல்கின்றனர். அதுதான் சிலருக்கு கசக்கின்ற விடயமாக இருந்தாலும் உண்மை.
நன்றி - யாழ் கள உறவு.
பூனைக்குட்டி பெங்களூரிலிருந்து யாழ் கள உறவு என்கிற பெயரில் வெளி வந்திருக்கிறது!
யாழ் கள உறவு என்ற பெயரில் அனாமதேயமாக வந்தவரே,
தூயவனும் நெடுக்கால போவானும் கூட நினைக்காத விடயங்களை, அவர்களின் கருத்தாக நீங்கள் சொல்கிறீர்கள். சரி, உங்கள் கருத்துப்படியே அவர்கள் உலகம் தழுவிய ரீதியில் மானுட, சமூக விடுதலைக்குக் குரல் கொடுப்பவர்களாக இருக்கட்டும்.
ஆனால் ஏன் பொய்யையும் புரட்டையும் சொல்லி தமது வாதத்தை வைக்க வேண்டும்?
ஈழத்தவர்களிடம் சாதிப் பாகுபாடு இல்லையென்பதை எத்தனை தடவை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளார்கள்? தாழ்த்தப்பட்டவர்களைக் கிணற்றில் நீரள்ள விடாத சில சம்பவங்களைச் சிலர் சுட்டிக்காட்டினால் அது தவறான தகவலென்பார்கள். இவர்கள் உண்மையில் ஈழத்துச் சமூகத்தில்தான் வாழ்ந்தார்களா அல்லது வானத்திலிருந்து குதித்தார்களா என்ற சந்தேகம் வரும்வண்ணம் அவர்களின் அலட்டல் இருக்கும். அவர்களில் ஒருவராக நீங்கள் இல்லாத பட்சத்தில் உங்களுக்கும் அவை விளங்கியிருக்கும்.
இரண்டுபேருமே துதிபாடும் விடுதலைப்புலிகளே எமது சமூகத்தில் சாதிப்பாகுபாடு இருப்பதையும் அதை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வெளியிட்ட கருத்துக்கள், அறிக்கைகள் ஆவணமாகவுள்ளன. அவற்றைச் சுட்டி யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டால் விவாதம் திசைதிரும்பி விடுமாம்.
இப்ப மேல சயந்தன் எதிர்க்கருத்துச் சொல்லியிருக்கிறார் பாருங்கோ. இனி அவரின்ர கலியாணச் சம்பந்தம் ஈறாக தொன்மங்கள் ஆராயப்பட்டு அவர் அங்க கிழிக்கப்படுவார். மேற்சொன்ன ரெண்டு பேர் மட்டுமின்றி அங்க ஒரு லூசுக்கூட்டமே குந்தியிருக்கு.
ஆரேன் உருப்படியா கருத்துச்சொன்னா, உதுகள எழுதிறநேரம் 'ஓவர் ரைம்' வேலை செய்து நாட்டுக்குக் குடுக்கலாம் எண்டும் இந்தக் கூட்டம். ஆனா எல்லாரும் வாசிக்கிற செய்தித்தளங்களில வாற செய்தியை அப்பிடியே மாறிமாறி வெட்டி ஒட்டி வேலை மினக்கெட்டு பல மணித்தியாலங்களை அதிலயே செலவிடும் இந்தக் கோமாளிக்கூட்டம்.
என்னைக் கேட்டா உந்தத் தளப்பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறது எல்லாருக்கும் நல்லது.
அதுசரி, யாழ்களத்துக்கு செய்தி வாசிக்கிறதுக்காகப் போறதாக சொல்கிறீர்களே பாரி அரசு அவர்களே,
உங்களை எதால அடிச்சா தகும்?
-இவனும் யாழ் கள உறவுதான்
மன்னிக்கவும் தென்பாண்டி சிங்கம்! தொடர்புடைய கருத்துகளை மட்டும் பதியவும்...
இவனும் ஒரு யாழ் உறவு என்ற அனாமதேய நபரே,
நானும் தோழர்களும் யாழ் களத்தைப் பார்வையிடுபவர்கள்.
நெடுக்காலபோவனின் தூயவனின் வாதங்களை அவதானமாகப்படித்தவர்கள் என்ற வகையில் எனது கருத்தை பக்கச் சார்பின்றி அவர்கள் எழுதியவற்றில் இருந்து விளங்கிக் கொண்டபடி தான் எழுதி இருக்கிறேன்.
நெடுக்காலபோவனும் சரி தூயவனும் சரி சாதியை உச்சரிச்சுக் கொண்டே சாதியை அழிக்க முடியும் அல்லது மனித சமூகத்தில் ஒரு பிரிவின் மீது அதற்கு எதிராக சாதி சார்ந்த வெறித்தனத்தை ஊட்டிக் கொண்டு சாதியை அழிக்க முடியும் என்று அவர்கள் கருதவில்லை. அதுமட்டுமன்றி இதிகாசங்களையும் புராணங்களையும் அடிப்படையாக வைத்து சாதி உணர்வை ஊட்டுவதிலும் நடைமுறை சமூகத்துக்கு மனிதனுக்கு தேவையான கல்வி பொருளாதாரம் போன்ற அம்சங்களில் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிகாட்டுவது சாதிய உச்சரிப்புக்களுடன் ஒரு சமூகம் வாழ வேண்டிய தேவைக்கு அப்பால் அதனைக் கொண்டு செல்லலாம் என்று தான் அவர்கள் சொல்கின்றனர்.
நெடுக்காலபோவனும் தூயவனும் சாதாரணமானவர்களாக நான் பார்க்கவில்லை. அவர்களின் கருத்தில் நல்ல சமூகச் சிந்தனையோட்டம், பரந்த நோக்கு உள்ளதைக் காண்கிறேன்.
ஈழத்தில் சாதி இல்லை என்று அல்லது இருக்கு என்று அவர்கள் கூறிக் கொண்டிராமல் சாதி அவசியமில்லை என்பதையும் அதனைத் தவிர்த்து எவ்வாறு சமூகக் கட்டமைப்பை பேண வேண்டும் என்பதையுமே அவர்கள் சொல்கின்றனர். அதுதான் முக்கியம்.
சாதியப் பாகுபாட்டுக்கு அடிப்படை கல்வி அறிவின்மையும் பொருளாதார வசதியின்மையும் தான் முக்கிய காரணம். இதை நான் குறிப்பாக நெடுக்காலபோவனின் வாதத்தில் திறம்பட கண்டிருக்கிறேன்.
கிணறில் தண்ணி அட விடுவில்லை என்பதையே மையமாக வைத்து சாதி வெறியை வளர்ப்பதும் சாதி அழிப்பதாகப் பறைசாற்றுவது தேவையா,கிணற்றில் உள்ள தண்ணியை மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையினது அவசியமா? இதுதான் அவர்களின் வினவல். கிணற்றைக் கட்டிவிட்டு அதில் மக்களை குழும வைத்து சாதி பேசிக் கொண்டிருப்பதிலும் வீட்டுக்கொரு குழாய் அமைத்து அவரவர் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய பொருளியல் மேம்பாட்டை தருவித்தால் கிணற்றடியில் சாதியை உச்சரிக்க வேண்டி வருமா?
கிணற்றடியில் உச்சரிக்கப்படும் சாதிக்காக அழுபவர்கள் அரச சான்றிதழ்களில் அதைப் பொறித்து சலுகை பெறும் போது மட்டும் ஏன் சாதி காக்கப்படுகிறதே தாம் என்ன இயலாதவர்களா சலுகை பெற, நாமும் மனிதர் தாமே எமக்கு மட்டும் ஏன் சலுகை என்று கேள்வி கேட்கிறார்கள் இல்லை. என்பது அந்த யாழ் கள உறவுகளின் வாதம். அதில் உண்மை இருக்குத்தானே.
சலுகையைக் காட்டி சோம்பேறிகள் ஆக்கி அரசியல் செய்வதிலும் சமூகத்தில் உள்ள அனைவரையும் கல்வியில் பொருளாதாரத்தில் சம நிலைக்குக் கொண்டு வர ஊக்குவிக்கலாமே என்பது தவறா?
யார் தாழ்த்தப்பட்டவன் என்று இனங்காட்டப்படுகிறான். யார் அவனை இனங்காட்டுகின்றனர். ஏன் அவன் தாழ்த்தப்பட்டவன் என்று இனங்காட்டப்படுகிறான். அதற்கு அவனில் இருக்கும் அம்சங்கள் என்ன? இவற்றுக்கு விடை தேடின் நெடுக்காலபோவன் சொல்லும் கல்வி அறிவற்ற பொருளாதார சமூக சம அந்தஸ்ஸற்ற ஒரு மக்கள் கூட்டம் இதற்கு இலக்காகி இருப்பதைக் காணலாம்.
நோய் இருக்கு இல்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தால் நோய்க்கு மருந்து வந்திடாது. நோய்க்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டால் நோயைக் குணப்படுத்தலாம் என்பது அவர்களின் உண்மை வாதம்.
சும்மா நோய் இருக்கு இருக்கு என்று புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
ஆனால் பெரியார் வால்கள் சொல்வது போல ஒரு நோயைக் குணப்படுத்த இன்னொரு நோயைப் புகுத்த வேண்டும் என்பது மனித சமூகத்தில் இருந்து நோயை அகற்றாது. நீடிக்கவே செய்யும்.
நன்றி- யாழ் கள உறவு.
தமிழ் இனத்திற்கு திருவள்ளுவர் தேவைப்படும் போது ஓடுக்கபட்ட மக்களுக்கு பாடுபட்ட பெரியார் கசப்பது ஏன்? எனது கருத்துக்களை தயவு செய்து வெளியிடவும்.. நன்றி தென்பாண்டி சிங்கம்..
இத்தலைப்பில் என்னைப் பற்றி எழுதியிருப்பதாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். உண்மையில் இவற்றைப் பற்றி பல தடவைகள் விவாதித்து விட்டோம். ராமசாமி பற்றிப் படிக்கச் சொல்லுகின்ற தாங்கள் யாழ்களத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடந்த பிரச்சனைகள் பற்றி அறியவும் முய்ற்சிக்கலாமல்லவா?
நான் ஏதாவது இடக்குமுடக்காக்க கதைத்தால் "நீ பார்ப்பானி என்றோ, பார்ப்பான அடிவருடி என்றோ வாதம் செய்வீர்கள். இது தான் நான் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது.
இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, அல்லது சாதி வகுப்பு என்பதைக் கை விட எவன் தயாராக இருக்கின்றான். ராமசாமியும், அம்பேத்காரும் இடஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொண்டுவந்ததால் தான் எல்லாச் சாதியினரும் தங்களின் சாதி வகுப்பை விடத் துணியவில்லை. குஜ்ரால்(?) என்று வடக்கில் இபபோது ஒரு சாதியினர் தங்களைத் தாழ்த்தப்பட்ட சாதியாக மாற்றச் சொல்லிப் போராட்டம் நடத்துகின்றார்களே, அது தான் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த வெற்றி. வன்னியர்கள் தமிழ்நாட்டில் இவ்வாறு நடந்து கொண்டிருந்தார்கள்.
நாளைக்கு நீங்கள் தமிழருக்குள் என்றைக்குமே ஒற்றுமைப்படாத நிலையைக் கொள்வதற்கே இச்சாதியப் பேணுகை.
ஈழத்திலும் சாதி வகுப்புக்கள் இருந்தன. மறுக்கவில்லை. நான் கூட மீன் விற்க வருகின்ற சில பெண்கள் குறுக்குக்கட்டோடு வந்ததைப் பார்த்திருக்கின்றேன். 70களில் கோவில் மிதிப்பு என்று போராட்டமே நடந்தது, ஆனால் அவை எல்லாம் எவ்வாறு என்றால் எந்தச் சாதியையும் பேணக்கூடாது என்ற வகையில் தான்.
ஏன் சாதியத்தை விடக் கூடாது என்று நீங்களும் முழுங்குகின்றீர்கள் என்றால் அதனால் அனுமூலம் பெறுபவர்களில் நீங்களுமாக இருப்பதால் தான். ராமசாமி உண்மையாகவோ, அல்லது வெளிநாட்டவர்களிடம் பணம் வாங்கி இந்திய சமுதாயத்தைப் பிரிக்கவோ, அல்லது ராஜாஜி கூட இருந்த போட்டியால் தான் இதை ஊக்குவித்தாரோ தெரியாது. ஆனால்
ஒரு விடயம் இதில் கருத்தெழுதியிருக்கின்ற ஈழநண்பர்களுக்குச் சொல்கின்றேன். படித்த தமிழர்கள் அன்று கொழும்பின் முக்கிய பதவிகளில் இருந்ததால், ஜேஆர் அன்று சிங்கள மக்கள் பதவிகளில் இருக்கமுடியவில்லை. அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் என்று கோப்பட்டு, வெட்டுப்புள்ளி என்ற முறையைக் கொண்டு வந்தார். அதனால் பாதிக்கப்பட்டு வேறு வழி தெரியாமல் ஒதுக்கப்பட்ட தமிழ்சமூகத்தின் ஒரு வெளிப்பாடாக ஈழப்போராட்டத்தின் முன்னோடியான சிவகுமாரன் போராடினார். அவ்வாறு தான் தமிழ்நாட்டில் ராமசாமியும் இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தார். ஈழத்தில் ஜேஆர் செய்தது தவறாகத் தெரிந்த உங்களுக்கு, தமிழ்நாட்டில் ரபமசாமி செய்தபோது மட்டும் எவ்வாறு சரியாகத் தெரிந்தது. எந்த மக்களும் முன்னேற வேண்டும் என்பது என் அவா. ஏனென்றால் நானும் பிராமணனாகப் பிறக்கவில்லை. ஆனால் வெறுமனே பிராமண எதிர்ப்பு, தமிழ்ச்சமூகத்தைப் பலப்படுத்தாது.
அவர்களைத் தமிழரில்லை என்று சொல்கின்ற உரிமை யாருக்கும் கிடையாது. அல்லது நாங்கள் சொல்வது தான் தமிழரின் அடையாளம் என்று முடிவெடுக்கவும் இந்த்த திராவிட அமைப்பினருக்கும் கிடையாது. எவன் தன்னைத் தமிழனாக உணர்க்கின்றானோ, அவன் தான் தமிழனாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம்.
திராவிட அமைப்பினருக்குத் தமிழ்ப் பற்றிக் கதைக்க என்ன உரிமை உண்டு. இவர்கள் தமிழைப் பலப்படுத்த என்ன செய்தார்கள். கொச்சைத் தமிழில் ஆக்கங்கள் எழுதுவது என்பது தமிழை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிடுமா? தமிழில் எத்தனை நூல்கள் படைத்தார்கள். வடமொழி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டு, ஆங்கிலத்துக்குப் பாயை விரிப்பது இவர்கள் தானே?
கேட்டால் உடனே அவர்கள் தடை இவர்கள் தடை என நொண்டிச் சாட்டுக்கள் கூறுவார்கள். தடைகள் கண்டு பயப்படுவன் எல்லாம் ஏன் தம்மைச் சமூகப் போராளி என மார்தட்ட வேண்டு;ம
நீங்கள் தாரளமாக யாழில் எழுதுங்கள். நான் ஒதுங்கியது என்பது அத்தளத்தில் கருத்தெழுதாமல் தவிர்த்துக் கொண்டதே தவிர, வெளியேற்றமல்ல. எக் காரணமும் சொன்னாமல் செய்தது என் தவறு தான். அந்தத் தலைப்புக் கூட, நான் ஒரு தலைப்பில் எழுதிய கருத்தை நிர்வாகத்தைச் சேர்ந்தவர் யாரோ தனித்தலைப்பாக இணைத்திருந்தார்.
எனவே என்னுடைய ஒதுக்கத்திற்கும் உங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
நண்பர் தூயவனுக்கு!
//
...குஜ்ரால்(?) என்று வடக்கில் இபபோது ஒரு சாதியினர் தங்களைத் தாழ்த்தப்பட்ட சாதியாக மாற்றச் சொல்லிப் போராட்டம் நடத்துகின்றார்களே...
//
போராட்டம் நடத்துகிறவர்கள் குஜ்ஜார் இன மக்கள்... 'குஜ்ரால்' என்றால் அவர்கள் பார்ப்பனர்கள்... தமிழ்நாட்டில் ஐயர், ஐயங்கார், கேரளாவில் நாயர், நம்பூதிரிகள், சில மாநிலங்களில் 'ராவ்' என்பது பார்ப்பனர்களின் சாதிப்பெயர். அதே 'ராவ்' என்பது ஆந்தராவில் குடும்ப பெயர்... 'குஜ்ரால்' என்பது பார்ப்பனர்களின் சாதிப்பெயர். (தகவலுக்காக...)
தூயவன்! இடஓதுக்கீட்டை பற்றிய கிஞ்சித்தும் அறிவின்றி எழுதுவது, உரையாடுவது அழகல்ல... முறையாக வாசித்து வரலாற்றை தெரிந்துக்கொண்டு உரையாடுங்கள்!
மற்றபடி இடஓதுக்கீடு மட்டுமே உங்களுடைய கண்ணை உறுத்துவதற்க்கு காரணம் எனக்கு விளங்கும் :) பார்ப்பனர்களின் கட்டுரைகளை மட்டும் வாசித்தால் அப்படிதான் தோன்றும் என்பதும் எனக்கு விளங்கும்!
//
அவர்களைத் தமிழரில்லை என்று சொல்கின்ற உரிமை யாருக்கும் கிடையாது. அல்லது நாங்கள் சொல்வது தான் தமிழரின் அடையாளம் என்று முடிவெடுக்கவும் இந்த்த திராவிட அமைப்பினருக்கும் கிடையாது. எவன் தன்னைத் தமிழனாக உணர்க்கின்றானோ, அவன் தான் தமிழனாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம்.
//
அது சரி! யாரெல்லாம் தமிழர் என்று புது வரையறை கொண்டு வந்தவருக்கு வணக்கங்கள்! வரலாறு எள்ளி நகையாடுகிறது... வரலாற்றை ஆய்தவன் எல்லாம் சொன்னது... இவிங்க ரொம்ப நல்லவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்! :)
எது சமூகம்? எது இனம்? இனக்குழு என்பதென்ன? தேசிய இனம் என்பதன் வரையறை? இதையெல்லாம் தெரிந்துக்கொள்ள கூட வேண்டாம்...
தமிழ், தமிழர் என்று விம்மி வெடிக்கிற தூயவன்! எங்கே தேடிப்பாருங்கள்... எல்லாவற்றுக்கும் தத்துவ கோட்பாடுகள் என்று ஒன்று உண்டல்லவா!?
ஆனால் உங்கள் சமயக்கோட்பாடுகள் என்ன?
கடவுட் கொள்கை என்ன? வழிபாட்டு மொழி என்ன?
நேற்றைய தமிழனை(மொழி ரீதியாக சிதைந்த த்ராவிட இனம்) பற்றிய வரலாறு என்ன சொல்கிறது என்றால் ஆரிய தத்துவ கோட்பாடான பார்ப்பானீய தத்துவத்தை உள்வாங்கியதால் சாதி தோன்றியதாக சொல்கிறது!
நாளைய வரலாற்றுக்கு என்ன தத்துவ கோட்பாடு வைத்திருக்கிறீர்கள் தூயவன்? அதே ஆரிய(பார்ப்பானீய) தத்துவ கோட்பாடா?
இதெல்லாம் போகட்டும்... கடவுளை தமிழில் வழிபடுகிறீரா? இல்லை பார்ப்பனை கொண்டு சமஸ்கிருதத்தில் வழிபடுகிறீரா?
கருத்துரையிடுக